Pages

Sunday, 21 December 2014

அரசியல் மாதிரித் தேர்வு EXAM -POLITICAL ENTRY

அரசியல் நுழைய மாதிரித் தேர்வு 
EXAM FOR POLITICAL ENTRY 
மக்கள் விழிப்புணர்வுக்காக 

மதுரை கங்காதரன்  
சாதாரணமாக பள்ளி வகுப்புகளுக்கு பல தேர்வு வைத்துத் தானே பள்ளிச்சான்றிதழ் தருகின்றனர். அதை மட்டும் வைத்துக்கொண்டு எந்த வேலையும் வாங்கிவிட முடியாது. குறிப்பாக மத்திய மாநில அரசு வேலைகளை பல தேர்வு வைத்துத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் மக்களை ஆளுபவர்களுக்கு / ஆள நினைப்பவர்களுக்கு தேர்வு நடந்தால் எந்தெந்த கேள்விகள் வரும்? யார் எவ்வளவு மதிப்பெண்கள் வாங்குவார்கள் என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.  (இது ஒரு கற்பனைத் தேர்வு)

குறிப்பு : இப்போது இருக்கும் சில சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் வரத் துடிக்கின்றனர். அவர்களுக்கு அரசியலில் நுழைய தகுதி இருக்கின்றனவா என்று நீங்களே ஒரு தடவை எண்ணிப் பாருங்கள் !

உங்களுக்குத் தெரிந்த உள்ளூர் அல்லது உலக அரசியல் பிரமுகர்களோ /  தலைவர்களோ / அரசியலில் வர நினைப்போரோ / முன்னாள் அரசியல் களத்தில் இருந்தவர்களோ யாரேனும் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டனவற்றில் அவர் எவ்வளவு தகுதி இருப்பதை முடிந்தால் சுயபரீட்சை செய்து பாருங்கள். ஒவ்வொன்றுக்கும் இரண்டு மதிப்பெண்கள்  
அரசியல் நுழைய மாதிரி தேர்வு 

ஆம் / இல்லை பதில் மட்டுமே போதும்.                          மதிப்பெண்கள் : 100

                                                                                              நேரம் : ........ 

பெயர் :                                                 அனுபவம் :

சொத்து :                                               நோக்கம் : 

கல்வித் தகுதி :                                   

கணினி பயன்பாடு தெரியுமா?


குடும்பத்தில் உள்ளவர்கள் அரசியலில் இருக்கிறார்களா? 

1.   மக்களிடம் அணுகும் எளிமை 

2.   விளம்பரம் விரும்பாத குணம் 

3.   மக்கள் வரிப்பணத்தை வீணாக்காத எண்ணம் 

4.   எப்போதும் பதவியில் இருக்க வேண்டும் என்கிற ஆசை இல்லாமை 

5.   ஏழை , பணக்காரர்கள் பாகுபாடில்லா கல்வி வழங்குதல் 

6.   எல்லோருக்கும் சமமரியாதை கொடுக்கும் பாங்கு 

7.   பிரச்னைகளை உடனுக்குடன் முடிக்கும் வல்லமை 

8.   சொல்லியதும் செய்வதும் ஒன்றாய் இருப்பது 

9.   வாங்கும் சம்பளம் மற்றும் சலுகைகளை மட்டும் பயபடுத்துவது 

10. பதவியில் இருக்கும்போது எந்த மாற்றமில்லாத வாழ்க்கை நிலை 

11. வேலையின் தன்மை ஆராய்ந்து அதன்படி செயல்படுவது 

12. தன்னை விட திறமையானவர்களை மதிப்பு, பதவி கொடுப்பது 

13. வருங்கால சந்ததியினர் நம்ப இயலாத எளிய வாழ்க்கை 

14. கௌரவ பட்டங்களை உதறித் தள்ளுவது 

15. அரசு சலுகைகளை முறைகேடாக பயன்படுத்தாமல் இருப்பது 

16. தொழில் தொடங்க உதவுவது, ஊக்குவிப்பது, சலுகை கொடுப்பது

17. அன்பளிப்புகளை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுப்பது 

18. கல்வி கற்பவர்களுக்கு இலவசமாக உணவு,உடை, புத்தகங்கள் வழங்குவது 

19. ஆராச்சிக்கு அதிக வசதியும் அவர்களுக்கு  சரியான  உதவித்தொகை  வழங்குவது   

20. சுதந்திரத் தியாகி, தேசபக்தர்களுக்கு மதிப்பு அளிப்பது 


21. ஆக்கப் பூர்வமாக எதையும் திட்டமிட்டு அதை பிரச்னை வராமல்  செய்வது 

22. செயல் முன்னே ! பாராட்டு பின்னே! என்கிற கொள்கை 

23. மக்கள் முகம் கோணாமல் நிர்வாகம் செய்வது 

24. சட்டத்தை மதித்து உண்மை, நேர்மை, நியாமாக இருப்பது 

25. அவரால் அவரைச் சுற்றியும்  அழகுடன் மிளிர்வது 

26. மக்களின் நம்பிக்கை , நாணயம் இழக்காமல் இருப்பது 

27. மற்றவர்களை எடை போடும் திறனும் மின்னல் வேகத்தில் முடிவெடுத்தல் 

28. தடையில்லா குடிநீர் எல்லோருக்கும் வழங்குவது 

29. விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தும், இளைஞர்களை ஊக்கம் கொடுத்து அதில் ஈடுபடுத்தச் செய்வது  

30. சாலை , போக்குவரத்து, தடையில்லா மின்சாரம் வழங்குவது 

31. அணைகள், குளங்கள், ஏரிகளை பராமரிப்பது 

32. எதையும் தொலை நோக்குப் பார்வையுடன் செய்வது 

33. சமுதாய நலன்களை அக்கறையுடன் செய்வது 

34. கூட்டத்தின் மூலம் அடிக்கடி மக்கள் தொடர்பு கொள்வது 

35. விலைவாசி கட்டுக்குள் வைத்துக் கொள்வது 

36. மக்களை மிரட்டும் சட்டங்களை ஒழிப்பது 

37. தொழில் சார்ந்த கல்விமுறை   நடுநிலைப் பள்ளியில் முதலே புகுத்துவது 

38. கடமை தவறாது நடந்து கொள்வது 

39. அரசு உதவிகளை எளிதாக மக்களிடம் சேர்ப்பது 

40. வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவது  


41. மருத்துவம், ஆரோக்கியம் காக்க தகுந்த நடவடிக்கைகள் எடுப்பது     

42. தன் பாதுகாப்பிற்கு பலரை காவலுக்கு வைத்துக்கொள்ளாமை 

43. குறித்த காலத்தில் செயல்களை இழுத்தடிக்காமல் செய்து முடிப்பது 

44. லஞ்சம் , ஊழல் செய்யாமலும், துணை போகாமலும் இருப்பது  

45. கண்ணுக்குத் தெரியும் மக்கள் பிரச்னையில் பங்கெடுத்துக் கொள்வது  

46. தன் வாழ்நாள் முழுவதையும் மக்களின் சேவைக்காக அர்ப்பணிப்பது 

47. மக்கள் பிரச்னை  மன்றங்களில் பிரதிபலித்து அதை தீர்ப்பது 

48. அண்டை நாட்டினர்களின் தலையீட்டை தட்டிக் கேட்பது 

49. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை கிடைக்க வழிசெய்வது 

50. சாதி, சமய, மத, இன உணர்வை தூண்டாமல் இருபது.


#######################################################################################

சென்ற 2016 ஜுன் மாதம் 'தி இந்து' நாளிதழில் வெளியான செய்தி இதோ..



No comments:

Post a Comment