5.4.2020 திருத்திய கடகதேசமும் மேசகிரியும்
(குறுநாவல்)
அல்லது
மிதுனமதி (குறுநாவல்)
பாகம்: 1
பாகம்: 1
மதுரை கு.கி.கங்காதரன்
குறிப்பு: மேலே காட்டப்பட்ட படங்கள், வாசகர்கள் படிக்கும்போது
ஞாபகம் வைத்துக்கொள்ள மட்டுமே -- நன்றி படங்களுக்காக
பாகம்: 1
பாகம்: 1
வரும் சித்திரைத் திங்களுக்குள் கடகதேசம் மிகப்பெரிய ஆபத்தைச் சந்திக்க இருப்பதாக அரண்மனை இராஜகுருவாகிய மகரகுரு கணித்ததை உள்வாங்கிக் கொண்ட இளவரசர் துலாவர்மர், அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு உடனே ஏற்பாடு
செய்திருந்தார்.
‘ஆபத்து’ என்று வந்துவிட்டால் அரண்மனை அரசனாலும் சந்தியில் இருக்கும்
ஆண்டியாயினும் துரிதமாய்ச் செயல்படுவது இயல்புதானே! இவ்வேளையில் அவ்விடத்திற்கு விரைந்து வந்த சேனாதிபதி
சிம்மசேனரும் பல்கலையில் தேர்ச்சி பெற்ற இளவரசரின்
உற்ற தோழரும் மெய்க்காப்பாளருமான தனுசுமல்லரும்
இனம் புரியாத குழப்பத்தோடு ஒருவரையொருவர் பார்த்தவாறு
இருந்தனர்.
கடகதேசத்தின் அரசர் கும்பவர்மர், கடந்த சில மாதமாக நோய்வாய்ப்பட்டு இருந்ததால் அவரது புதல்வனாகிய துலாவர்மர், இளவரசராக முடிசூட்டப்பட்டு நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்.
இளவரசர் துலாவர்மர், இந்நிலைமை இப்படியே நீடித்தால் வீணே நேரம் விரயமாவதோடு
எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாது என்பதை உணர்ந்து அமைதியைக்
களைத்தார்.
"குருவே, இந்த ஆபத்திலிருந்து நம் நாட்டைக் காக்கும் நல்ல ஒரு
வழியை தாங்கள் தான் சொல்ல வேண்டும்" என்றார் இளவரசர் துலாவர்மர்.
"சொல்கிறேன் இளவரசே! கவனமாகக் கேளுங்கள்? வரும் சித்திரைத் திங்களில் பௌர்ணமி தினத்தன்று, நம் தேசத்தில் நீண்ட வருடமாகப் பூட்டியே கிடக்கின்ற, நமது முன்னோர்கள் கட்டிய பிரசித்தி பெற்ற ஆதிபகவன்' கோவிலுக்குக் கும்பாபிசேகம் நடத்திட வேண்டும். அதுமட்டுமல்ல, அங்குள்ள
பிரசித்தி பெற்ற தங்கத்தேர் நான்கு சித்திரை வீதிகளில் பவனி வரவேண்டும். அதை மக்கள் அனைவரும் கண்டுகளிக்கவும், தினமும் கோவிலில் இறைவழிபாடு நடைபெறுவதற்குச் சிறப்பான ஏற்பாடும் செய்தால் வரும் ஆபத்தைத் தடுத்திடலாம்" என்றார் மகரகுரு.
அதனைக் கேட்டவுடன் தனுசுமல்லர் "அதில்தானே பெரியச் சிக்கல் இருக்கின்றது! அப்படி ஆதிபகவன் கோவில் தங்கத்தேர் வீதிகளில் ஊர்வலமாக
வரவேண்டுமென்றால் நம் கடகதேசத்து மக்களும் நமது எதிரி நாடான மேசகிரி மக்களும் கலந்து கொள்ள வேண்டும். இது முன்னோர்களின் கட்டளையும், ஐதீகமும் கூட. முன்பு இரு நாடுகளும் நட்புறவோடு ஒற்றுமையாய்
இருந்தார்கள். அதனால்
எவ்வித இடையூறு இல்லாமல் தங்கத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஆனால் இன்று..? இரு நாடுகளும் பரம எதிரிகளாக மாறிப் பகைமையை வெகுவாக வளர்த்துக் கொண்டு நிற்கின்றது. இந்தச் சூழ்நிலையில் நாம் எவ்வாறு நீங்கள் சொன்ன அந்தக் காரியத்தைச் செய்து முடிப்பது? ஒருவேளை... நம் எதிரி
நாடான மேசகிரி அரசர் ரிசபவேந்தர் சமாதானத்திற்குச் சம்மதம் தெரிவித்தாலும் அவரின் மதிமந்திரி விருச்சிகர்... கட்டாயம் உடன்படமாட்டார்" என்றார்.
அதனை ஆமோதிக்கும் விதமாக இராஜகுருவான மகரகுரு "தனுசுமல்லரே, சரியாகச் சொன்னீர்கள்! நம்நாட்டில் எப்போது குழப்பம் எழும்? கலகம் நடக்கும்? என்று காத்திருக் கின்றார்கள். அந்தச் சமயத்தில் படையெடுத்து இந்தக் கடகதேசத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று நமது
எதிரிகளான மேசகிரி மக்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக அந்நாட்டு மதிமந்திரி விருச்சிகர்! ஆகையால் இதற்கு வேறுமாதிரி யோசிக்கவேண்டும்" என்று சிந்தனையில் ஆழ்ந்தார்.
"குருவே, இதைத் தவிர வேறுவழியே இல்லையா?" என்று ஆதங்கப்பட்டார் இளவரசர் துலாவர்மர்.
இதற்கிடையில் சேனாதிபதி சிம்மசேனர் வெகுண்டு எழுந்து ஒருபடி மேலே போய் "அப்படியென்றால் மேசகிரி மேல் படையெடுப்பது தவிர வேறுவழியே இல்லை!" என்று சொன்னதுதான் தாமதம்
"கூடாது, கூடாது சிம்மசேனரே! அப்படி மட்டும் நடந்துவிட்டால் இருபக்கமும் அதிக உயிர்ச் சேதமும் நிறையப் பொருட்சேதமும் ஏற்படும். பிறகு நாடெங்கும் மரண ஓலம் கேட்கும். அது மட்டுமா? மக்கள் பசி, பட்டினியால் வாடுவார்கள். அக்காட்சிகளையெல்லாம் காண நேர்ந்தால் எனது இருதயம் வெடித்துவிடும்" என்று உணர்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டார் துலாவர்மர்.
"உணர்ச்சி வசப்பட வேண்டாம் இளவரசே! நம் சேனாதிபதி சிம்மசேனர்... சற்று மிகையாகவேப் பேசிவிட்டார்.
ஆனால் சேனாதிபதி சிம்மசேனரின் நெடுநாளைய ஆழ்மன ஆசையைத் தான் இந்த சமயத்தில்
தன்னையறியாமல் வெளிப்படுத்தியுள்ளார் என்பது அங்குள்ளவர்கள் அறிவதற்கு நியாயமில்லை. சிம்மசேனரின் ஆசை என்னவெனில் கடகதேசத்தின் மேல் மேசகிரி படையெடுத்து, இளவரசர் துலாவர்மரைச் சிறைபிடித்துச் செல்ல வேண்டும். பிறகு மேசகிரியின் மேல் நட்புறவு கொண்டு, தானே இந்தக் கடகதேசத்து அரசராக முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்பதே! ஆனால் அவரின் ஆசைக் கனவிற்கு முற்றுப்புள்ளி
வைத்துவிட்டார் இளவரசர் துலாவர்மர். அந்த வேளையில் மகரகுரு மேலும் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க
அனைவரும் ஆவலானார்கள்.
"கத்தியின்றி இரத்தமின்றி
நிறைவேற்ற வேண்டுமானால் ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். அந்தப் பெண் நினைத்தால் இருநாட்டைக் காக்கவும் முடியும்.
அதேசமயத்தில் அப்பெண் நினைத்தால் அழிக்கவும் முடியும்" என்றவுடன் தனுசுமல்லருக்கு ஆச்சரியமும் குழப்பமும் உண்டானது.
"குருவே, அப்படியென்றால் நாங்கள் என்ன
கையாளாகாதவர்களா? எங்களால் முடியாததை எப்படி ஒரு பெண்ணால் செய்து முடிக்க முடியும்?" என்று சீறினார்.
"தனுசுமல்லரே, கோபப்படாமல் சற்று அமைதியாகச் சிந்தியுங்கள். பெண்களால் அடைந்த பல வெற்றிகள் சரித்திரம்
நமக்கு எடுத்துக் காட்டி உள்ளது. ஆகையால் பெண்ணின் சக்தியைக் குறைத்து மதிப்பிடாமல் மேற்கொண்டு நடக்க வேண்டியவற்றைத் தாமதமின்றி நடைபெறச் செயலில் இறங்கினால் நல்லது" என்று மகரகுரு துரிதப்படுத்தினார்.
இளவரசரும் "ஆகட்டும் குருவே! காலம் கனியும் வரை நாம் எல்லோரும் பொறுத்துக்
கொள்ள வேண்டும். சேனாதிபதி சிம்மசேனரே, தாங்கள் கோவில் கும்பாபிசேகத்திற்கான வேலையை
உடனே ஆரம்பியுங்கள். என் பிரியமான தோழர் தனுசுமல்லரே, தாங்கள் தங்கத்தேரைப் பழுதுபார்த்து எந்த ஓர் இடருமில்லாமல் பவனி
வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அதிலேயே லயித்துவிடாமல் கூடவே மக்களுக்கு வைத்தியமும், காட்டு விலங்குகளிடமிருந்து மக்களைக்
காப்பாற்றும் வீரத்தையும் தவறாமல் காட்டிடவேண்டும்" என்று அவரவர்களின் பொறுப்புகளை நயமாக எடுத்துரைத்தார்.
இளவரசரே நிறைவாக "நாம் இப்போது பேசியதை
இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் மேசகிரி அரசர் ரிசபவேந்தருக்கோ அல்லது அந்நாட்டு மதிமந்திரி விருச்சிகருக்கோ தெரியவேக் கூடாது" என்று அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் வைத்தார்.
அந்தக்கணம் முதல் மூவரின் மனதில் 'அந்தப் பெண் யாராக இருக்கும்? அவளால் எப்படி நமக்கு உதவ முடியும்? அப்பெண்ணை எப்படி அடையாளம் கண்டு கொள்வது?' என்பது போன்று மனதில் எழுந்த ஆயிரம் கேள்விகளுக்கு விடை தெரியாமல் தவித்தனர். ஆனால் சேனாதிபதி மட்டும் வேறு ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்து போனார். அதாவது இந்தச் செய்தியை தன் எதிரி நாடான மேசகிரியின் மதிமந்திரி விருச்சிகருக்குத் தெரியப்படுத்திவிட
வேண்டுமென்று துடித்தார். அதற்கான ஆயத்தமுமானார்.
தொடரும் ... பாகம்: 2
கடகதேசமும் மேசகிரியும்' (குறுநாவல்)
மதுரை கங்காதரன்
வரும் சித்திரைத் திங்களுக்குள் கடகதேசம் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்க இருப்பதாக அரண்மனை ஜோதிடர் மகரகுரு கணித்ததை உள்வாங்கிக் கொண்ட இளவரசர் துலாவர்மர் உடனே அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
கடகதேசத்தின் அரசர் கும்பவர்மர் கடந்த சில மாதமாக நோய்வாய்ப்பட்டு இருந்ததால் அவரது வாரிசு புதல்வனாகிய துலாவர்மர் இளவரசராக முடிசூட்டிக்கொண்டு நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவ்விடத்தில் சேனாதிபதி சிம்மசேனர் மற்றும் பல்கலையில் வல்லவரும் மெய்காப்பாளருமான தனுசுமல்லர் ஆகியோர் இனமறியாத குழப்பத்தோடு அமைதியாக மன இறுக்கத்தோடு சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர்.
‘ஆபத்து’ என்று வந்துவிட்டால் அரண்மனை அரசனாலும் அந்தியில் இருக்கும் ஆண்டியாயினும் கலக்கமடைவது இயல்பு தானே!
நிலைமை இப்படியே நீடித்தால் வீணே நேரம் விரயமாவதோடு எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாது என்பதை உணர்ந்த இளவரசர் துலாவர்மர் அமைதியைக் களைத்தார்.
"ஜோதிடரே, இந்த ஆபத்திலிருந்து நாட்டைக் காக்கும் வழி இருந்தால் அதை சற்று விளக்கமாக எடுத்துச் சொல்லுங்கள்" என்றார் இளவரசர் துலாவர்மர்.
"இருக்கின்றது இளவரசே! அது என்னவென்று எல்லோரும் கவனமாகக் கேளுங்கள். வரும் சித்திரைத்திங்கள் பௌர்ணமி தினத்தன்று நீண்ட வருடமாக பூட்டியே கிடக்கின்ற நமது முன்னோர்கள் கட்டிய ஆதிபகவன் கோவிலுக்கு கும்பாபிசேகம் நடத்திட வேண்டும். அதுமட்டுமல்ல,அங்குள்ள பிரசித்தி பெற்ற தங்கத்தேர் நான்கு சித்திரை வீதிகளில் பவனி வரவேண்டும். அதை மக்கள் அனைவரும் கண்டுகளிக்கவும்,கோவிலில் இறைவழிபாடு நடைபெறுவதற்கும் சிறப்பான ஏற்பாடு செய்தால் ஓரளவுக்கு ஆபத்தை தடுத்திடலாம்" என்றார் ஜோதிடர் மகரகுரு.
அதற்கு தனுசுமல்லர் "அதில் தானே மிகப் பெரிய சிக்கல் இருக்கின்றது. அப்படி ஆதிபகவன் கோவில் தங்கத்தேர் வீதிகளில் ஊர்வலமாக வரவேண்டுமென்றால் நம் கடகதேசத்து மக்களும் நமது எதிரிநாடான மேசகிரி மக்களும் கலந்து கொள்ள வேண்டும். இது முன்னோர்களின்கட்டளையும், ஐதீகமும் கூட. முன்பு இரு நாடுகளும் நட்புறவோடு ஒற்றுமையாய் இருந்தார்கள். அதனால் எவ்வித இடையூறு இல்லாமல் தங்கத்தேரோட்டம் மகிழ்ச்சியாக நடைபெற்றது. ஆனால் இன்று..? இரு நாடுகளும் எதிரிகளாக மாறி பகைமையை கட்டுக்கடங்காமல் வளர்த்துக் கொண்டு நிற்கின்றது. இந்த சூழ்நிலையில் நாம் எவ்வாறு ஆபத்தை தடுப்பது? ஒருவேளை மேசகிரி அரசர் ரிசபவேந்தர் சமாதானத்திற்குச் சம்மதம் தெரிவித்தாலும் அவரின் மதிமந்திரி விருச்சிகர் கட்டாயம் உடன்படமாட்டார்" என்றார்.
அதை ஆமோதிக்கும் விதமாக "சரியாகச் சொன்னாய் தனுசுமல்லரே! றாவது கலகம் பிறந்தால் அந்த சமயத்தில் படையெடுத்து இந்தகடகதேசத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று மேசகிரி மக்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகையால் இதற்கு வேறுமாதிரி யோசிக்கவேண்டும்" என்று அமைதியாக சொன்னார் ஜோதிடர் மகர குரு.
"அப்படியென்றால் இதற்கு வேறுவழியே இல்லையா?" என்று ஆதங்கப்பட்டார் இளவரசர் துலாவர்மர்.
அதைக் கேட்ட சேனாதிபதி சிம்மசேனர் வெகுண்டு எழுந்து "அப்படியென்றால் மேசகிரி மேல் படையெடுப்பது தவிர வேறுவழியே இல்லை!" என்று சொன்னது தான் தாமதம்
"கூடாது, கூடாது! அப்படி மட்டும் நடந்துவிட்டால் இருபக்கமும் அதிகமாக உயிர்ச்சேதமும் நிறைய பொருட்சேதமும் உண்டாகும். பிறகு நாடெங்கும்மரண ஓலம் கேட்கும். அது மட்டுமா? மக்கள் பசி, பட்டினியால் வாடுவர். அக்காட்சிகளையெல்லாம் காண நேர்ந்தால் எனது இருதயம் வெடித்துவிடும்" என்று உணர்வின் எல்லைக்கே துலாவர்மர் சென்றுவிட்டார்.
"இளவரசே! உணர்ச்சி வசப்பட வேண்டாம். சிம்மசேனர் சற்று மிகையாகப் பேசிவிட்டார். ஜோதிடரிடம் வேறு வழி இருக்கின்றதா? என்று கேட்டுவிடலாம்" என்று தனுசுமல்லர் சாந்தப்படுத்தினார்.
ஆனால் சேனாதிபதி சிம்மசேனரின் நெடுநாளைய ஆழ்மன ஆசையைத் தான் இந்த சமயத்தில் தன்னையறியாமல் வெளிப்படுத்தியுள்ளார் என்பதை அங்குள்ளவர் உணரத் தவறிவிட்டனர். அவர் ஆசை என்னவெனில் கடகதேசத்தின் மேல் மேசகிரி படையெடுத்து இளவரசர் துலாவர்மரை அவர்கள் சிறைபிடிக்க வேண்டும். பிறகு மேசகிரியின் மேல் நட்புறவு கொண்டு தான் கடகதேசத்து அரசராக முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்பதே ! ஆனால்அவரின் ஆசைக் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் இளவரசர் துலாவர்மர். அந்த வேளையில் ஜோதிடர் மகரகுரு மேலும் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க அனைவரும் ஆவலானார்கள்.
"கத்தியின்றி இரத்தமின்றி நிறைவேற்ற வேண்டுமானால் ஒரு பெண்ணால் மட்டுமே முடியும்" என்றவுடன் தனுசுமல்லருக்கு ஆச்சரியம் உண்டானது. "என்ன ஜோதிடரே அப்படியென்றால் நாங்கள் கையாளாகாதவர்களா? எங்களால் முடியாததை எப்படி ஒரு பெண்ணால் செய்து முடிக்க முடியும்?"
"தனுசுமல்லரே, சற்று அமைதியாக சிந்திப்பாயாக. பெண்களால் அடைந்த பல வெற்றிகள் சரித்திரம் நமக்கு சொல்கிறது. ஆகையால் பெண்ணின் சக்தியை குறைத்து மதிப்பிடாமல் மேற்கொண்டு நடக்க வேண்டியவைகளை தாமதமின்றி நடைபெற செயலில் இறங்கினால் நல்லது" என்று ஜோதிடர் மகரகுரு விரைவு படுத்தினார்.
இளவரசரும் அவர் பங்கிற்கு "காலம் கனியும் வரை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். சிம்மசேனரே, தாங்கள் கோவில் கும்பாபிசேகத்திற்கான வேலையை உடனே ஆரம்பியுங்கள். தனுசுமல்லரே, தாங்கள் தங்கத்தேரை பழுதுபார்த்து எந்த ஒரு சேதமில்லாமல் பவனி வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அதிலேயே லையித்துவிடாமல் கூடவே மக்களுக்கு வைத்தியமும், காட்டுவிலங்குகளிடமிருந்து காப்பாற்றும் வீரத்தையும் மறந்துவிடவேண்டாம்" என்று அவரின் பொறுப்புகளை நயமாக எடுத்துரைத்தார்.
இளவரசர் துலாவர்மர் தொடர்ந்து "நாம் இப்போது பேசியதை இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். எக்காரணம் கொண்டும் மேசகிரி அரசர்ரிசபவேந்தருக்கோ அல்லது அந்நாட்டு மதிமந்திரி விருச்சிகருக்கோ தெரியக்கூடாது" என்று அனைவரையும் எச்சரித்தார்.
அந்தக்கணம் முதல் மூவரின் மனதில் 'அந்தப் பெண் யாராக இருக்கும்? அவரால் எப்படி நமக்கு உதவ முடியும்? எப்படி அப்பெண்னை அடையாளம் கண்டு கொள்வது?' என்பது போன்ற ஆயிரம் கேள்விகளுக்கு விடை தெரியாமல் தவித்தனர். ஆனால் சேனாதிபதி சிம்மசேனர் மட்டும் சற்றுக் கூடுதலாகயோசித்தார். இந்த செய்தியை எதிரி நாடான மேசகிரியின் மதிமந்திரி விருச்சிகருக்குத் தெரியப்படுத்திவிட வேண்டுமென்று துடித்தார். அதற்கானஏற்பாடும் செய்தார்.
தொடரும் ...
தொடரும் ...
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
No comments:
Post a Comment