இது தாங்க நம்ம அரசியல்! (சிரிக்க மட்டும்)
THIS IS OUR POLITICS ! (ONLY FOR JOKES)
MADURAI GANGADHARAN
"அந்த ஒலி பெருக்கி அமைப்பாளர்கிட்டே அப்படி என்ன விசேசம் இருக்கு?"
"கூட்டத்திற்கு ஆட்கள் யாருமே வராவிட்டாலும் பரவாயில்லை. அப்பப்போ பின்னணியிலே மக்களோட கைதட்டலும் , விசில் சப்தமும் வர்றமாதிரி செஞ்சு கொடுப்பார் "
*********************************************************************************************************************
"தலைவரே ! நம்ம கட்சி ஆட்சிக்கு வரணும்னா விளம்பரம் கொடுத்தாத் தான் நடக்கும்"
"அப்படி என்ன விளம்பரம் ?"
"பிரபல கட்சியில் சேர்ந்து போட்டியிட கோடீஸ்வரர்களும், நடிகைகளும் உடனடி தேவை"
"???????????"
*********************************************************************************************************************
" என்னப்பா, பார்த்து ரொம்ப நாளாச்சு ! என்ன தொழில் செய்றீங்க?
"கட்சி கூட்டத்திற்கு ஆட்கள் சேர்கிற ஒப்பந்தக்காரராக இருக்கிறேன். என்கிட்டே ஒவ்வொரு மாநிலத்திலேயும் ஒரு லட்சம் பேர்கள் உறுப்பினராக இருக்காங்க. அப்பப்போ கிடைச்சாலும் ரொம்ப நல்லாவே கிடைக்குது"
"அப்படியா ! நல்லா செஞ்சு முன்னேறுங்க"
****************************** ****************************** ******************************************************
"என்னப்பா, செய்தித்தாளைப் படிச்சுட்டு ரொம்ப சோகமா இருக்கிறே ?"
" பின்னே என்னங்க ! ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேலே லஞ்சம் வாங்க முடியாம பண்ணீட்டாங்க ! அதுக்கு மேலே பணம் வாங்கினா எங்கிருந்து , எப்படி பணம் வந்திச்சுன்னு தேர்தல் ஆணையம் கேட்குமாம் !"
"?????????????????????"
****************************** ****************************** ********************************************************
" இன்னைக்கு என்னோட வேலை முடிஞ்சிருச்சி ! இனிமே யாராவது வந்தா நாளைக்கு காலாகாலத்திலே வரச்சொல்லுங்க"
"ஏங்க அப்படி?"
"இப்பவே லஞ்சம் ரூபாய் 49,000/= சேர்ந்திருச்சி. அதுக்கு மேலே வாங்கினா தேர்தல் ஆணையம் என்னைய பிடிச்சிடும்?"
*********************************************************************************************************************
"ஏங்க தலைவரு கூட்டத்திலே பேசுறததுக்கு முன்னாடி மூன்று கவரை மாறி மாறி பார்த்துட்டே இருக்கிறாரு"
"அதுவா? அது வந்து .... கட்சி மேலிடம் எப்போ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனாலே முன்னெச்சரிக்கையா இருக்கிறாரு ! தான் பேசப் போற பேப்பருங்க அது ! கட்சியிலே இருந்தா ஒரு பேச்சும், கட்சியை விட்டு நீக்கிட்டா ஒரு பேச்சும், எதிர்கட்சியிலே சேர்வதா இருந்தா ஒரு பேச்சும்ன்னு மூன்று மாதிரி எழுதி வைச்சுருக்கிறார்".
******************************************************************************************************************
"ஏங்க கூட்டம் அமைப்பாளரை ஒரு சின்னத்த்திரை தொகுப்பாளர்கிட்டே தலைவரு கொடுத்திருக்கிறாரு "
"நடுநடுவே சிரிப்போடு கைத்தட்டலும் வர்ற மாதிரி சரியா பண்ணுவாரு. அதாவது சின்னத்திரையிலே வர்ற மாதிரி"
*******************************************************************************************************************
" ஏங்க நம்மத் தலைவரு எப்ப பார்த்தாலும் எதிர்கட்சி கூட்டத்திற்கு மறுநாள் கூட்டம் போடுறாரு "
"அதுக்குக் காரணம், பந்தல் செலவு மிச்சம், நேற்று கூட்டத்துக்கு வந்தவங்களை சாப்பாடு கொடுத்து அங்கேயே தங்கவச்சு மறுநாள் நடக்க இருக்கும் கூட்டத்திற்கு ஆட்கள் சேர்க்க வேண்டிய அவசியமில்லை"
" ??? "
*********************************************************************************************************************
" நாலு பேர் கூட வராத கூட்டத்திலே நம்மத் தலைவரு 'எங்களோட படைபலம் இந்த நிகழ்ச்சி நாளை சின்னதிரையிலே ஒளிபரப்பும்போது பாருங்கன்னு ஏன் சொல்றாரு"
" அதாவது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பும் போது இலட்சக்கணக்கான மக்கள் இருக்கிறமாதிரி சேர்த்துவிட்டுருவாங்க. பார்க்கிறவங்களுக்கு மலைப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். முக்கியமா எதிர்கட்சியினருக்கு "
" சும்மா 'பில்ட் அப் 'ன்னு சொல்லு "
*********************************************************************************************************************
நன்றி .... வணக்கம்....
No comments:
Post a Comment