Pages

Tuesday 13 May 2014

ஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள் - JOKES IN VOTE BOOTH

ஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை  சிரிப்பு வெடிகள்
 
JOKES  IN VOTE BOOTH 

மதுரை கங்காதரன் 

" என்னங்க அதிசயம் ! சில  அரசியல்வாதிங்க தேர்தல் ஆணையத்திற்கு முன் உட்கார்ந்து தர்ணா பண்றாங்க "

" அது வேற ஒண்ணுமில்லைங்க.  'நோடா'  (None Of The Above ) பொத்தான் கொடுத்தது போல 'ஆடா ' (All Of The Above)  பொத்தான் வேண்டுமாம். அதாவது 'ஆல் ஆப் தி அபோவ் ' பொத்தான் கொடுக்க வேண்டுமாம்.

" அப்படீன்னா ?"

" எனது ஓட்டு எல்லா வேட்பாளர்களுக்கும்"    

குறிப்பு : ஓட்டளிக்க விரும்பாதவர்களுக்கு  'நோடா' பொத்தான் கொடுத்தது போல் 

அனைத்து வேட்பாளர்களையும் விரும்புபவர்களுக்கு 'ஆடா ' பொத்தான் கொடுத்தால் இன்னும் ஓட்டுப்பதிவு அதிகமாக இருக்கும்.

(ஆனால் இதற்கு  வாக்களித்தவர்கள் பலரிடம் பணம் வாங்கிவிட்டவர்கள் என்று மக்கள் தவறாக நினைக்கக் கூடாது. அன்பினால் கூட இருக்கலாமல்லவா ! )   
----------------------------------------------------------------------------------------------------------

 "என்ன இருந்தாலும் ஓட்டு போடும்போது அந்த நடிகை அப்படி சொல்லியிருக்கக் கூடாது "

"அப்படி என்னாங்க சொன்னாங்க"

" எனக்கு பதிலாக என்னோட 'டூப்'க்கு அடையாள மை வைங்கன்னு சொன்னாங்க"

-------------------------------------------------------------------------------------------------------

" எனக்கு சுண்டு விரல்ல நீளமா மச்சம் இருக்கிறது தப்பா போயிடுச்சு "

"அதுகென்ன இப்போ "

"அதை பார்த்தவுடனே 'நீங்க ஏற்கனவே ஓட்டு போட்டீங்கன்னு' திருப்பி அனுப்பீட்டாங்க "

---------------------------------------------------------------------------------------------------

" எனக்காக நீங்க ஓட்டு போடுங்கன்னு 'நம்ம தலைவர்' சொன்னது தப்பா போயிடுச்சி "

"அதிலே என்னாங்க தப்புயிருக்கு"

" தலைவரோட ஓட்டு போடுறதுக்கு பல தொண்டர்கள் பூத்துக்கு வந்துட்டாங்க "

___________________________________________________________

"அந்த நடிகர் ஓட்டு போடுறதுக்கு என்ன வேணுமாம்"

" டைரக்டர் , காமெரா மேன் இருந்தாத் தான் ஓட்டுப் போடுவேன்னு ரொம்பவே அடம்பிடிக்கிறாருங்க "

----------------------------------------------------------------------------------------------------------

" இதெல்லாம் ரொம்ப ஓவராத் தெரியலே "

"எதுங்க"

நடிக்கிறதுக்கு டைரக்டர் சொல்லித் தரலாம். எப்படி ஓட்டுப் போடனும்னு கூட டைரக்டர் சொல்லித் தரணுமாம் "

----------------------------------------------------------------------------------------------------------

"அந்த கிரிக்கெட் வீரர் என்ன சொல்றாரு ?

"என்னதான் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரராக இருந்தாலும் ஓட்டு அடையாள மையை கிரிக்கெட் பேட்டும் , பந்தும்  விரல்லே வரையனுமாம்" 

-----------------------------------------------------------------------------------------------------------

"அந்த நடிகை ஏன் 'அடையாள மை' வைக்கக்கூடாதுன்னு சொல்றாங்க. வேற எதை வைக்கணுமாம்"   

" அடையாள மை வைப்பதற்கு பதிலாக அதே மாதிரி 'ஸ்டிக்கர்' ஒட்டச் சொல்றாங்க!"

-----------------------------------------------------------------------------------------------------------

" எனக்கு வயசு பதினெட்டு ஆகியும் என்னால ஓட்டு போட முடியல்லே "

"அடடா என்ன காரணமோ "

" ஓட்டு போடுற தேதியிலே என்னால போக முடியல்லே ! அதனாலே மறுநாள் போனேன்".

" ??????????????"

-----------------------------------------------------------------------------------------------------------

"பொதுவாக மக்கள் தான் 'இலவசம்' கேட்பாங்க. ஆனா அரசியல் கட்சிகள் எதை இலவசமாகக் கேட்கிறாங்களோ ?"  

" அவங்களுக்கு   'ஒரு ஓட்டுக்கு ஒரு ஒட்டு இலவசம் வேணும்ன்னு' கேட்கிறாங்க". 

-----------------------------------------------------------------------------------------------------------

"அவரு ஏங்க அடையாள மை வைக்கிறதுக்கு விரலைக் காட்டாம நெஞ்சை காட்டுறாரு ?

"அவரு தலைவரோட விசுவாசியாம் ! அவரை நெஞ்சிலே இருக்கிறதுக்கு அடையாளமா அங்கே தான் அடையாள மை வைக்க வேண்டுமாம் "

------------------------------------------------------------------------------------------------------

"எப்படி அந்த பொண்ணு ஓட்டு போடுறது இது தான் முதல்முறைன்னு ரொம்ப சரியா சொன்னீங்க !" 

"அதுவா  ஓட்டு அடையாள மை வைக்கிறதுக்கு ஒத்த விரல் காட்டாமே மெகந்தி வைக்கிறது போல முழு கையும் காட்டினாங்களே "

-------------------------------------------------------------------------------------------------------

"ஓட்டு போடும்போது வைக்கிற அடையாளக் குறி சில நாட்களுக்கு அழியவே அழியாதுன்னு என் குழந்தை கிட்டே சொன்னது தப்பா போயிடுச்சி "

"எதனாலேங்க "

"அந்த மையை பேனாவிலே நிரப்பிக் கொடுத்தாத் தான் எழுதுவேன்னு அடம்பிடிக்கிறா"

-------------------------------------------------------------------------------------------------------- 

"அவங்க என்ன தாங்க சொல்றாங்க "

" தன்னோட  தலைவருக்கு 'பச்சை' நிறம் தான் அதிர்ஷ்டமாம்"

"அதனாலே என்ன இப்போ "

" பச்சை நிறத்திலே தான் அடையாள மை வைக்க வேண்டுமாம்"

-------------------------------------------------------------------------------------------------------  

No comments:

Post a Comment