பாரதி ! புதுக்கவிதையின் சாரதி!
LONG LIVE POET BHARATHI!
பாரதி பிறந்த நாள் சிறப்பு புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
அலையாய் லஞ்ச ஊழலும் ஏறுகின்ற விலைவாசியும்
விலைபோகும் கல்வியும் சட்டமும் - தொலைத்திட
பாரதியின் வேள்வித்தீ எழுச்சித் தேரில்
சாரதியாய் பவனித்து பொசுக்கு!
பேசுகின்ற தமிழும் எழுதுகின்ற தமிழும்
பூசுகின்ற பிறமொழியும் கலாச்சாரமும்- பொசுக்கிட
ஏற்றமிகு தமிழ்மொழியை அழியாமல் காத்திட
வற்றாத ஜீவநதியாய் கலக்கு!
பெண்ணடிமைக்கு
படைத்துப் பொங்கியவன்
மண்ணடிமைக்கு மக்களை உசுப்பியவன் - மண்டியிட்டு
எந்திரமாய் வாழ்வில்
பாரதிக் கவிதைகளை
மந்திரமாய் உலகிற்கு விளக்கு!
கல்விக்கூடம் குறுகி
குடிக்கூடம் பெருகி
சொல்லில்லா ஏழையின் கண்ணீரை- வெல்ல
என்றாவது ஒருநாள் விடிவு வரும்
தன்னம்பிக்கையோடு அடைவாய் இலக்கு!
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
No comments:
Post a Comment