மக்கள் சக்தி இயக்க உறுப்பினர்கள் திரு அசோகன், திரு பிரபாகரன், திரு சுவாமிநாதன், திரு செல்லவேல், திரு கங்காதரன், திரு சேகர் உள்ளிட்டோர்கள் கலந்து கொன்டு சிறப்பித்தனர்.
Pages
- Home
- * வெற்றி தரும் வழிகள் (101)
- * உள்விதி மனிதன் (49)
- * எனது புதுக்கவிதைகள் (293)
- * புதிய விளையாட்டுகள் (9)
- * சிரிப்பு மாத்திரைகள் (10)
- * விளையாட்டு புதிர்கள் (4)
- * ISO 9001-உயர்வுக்கு வழி (12)
- * லாபம் தரும் தொழில்கள்(5)
- * தன்னம்பிக்கை இரகசியங்கள் (87)
- *மனம், யோகா, தியானம், ஆன்மீகம், WHO AM I? ANSWER (7)
- * நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)
- *குறு, சிறுகதைகள் (49)
- * நாட்டு நடப்புகள் (171)
- * விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)
- * இது நம்ம டி.வி சானல் (8)
- * வெற்றிப் படிகள் (89)
- வாழ்க்கைக்கான கதைகள் (1)
- * தொழில் நிர்வாக வழிகாட்டி (14)
- * UMASK - FOR EASY TYPING (13)
- * மிதுனமதி (குறுநாவல்)
- * WORLD LANGUAGES PROTECTOR- UMASK (4)
- BLOG CREATION (வலைப்பூ)?
- * MY IDEAS & INNOVATIONS (31)
- பருத்தியில் புரட்சி (4) (குறுநாவல்)
- அறிமுக தத்துவவியல் தொடர் - V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன் (6)
Saturday, 9 October 2021
Makkal sakthi eyakkam - 2.10.2021 - Gandhi Jeyanthi - Gandhi Museum, Madurai
மக்கள் சக்தி இயக்க உறுப்பினர்கள் திரு அசோகன், திரு பிரபாகரன், திரு சுவாமிநாதன், திரு செல்லவேல், திரு கங்காதரன், திரு சேகர் உள்ளிட்டோர்கள் கலந்து கொன்டு சிறப்பித்தனர்.
Sunday, 3 October 2021
Annie Besant Birthday - 1.10.2021 - Theosophical society, Madurai








Friday, 3 September 2021
ADITI MADURAI -13TH YEAR -2021 -CHILDREN'S COMPETITION & PRIZE DISTRIBUTION ...
ADITI MADURAI 13TH YEAR - 2021 -
CHILDREN COMPETITION & PRIZE DISTRIBUTION,
PRASANNA COLONY,
MADURAI.
ADITI, Madurai ..13th year
Independence Day Aug 2021
Children's Competition (Drawing, Poem, Speech etc..)
And
Prize Distribution
Venue: Prasanna Colony, Avaniya Puram, Madurai.
Date: 29.8.2021 Time: 4.00pm
அதிதி 13ம் ஆண்டு -
குழந்தைகள் - சுதந்திரதினப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா
VISIT THE BELOW LINK..
Thursday, 19 August 2021
MY UMASK BOOK - RECEPTION AND AWARD FROM WORLD TAMIL UNIVERSITY USA
UMASK –
Uniform
Multi-lingual Alphabets Soft Keyboard
Special features:-
•
All
language keys are in alphabetical order as per the learning method
•
So
irrespective of all ages, anyone can easy to learn, teach, type (write) any
language
•
It
can be operated by keyboard keys or by the mouse pointer
•
All
language family’s alphabets are arranged mostly in the same style. So if you
learn one language then you can learn other languages easily.
Thursday, 15 July 2021
IMF - INTERNATIONAL MONETARY FUND - A VIEW - K.K.GANGADHARAN
IMF - INTERNATIONAL MONETARY FUND - A VIEW
சர்வதேச நாணய நிதியம்
K.K.GANGADHARAN
1. ஒரு
வீட்டோட முன்னேற்றமா இருந்தாலும் சரி, ஒரு தொழிலோட முன்னேற்றமா இருந்தாலும் சரி, ஒரு
நாட்டோட முன்னேற்றமா இருந்தாலும் சரி! நிதி நிர்வாகம் ரொம்பவே முக்கியம்.
திறமையான நிதி நிர்வாகத்தால் மட்டுமே பொருளாதாரத்தை உயர்த்த முடியும். இதிலே ஐ.எம்.எஃப். அதாவது ‘சர்வதேச
நாணய நிதியம்’ பற்றிய சில தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த ‘நிதியம்’ ஒரு நாட்டோட நிதி நிர்வாகத்துக்கு மிகவும் உதவியா இருக்கிறதுன்னும்
சொல்லலாம். தற்போது கீதா
கோபிநாத் சர்வதேச நாணய நிதியத்தில் (ஐ.எம்.எஃப்) பொருளாதார ஆலோசகராகவும், ஆராய்ச்சித் துறையின் இயக்குநராகவும் உள்ளார்.
2. கீதா கோபிநாத் (Gita Gopinath), பேரைக் கேட்கும் போதே, ஒரு தமிழ் பேர் போலத்
தெரியுது தானே. ஆமாங்க, இவர் ஓர்
இந்திய அமெரிக்க பொருளாதர அறிஞர். இவர் பிறந்த நாள் 8 டிசம்பர் 1971.
இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இச்சான் சுவான்டிரா பன்னாட்டு
பொருளாதார ஆய்வு பேராசியராக இருக்கிறாருங்க. சென்ற அக்டோபர் 2018இல் ‘சர்வதேச நாணய நிதியம்’
இவரை முதன்மை பொருளாதர அறிஞராக நியமித்துள்ளது. இவர் தேசிய பொருளாதார ஆராய்ச்சி
பணியகத்தின் பன்னாட்டு நிதியும் பேரினப் பொருளியலும் என்பதோட துணை இயக்குநராகவும்
உள்ளார். இவரின் ஆராய்ச்சி பன்னாட்டு நிதியும் பேரினப் பொருளியலும் என்பதை
முதன்மைபடுத்தியே உள்ளது. இவர் கேரள முதலமைச்சருக்கு பொருளாதார ஆலோசகராகவும்
உள்ளார்.
3. சர்வதேச நாணய நிதியம் எதற்காக நிறுவப்பட்டது? அதனோட நோக்கங்கள் என்னென்னு இப்போ பார்ப்போம்.
இந்த சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) என்பது ஒரு சர்வதேச
அமைப்பாகும், இது உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி
ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல், சர்வதேச வர்த்தகத்தை
ஊக்குவித்தல் மற்றும் வறுமையை குறைத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டுள்ளது.
4. இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லனும்னா சர்வதேச
நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) வாஷிங்டன் டி.சி.யில் இருக்கு, தற்போது
இதுலே 189 உறுப்பு நாடுகள் இருக்குது, ஒவ்வொரு
நாடும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவில் அதன் நிதி
முக்கியத்துவத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவத்தைக் கொண்டு இருக்கு, இதிலே உலகப் பொருளாதாரத்தில் மிகவும் சக்திவாய்ந்த நாடுகள் அதனோட
வாக்களிக்கும் பங்கும் அதற்கேத்தாப் போல இருக்கு. எடுத்துக்காட்டாக இன்றளவில்
அமெரிக்காவுக்கு மிக அதிகமாகவும் இந்தோனேஷியாவுக்கு மிகக்குறைவாகவும் இருப்பதாக
சில ஊடகத் தகவல்கள் சொல்லுதுங்க
சர்வதேச நாணய நிதியத்தின் செயல்கள்
என்னென்னான்னு பார்த்தோம்னா
"உலகளாவிய நாணய ஒத்துழைப்பை வளர்ப்பது, நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குதல், உயர்
வேலைவாய்ப்பு மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும்
உலகெங்கிலும் உள்ள வறுமையை குறைத்தல்"ன்னு அதனோட பணிகளை அடுக்கிக் கொண்டே
போகலாம்க .
5. சர்வதேச நாணய நிதியத்தின் செயல்பாடுகள் எவை
எவைன்னு? பார்த்தோம்னா சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை
அடைவதற்கான முதன்மை முறைகள் திறன் மேம்பாடு மற்றும் கடன் வழங்கல் ஆகியவற்றைக்
கண்காணித்தல் தாங்க. நிதி நெருக்கடிகளைத் தடுக்க அல்லது தணிப்பதற்காக பொருளாதார
நெருக்கடியை அனுபவிக்கும் நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன்களை வழங்குவது கூட
இதன் செயல்பாட்டிலே அடங்கும்.
6. கண்காணிப்பு பற்றி சற்று விரிவாப் பார்த்தோம்னா, சர்வதேச நாணய நிதியம் தேசிய பொருளாதாரங்கள், சர்வதேச
வர்த்தகம் மற்றும் உலகப் பொருளாதாரம் பற்றிய முழுமையான தரவை மொத்தமாக சேகரிக்கிறது,
அதுமட்டுமில்லாம தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் தொடர்ந்து
புதுப்பிக்கப்பட்ட பொருளாதார கணிப்புகளை வழங்குவது தாங்க. இவை தவிர உலக பொருளாதார
அவுட்லுக்கில் வெளியிடப்படும் கணிப்புகள், வளர்ச்சி
வாய்ப்புகள் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் நிதி, நாணய
மற்றும் வர்த்தக கொள்கைகளின் தாக்கம் குறித்த நீண்ட விவாதங்களும் இதிலே இடம்
பெறுகிறது என்பது கூடுதல் அம்சம்னு சொல்லலாம்.
7. இந்த சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்குதல்
செயல்பாடு பத்தி இப்போ தெரிஞ்சுக்குவோம். அதாவது நிதி
நெருக்கடிகளைத் தடுக்க அல்லது தணிப்பதற்காக பொருளாதார நெருக்கடியை அனுபவிக்கும்
நாடுகளுக்கு இந்த சர்வதேச நாணய நிதியம் கடன்களை வழங்கி வருகிறது. மேலும் ஒதுக்கீடு
முறையின் அடிப்படையில் இந்த கடன் வழங்குவதற்கான நிதியை இதிலுள்ள உறுப்பினர்கள்
பங்களிக்கின்றனர். இந்த நிதிகள் செப்டம்பர் 2017 நிலவரப்படி
மொத்தம் எஸ்.டி.ஆர் அதாவது ஸ்பெஷல் டிராயிங் ரைட்ஸ் 475 பில்லியன்
(யு.எஸ். 645 பில்லியன்) ஆக உள்ளது. இது உலகின் இருப்பு
நாணயங்களின் தொகுப்பு விகிதாச்சாரங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
8. சர்வதேச நாணய நிதியத்தின் நிதிகள் பெரும்பாலும்
பெறுநர்கள் தங்கள் வளர்ச்சி திறன் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை அதிகரிக்க
சீர்திருத்தங்களைச் செய்வதற்கு சில நிபந்தனைகளுடன் வழங்கப்படுகின்றன. கூடுதல்
தகவல் என்னான்னா, சர்வதேச நாணய நிதியம் அதன் திறன்
மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் உறுப்பு நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவி, பயிற்சி மற்றும் கொள்கை ஆலோசனைகளை வழங்கியும் வருகிறது. மேலும் இந்த
திட்டங்களில் தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு குறித்த பயிற்சியும் அடங்கும்,
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஊட்டமளிக்கும் விதமாக தேசிய
மற்றும் உலகளாவிய பொருளாதாரங்களையும் கண்காணிப்பதாகும்.
9. 2021-22 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 12.5 சதவீதம் வளர்ச்சி காணும் என்று சர்வதேச நாணய நிதியம்
கணித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய உலகப்
பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கை இந்தியாவுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. ஏனெனில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் இப்போது உயர்த்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் இந்தியாதான்
முன்னிலையில் இருப்பதாக இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
10. சர்வதேச அளவில் இந்தியாதான் மிக
வேகமான வளர்ச்சியைக் கொண்டிருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 2020-21
ஆண்டைப் பொறுத்தவரையில், 8 சதவீத வீழ்ச்சியை இந்தியா சந்திக்கும்
என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஜனவரி மாதத்தில்
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், இந்தியா 2021-22
நிதியாண்டில் 11.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று
கூறியிருந்தது. அதேபோல, 2022-23 நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதார
வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டையும் சர்வதேச நாணய நிதியம் 6.8 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
உலகப் பொருளாதாரத்தை எடுத்துக்
கொண்டால், 2020ஆம் ஆண்டில் 3.3 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருந்த
நிலையில், இந்த 2021ஆம் ஆண்டில் 6 சதவீத வளர்ச்சி ஏற்படும் என்று
சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. அதேபோல, 2022ஆம் ஆண்டில் 4.4 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று
மதிப்பிடப்பட்டுள்ளது. உலக நாடுகளிலேயே அமெரிக்காதான் இந்த ஆண்டில் கொரோனாவுக்கு
முந்தைய தனது பழைய நிலையை எட்டும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற நாடுகள் 2022ஆம் ஆண்டில்தான் இயல்பு நிலையை
அடையும் எனவும் இந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.
Monday, 14 June 2021
INTERNATIONAL MUSEUM DAY - சர்வதேச அருங்காட்சியகம் தினம் - BY K.K.GANGADHARAN
INTERNATIONAL MUSEUM DAY
சர்வதேச அருங்காட்சியகம் தினம் -
BY K.K.GANGADHARAN
கு.கி.கங்காதரன்
ஒவ்வொரு நாளுக்கும்… ஏதாவது ஒரு சிறப்பு இருக்கும்… என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்தானே… அந்த வகையிலே இந்த தினத்தின் அதாவது மே மாதம் 18ம் நாளின் சிறப்பு என்னான்னா….???
ரொம்ப சரியா ஊகிச்சீங்க!!! ஆமாங்க இன்றைய நாள்…சர்வதேச அருங்காட்சியகம் தினம் தாங்க… அருங்காட்சியகம் என்கிறது கீழடியில் கிடைத்த தொல்பொருட்களாக இருக்கலாம்!! பழங்கால நாணயங்களாக இருக்கலாம்!! பல நாடுகளோட தபால்தலைகளாக இருக்கலாம்!! பலரோட ஓவியங்களாக இருக்கலாம்!! ஏன் புகைப்படங்களாகக் கூட இருக்கலாம்!! அருங்காட்சியகம் பற்றிய பல சுவையானத் தகவல்களை இப்போ பார்க்கலாம்.
அருங்காட்சியகம்ன்னா.. நம்ம
மதுரையில் உள்ள மக்களுக்கு.. உடனே நினைவுக்கு வருவது.. ‘காந்தி அருங்காட்சியகம்’!
அங்கே.. அண்ணல் காந்தியடிகளைப் பற்றிய.. வாழ்க்கை வரலாற்றுச் சான்றுகளைக் காணலாம்..
உண்மைதானே!.. அருங்காட்சியகங்களாலே..
என்ன நன்மைன்னு.. நீங்க கேட்கலாம்??
சிலருக்கு பல புத்தகங்களைப் படிப்பதிலே ஆர்வமிருக்கலாம்..
சிலருக்கு பலருடைய பேச்சுகளைக் கேட்பதிலே ஆர்வமிருக்கலாம்..
சிலருக்கு பலவற்றைப் பார்ப்பதிலே ஆர்வமிருக்கலாம்..
அம்மாதிரியாக நாம பார்ப்பதற்கு வாய்ப்பு கொடுக்கிறதுதாங்க…
இந்த அருங்காட்சியகம்.. ஒரு பொருளைப் பார்க்கும்போது.. அப்பொருள் நம்மனதில் ஆழமாய் பதிவது இயல்பு தானே.. அருங்காட்சியகம் என்கிறது வரலாற்றுகளின்
பொக்கீஷங்கள்..கலைகளின் சங்கமமங்கள்.. கற்பனைகளின்
காட்சிகள்.. ஏன்? விந்தைகளின்
வெளிபாடுகளுன்னும் சொல்லலாம்.. இம்மாதிரியான அருங்காட்சியகள்
நமது இந்தியாவில் நிறையவே இருக்கு.. அதில் சில
அருங்காட்சியகங்களில் சிறப்பை ஒவ்வொன்றாக இப்போது பார்க்கலாம்.
முதல்லே தெரிஞ்சுக்கப் போகிற அருங்காட்சியகம்..
1. பகோரி-கி-ஹவேலி, உதய்பூர்..
(Bagore Ki Haveli Museum -Udaipur)
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில்.. இந்த பகோரி-கி-ஹவேலி அருங்காட்சியகம் இருக்கு.. இது ஒரு பெரிய அரன்மனை போன்ற பெரிய மாளிகை.. இந்த பெரிய மாளிகை பிசொலா என்ற கங்கோரி ஏரிக்கு அருகில் இருக்கு.. இது 18ம் நூற்றாண்டில் மேவார் பகுதியை ஆண்ட அமீர் சந்த் பத்வா என்ற மன்னர் கட்டியிருக்கிறார்..
இந்த அரண்மனையில் நூற்றுக்கும் மேற்பட்ட அறைகள் இருக்கு,. ஒவ்வொரு அறையிலும் உடைகள் மற்றும் நவீன ஓவியக்கலைகளின் காட்சிகள் இங்கே இருக்கு.. உட்புறங்களில் உள்ள கண்ணாடி மற்றும் நுணுக்கமான கண்ணாடி வேலைபாடு கொண்ட மாளிகை இது.. உதாரணமாக இங்குள்ள குயின்ஸ் சேம்பர் சுவர்களில் மேவார் ஓவியம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கு.. வண்ண கண்ணாடிகளின் சிறிய சிறிய துண்டுகளிலிருந்து.. வடிவமைக்கப்பட்ட அழகான இரண்டு மயில்கள் கண்ணாடி வேலைபாடுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.. என்றே சொல்லலாம்.
அடுத்த அருங்காட்சியகம்.....
2. விக்டோரியா மெமோரியல்
Victoria Memorial Hall and Museum
அடுத்த அருங்காட்சியகம்.. விக்டோரியா மெமோரியல் - Victoria Memorial Hall and Museum .. விக்டோரியா மெமோரியல் என்பது கொல்கத்தாவில் உள்ள ஒரு பெரிய பளிங்கு கட்டிடம்.. இது 1906 மற்றும் 1921 க்கு இடையில் கட்டப்பட்டது. இது விக்டோரியா பேரரசின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் எடுத்துக்கொள்ளலாம்., இப்போது கலாச்சார அமைச்சரகத்தின் கீழ் இது ஒரு அருங்காட்சியகமாக இருந்து வருகிறது. இந்த அருங்காட்சியகம் மைதான் இடத்தில் அமைந்துள்ளது மேலும் இது கொல்கத்தாவின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும்.
விக்டோரியா மெமோரியலில் 25
காட்சியகங்கள் உள்ளன. ராயல் கேலரி, தேசிய தலைவர்கள் கேலரி, உருவப்படம் கேலரி, சென்ட்ரல் ஹால், சிற்ப கேலரி, ஆயுதங்கள் மற்றும் ஆயுதக் கேலரி
மற்றும் புதிய, கொல்கத்தா கேலரி ஆகியவை இதில் அடங்கும்.
விக்டோரியா மெமோரியல் தாமஸ் டேனியல் (1749-1840) மற்றும் அவரது மருமகன் வில்லியம்
டேனியல் (1769-1837) ஆகியோரின் படைப்புகளின் மிகப்பெரிய ஒற்றை தொகுப்பைக்
கொண்டுள்ளது. வில்லியம் ஷேக்ஸ்பியரின் விளக்கப்பட படைப்புகள், அரேபிய இரவுகள் மற்றும் ரூபாயத் எழுதிய உமர் கயாமின் புத்தகங்கள் போன்ற அரிய மற்றும் பழங்கால புத்தகங்களின்
தொகுப்பும், நவாப் வாஜித் அலி ஷாவின் கதக் நடனம் மற்றும்
தும்ரி இசை பற்றிய புத்தகங்களும் இதில் உள்ளன. அடுத்த அருங்காட்சியகம் பற்றியத்
தகவலை இந்தப் பாடலைக் கேட்ட பின்னே
தெரிஞ்சுக்கலாம்..
அடுத்த அருங்காட்சியகம்..
3. சலார் ஜங் அருங்காட்சியகம், ஐதராபாத்..
Salar Jung Museum, Hyderabad, Andhra
சாலார்
ஜங் மியூசியம் என்பது இந்தியாவின் தெலுங்கானா, ஹைதராபாத் நகரில்.. மூசி ஆற்றின்.. தென் கரையில் உள்ள.. தார்-உல்-ஷிஃபாவில் அமைந்துள்ள.. ஒரு கலை அருங்காட்சியகமாகும்.. இது இந்தியாவின்
மூன்று தேசிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். உண்மையில் இந்த அருங்காட்சியகம்
சலார் ஜங் குடும்பத்தினருக்குச் சொந்தமான ஒரு தனிப்பட்ட கலைத் தொகுப்பாகும்,
இது மூன்றாம் சலார் ஜங் இன்
மரணத்திற்குப் பிறகு இந்தியதேசத்திற்கு வழங்கப்பட்டது.
இது டிசம்பர் 16, 1951 அன்று திறக்கப்பட்டது.. இங்கே ஜப்பான், சீனா, பர்மா, நேபாளம், இந்தியா, பெர்சியா, எகிப்து, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய நாடுகளின் சிற்பங்கள், ஓவியங்கள், செதுக்கல்கள், ஜவுளி, கையெழுத்துப் பிரதிகள், மட்பாண்டங்கள், உலோகக் கலைப்பொருட்கள், தரைவிரிப்புகள், கடிகாரங்கள் மற்றும் தளபாடங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ,. இது உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.
அடுத்த அருங்காட்சியகம்
4. ஜெய்சால்மர் போர் அருங்காட்சியகம்
Jaisalmer War Museum, Jaisalmer
ஜெய்சல்மர் போர் அருங்காட்சியகம்
இது ஜெய்சால்மர் - ஜோத்பூர் நெடுஞ்சாலையில் ஜெய்சால்மேரிலிருந்து 10 கி.மீ
தொலைவில் ஜெய்சால்மர் போர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த
அருங்காட்சியகத்தின் துவக்கம் 1965.. அதாவது இந்தியா
பாகிஸ்தான் போரின் பொன்விழா நினைவு ஆண்டில் தொடங்கப்பட்டது..
ஜெய்சால்மர் போர்
அருங்காட்சியகம் இந்தியாவின் வளமான இராணுவ வரலாற்றைக் காண்பிப்பதற்கும், கடந்த
காலங்களில் நிகழ்ந்ததைப் போல உண்மையான போர் முயற்சிகளைக் காண்பிப்பதற்கும்
கருத்துருவாக்கப்பட்டது. ஜெய்சால்மர் போர் அருங்காட்சியகம் இந்திய இராணுவத்தின்
வீராங்கனைகள், குறிப்பாக இந்திய ஆயுதப்படைகள் செய்யும்
தியாகம் குறித்த அதிக விழிப்புணர்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அடுத்த
அருங்காட்சியகம் பற்றியத் தகவலை இனி தெரிஞ்சுக்கலாம்..
அடுத்த அருங்காட்சியகம்..
ஹெரிடேஜ் டிரான்ஸ்போர்ட் மியூசியம்..
ஹெரிடேஜ் டிரான்ஸ்போர்ட்
மியூசியம்.. இது மனிதர்களுடைய போக்குவரத்தின் வரலாற்றைப் பறைசாற்றும்.. இந்தியாவின்.. முக்கியமான..
போக்குவரத்து வண்டிகளின் அருங்காட்சியகமாக இருந்து வருதுங்க.. இது ஹரியானா மாநிலத்தின்.. குர்கான் மாவட்டத்தில்.. டரு இல் இருக்கு.. இங்குள்ள வண்டிகளின் தொகுப்பு
இந்தியாவில் போக்குவரத்து வளர்ச்சியில் கவனத்தை ஈர்க்கிறதுன்னே சொல்லலாம்.. இது 3.01 ஏக்கரில் அமைந்துள்ளது.. அதிலே 95,000 சதுர அடி அளவுக்கு.. கண்காட்சி காட்சியகங்களைக்
கொண்டு இருக்கு.. இது 2013 இல் திறக்கப்பட்டபோது.. இது இந்தியாவின் மிகப்பெரிய தனியாருக்குச் சொந்தமான அருங்காட்சியகமாக
இருந்து வருது.. அடுத்த அருங்காட்சியகம் பற்றியத் தகவலை தெரிஞ்சுக்கலாம்..
அடுத்த அருங்காட்சியகம்..
சித்தகிரி
கிராம்ஜிவன் மெழுகு சிலைகள் அருங்காட்சியகம்..
Siddhagiri Gramjivan Wax Museum
இந்த சித்தகிரி கிராம்ஜிவன்
மெழுகு சிலைகள்.. அருங்காட்சியகம்.. அதாவது கெனாரி
மடம் மகாராஷ்டிராவின் கோலாப்பூருக்கு அருகிலுள்ள கெனாரியில் அமைந்துள்ளது. இந்த
அருங்காட்சியகம்.. குறைந்த அளவே அறியப்பட்ட ஒன்று.. ஆனால் இங்கு நாம் கட்டாயமாக செல்ல வேண்டிய அருங்காட்சியகமாகும்.. இங்கு மகாராஷ்டிராவில் முகலாயர்கள் நுழைவதற்கு முன்பு.. பண்டைய கிராம வாழ்க்கையை அறிந்துகொள்ள உதவுகிறது.. மகாத்மா காந்தியின் கனவு கிராமத்தை.. இந்த அருங்காட்சியகம் கொண்டுள்ளது - தன்னிறைவு, பண்டைய
காலத்தின் பண்டமாற்று முறை, ஒரு கிராமத்தில் உள்ள மக்களின்
ஒரு பெரிய குடும்ப உணர்வு போன்றவைகளை பிரதிபலிக்கிறதென்னே சொல்லலாம்.. ஏன்னா அன்றைய சூழ்நிலைகளை.. 80 வெவ்வேறு வாழ்க்கை
காட்சிகளாக.. சுமார் 300 மெழுகு சிலைகளால் உண்மையான
மனிதர்களைப்போல இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.. ராமாயணம்
மற்றும் மகாபாரதம், 7 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது.. இந்த மெழுகு சிலைகள் மகத்தான மற்றும் பல பரிமாண விளைவுகளைக் கொண்டுள்ளன,.
அவை உயிருடன் இருப்பது போன்று தோற்றத்தை தருவதாக இருக்கு. இந்த
அருங்காட்சியகம் 27 வது மடாதிபதி எச்.எச். அட்ருஷ்ய காடிசிதேஷ்வர் சுவாமிஜியின்
பெரும் முயற்சியால் இவையனைத்தையும் கற்பனை செய்து.உருவாக்கப்பட்டது,
நமது பண்டைய கலாச்சாரம் மற்றும் சமுதாயத்தின் செழுமையை வரவிருக்கும்
இந்திய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.. அடுத்த
அருங்காட்சியகம் பற்றியத் தகவலை தெரிஞ்சுக்கலாம்..
அடுத்த அருங்காட்சியகம்..
காந்தி டெல்லி அருங்காட்சியகம்
National Gandhi Museum in Delhi
டெல்லியின் சிறந்த
அருங்காட்சியகங்களில் ஒன்று காந்தி அருங்காட்சியகம் என்பதில் சந்தேகமில்லை. காந்தி
அருங்காட்சியகம் ராஜ் காட்டிற்கு எதிரே அமைந்துள்ளது.
மியூசியத்தின் முக்கிய
சிறப்பம்சங்கள்
* மகாத்மா காந்தியின்
தாயத்து
* நூற்பு சக்கரங்கள்
* மகாத்மா காந்தியின் பழைய
புகைப்படங்கள்; அவரது இளம் நாள் முதல் 1947 இல்
டெல்லிக்கு இறுதி வருகை வரை.
* மகாத்மா காந்தியின்
ஆசிரமங்கள் மாதிரிகள்
* மகாத்மா காந்தி படுகொலையின்
போது உடுத்திக் கொண்டிருந்த ஆடையில் இருந்த இரத்தக் கறை உடைகள் மற்றும் புல்லட்
* மகாத்மா காந்தியின்
உருவத்தைக் காட்டும் நாணயங்கள் மற்றும் குறிப்புகள்
அடுத்த அருங்காட்சியகம்
பற்றியத் தகவலை தெரிஞ்சுக்கலாம்..
அடுத்த அருங்காட்சியகம் …
டான்
பாஸ்கோ அருங்காட்சியம், ஷில்லாங்
Don Bosco Museum, Shillong
இந்த டான் பாஸ்கோ..
அருங்காட்சியகத்தை விவரிக்க வேண்டுமென்றால்.. இங்குள்ள ஏழு
மாடிகளில் இருக்கும்.. கண்கவர் காட்சிகள், வண்ணங்கள் மற்றும் புதையல்களின் தொகுப்பாகும்.. இந்த அருங்காட்சியகத்திற்குள் நுழையும் போது
முதலில் வரவேற்பது.. அண்டை நாடுகளான பூட்டான், மியான்மர் மற்றும் நேபாளம் என்று பல்வேறு வடகிழக்கு சமூகங்களின் பாரம்பரிய
உடைகள் தாங்க.. புகைப்படப் பிரிவில் பழங்குடி வாழ்க்கையின்
பல அரிய புகைப்படங்களைக் காணலாம்..
அருங்காட்சியகத்தின் பிற
சிறப்பம்சங்கள் என்னவென்றால் இங்கு பழங்குடியினரின் தோற்றம் நிலப்பரப்பு பற்றியும்
பழங்குடியினரின் நடைமுறைகள் வாழ்க்கை முறைகளை மற்றும் இடம்பெயர்வு குறித்து சிற்பங்கள்
மற்றும் அலங்கரிக்கப்பட்டுள்ள உருவப்படங்களின் மூலம் மேலும் அறியலாம்..
இங்குள்ள ஒரு கேலரியில்
பல்வேறுவிதமான பழங்குடியினர்களின் வேட்டைகள், அவர்களின் கூடுதல்கள்
விவசாயம் மற்றும் மீன்பிடி நடைமுறைகளுக்காகவே
அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாகும்..
பல பார்வையாளர்கள்
பாரம்பரிய தொழில்நுட்ப கண்காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமானவை. கலை, இசை,
வீட்டுவசதி மற்றும் ஆயுதங்கள் பற்றிய காட்சியகங்கள் நம்மைக்
கவர்ந்திழுக்கும் அளவுக்கு உள்ளன. உணவு கேலரியில், சில
சுவையான உணவுகளை சுவைத்து மகிழலாம்..
நன்றி
































