Pages

Saturday 15 November 2014

நடிப்புக்கு மயங்கும் மக்கள் - ACTING CHANK PEOPLE

நடிப்புக்கு மயங்கும் மக்கள்
ACTING CHANK PEOPLE
மதுரை கங்காதரன்
புதுக்கவிதை

திரைப்பட பிரம்மாக்கள்!
கனவுலகத்தை படைக்கிறார்கள்!
வாழ்கையைப் படமாக்குகிறார்கள்!
கவர்ச்சியை அள்ளி வீசுகிறார்கள்

                               
    
மக்களின் மனதை மயக்குகிறார்கள்
நடிப்புகளை உண்மையாக சித்தரிக்கிரார்கள்!
நடக்காதவைகளை மிகைப்படுத்துகிறார்கள்!
நடப்பவைகளை சாதாரணமாக்குகிறார்கள்

பரம ஏழை பணக்காரனாகிறான்
...வென்று வாயைப்பிளக்கின்றான்
தாராளமாய் அள்ளித் தருகின்றான்
உண்மையென எண்ணி ஓட்டு போடுகின்றான்
                  
நடிப்பில் மயங்கி தன் வாழ்வை இழக்கிறான்
முட்டாளும் முட்டியே அறிவாளியாக மாறுகிறான்
பாமரனும் படிக்காமலே படிப்பாளியாகிறான்
பிச்சைக்காரனும் செல்வந்தனாகிறான்

அடிதடி ரௌடி தலைவனாகிறான்
ஊதாரிக்கு பதவி தேடிவருகிறது
ஊர்சுற்றுபவன் உயர்ந்த மனிதனாகிறான்
நோஞ்சானும் பயில்வானாகிறான்
         
பரதேசிக்கு ஜோடியோ அழகான பணக்கார காதலி
ஓட்டாணடியை ஓட ஓட விரட்டி காதலிக்கும் தேவதை
மண் குடிசை வாழ்க்கை மாளிகையாகிறது
கட்டாந்தரை கூட விளைசசல் தருகின்றது

அவலட்சண ஆண் ஆணழகனாகிறான்
சோம்பேறி உழைப்பாளியாகிறான்
கோடி செல்வத்தை தாராளமாய் உதறுகின்றான்
ஒரே காட்சியில் திருந்தும் அதிசயம்!
                   
சொட்டை தலையில் முடி முளைக்கின்றது
நாயக நாயகிக்கு ஓராயிரம் கல்யாணம்
மாண்டவரோ உயிர்த்து எழுகின்றார்
கண் இமைக்கும் நேரம் காரியம் முடிகிறது

நடித்து கோடி ரூபாய் சம்பாதிக்கிறான்
அதை பார்க்க தன் பணத்தை இழக்கிறான்
உன் வாழ்வு உயர கனவுலகை மறந்து விடு
நடிப்பை பார்த்து எப்போதும் மயங்காதே!
                  

ஆயிரமானாலும் திரைப்படம் பார்ப்பது 
நம் மூளையில் பழக்கம் வழக்கமாகிவிட்டது
எல்லாமே நடிப்பு தெரிந்தும் 
பாழும் மனது கெட்டுப் போகுது. 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 


No comments:

Post a Comment