சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் ! ஏன் சொன்னான் பாரதி?!
TAMIL IS THE BEST!
பாரதி பிறந்த நாள் சிறப்பு புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
மாமதுரை கவிஞர் பேரவை மற்றும் உலகத் தமிழாய்வு சங்கம்
நடத்திய கவிதை அரங்கம்
நாள்:
7.12.14 இடம்: மகாஜன மேன்சன், மதுரை.
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் !
ஏன் சொன்னான் பாரதி?!
பாட்டுக்காகவே பிறந்த பாரதியே
பாக்களில் தமிழ் சொற்களை அழகும் ஆழமாய் படைத்தாய்
பாடுகையில் வன்மையும் மென்மையும் தந்தாய்
பாமரத் தமிழில் செம்மையும் குளுமையும் அளித்தாய்!
ஓடி விளையாடும் குழந்தைக்கு பாப்பா பாட்டு
ஈருயிர் ஓருயிராய் கலக்கும் கண்ணம்மா பாட்டு
அடிமைத்தனத்தை சுட்டெரிக்க சுதந்திரப் பாட்டு
ஆன்மீகத்தை வளர்க்கும் கண்ணன் பாட்டு
உதட்டில் பேசும் ஆங்கிலச் சொற்கள் சரி
மூக்கில் பேசும் அந்நியச்சொற்களும் சரி
தொண்டையில் பேசும் பிறமொழி
சொற்களும் சரி
உயிரில் மெய்யில் கலந்து ஒலிக்கும் தமிழ் சொற்களுக்கு ஈடாகுமா?
தமிழ் சொல் மாலையில், எழுத்துகள் நன் முத்துக்கள்
தமிழ் சொற்களில் எழுத்துகள் உயிரோடு ஒலிப்பவை
தமிழ் சொற்களில் எழுத்துகள்,மறைவின்றி உச்சரிக்கப்படுவது
தமிழ் சொற்களில் செத்த எழுத்தோ சொத்தை எழுத்து உன்டா?
எளிமையான சொற்கள் இனிமையான உச்சரிப்பு
புதுமையான எண்ணங்கள் தரமான சிந்தனைகள்
இதமான கீதங்கள் வளமான நாதங்கள்
தமிழ் சொற்களின்றி பிறமொழி
சொற்களில் உன்டோ?
பாரதியே உன் சொல் அம்பு அன்று பலருக்கு குத்தியது
'சுதந்திரக் காற்று' இந்த நாடே சுவாசிக்கின்றது
இன்றும் வேண்டும் நெஞ்சு
துளைக்கும் துப்பாக்கிச் சொற்கள்!
தறிகெட்டுப் போகும் தமிழனையும் தமிழ் மொழியையும் காத்திட!
மதுவிற்க்கு மயங்கும் தமிழனின் ஈரலைக் காப்பதற்கு
லஞ்ச ஊழல் செய்யும் மனிதர்களை தண்டிப்பதற்கு
முகநூலில் மூழகிக் கிடக்கும் இளைஞர்களை மீட்பதற்கு
சின்னத்திரையே கதின்னு கிடக்கும் மாந்தர்களை தடுப்பதற்கு!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment