உன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு
LIFE INSURANCE CHANGE YOUR FATE
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
ஆயுள் காப்பீடு செய்த மனிதனின்
ஆயுள் முடிந்தாலும் ஆயிரம் பொன்னுக்குச் சமம்
ஆயுள் இருந்தாலும் ஆயிரம் பொன்னுச் சமம்
மனிதனின் ஜனனம் பத்து மாதத்தில் !
காற்றையும் மிஞ்சுவது காலத்தின் வேகம்
பருவங்கள் மாறும் வேகத்தில் உருவமும் மாறு கிறது
கண் இமைக்கும் நேரத்தில் எட்டி ப் பிடிக்கும் வயோதிகம்
அந்நாட்களை சமாளிக்கும் வழி தெ ரியாத தவிப்பு
எப்போது நிற்கும் என்று சொல்ல இயலாத உயிர் துடிப்பு
நெருங்கிய உறவும் உதவிக்கு வராத கொடுமை
தினமும் வாட்டியெடுக்கும் தனிமை ஒரு பக்கம்
உணவுக்கே கேள்விக்குறியாய் இருக்கும் நே ரம்
நோயின் மருத்துவச் செலவுக்கு எங்கே போவது ?
'தீ' என்றால் 'நா' வந்துவிடாது
'மரணம்' என்றால் வந்துவிடாது
எமனுக்கு இருக்கும் வினோதமான பசி
தினமும் உயிர்களை எடுக்கும் அகோரப் பசி
அதிலும் மனிதனின் உயிரை தினமும் ருசிக்க
எவ்வளவு உயிர்களைக் குடித்தாலும் அடங்காத பசி
பூமியில் பிறந்த மனிதன் என்றாவது ஒருநாள்
எமனிடம் சென்றே தீரவேண்டும்
பிறந்த நாள் தெரிந்த மனிதனுக்கு
தான் இறக்கும் நாள் தெரிவதில்லை
மனிதனின் பிறப்பே ஒரு வழிப் பாதை
புனிதமான புதிரான புதுமையான பாதை
பிறக்கும்போது ஒட்டிக்கொண்ட உயிர்
இறந்த பிறகு மீண்டும் ஒட்டுவதில்லை
உயிரை பிரிக்கத் தான் எத்தனை எத்தனை வழிகள்
எமனும் விதியும் மனிதனை ஆட்டிப் படைக்கும் சக்திகள்
உடலில் பலவித நோய்கள் கொடுப்பது
காரணம் தெரியாமல் நோயின் பிடியி ல் சிக்குவது
சற்றும் எதிர்பாராத விதி நடத்தும் விபத் து
அஜாக்கிரதையால் நடைபெறும் கொலை யும் கூட
முதுமையில் தானாக முடியும் வாழ்க்கை
தானே முடித்துக் கொள்ளும் தற்கொலை
மரணத்தில் ஆணென்ன பெண்ணென்ன
குழந்தையென்ன குட்டியென்ன
ஏழையென்ன பணக்காரனென்ன
எல்லோருமே ஒன்று தான்
இப்படி எமன் உயிரை எடுக்கும் கொடூரமான உலகில்
எப்படி அமைதியும் மகிழ்ச்சியான வாழ்க் கை வாழ்வது
விதியை மாற்றும் சக்தி உன்னிடம் உண்டு
மரணம் தரும் எமனை வெல்லும் ஆற் றல் உனக்குண்டு
நீ உயிரோடு இருக்கும்போது
நீ உனது குடும்பத்தை காத்திடுவாய்
நீ எதிர்பாராது இறந்துவிட்டால்
உன் குடும்பத்திற்கு துணையிருப்பது யாரோ?
உன் அன்பு செல்வங்கள் எங்கு செல்வார்கள்?
பொருள் இல்லாமல் அவர்கள் உயிர் வாழ முடியுமா?
கை நிறைய சம்பாதித்த நாட்களை நினைக்கும்
காப்பீடு ஏன்? செய்துகொள்ளவில்லை என்று எண்ணு ம் !
சராசரியான மனிதனின் இயற்கையான விதி
வரும் முன் கவலைகொள்வதில்லை
வந்த பின் அனுபவிக்கத் தவறுவதும் இல்லை
இனி உன் மதியால் எமனையும் விதியையும் துரத்து
ஆயுள் காப்பீடு இன்றைக்கே துவங் கி விடு
நீயும் செழிப்பாய் உன் குடும் பமும் செழிக்கும்
ஆயுள் காப்பீடும் ஒருவகை சேமிப் பே !
உன் மகிழ்ச்சி இனி எப்போதும் தடையிருக்காது
இது பொழுது போக்கு கவிதை அல்ல
உன் மகிழ்ச்சி வாழ்க்கைக்கு வழிகாட்டும் திசைகாட்டி !
இனிமேல் உனக்கு எமனைப் பற்றிக் கவலையில்லை
விதியை நினைத்து பயமில்லை
குடும்பம் மீது அக்கறை உள்ளவர்கள் எவரும்
ஆயுள் காப்பீடு செய்து கொள்ளத் தவறுவதில்லை!
உன் முன்னோர்கள் சொல்லாததை தெரிந்துகொள்
வருமுன் குடும்பத்தைக் காத்துக் கொள் !
குறிப்பு: நான் ஆயுள் காப்பீடு முகவர் இல்லை
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
No comments:
Post a Comment