Pages

Saturday, 20 February 2016

UMASK - WORLD MOTHER TONGUE DAY



UMASK &
WORLD MOTHER TONGUE DAY - 
COPYRIGHT Ó 2015 UMASK
(UNIFORM MULTI-LINGUAL ALPHABETS SOFT KEYBOARD)
A short enlightenment by
Author (MADURAI) K.K.GANGADHARAN


This is UMASK -  HINDI ENGLISH TAMIL MALAYALAM KANNADA
 RUSSIAN ARABIC Keyboard layout - 
operating prototype video link


உலகத் தாய்மொழிகள் தினமான 21.02.2016 அன்று எனக்கு காப்புரிமை கிடைத்த COPYRIGHT Ó 2015 UMASK பற்றிய எனது சிறிய தொகுப்பு.
உருவாக்கியவர்: (மதுரை) கு.கி. கங்காதரன்

நீங்கள் உலகத்தில் எந்த நாட்டில் வாழ்பவராக இருக்கட்டும், எந்த மொழி பேசுபவராக இருக்கட்டும், உங்களது தாய்மொழியில் ஒருவரிடத்தில் பேசும்போதும், உங்களது தாய்மொழியில் திரையில் படம் பார்க்கும்போதும், உங்களது தாய்மொழியில் ஒரு புத்தகம் படிக்கும்போதும் உங்களது உள்ளத்தில் ஏற்படுகின்ற மகிழ்ச்சியை அளவிடவே முடியாது அல்லவா! உங்களது உணர்வையும், படைப்பாற்றலையும் எளிதாக வெளிப்படுத்துவதற்கு உங்களது தாய்மொழியே பெரும் துணை புரிகின்றது என்பதே உண்மை.

 இந்த உலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கின்றன. அவைகளெல்லாம் கணினி வருவதற்கு முன்னால் அந்தந்த மொழிமக்கள் தடையில்லாமல் தங்களுடைய தாய்மொழியில் படித்து, எழுதி, பேசி வந்தனர். ஆனால் கணினி வந்த பிறகு உலகில் சில மொழிகள் இருந்த சுவடு தெரியாமல் அழிந்துவிட்டது என மொழி ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். ஒரு மொழி அழியும்போது கூடவே அம்மொழி பேசும் மக்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் மற்றும் படைப்புகளும் அழிந்துவிடுகின்றது. சில மொழிகள் வெறும் பேசுகின்ற மொழியாய் மட்டும் மாறி நிற்கின்றது. சில மொழிகள் ஆதிக்கம் செழுத்தியதன் காரணமாக பல மொழிகள் அழித்துவிட்டது என்றே கூறலாம். அத்தகைய மொழிகளின் ஆதிக்கம் மட்டும் காரணமல்ல. அம்மொழிகள் காலத்திற்குத் தகுந்தாற்போல் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வண்ணம் கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் புகுந்து மக்கள் விரும்பும் விதமாக பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனை செய்து கொண்டு வருவதை நாம் ஒத்துகொண்டே தீரவேண்டும்.

அது எந்த அளவுக்கு மற்ற மொழிகளை சப்தமில்லாமல் 'மொழிப் போர்' புரிந்து அம்மொழிகளை அழித்து வருகின்றதென்றால், அதற்கு உதாரணம் சொன்னால் எளிதில் விளங்கிவிடும். 'தமிழ்' போன்ற மொழிகளே அதற்கு உதாரணம்! அதாவது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மூத்த மொழியாகிய தமிழ் போன்ற மொழிகள் இன்னும் சில ஆண்டுகளில் அழிந்து விடும் என்கிற அதிர்ச்சியான செய்தி தான் என் போன்ற உலகில் உள்ள பல மொழி மக்களை யோசிக்க வைத்துள்ளது எனலாம்.

அதாவது இப்பொழுது ஆதிக்கம் செய்து வரும் மொழிகள் கணினி, கைபேசி (மொபைல்), வலைதளம் (இன்டர் நெட்), தகவல்தொடர்பு, தொழில் நுட்பம், பொறியியல், மருத்துவம் போன்ற பல துறைகள் மற்றும் பல கலைகளில் பரந்து விரிந்து வருவதோடு அவையனைத்தும் கைக்குள் அடங்கும் விதமாக கொடுத்து வருகின்றது. அதாவது பிறமொழி மக்களாகிய நாம் அதற்கு ஈடு கொடுக்க முடியாததற்குக் காரணம் அந்த 'டிஜிட்டல் உலகத்தில்' எளிதாக வலம் வரமுடியாமையே! அதற்கு நாட்டமும் முயற்சியும் எடுக்காதது கூட சில காரணங்கள் என்றும் கூறலாம்.

எனது இந்த வலைபூ (பிளாக் ஸ்பாட்) கிட்டத்தட்ட என்பத்தாறு (86) நாட்டு மக்கள் பார்த்து தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவதற்கு முதலில் நான் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். நீங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழி பேசுபவர்களாக இருக்கலாம். உங்களில் எத்தனை பேருக்கு ஆங்கிலம் அல்லாது மற்ற மொழிகளில் சரளமாக கணினி விசைப்பலகையில் தட்டச்சு (கம்பியூட்டர் டைப் ரைட்டிங்) தெரியும்? என்று கேட்கும் கேள்விக்கு பதில் சொற்பமே வரும்! அதுவும் அவர்கள் அந்த மொழி தட்டச்சு பழக்கம் மிகவும் சிரமத்தோடு பழகியிருப்பர். பலர் அதை பழகாததற்குக் காரணம் அவர்களின் மொழியுள்ள கணினி விசைப்பலகை (the computer keyboard layout of their language) யில் தட்டச்சு செய்ய மிகக் கடினமாக பயிற்சியும், ஒருமித்த கவனமும், அதிக ஞாபகசத்தியும் வேண்டும். ஏன்?  தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அரபிக், சைனீஸ், ருஸ்யன், பிரன்சு, ஜெர்மன், ஜாப்பனீஸ் போன்ற மொழிகள் சரளமாக பேசுமளவிற்கு யாரால் அவர்களின் மொழியுள்ள கணினி விசைப்பலகையில் தட்டச்சு செய்ய தெரியும்? என்ற ஒரு வினா எழுப்பினால் விடை நாம் எதிர்பார்பதை விட மிகக் குறைவாகவே கிடைக்கும். காரணம் இப்போதெல்லாம் எல்லாவற்றிலும் மிக இலகுவான முறையே இருக்கவேண்டும் என்று சிறியோர் முதல் பெரியோர் வரை விரும்புகின்றனர்.

இப்போது நீங்கள் கேட்கலாம். ஆங்கிலம் உட்பட (இப்போதுள்ள ஆங்கிலக் கணினி தட்டச்சு கூட மிகக் கடினமாவையோ) எல்லா உலக மொழிகளை எளிதாக  கணினியில் தட்டச்சு செய்ய முடியுமா? என்கிற கேள்விக்கு எனது COPYRIGHT Ó  2015 UMASK ( UNIFORM MULTI-LINGUAL ALPHABETS SOFT KEYBOARD) தான் அதற்கு சரியான பதிலாக அமையும்.

நீங்கள் உலகத்தில் எந்த மொழி பேசுபவர்களாக இருக்கட்டும். நீங்கள் பேசும் மொழி அழியாமல் இருக்க, (இப்போதுள்ள நிலவரப்படி உலகத்தில் எம்மொழி எப்போது அழியும் என்று எவராலும் கணிக்க முடியாத நிலையாகும். ஒவ்வொரு மொழியும் போட்டி போட்டுக் கொண்டு பல விதங்களில் மௌணமாக ஆதிக்கம் செழுத்தி வருகின்றது) இந்த டிஜிட்டல் உலகத்தில் எளிதாக வலம் வர , எந்த மொழியும் எளிதாக பழக (குழந்தைகள் முதல்பெரியோர்கள் வரை) காப்புரிமை பெற்ற UMASK பன்மொழி மென் தட்டச்சு கணினி விசைப்பலகை மிக்க உதவியாக, மொழி நண்பனாக விளங்கும்.

அதன் சிறப்பு அம்சங்கள்:

* UMASK ல் பன்மொழிகள் வசதி இருப்பதால் நீங்கள் பேசும் அல்லது எழுத விரும்பும் மொழியை தேர்வு செய்யலாம். அம்மொழிக்கேற்ப அந்த தட்டச்சு கணினி மென் விசைப்பலகையில் அம்மொழி எழுத்துக்கள் தெரியும்.

தமிழை தேர்வு செய்தால் தமிழும் , ஆங்கிலம் தேர்வு செய்தால் ஆங்கிலமும், ஹிந்தி தேர்வு செய்தால் ஹிந்தியும், அரபிக் தேர்வு செய்தால் அரபிக்கும் (இம்மொழியின் விசேசம், விசைப்பலகையில் எழுத்துகள் படிப்பது போலவே வலமிருந்து இடமாக இருக்கும்), சைனீஸ் தேர்வு செய்தால் சைனீஸ்ம் , ருஸ்யன் தேர்வு செய்தால் ருஸ்யனும், பிரன்சுதேர்வு செய்தால் பிரன்சும், ஜெர்மன் தேர்வு செய்தால் ஜெர்மனும், ஜாப்பனீஸ் தேர்வு செய்தால் ஜாப்பனீஸ்ம் அந்த மென் விசைப்பலகையில் தெரியும்.

* நீங்கள் தேர்வு செய்யும் எந்த மொழியாக இருந்தாலும் சரி, அம்மொழியின் எழுத்துகள் நீங்கள் குழந்தைப் பருவத்தில் எவ்வாறு படித்தீர்களோ அதுபோலவே கணினி மென் விசைப்பலகையில் அம்மொழி எழுத்துகள் அகர (alphabetic order) வரிசைப்படி (அதாவது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அரபிக், சைனீஸ், ருஸ்யன், பிரன்சு, ஜெர்மன், ஜாப்பனீஸ் போன்ற எல்லா மொழிகள் உட்பட) எவ்வித குழப்பமில்லாமல் எவ்வித பிசிறு இல்லாமல் தெளிவாக அமைந்திருப்பதால் சிறிய குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எளிதாக தட்டச்சு செய்யலாம்.

* அகர வரிசைப்படி எல்லா மொழி எழுத்துகள் இந்த UMASK ல்  இருப்பதால் எந்த மொழியில் தட்டச்சு செய்வதற்கு கடினமான பயிற்சியோ, அதிக கவனமோ, கூடுதலாக ஞாபகசத்தியோ கண்டிப்பாக தேவையில்லை. இப்போது இருக்கும் எம்மொழி கணினி விசைப்பலகையிலும் அகர வரிசைபடி இருப்பதில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.  

* இப்போது நீங்கள் உபயோகப்படுத்தும் கணினி விசைப்பலகையில் இருக்கும் எந்த மொழி எழுத்துகள் அமைப்பு, தட்டச்சுப்பொறியிலிருந்து (Type writer) பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டதாகவே இருக்கும். இல்லையென்றால் அதைச் சார்ந்து இருக்கும்.

* ஆனால் கணினியும் தட்டச்சுப்பொறியும் கட்டாயமாக ஒன்றல்ல! தட்டச்சுப்பொறியைக் காட்டிலும் கணினி பன்மடங்கு வசதி, வேகம், எளிமை, புதுமை, தரம் இருக்க வேண்டுமல்லவா? அவைகள் அனைத்தும் UMASK ல்  இருக்கின்றது.

* உதாரணமாக சில உலக மொழிகள் மற்றும் இந்திய மொழிகள் அனைத்தும் Shift என்கிற Keyயை உபயோகிக்காமல் Normal Mode ல் கிட்டத்தட்ட அனைத்து எழுத்துகளையும் தட்டச்சு செய்யும் வசதி UMASK ல்  உண்டு.

 * உலகமொழிகள் அனைத்தும் UMASKல் இருப்பதால் பிறமொழியாளர்களும் அவர்கள் விரும்பும் மொழியைக் கற்கலாம்.

* எந்த மொழியும் எளிதாக கற்கலாம். ஏனெனில் எல்லா மொழி எழுத்துகள் அகற வரிசைப்படி இருக்கின்றன.

UMASK பன்மொழிகளை கற்றுக் கொடுக்கும் ஆசான்.

* UMASK எவ்வித ஐ.நெட் இல்லாமல் OFF Line இல் தட்டச்சு செய்யலாம்.

*விரல் மற்றும் மனப்பாட பயிற்சி முற்றிலும் தேவையில்லை.

* இது கைக்கு அடக்கமாக மொபைல், டாப்லெட், .பேட் போன்ற சாதனங்கள் போல் சிறிய அளவில் இருப்பதால் இரு விரல்களில் கூட உங்கள் தாய்மொழியை தட்டச்சு செய்யலாம்.

* U-MASK என்று பெயர் வைத்ததன் காரணம், பலர் தங்கள் தாய்மொழியை மறந்து வேறு ஒரு மொழியின் முகமூடியை உபயோகிப்பதால் சொந்த முக அழகை காட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள்.

* எந்த ஒரு மொழியின் எழுத்துகள் கணினி விசைப்பலகையில் எவ்வித பாகுபாடு இல்லாமல் இவ்வாறு தான் வரிசையாக இருக்க வேண்டும் நிர்ணயம் செய்ய முயன்றுள்ளேன்.

* எவ்வாறு 'கால்குலேட்டர்' கணக்கு போடுவதற்கு உதவி செய்கின்றதோ, இந்த UMASK ம் Pre KG, LKG, UKG, I Std முதல் பயன்படும்.

இறுதியாக..

* மொழிகளில் முன்னோடி தமிழ்.

* பல மொழிகளுக்கு வேர்ச்சொற்கள் உருவாக்க உதவிவருவது தமிழ்.

* மொழிகளில் முதன்முதலில் இலக்கணம் வகுத்து தந்தது தமிழ்.

'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று கூறி தமிழ் கவிஞரின் கூற்று உண்மையாக்கும் வண்ணம் தமிழ்நாட்டிலிருந்து இந்த மதுரை கங்காதரன் உலகமொழிகளைக் காக்க அழிந்த மொழிகளுக்கு புத்துயிர் கொடுக்க UMASK என்னும் ஜீவமரம், அனைத்து மொழி மக்கள் தத்தம் தாய்மொழியில் எளிதாக 'டிஜிட்டல் உலகத்தில்' பயணிக்க இந்த UMASK மிகவும் உதவியாக இருக்கும் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.

' Make in India என்கிற திட்டத்தின் மூலம் உலகளவில் சந்தைபடுத்த என் அன்புக்குரிய வாசகர்கள், விசிறிகள் மற்றும் இது போன்ற பலவற்றிற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்துவரும் நல்ல உள்ளங்களின் மேலான ஆதரவும் ஆலோசனையும் எனக்கு இந்த gangadharan.kk2012@gmail.com மூலம் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

UMASK பல மொழிகளை புதுமையாக மிக எளிதாக கற்கவும் கணினியில் அனைத்து தரப்பினர்களும் இலகுவாக தட்டச்சு செய்ய உதவுவதோடு அவரவர்கள் தாய்மொழிகளில் பல சிறந்த படைப்புகளை படைக்கவும் பல தாய்மொழிகளை அழிவிலிருந்து காக்கும் மகத்தான பணியை வெற்றிகரமாக செய்ய உங்களுடைய ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&