Pages

Tuesday, 25 September 2012

உள்விதி மனிதன் பாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் உனக்கு. TAKE YOUR PROBLEM - GIVE HAPPY TO YOU

உள்விதி மனிதன் 
  சம மனிதக் கொள்கை 
(EQUAL HUMAN POLICY)
பாகம் : 3 -  கஷ்டம் எனக்கு - சுகம் உனக்கு.
TAKE YOUR PROBLEM - GIVE HAPPY TO YOU 
அன்பு மனிதா! நான் தான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன்! மகிழ்ச்சி தரும் மனிதன்! நீ எப்படி இருக்கிறாய்? இந்த உலகில் நீ எப்படி வாழ்கிறாய்? எவ்வாறு காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறாய்? என்னை பற்றிய சிந்தனை உனக்கு கட்டாயம் இருக்கும்! இது நாள் வரை உனக்குள் இருந்து கொண்டு மறைந்திருந்த நான் இப்போது உன் முன் நின்று உரையாட நேரம் வந்துவிட்டது. இனி எப்போதும் உன்னுடனே உன்பக்கத்திலே இருப்பேன். நீ செல்லும் இடமெல்லாம் நானும் வருவேன். நீ செய்யும் செயல்களில், எண்ணும் எண்ணங்களில், எடுக்கும் முயற்சிகளில் நானும் பங்கெடுத்துக் கொள்ளப்போகிறேன். உனது வெற்றி தோல்விகளில் உனக்குப் பாதி, எனக்குப் பாதி என்று இல்லாமல் வெற்றிகளை உனக்கு கொடுக்கவும், தோல்விகளை நான் சுமக்கவும் போகிறேன்.

நேசமான மனிதா! இது நாள் வரை என் பங்கு, என் செயல் என்று நான் பேசவில்லை. ஏன் இப்போது இப்படி பேசுகிறேன் என்றால் .. நீ மகிழ்ச்சியாக இருப்பதற்காக, நன்றாக அனுபவிப்பதற்காக! இந்த உலகத்தில் பலவற்றைப் படைத்து, உன்னையும் படைத்து உன்னுள் இருந்துகொண்டு அனைத்தையும் அனுபவிக்கச் செய்கிறேன். அப்படியிருந்தும் நான் சற்று அஜாக்கிரதையாக இருந்ததால் நீ பலவித துன்பத்திற்கும், பாதிப்புக்கும் ஆளாகியதோடு, இந்த பூமியையும் மாசு (தீமையை) உண்டாக்கிக் கொண்டிருக்கிறாய். மக்களின் எண்ணங்களிலும் தீயதை வளர்த்து மாசு படுத்திக் கொண்டிருக்கிறாய். 'படைப்பில் நான் தான் பெரியவன்' என்று மார்தட்டிக் கொள்கிறாய்.

பாசமுள்ள மனிதா! உனக்கு என் மீது அதிகப் படியான கோபம் வரும். ஏனென்றால் 'இது நாள் வரை உன்னை கவனிக்காமல் எங்கே போய்விட்டேன்? என்று கேட்பது எனக்கு கேட்கின்றது. மேலும் நீ கஷ்டப்பட்ட நாட்களிலும், துயரம் கொண்ட வேளைகளில் நான் உனக்கு உதவி செய்யவில்லை' என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்பது எனக்கு புரிகின்றது. 

இனிய மனிதா! நான் உன்னுடன் பேச வரவில்லை என்கிற காரணத்தினால் என்னை பலவேளைகளில் திட்டித் தீர்திருப்பாய்! ஏன்? இப்போது கூட உன் மனதில் என் எண்ணத்தை பற்றிய சிந்தனையே இருக்கும். என்னை நீ சரமாரியாக கேள்விகளை கேட்க துடிப்பது தெரிகின்றது. உன் மனம் குமுறுவது என்னால் கவனிக்க முடிகின்றது. இவைகளெல்லாம் நான் அறிவேன். எனக்கு எவ்வளவு பெரிய அதிக ஆற்றல் இருந்தும்  இந்த உலகில் நடக்கும் அநீதிகளுக்கும், லஞ்சம் ஊழல்களுக்கும், கொலை, கொள்ளை பாதகச் செயல்களை செய்தவர்களுக்கும் ,அந்த செயலுக்கு துணை போனவர்களுக்கும் சரியான நேரத்தில் சரியான தண்டனை கொடுக்கவில்லை என்று எண்ணுகிறாய்! 'உள்விதி மனிதன்' ஒருவன் இருக்கின்றானா? அல்லது இல்லையா! என்று பலநேரத்தில் உனக்கு சந்தேகம் எழுகின்றது' என்றும் அறிவேன். உன் ஆற்றல் எங்கே போயிற்று? என்றும் கேட்கின்றாய்.


நல்லெண்ணம் கொண்ட மனிதா! அத்தகைய பாவச் செயல் செய்பவர்களைப் பார்த்து சும்மா இருப்பதாக எண்ணுகிறாய். இந்த உலகில் அநேகமானோர் ஏழைகள், பணகஷ்டமும், பணம் படைத்தவர்கள் மனக்கஷ்டமும் பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுவும் நான் அறிவேன். அதற்கத்தனைக்கும் தீர்வு கொடுக்கவே இங்கு வந்திருக்கிறேன். பலர் தினமும் கஷ்டப்பட்டுக் கொண்டு குறைந்தபட்ச தேவைகளான மூன்று வேளை சாப்பாடு, ஒரு காணி நிலம், உடுத்த உடை இல்லாமல் அல்லோலப்படுகிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். அவ்வாறு சுரண்டித் தின்னும் பாவிகளை உள்விதி மனிதனான நீ அவர்களை சுகமாக வைத்துள்ளாய்!' என்று உன் சூடான எண்ண வார்த்தைகள் தீயாகத் தாக்குவதிலிருந்து நான் உணருகிறேன். அதற்கெல்லாம் விடையளிக்கவே தான் வந்துள்ளேன்.

'பாசமுள்ள மனிதா! இதுநாள் வரை நான் உனக்காக என்ன செய்தேன்? அதற்கு நீ எனக்கு என்ன பரிகாரம் செய்தாய்' என்பதை எடுத்துரைத்து உன் மனதில் பீறிட்டு எழும் தீயுற்றை என் அன்பு நீர் கொண்டு பாய்ச்சி. அதனை  அணைத்து, உன்னை என்னுடன் சேர்த்துக் கொண்டு இந்த உலகை புது உலகமாக மாற்றி, இந்த பூமியில் சக்திமிக்க மனிதனான உன்னை ராஜ சிம்ஹாசனத்தில் உட்காரவைத்து சொர்க்கமான வாழ்க்கையை உனக்கு கொடுத்து அதில் தினமும் மகிழ்ச்சியைக் கொடுத்து, உன் மனதில் இருக்கும் அச்சத்தை நீக்கி, வீரம் கொடுத்து, விவேகமேற்றி, எதையும் தாங்கும் இதயம் கொடுத்து, வற்றாத செல்வத்தை வாரிவாரிக் கொடுத்து உன்மூலம் இவ்வுலகில் உள்ள எல்லோரும் திருப்தியாக இருக்கும் வண்ணம் எல்லோருடைய வாழ்க்கையை அமைத்துத் தரவே நான் வந்துள்ளேன்.

ஆற்றல் மிகு மனிதா! இதோ உள்விதி மனிதனாக நான் வந்துவிட்டேன். இனி நான் தான் நீ! நீ தான் நான்! என்னை மீறி உன்னால் எதுவும் செய்ய முடியாது. நீ தீய செயல்களை இனி நினைத்தால் கூட உன்னை செய்யவிடமாட்டேன். எனக்கு உன்னைப் பற்றி தெரியும். உன் பாரம்பரியம், குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உன்னைச் சுற்றியுள்ளவர்களையும் நான் நன்கு அறிவேன்.

ஒருவேளை அவர்களால் உனக்குத் தொந்தரவு ஏற்பட்டால் அவர்களை எப்படி சமாளிப்பது? என்று நான் உனக்கு தெரிவிக்கிறேன். அதிலிருந்து நீ விடுபட நான் அவ்வப்போது கூறும் அறிவுரைகளை கேட்டு நட. மனிதா! உனக்கு கல்வி, வீரம், செல்வம் இந்த மூன்றும் முக்கியம். அது இந்த உலகில் அபரிதமாக கொட்டிக்கிடக்கின்றன. அவைகளை முறைப்படி நல்ல வழியில் கிடைக்க நான் வழிவகை செய்கிறேன்.

மனிதா! நீ நன்றாக படிக்கிறாய்! வேலை செய்கிறாய்! அன்பு கொள்கிறாய்! உதவிகள் செய்கிறாய்! நல்ல முறையில் பொருளை ஈட்டுகிறாய்! இந்த வகையான எண்ணங்களைத்தான் உனது வாழ்வில் முக்கிய குறிக்கோளாக கொள்ளவேண்டும். இனிமேல் தீய செயல்களில் ஈடுபட்டு பிறர் புன்படியான செயல்களைச் செய்வதற்கு நான் அனுமதிக்கமாட்டேன்.   

மனிதா! நீ செய்யும் தீய செயலை பணமாக்குகிறாய்! புகழாக மாற்றுகிறாய்! என்று எனக்குத் தெரியும். அத்தகைய தீயவர்களை அழிக்கும் பணியை இப்போதே தொடங்கிவிட்டேன். இந்த உள்விதி  மனிதன்,  இனி நன்மையே கொடுப்பான்.

மனிதா!
இன்று முதல் உன் கஷ்டங்கள் தீர்ந்து விட்டன.
கஷ்டங்களை நான் ஏற்றுக்கொண்டு சுகத்தைக்  கொடுக்கிறேன்!
   இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

உள்விதி மனிதன் பாகம் 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பைப் பெறுவாயாக !

உள்விதி மனிதன்
  சம மனிதக் கொள்கை 
EQUAL HUMAN POLICY

பாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் -
 நன் மதிப்பைப் பெறுவாயாக! 


இனிய மனிதா! நான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன் பேசுகிறேன். மனிதனுடைய படைப்பில் அனைவரும் சமம்! அவரவர் விருப்பப்படி மனிதன் பிறக்கின்றான். நீ பிறக்கும்  வழி ! வாழுகின்ற வாழ்க்கை ! கடைசியில் சேரும் வழி ! எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தான் வைத்திருக்கிறேன். யாரும் ஆகாயத்திலிருந்து குதித்தவர் கிடையாது! பூமியை பிளந்து வந்தர்வர்கள் கிடையாது! உயர்ந்த பிரிவினர்கள் பிறப்பதற்கு   ஒரு வழி ! ஒரு ஜீவனம் ! ஒரு தனி இடம் ! அவர்களை கடைசியில் முடிகின்ற இடம் தனி இடம் என்றும் கீழ் பிரிவினர்கள்  பிறப்பதற்கு வேறொரு வழி ! வேறு மாதிரியான ஜீவனம்! அவர்களுக்கென்று தனி இடம், கடைசியில் அவர்கள் முடிகின்ற இடம் வேறொரு இடம் என்றா இருக்கின்றது? அனைவருக்கும் ஒரே மாதிரியான உடல் அமைப்பு! ஒரே இரத்தம், இயங்கும் விதம் அனைத்தும் ஒன்றே!



மனிதா! நான் வயது வித்தியாசம் பார்க்காமல் குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரிடத்திலும் இருக்கிறேன். அதுபோல் அவரவர்கள் சக்திக்குத் தகுந்தபடி வாழ்க்கைச் சுமைகளை கொடுத்து வருகிறேன்! அவற்றை நான் உனக்குள்ளிருந்து கண்காணித்து வருகிறேன். அன்பு மனிதா ! நான் குடிகொண்டிருக்கும் அனைவரையும் சமமாக கவனித்து வருகிறேன். ஆனால் அவரவர்களுடைய ஆசைகள், திறமை, அறிவு மற்றும் முயற்சிக்குத் தகுந்தவாறு வாழ்கையை அனுபவித்து வருகின்றார்கள். ஆனால் பல சமயங்களில் பலர் என்னை மறந்து அல்லது அலட்சியப்படுத்தி மானுட தர்மத்தை மீறி பல காரியங்கள் செய்துவருகிறார்கள். என்னுடைய கொள்கை என்னவென்றால் அனைவருக்கும் நல்வாழ்வு கொடுத்து, எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்யவேண்டும் என்பதே! அதற்காக நான் உனக்கு முன்னால்  நின்று பேசுகிறேன்!



அருமை மனிதா! நான் மட்டுமே எப்போதும் உனக்கு மகிழ்ச்சி தர துடிக்கும் உள்விதி மனிதன் ! நான் தான் தலைவன், நான் தான் அறிஞன், நான் தான் கலைஞன், நான் தான் பலவான். என் ஆற்றல், என் பலம், என் அறிவு, என் மகிழ்ச்சிகள்  அனைத்தும் உனக்களித்து உன்வாழ்வை ஆக்கமுடன் செய்து ஊக்கப்படுத்தவே நான் வந்துள்ளேன்! எனது பேச்சு உனக்கு மட்டும் கேட்கும். அதை நன்றாக கவனமுடன் கேள். ஏனெனில் உன்னை நான் நன்றாக அறிவேன். என்னை அதைவிட நீ நன்றாக அறிவாய்! 

உனக்கு வேண்டியவற்றை   உனது செயல்களின் மூலமாகவே நிறைவேற்றி அதனால் கிடைக்கும் பலன்களை உனக்கு அளிக்கப் போகிறேன்! உனக்குள் புதைந்துள்ள விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தை நானே தோண்டி உனக்கு அளிக்கப்போகிறேன்! இன்னும் பல உதவிகளை நீ கேட்காமலே செய்யப் போகிறேன்.

இரக்கமுள்ள மனிதா! நான் இன்றி நீ இல்லை! ஆனால் நீ இல்லாமல் நான் இருப்பேன். அப்படி நான் மட்டும் இருந்தால் யாருக்கும் எந்த ஒரு  பிரயோஜனமும் இல்லை. நீ இல்லாமல் எனக்கு மதிப்புமில்லை. மேலும் என்னை உன் உடலுக்குள் தங்கச் செய்து, உள்விதி மனிதனாகப்   பெயர் கொடுத்து உன்னையே இயக்கும் வாய்ப்பைக் கொடுத்ததோடு எனக்கு ஒரு நல்ல முகவரி கொடுத்தவன். அந்த விசுவாசத்திற்காக உனக்கு அரியபெரிய உதவிகளை செய்து தரப்போகிறேன். 


மதிப்புக்குரிய மனிதா! நீ என்பது எண்ணிக்கையில் ஒன்று. அதாவது 1. நானோ பூஜ்யம். அதாவது 0. ஆனால் ஒரு சிறு வித்தியாசம். உன்னிடத்தில் ஒரே ஒரு ஒன்று (1) என்கிற எண் தான் உண்டு. அதுவும் 1 / 1 (ஒன்று வகுத்தல் ஒன்று) என்று இருக்கின்றது. ஆனால் என்னிடத்தில் பல பூஜ்ஜியங்கள் (0) இருக்கின்றன. அதாவது நீ நல்ல காரியங்கள் செய்தால் மேல் உள்ள ஒன்றுடன் எனது பூஜ்ஜியங்களைச் சேர்ப்பேன் . அதே மாதிரி நீ ஏதேனும் தீய காரியங்கள் செய்தால் கீழ் உள்ள ஒன்றுடன் எனது பூஜ்ஜியங்களுடன் சேர்ப்பேன். 



அதாவது நீ என்னை முன்னிலை படுத்தி என்னை மேலே உயர்த்தி மற்றவர்களுக்கு மனதளவிலோ, உடலளவிலோ நன்மையானச்  செயலைச் செய்தால் மேல் உள்ள ஒன்றுடன் (1 / 1 ) என் பூஜ்ஜியம் (0) சேரும். உனது  நல்ல செயல்கள் கூடக்கூட பூஜ்ஜியங்கள் பல  சேரும். அதாவது 10 / 1 = 10,  100 / 1 = 100,  1000 / 1 1000,  10000 / 1 = 10000 ,  100000 / 1 = 100000..... என்று உனது நன்மை செயல் எண்ணிக்கை பொறுத்து நான் மேல் ஒன்றுடன்  ( 1 / 1 ) சேருவேன். உனது மதிப்பையும் அதற்குத் தகுந்தவாறு கூடும்.

இனிமை மனிதா! அதுவே உன் செயல்கள் என்னை அலட்சியப் படுத்தி என்னை கீழே  தள்ளி உன்னிஷ்டப்படி  மற்றவர்களுக்கு மனதளவிலோ, உடலளவிலோ பாதிப்பு தரக்கூடியதாக இருந்தால் எனது பூஜ்ஜியம் (0) உனக்கு கீழே உள்ள ஒன்றுடன் (1 / 1) சேரும். அதாவது 1 / 10 = 0.1 ,  1 / 100 = 0.01,  1 / 1000 = 0.001,  1 / 10000 = 0.0001, 1 / 100000 = 0.00001  என்று நீ செய்யும் தீய செயலுக்கு தகுந்தவாறு உனது மதிப்பு குறைந்து கொண்டே போகும். ஆக உனது மதிப்பை உயர்த்திக்கொள்வதும்,  தாழ்த்திக்கொள்வதும்  நீ செய்யும் செயலைப் பொறுத்து உள்ளது! உன் மதிப்பை உயர்த்தவே நான் உனக்குள் உள்விதி மனிதனாகத் தோன்றியுள்ளேன்.

இனிய மனிதா !

நன்மை பல செய் !

நான் உன்னை மதிப்புள்ளவனாக ஆக்குகிறேன்.  
                

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

Monday, 24 September 2012

மாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா- ARE YOU PREPARED TO CHANGE YOURSELF

மாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா-
ARE YOU PREPARED TO CHANGE YOURSELF




மக்கள் சேவை மற்றும் விழிப்புணர்வு 


இப்போது நடைபெறும் மாற்றம் மனிதனுடைய இயல்பு வாழ்கையே தலைகீழாக புரட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றது என்றே சொல்லலாம். கல்வி, தொழில், சேவை, சட்டம், நடைமுறை , நடை, உடை, பாவனை, இடம், எண்ணங்கள், கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், ஆன்மிகம், வீட்டு நிர்வாகம், நிறுவன நிர்வாகம், அரசியல், போக்குவரத்து, தொடர்பு சாதனங்கள், உணவு பழக்கங்கள்   என்று எதில் தான் மாற்றமில்லை. சொல் வழி கல்வி மறைந்து புத்தக வழி கல்வி உருவாகி இன்று கணினி வழி கல்விக்கு வந்துவிட்டார்கள். ஆட்சியாளர்களும், ஆட்சி முறையும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டு இருக்கின்றன. ஒரு மாற்றம் முழுமையாக தெரியு முன்னே இன்னொரு மாற்றம் வருகின்றது. 


ஆகவே சூழ்நிலைக்குத் தகுந்தாற்ப் போல் காலத்திற்கு தகுந்தாற்ப்போல் எவ்வளவு சிக்கிரம் புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு நீங்கள் மாறுகின்றீரோ அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்கு வாழ்கையில் நல்லது கிடைக்கும். நல்ல மாற்றத்திற்கு தடை சொல்லாமல் உடனே ஏற்றுக்கொண்டு பின்பற்ற ஆரம்பித்தால் அனாவசியமான பிரச்சனை இல்லாமல் தவிர்க்கலாம். பலவித பிரச்சனை எதிர்கொண்டு கடைசியில் அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில் மனஉளைச்சல், கால விரயம் மற்றும் பணவிரயம் தான் மிச்சமாகும். ஒருவேளை நீங்கள் மாறாவிட்டால் அந்த மாற்றமே உங்களது வாழ்கையை அதலபாதாளத்தில் தள்ளிவிடும்.


நேற்று, இன்று , நாளை என்று காலங்கள் மாறுவது எப்படி தவிர்க்க முடியாதோ அதுபோல் உங்களது வாழ்விலும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதே! மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பவர்கள் ஜடங்களுக்கு ஒப்பானவர்களாவார்கள். 


நமது வாழ்கையில் மாற்றம் குழந்தை முதல் பெரியவர் வரை மாறிவருகிறோம். வயதிற்குத் தகுந்தாற்ப்போல் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொருவிதமான எண்ணங்களையும், சூழ்நிலைகளையும் எதிர்கொள்கிறோம். அதற்கு தகுந்தாற்ப்போல் நமது செயல்களும், பழக்க வழக்கங்களும் மாறுகின்றன. குழந்தையில் பிடித்தது இளைஞனான பிறகு பிடிப்பதில்லை. இளம் வயதில் பிடித்தது வயதான பிறகு பிடிப்பதில்லை. காரணம் மாறிவரும் உலகிற்கேற்ப உனது எண்ணங்களும் செயல்களும் மாறுவது தான்.


மாற்றத்தின் விதை 'கற்பனை' என்று சொன்னால் மிகையாகாது. இந்த கற்பனையானது அறிவியல், கலை, தொழிநுட்பம் என்று பல வகைகளின் நுழைந்து இன்று மரங்களாக வளர்ந்து நமக்கு பலவிதத்தில் காய் கனி போல் பலன்களை அள்ளிக் கொடுத்து உதவுகின்றது.

மாற்றங்கள் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. தினம் தினம் சில மாற்றங்களை சந்தித்து கொண்டு வருகின்றோம். கற்கால மனிதன் முதல் இக்கால கம்ப்யூட்டர் மனிதன் வரை மாற்றங்கள் ஒன்றே நம்மை மாறாமல் ஆட்சி செய்துவருகின்றது. 


விட்டில் ரேடியோ மறைந்து தொலைக் காட்சி பெட்டி, விறகு அடுப்பு மறைந்து கேஸ் மற்றும் இண்டக்சன் அடுப்பு, தொலைபேசி மறைந்து மொபைல், கடித தொடர்பு மறைந்து ஒரு நொடியில் அனைத்து தகவல்கள் தரும் கம்ப்யூட்டர், அதன் மூலம் உலகம் முழுவதும் எளிதாக தகவல் பரிமாற்றங்கள், கால்நடை மறைந்து மோட்டார் வாகனம், பாஸ்ட் புட் உணவுவகைகள்,  பல தரப்பட்ட கல்விகள் அதாவது மருத்துவ கல்வியில் பலவகை, கலைக் கல்வியில் பலவகை, பொறியியல் கல்வியில் பலவகை, உடைகளில் தான் எத்தனை மாற்றங்கள்! பாவாடை ரவிக்கை மறைந்து சுடிதார் மற்றும் பல.


மாற்றம் தான் ஒரு மனிதனை உயிருள்ளவனாக காட்டுகின்றது. படைப்பாளியாக்குகின்றது, பெருமை தேடித் தருகின்றது. வாழும் வீடுகளில் தான் எத்தனை மாற்றங்கள்! மண் குடிசை மறைந்து கான்கிரீட் வீடுகள் ! அதுவும் போய் இப்போது நானோ வீடுகள்! 

மாற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும் பொன்னான வாய்ப்புகள். ஓடாமல் ஒரே இடத்தில் அழகான காரை நீங்கள் எத்தனை நிமிடங்கள் வரை பார்த்துகொண்டு இருப்பீர்கள்! ஒரு நிமிடம்.... ஐந்து நிமிடம்... அது மிகவும் கஷ்டமாக தெரிகின்றதா? ஆனால் ஓடிக்கொண்டு விதம் விதமாக சாகசம் செய்யும் காரை நாள் முழுவதும் பார்த்து ரசிக்கலாம். 

வாய்ப்புகள் எப்படி கிடைக்கும்?

முட்டாளுக்கு மத்தியில் அறிவாளிக்கு வாய்ப்பு! 
நோயாளிகளுக்கு மத்தியில் மருத்துவனுக்கு வாய்ப்பு!
தொண்டர்களுக்கு மத்தியில் தலைவனுக்கு வாய்ப்பு!
சோம்பேறிகளின் கூட்டத்தில் சுறுசுறுப்பானவனுக்கு வாய்ப்பு!
பலவீனம் உள்ளவர்களுக்கு மத்தியில் பலசாலிக்கு வாய்ப்பு!
கரிக்கட்டைக்கு மத்தியில் வைரத்திற்கு வாய்ப்பு 
வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் வியாபாரிக்கு வாய்ப்பு!
பேச்சை கேட்பவர்களுக்கு மத்தியில் பேச்சாளர்களுக்கு வாய்ப்பு!
கலைகள் ரசிப்பவர்களுக்கு மத்தியில் கலைஞனுக்கு வாய்ப்பு!
பாடல்கள் ரசிப்பவர்களுக்கு மத்தியில் பாடகர்களுக்கு வாய்ப்பு!
கற்க விருப்பமுள்ளவர்களுக்கு மத்தியில் ஆசிரியர்களுக்கு மதிப்பு!

அதாவது நீங்கள் இருக்கும் நிலையிலிருந்து உயர்ந்த நிலையை அடைய வேண்டுமானால் உனது மாற்றங்களால் மட்டுமே முடியும். மாற்றங்களைச் செய்யாமல் கட்டை வண்டி மோட்டார் வண்டியாக மாற்ற முடியாது. உனது வாழ்கையில் வேகம் பெற வேண்டுமானால் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டும். மாறிவரும் உலகில் நம்மை மாற்றிக்கொள்ளாவிட்டால் நம் வாழ்க்கை நிலை மாறாது.

மனித உயிரினம் 'டார்வின்' பரிணாம கொள்கையின்படி ஒரு செல் உயிரினம் முதல் மனித உயிரினம் வரை பலவகை மாற்றங்களுக்கு பிறகே வந்துள்ளது. ஓரறிவு முதல் ஆறறிவு வரைக்கும் காரணம் மாற்றம் தான். இன்றைய மனிதன் வருங்காலத்தில் 'சூப்பர் மனிதன்' ஆக மாறுவதற்கு நிறைய வாய்புகள் இருக்கின்றன.


'கனவு காணுங்கள், விஞ்ஞானி ஆகலாம்' என்று சொல்கிறார் நமது முன்னாள் ஜனாதிபதி டாக்ட்டர் அப்துல் கலாம் அவர்கள். மாற்றங்களுக்கு அடிப்படை எண்ணங்கள்! வளமான எண்ணங்கள் நல்ல செயலுக்கு அடித்தளமாய் அமைகின்றன. அத்தகைய மாற்றங்கள் மக்களுக்கு பல நன்மைகள் தருகின்றன. அறிவியல் மாற்றங்கள் நடைபெற்றிருக்காவிட்டால் பெருகிவரும் மக்கள் தொகையினை சமாளித்திருக்க முடியுமா? இல்லையெனில் மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் உணவுக்கு பஞ்சம் வந்திருக்கும்! உடுத்துகின்ற உடைக்கு பஞ்சம்! ஆரோக்கிய வாழ்வுக்கு பஞ்சம்! வாழுகின்ற இடத்திற்கு பஞ்சம் எற்பட்டு இருக்கும்.

மாற்றங்கள் பல வந்தாலும் சில மாற்றங்கள் மக்கள் தங்கள் அறியாமையினால் ஏற்றுக்கொள்ள தவறிவிடுகின்றனர். அதனால் தினமும் பலவித இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனன்ர். தற்போது நமது நாட்டில்  மின்சார பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கின்றன.  தினந்தோறும் மின்வெட்டு பலமணி நேரம் வரை இருக்கின்றனர். உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டது. விவசாயம் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை. அதற்கு  தீர்வாக சூரிய சக்தி, பயோ டீசல், ஹோபர் கேஸ் முறை போன்றவைகள் இருந்தாலும் அரசாங்கம் அதை ஊக்குவிக்க தவறிவிட்டது. அதற்கு மான்யம் பூஜ்யம் தான். எண்ணெய் இறக்குமதி செய்வதில் இருக்கும் அக்கறை உள்நாட்டு உற்பத்தியில் இல்லை. 

போதிய அளவு மழை பெய்தாலும் அதை முறையாக சேமிக்க வழியில்லை. அணைகள் கட்டுவதில் பிரச்சனை, மழைநீரை தேக்கி வைப்பதில் திட்டமின்மை, நதிநீர் பங்கீடு, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் போன்றவை வெறும் பேச்சளவில் தான் இருகின்றது. நம் நாடு என்ன பாலைவனமா? நதிகள் ஓடவில்லையா? ஆறுகள் இல்லையா? வடக்கு வெள்ளத்தில் மூழ்கின்றன. தெற்கே மழையில்லாமல் பஞ்சத்தில் அடிபடுகின்றது. ஆனால் வெள்ள நீரை பஞ்ச நாட்டிற்க்கு மாற்றும் திட்டம் அரை நூற்றாண்டுகளாக காகிதத்தில் தான் இருக்கின்றது. எதுவும்  முயற்சி செய்தால் தான் பலன் கிடைக்கும். இன்னும் எத்தனை நாட்கள் அயல்நாட்டை எதிர்பார்த்து நிற்ப்பது. இதில் மாற்றம் இல்லையென்றால் எத்தனை பெரிய தலைவர்கள் வந்தாலும் விலைவாசி ஏறுவதை தவிர்க்க முடியாது. 

மருத்துவத்தில் எக்ஸ் - ரே    முதல் ஸ்கேன் வரையிலான மாற்றம் மனிதனின் நோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே துல்லியமாக நமக்கு தெரிவிப்பதனால் சரியான சிகிச்சை தகுந்தநேரத்தில் கொடுப்பதற்கு பெரிதும் உதவுகின்றது. இதன் பலனாக இதய நோய்க்கு நிரத்தர தீர்வுகள் பல கிடைத்துள்ளது. பை -பாஸ் சர்ஜரி , பிளாஸ்டிக் சர்ஜரி, உடல் உறுப்பு மாற்றதல, கண்தானம், ரத்த தானம் போன்றவை உதாரணமாக கொடுக்கலாம்.

நானோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, கெமிகல் டெக்னாலஜி, திசு கல்சர், க்ளோனிங் ஆகியவை அறிவியல் துறையில் ஏற்ப்பட்ட மாற்றங்களே! மேலும் மக்களின் ஆரோக்கியத்தை காப்பதில் பெரும்  பங்கு வகிக்கின்றது. ஐ.நெட் எனப்படும் வலைதளம் உலகத்தில் நடை பெறும் , நடைபெற்ற நிகழ்ச்சிகளை உடனுக்குடன் நமக்கு தருகின்றது.

பொதிபோல் புத்தகங்களை சுமக்கின்ற மாணவ மாணவிகள் இனிமேல கைக்கு அடக்கமாக உள்ள லேப் -டாப் க்கு மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே சொல்லலாம்.இது மாற்றத்தின் உச்ச கட்டம் எனலாம்.

குழந்தை பெறுவதற்கும், குடும்பத்தை காப்பதற்கும் தான் பெண்கள் என்று மலையேறி புதுமை பெண்களாக பல சாதனைகள் படைக்கின்றனர். நாட்டை ஆளும் திறமையும், விண்வெளியில் வலம் வரும் துணிச்சலையும் அடைந்துள்ளனர். இதற்கு கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் சான்றுகளாவார்கள்.

மனிதனின் 360 கோணங்கள் சுற்றிலும் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அதை அறிந்து கொண்டு தகுந்த அறிவை வளர்த்துக்கொண்டு வந்தால் தான் நாம் வாழ்கையில் முன்னேற முடியும்.

இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. மாற்றங்கள் ஒன்றே நிரந்தரம். 


விதையில் மாற்றம் கனி கொடுக்கும் மரத்தில் இருக்கின்றது!
கம்பளிப் புழுவின் மாற்றம் வண்ணத்துப் பூச்சியில் இருக்கின்றது!
செல்லின் மாற்றம் பல உயிரினங்களை கொடுப்பதில் இருக்கின்றது!
எண்ணங்களின் மாற்றம் செயலில் இருக்கின்றது!     
மனிதனின் மாற்றம் தெய்வமாக மாறுவதில் இருக்கின்றது!

'நான் உலகத்தை மாற்றப் போகிறேன்' என்று புறப்பட்டவர்கள் எல்லாம் முகவரி தெரியாமல் தொலைந்துவிட்டனர். அதற்குக் காரணம் நடைமுறைக்கு ஒத்து வராமை. அதாவது நீங்கள் உலகத்தை மாற்ற விரும்பினால் நாம் முதலில் மாறவேண்டும். அப்படி மாறிவிட்டால் உலகம் தானாக மாறும். இதுதான் உண்மை நிலை. ஆக நாம் மாற்றத்தை கடைபிடிப்போம். வாழ்கையில் தொடர்ந்து முன்னேறுவோம். 


நன்றி!
வணக்கம்!

     

Saturday, 22 September 2012

நீங்கள் சூழ்நிலையை மாற்றுபவர்களா - ARE YOU ABLE TO CHANGE OR ACCEPT THE SURROUNDING

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

நீங்கள் சூழ்நிலையை மாற்றுபவர்களா?
 சூழ்நிலைக்கு மாறுவீர்களா- 
ARE YOU ABLE TO CHANGE OR ACCEPT 
THE SURROUNDING  
 

நமது எண்ணங்களை விட சூழ்நிலையின் ஆதிக்கம் தான் நம்மை பாதிக்கிறது என்று அடித்துச் சொல்லலாம்.. அதை நீங்கள் கீழ் காணும் உதாரணங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


* கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள் கூடும்போது ஒவ்வொருவரும் அண்மையில் நடைபெற்ற அல்லது நடைபெறும் கிரிக்கெட் போட்டி பற்றிய பலவித சுவாரஷ்யமான தகவல்களையும், சில வீரர்களின் பயோ டேட்டா வையும், பிடித்த வீரரின் சாதனைகளையும், அவர் அடிக்கும் ஸ்டைலையும் விலாவாரியாக பேசுவார்கள். அதில் கலந்து கொள்ளும் மற்றவர்களும் அந்த விளையாட்டைப் பற்றித்தான் பேசுவார்கள். அதாவது அங்கே கிரிக்கெட் விளையாட்டு பற்றிய சூழ்நிலை இருப்பதால் அனைவரும் அந்த சூழ்நிலைக்கு மாறிவிடுகின்றனர்.


* திருமண விழாவில் அவரவர்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்களின் நடைபெற்ற அல்லது நடைபெறும் திருமணங்களையும், அதன் மலரும் நினைவுகளையும், மறக்கமுடியாத சம்பவங்களையும் பேசி மகிழ்வார்கள். கிட்டத்தட்ட அனைவருமே அதைப்பற்றி தான் பேசுவார்கள்.


* வேறு வேறு கல்லூரியில் படிக்கும் பழைய நண்பர்கள் தங்கள் கல்லூரியில் நடந்த கேலிக் கூத்துகள், பந்தாக்கள், அலப்பரைகள், கட்டடித்த வகுப்புகள், சேஷ்டைகள், காலேஜ் கட்டடிடுத்து சென்ற சினிமாக்கள், தங்களுடைய புதிய நண்பர்கள் / நண்பிகள் , தோழர்கள் / தோழிகளைப் பற்றிய பேசுக்கள் இருக்கும்.


* ஆஸ்பத்திரியில் பார்க்கும்போது அவர்கள் கேட்ட , பார்த்த நோயாளிகள், அவர்கள் பட்ட கஷ்டங்கள், எடுத்த மருத்துவ சிகிச்சைகள், விபத்துகள், மரணங்கள், மருத்துவ அறிக்கைகளைப் பற்றித் தான் பேசுவார்கள்.

* இதேபோல் மொபைல் போன் பிரியர்கள், மோட்டார் பைக் விரும்புகிறவர்கள், சினிமா, சீரியல் பைத்தியங்கள், புத்தக பிரியர்கள், ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள், கோவில் குளம் சுற்றுகிறவர்கள், குழந்தைகள்,  வியாபாரிகள், ஆசிரியர்கள், அலுவலக வேலை பார்ப்பவர்கள், முகவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் இவர்களெல்லாம் கூட்டம் கூடி பேசும்போது அந்த சூழ்நிலைக்கு தகுந்தாற்ப் போல் மாறிக் கொள்வார்கள்.

மேற்கூறியவற்றில் அதிசயம் ஏதுமில்லை. ஒன்றை மட்டும் நாம் கவனிக்க வேண்டும். வேறு வேறு சூழ்நிலை நாம் எதிர்கொள்ளும்போது நம்முடைய எண்ணங்கள் நிலையாக இருக்கின்றதா? என்பதை உறுதிகொள்ளவேண்டும். ஏனென்றால் எந்த ஒரு நிலையிலும் நீங்கள் சூழ்நிலைக்கு தகுந்தாற்ப் உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளக்கூடாது. அப்படி மாற்றிக்கொண்டால் நீங்கள் நினைக்கும் குறிக்கோளை அடைய முடியாது.


நான்கைந்து நண்பர்கள் மிகவும் அக்கறையாக அவர்களுடைய எதிகால படிப்புகளை விவாதித்து கொண்டனர். அதற்கான குறிக்கோளையும், திட்டத்தையும் தீட்டினார்கள். வாரம் தவறாமல் அதன் முன்னேற்றத்தை பேச வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள்.


அடுத்தவாரம் கூடினார்கள். ஒருவன் தான் படித்த பாடத்தையும்  , தெரிந்து கொண்ட பல செய்திகளை பேசினான். ஒருவன் தான் பார்த்த படத்தைப் பற்றி விரிவாக பேசினான். மற்றுமொருவன் தான் சென்று வந்த ஊரைப் பற்றிப் பேசினான். வேறொருவனோ தான் புதிதாக வாங்கிய மொபைல் போனைப் பேசினான். கடைசியில் ஒருவன் தான் பார்த்த 'கிரிக்கெட் மேட்ச் ' பற்றியும் , தான் விளையாடிய விளையாட்டு பற்றி பேசினான்.

அதாவது சென்ற வாரம் வரை அவைகளுடைய குறிக்கோள் என்னவாக இருந்தது. இந்த வாரம் என்னவாயிற்று? இந்த ஒரு வாரத்தில் அவரவர்கள் சந்தித்த சூழ்நிலைகள் என்னென்னவென்று அவர்கள் பேசிய பேச்சிலிருந்து நமக்கு தெளிவாக தெரிகின்றது. அவர்கள் எதிர்கொண்ட சூழ்நிலைகள் தான் அவர்களுடைய எண்ணத்தை மாற்றிவிட்டது என்று சொல்லலாம்.

ஆக, உங்கள் எண்ணங்கள் எவ்வளவு உயர்வாக இருந்தாலும் உங்கள் சூழ்நிலையும் உங்கள் எண்ணத்தை ஒத்து செயல்கள் செய்பவர்களாக சூழ்ந்து இருந்தால் உங்கள் குறிக்கோள் எளிதில் நிறைவேறும்.     

எண்ணங்கள் என்ற சூரியன் அல்லது சந்திரன் எவ்வளவு பெரிதாக பிரகாசமாக இருந்தாலும் மிகவும் சாதாரணமான சிறிய மேகங்கள் அதை மறைத்துவிடும். சூழ்நிலை மேகத்தை உனது சாதகமாக்கிக்கொள்.

உதாரணமாக, தியேட்டரில் திரைப்படம் ஓடுகின்றது. காட்சிக்குத் தகுந்தாற்ப் போல் அந்த படத்தை பார்க்கும் அனைவரும் சிரிக்கின்றனர், உணர்ச்சிவசப் படுகின்றனர். அழுகின்றனர், மகிழ்கின்றனர், ரசிக்கின்றனர்.


சிறந்த தலைவர்களின் ஆற்றல் மிக்க பேச்சு கேட்பவர்களை பரவசத்தில் ஆழ்த்துகின்றது. இனிமையான பாடல்கள் ரசிக்க வைக்கின்றது. சாந்தமான ஆன்மிக சொற்ப்பொழிவுகள் மக்களை பக்தியில் மூழ்கச் செய்துவிடுகின்றது. ஒரு நடிகனின் பேச்சு பலரையும் கவருகின்றது. அதாவது இவர்களெல்லாம் தங்களுக்கு தகுந்தாற்போல் சூழ்நிலைகளை மாற்றும் வல்லமை பெற்றவர்கள். அவர்களின் எண்ணங்களுக்கேற்ப தங்கள் சூழ்நிலைகளை அமைத்துக் கொள்வதால் அவர்கள் புகழ் எப்போதும் உச்சத்தில் இருக்கும்.

ஆகவே தான் பள்ளியில் நன்றாக படிப்பவர்கள் தனியாகவும், விளையாடுபவர்கள் , நடனமாடுகின்றவர்கள், பாடுபவர்கள், பேசுபவர்கள், நடிப்பவர்கள் என்று ஒவ்வொருவரும் தனித்தனியாக பிரித்து தினமும் அவர்களை கூட வைத்து அவரவர்களுடைய எண்ணங்களை நிலைநிறுத்திக் கொள்ளச்செய்வார்கள்.

ஆகவே எந்த சூழ்நிலையிலும் உங்கள் எண்ணங்கள் மாறாமல் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நினைக்கும் குறிக்கோளை அடையுங்கள்.


எவ்வாறு ஆழ்நிலை தியானத்தில் இருப்பவர்கள் தங்கள் சூழ்நிலைகளை மறந்து ஆழ்ந்து இருப்பது போல் எண்ணத்தில் ஆழ்ந்து இருங்கள். உங்கள் செயல் வெற்றி இலக்கை எளிதில் அடைய வழி வகை செய்யும்.

   

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

Friday, 21 September 2012

திரைப்படம் , சீரியலுக்கு அடிமையானவர்களா- ARE YOU AN ADDICT OF CINEMA OR TV SERIALS

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

திரைப்படம் , சீரியலுக்கு அடிமையானவர்களா- 
ARE YOU AN ADDICT OF CINEMA OR TV SERIALS 


திரைப்படம் மற்றும் சீரியல் இரண்டும் மனிதர்களை வைத்துக்கொண்டு மனித வாழ்க்கைக்கு சற்றும் பொருந்தாத நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் காட்டி மக்களை பழக்கப்படுத்தி, பார்ப்பதை வழக்கமாக்கி அடிமை படுத்திவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். அவர்கள் மக்களை சோம்பேறியாக்க , மூளைய மழுங்க வைக்க போட்டி போட்டு கொண்டு இராப்  பகலாக உழைத்து வருகின்றனர். இந்த இரண்டிலும் திட்டமிட்டபடி (கதைப்படி)  முதலும் முடிவும் இருக்கும். அதில் நடிக்கும் பாத்திரங்கள் அனைத்தும் 'டைரக்டர்' என்ன எப்படி செய்யச் சொல்கிறாரோ அதன்படி தான் கதை நகரும். 


ஒரே நொடியில் மண் குடிசை மாளிகையாகிவிடும், பிறந்த குழந்தை இளைஞன் ஆவான். பெரிய பெரிய பிரச்சனைகள் இலகுவாக தீர்க்கப்படும், ஒரே வார்த்தையில் தவறை உணருவார்கள். தொண்டன் தலைவனாவான், முட்டாள் படிப்பில் கெட்டிக்காரனாவான்,ஏழை பணக்காரனாவான், வேலைக்காரன் முதலாளியாவான், சாதாரண பிரஜை முதலமைச்சராவான், 50 எதிரிகளை பந்தாடுவான், உண்மையில் கரகர குரல் இருப்பவன், பின்னணி குரல் கொடுத்து மேக் அப் செய்வார்கள். கவர்ச்சியைப் பற்றி சொல்லவே வேண்டாம். சில சமயங்களில் கஷ்டமான காட்சிகளில் பிறரைக் கொண்டு டூப் போட்டு நடிக்கவும்  வைப்பார்கள். இப்போது அனிமேஷன் கொண்டு 'அட்ஜஸ்ட் ' செய்கிறார்கள்.நினைத்த நேரத்தில் மழை என்று கணக்கற்ற வகையில் மக்களை மயக்கி அது உண்மையென காட்டி நம்ப வைக்கிறார்கள். 


உண்மையில் வாழ்க்கை அப்படியா இருக்கின்றது. நாம் நினைப்பது ஓன்று! சம்பந்தமே இல்லாமல் நடப்பது இன்னொன்று! நம்மை சுற்றியிருக்கும் பாத்திரங்கள் எப்போதெல்லாம் மாறுவார்கள் என்று சொல்லவா முடிகிறது? நேற்று வரை சகோதரனாக இருந்தவன் இன்று அந்நியனாக மாறுகிறான்! நேற்று கூட்டு குடும்பம் இன்று தனிக்குடித்தனம், நேற்று நண்பன் இன்று எதிரி, நேற்று அன்பானவன் இன்று அரக்கனாகிறான், நேற்று நம்பிக்கையானவன் இன்று அவனம்ப்பிக்கைக்கு ஆளாகிறான், நேற்று நல்லவன் இன்று திருடனாகிறான்.


நம்மைச் சுற்றிலும் எளிதில் கணிக்கமுடியாத சதி வேலைகள், நம்பிக்கை துரோகங்கள், ஏமாற்றுக்காரர்கள் என்று பல உருவங்களில் நடமாடுகிறார்கள். '"அந்த பிரச்சனையா? நான் பார்த்துக் கொள்கிறேன் " என்றவர்கள் ஆபத்து வரும் சமயத்தில் பறந்து விடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

இன்னும் சிலர் ஆசை வார்த்தை பேசி நம்மை நம்ப வைத்து நட்ட நடுகாட்டில் விட்டு விட்டு அவர்கள் தப்பித்துவிடுவதை கேள்விபட்டியிருக்கிறோம். 'அய்யோ அய்யோ 'என்று கதறினாலும் விட்டு விட்டு செல்ல தயங்காதவர்கள் பலர் இருக்கத் தான் செய்கிறார்கள். நாம் உத்தமனாக இருந்தாலும் உன்னைச் சுற்று இருப்பவர்கள் அவ்வாறு வாழவிடாது! 'பொய் ' பேசச் சொல்லும், பொறாமை பட செய்யும், கோபம் வரவழைக்கும் !

நாம் நடை பாதையில் விழிப்பாக நடந்தாலும், குடித்து ஓட்டும் வாகனங்கள் நம்மை நோக்கி வந்தால் என்ன செய்வது? அன்புடன் நடந்து கொண்டாலும் உன்னிடத்தில் கடினமாக நடந்துகொள்வார்கள். நீ கட்டுப்பாட்டுடன் இருந்தால் துப்பாக்கி கொண்டு சுடவரும், கத்தியை காட்டி மிரட்டும், பொருட்களை அபகரிக்க நினைக்கும்!நீ சாந்தமாக , அமைதியாக , இனிமையாக பேசினாலும் காதில் கேட்கமுடியாத பதில் வரும். அப்போதெல்லாம் உன்னைக் காப்பாற்ற திரைப்படம் / சீரியலில் வருவது  போல்  கதாநாயகன் / கதாநாயகி வருவார்களா?      

நீ துன்பப்பட்டாலும் துயரப்பட்டலும் உன்னை நீ தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். என்ன செய்வது நீ  பார்த்தது திரைப்படம். நீ இருப்பது வாழ்க்கை படம் . அது நிழல் படம். நீ வாழ்வது உண்மை படம். அதில் யாருக்கும் பாதிப்பில்லை. அனால் வாழ்கையில் நீ செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் மற்றவர்களுக்கு பாதிப்பு உண்டு. நல்லதை செய்தால் நன்மை அடைவர். தீமை செய்தால் தீங்கு அனுபவிப்பர். ஆகவே உன்னை நீ நம்பு! சத்தியத்தை கடைபிடி! கை மேல் பலன் கிடைக்கும். அப்படி நடந்துகொல்வீர்களானால் வாழ்கையில் நீங்கள் கட்டாயம் கதாநாயகன் அல்லது கதாநாயகி தான்.

ஆகவே 


பிறர் நிழலை நீ நம்பாதே!

உன் நிஜ உருவத்தை நம்பு !


கட்டாயம் நீ வாழ்கையில் முன்னேறுவாய்!  


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது