Pages

Sunday, 7 February 2016

5.4.2020 திருத்திய கடகதேசமும் மேசகிரியும் (குறுநாவல்) - பாகம் :2

5.4.2020 திருத்திய கடகதேசமும் மேசகிரியும்  (குறுநாவல்) 
அல்லது
மிதுனமதி (குறுநாவல்)
பாகம் :2 
மதுரை கு.கி.கங்காதரன்




குறிப்பு: மேலே காட்டப்பட்ட படங்கள், வாசகர்கள் படிக்கும்போது
ஞாபகம் வைத்துக்கொள்ள மட்டுமே -- நன்றி படங்களுக்காக
பாகம் :2 

கடகதேச எல்லையில் இருபுறமும் நிழல் தரும் மரங்கள் வளர்ந்திருந்த சாலையின் ஓரத்தில், வயோதிகர் வேடம் தரித்த மனித நரி ஒன்று, அங்குக் காவல் காக்கும் வீரர்களின் கவனத்தை தன் மீது ஈர்க்கத் தட்டுத்தடுமாறி விழுவது போல் பாசாங்கு செய்தவாறே நடந்து வந்து கொண்டிருந்தது. வீரர்கள் இந்த வயோதிகர் ஒரு நஞ்சு கொண்ட பாம்பு! அவருக்குத்தான் நாம் இப்போது பால் வார்க்கப் போகிறோம் என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அங்குக் காவல் காத்துக்கொண்டிருந்த வீரர்கள் இருவர் 'அந்த வயோதிகர் உண்மையிலே கீழே விழுந்துவிடப் போகிறாரே'  என்று எண்ணி அவரை நெருங்கிக், கைகளால் தாங்கியவாறே, "பெரியவரே, இந்த வேகாத வெயிலில் எங்குச் செல்ல வேண்டுமென்று சொல்லுங்கள்?  முடிந்தால் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்" என்று பரிதாபப்பட்டு அவரைப் பார்த்துக் கேட்டார்கள்.

"வீரர்களே! நான் ஊர் ஊராகச் சுற்றும் ஒரு நாடோடி. நான் இந்தத் தேசத்துச்  சேனாதிபதி  சிம்மசேனரைப் பார்க்க வேண்டும். ஒருவகையில் அவர் எனக்குத்  தூரத்து உறவினர்" என்று அவர்களை ஏமாற்றும்விதமாகத் தழுதழுத்த குரலில் பேசியதால், வயோதிகர் சொல்வது உண்மை என்றே நம்பினர்.

"அப்படியா பெரியவரே! அதோ... ஒரு கோவில் தெரிகின்றதே, அதன் பக்கத்தில் தான் அவர் மாளிகை  இருக்கின்றது" என்று அவரை வீரர்கள் வழியனுப்பி வைத்தனர்.

கண் பார்வையிலிருந்து வீரர்கள் மறையும் வரைத்  தள்ளாடியே படி நடந்தவர், பிறகு யாரும் கவனிக்காத வண்ணம் மிடுக்கான நடையுடன் சேனாதிபதி சிம்மசேனரின் மாளிகையை அடைந்தார்.  நீண்ட நேரம் காத்துக் கொண்டு இருப்பதன் அடையாளமாக "வாருங்கள் மதிமந்திரியாரே! ஏன் இவ்வளவு தாமதம்? தங்களை யாரேனும் அடையாளம் கண்டு கொண்டனரா என்ன?" என்று செல்லமாகக் கடிந்து கொண்டார்.

"சிம்மசேனா, நானும் உன்னைச் சந்திப்பதற்குப் பல முறை பல வேடங்களில் வந்துள்ளேன்.  ஆனால் நீ மட்டும் தான் என்னை எளிதாக அடையாளம் காண்கின்றாய். இன்று வரை மற்றவர்கள் என் வேடமும் நடிப்பும் உண்மையென நம்புகின்றனர்"

"மதிமந்திரியாரே, பாம்பின் கால் பாம்பு அறியாதா என்ன?"

"முற்றிலும் சரி. வெகு ஆண்டுகளாய் நட்பாய் இருந்த என் நாடு மேசகிரியும்  உன்  கடகதேசமும்  சில ஆண்டுகளுக்கு முன் நாம் தீட்டிய வஞ்சகத்திட்டத்தால் தானே வைரிகளாக மாறியிருக்கிறார்கள்?  ஆனால் நாமோ அன்று முதல் இன்று வரை  நட்பாகவே இருந்து வருகின்றோம். நமக்குள் எவ்வளவு ஒற்றுமை பார்த்தாயா சிம்மசேனா!"

"அதாவது அவரவர் அரசரை அழித்து அரியணையைக் கைப்பற்றுவதில் தானே!"  என்று வில்லத்தனமாய் நகைத்தார் சிம்மசேனர்.

"சரியாகச் சொன்னாய். அது போகட்டும் சிம்மசேனா, என்னை மிக அவசரமாகச்  சந்திக்க வேண்டுமென்று சொல்லியனுப்பியிருந்தாயே? அப்படியென்ன தலை உருளும் செய்தி?"

"சொல்கிறேன்  மதிமந்திரியாரே,  நேற்று காலையில் திடீரென்று இளவரசர் ஓர் இரகசியச்  சந்திப்புக்கு  ஏற்பாடு செய்திருந்தார்"

"சிம்மசேனா ...இரகசிய சந்திப்பு என்றால்... யார் யாருடன்?"

"மதிமந்திரியாரே..  யார் யார் என்றால்.... எப்போதும்போல நால்வர் தான்!" 

"அதாவது உங்களையும் சேர்த்து! சரி... விசயத்திற்கு வாரும்?"

"அச்சந்திப்பில்  என் நாட்டு இராஜகுரு, வரும் சித்திரையில் கடகதேசம்  அழிவையும்,   மேசகிரி  வீழ்ச்சியையும் சந்திக்கப் போகிறது என்று ஓர் அதிர்ச்சியான செய்தியைச் சொல்லி எல்லோரையும் கதிகலங்க வைத்துவிட்டார்"

"அப்படியா....! அதெப்படி சாத்தியம்?" என்று விருச்சிகர் கேட்டவுடன்..

நடந்தனவற்றை ஒரே மூச்சாய்ச் சொல்லி முடித்தார் சிம்மசேனர். 

நீண்ட மௌனத்திற்குப் பிறகு, "சிம்மசேனா, நான் நினைக்கும் திட்டத்திற்கும் உங்கள் அரண்மனை இராஜகுரு சொன்னதற்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கின்றது!"

"என்ன சொல்கிறீர்கள் மதிமந்திரியாரே!" என்று தனது இருகண்களை விரித்துக் கொண்டு ஆவலாகக் கேட்டார்.

"ஆமாம் சிம்மசேனா. இப்போது நாம் இருவரும் நட்பாய் இருக்கின்றோம். நாம் போடும் திட்டம் வெற்றி பெற்று விட்டால் இன்னும் சில நாட்களில் நாம் இருவரும் அவரவர் நாட்டுக்கு அரசர்களாக அரியணையில் ஏறிவிடுவோம். பிறகென்ன நம் இரு நாடுகளும் நட்பு நாடாகிவிடப்போகிறது.  ஆனால் ....  ஒரு பெண்ணால்...   என்று சொன்னதுதான்"  என்று சற்று  யோசித்தவாறே  ஒன்றும் பிடிபடாமல் குறுக்கும் நெடுக்குமாய் நடந்த மதிமந்திரி விருச்சிகர் அங்குள்ள ஆசனத்தில் அமர்ந்தார்.

ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ஒரு சதித்திட்டத்தைச் சேனாதிபதி சிம்மசேனரிடம் விவரித்தார்.

அதைக் கேட்டபோது சிம்மசேனர் முகம் அதிர்ச்சிக்குள்ளானதைக் காட்டியது. அதோடு அவருக்குப் பயமும் கவ்விக் கொண்டது. இரகசியமாகப் பேசும் குரலில் "சிம்மசேனா, நாம் திட்டம் தீட்டும்போது எதிராளியின் பலத்தையும் பலவீனத்தையும் நன்றாகத் தெரிந்து வைத்திருப்பது மிகமிக அவசியம். அதே சமயத்தில் எதிராளியின் பலத்தை முறியடிக்கும் தந்திரமும், எக்காரணத்தைக்  கொண்டும் பின் வாங்காத மனவலிமையும்  வேண்டும். அவை எல்லாமே நம்மிடம் சற்று மிகையாகவே இருக்கின்றன, என்ன சேனாதிபதியாரே நான் சொல்வது சரிதானே!" என்று விருச்சிகர் தனது அசாதாரணமான தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

"மந்திரியாரே எல்லாம் சரி. ஆனால்..."

"ஆனால் என்ன சிம்மசேனா! ....ஒருவேளை 'இத்திட்டம் தோல்வியில் முடிந்துவிடுமோ' என்ற பயமா?"
"அத்தில்லை மந்திரியாரே! இந்த 'சிம்மன்' எதற்கும் அஞ்சாத சிங்கம். இந்தக்  கடகதேசத்திற்கு  அரசனாக நான் முடிசூட்டிக் கொண்டேத் தீரவேண்டுமென்கின்ற இலட்சிய வெறியோடும் உறுதியோடும் இருக்கின்றேன். உங்கள் திட்டத்தை முடித்துக்காட்டுகிறேன்"

"பிறகென்ன சந்தேகம் சிம்மசேனா?"

"அத்தொன்றுமில்லை  மதிமந்திரியாரே! தங்களுக்கு மேசகிரியின் அரசர் ரிசபவேந்தரின் புதல்வி  இளவரசி மீனாம்பிகையின் கட்டழகு பற்றி நன்கு தெரியும். காண்பவர்களைக் காதல் கொள்ளச் செய்யும் இளமை,  பரவசமூட்டும் இனிமையான  பேச்சு, கனிவான உபசரிப்பு.  இத்தகைய காரணங்களுக்குத் தான் பல அரசர்கள் இளவரசியாரை அடைவதற்கு எந்த ஒரு விஷப்பரிட்சையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால் அனைவரின் கண்களும் இளவரசியின் மேல் இருக்கும்போது நாம் எப்படி....? மேலும் நான் ஒரு விசயம் கேள்விப்பட்டேன். அதாவது தங்களின் அரசர் ரிசபவேந்தர், இளவரசி மீனாம்பிகையை வெளியில் செல்ல அவ்வளவாக அனுமதி தருவதில்லையாமே! அப்படி இருக்கும்போது நாம் எப்படி இளவரசியைக் கடத்துவது என்பது தான் எனக்குப் புரியாத புதிராக இருக்கின்றது" என்று இழுத்தார் சிம்மசேனர். 

"பூ இது தானா உனது சந்தேகம். நன்றாகக் கேள். ஒவ்வொரு அமாவாசை இரவின் போது இளவரசி மீனாம்பிகை, எமது அரண்மனைக்குச் சற்று தூரத்தில் இருக்கும் சகலச்சக்தியை அருள்பாலிக்கும் 'கன்னித்தேவி' கோவிலுக்கு வழிபடச் செல்வது வழக்கம். அன்று தான் நமது சதித்திட்டத்தை ஆரம்பிப்பதற்குச் சாதகமான சமயம்!"

"மதிமந்திரியாரே, இளவரசி மீனாம்பிகை மட்டும் தனியாகச் செல்லுவாரா? அல்லது ...?"

"இளவரசியுடன் அவரது தோழி மிதுனமதி செல்வது வழக்கம். பூஜை வழிபாடு  முடித்தவுடன்  அவர்களை என் வீரர்கள் தான் அரண்மனைக்கு அழைத்துச் செல்வார்கள். இம்முறை நீங்கள் மாறுவேடத்தில் உங்கள் வீரர்களோடு குதிரை வண்டியில் வாருங்கள். நானே அவர்களை உங்கள் வண்டியில் எவ்வித சந்தேகமும் எழாதவாறு ஏற்றி அனுப்பிவைக்கிறேன். ஆகவே கடத்துவதில்  எவ்வித குழப்பமும் இருக்காது. 'கன்னித்தேவி' கோவிலின் மகிமை என்னவென்றால், அரண்மனை முன்னோர்களின் வழக்கப்படி அமாவாசை இரவு நேரத்தில் பெண்கள் மட்டுமே தனியாக ஆறு தடவை வழிபட்டு வந்தால் அவர்கள் நினைத்த காரியம் கட்டாயம் கைகூடும்' என்று எனது அரசர் சொல்லியது என் நினைவில் இருக்கின்றது"

"இளவரசி அப்படியென்ன நினைத்திருப்பார்?  உங்களால்  ஏதாவது  ஊகிக்க முடிகின்றதா  மதிமந்திரியாரே?"

"ஏன் இல்லை? பருவமடைந்த பெண்கள் வேறு எதை விரும்புவார்கள்? தங்களுக்குத் திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என்றும் வருகின்ற கணவர் வீரம் அறிவு அழகுடன் அன்பாகத் தன்னை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது இயற்கை தானே!"

"அவையனைத்தும் உங்களிடத்திலே இருக்கின்றன. ஆகையால் நீங்களே..." என்று இழுத்தார் சேனாதிபதி சிம்மசேனர்.

அதனைக் கேட்டவுடன் மதிமந்திரியாரின் முகம், ஆயிரம் நிலவின் பிரகாசமாய் மாறியது. புன்முறுவலுடன் "சற்றே கூடுதல் வயதான எனக்கு .... உனது எண்ணப்படியே எனக்கும் இளவரசிக்கும் திருமணம் நடந்தால் இவ்வுலகில் நான் தான் மிகவும் அதிர்ஷ்டசாலி. ... சிம்மசேனா, இந்த நேரத்தில் இளவரசியோடு எப்போதுமே இருக்கும் அவளது உயிர்த் தோழி மிதுனமதியைப் பற்றிச் சொல்லியே தீரவேண்டும். அவளும் அழகில் ரதியை மிஞ்சியவள். காந்தக்கண்களும் தேனான மொழியும் அதோடு அறிவும் ஆற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவள். அரண்மனைக்கு மிகவும் விசுவாசம் மிக்கவள். தன் உயிரைத் துச்சமாக எண்ணுபவள்.  தோழி மிதுனமதி எப்போதும் ஒரு பாதுகாப்புச் சுவராக  இளவரசியுடனே ஒட்டிக் கொண்டு இருப்பவள். அவள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தான் நம் காரியத்தைச் சாதிக்க வேண்டும். அது அவ்வளவு எளிமையான காரியம் இல்லையென்றாலும் எப்படியாவது செய்து முடித்தேத் தீர வேண்டும்"

"அது சரி மந்திரியாரே, அரண்மனைப் பெரியவர்கள் இளவரசியைப் பற்றி  இன்னும்  ஏதாவது ஆரூடம் சொல்லியிருக்கிறார்களா?"

"நல்லவேளை இந்தக் கேள்வியைக் கேட்டாய் சிம்மசேனா! இளவரசியின் திருமணம் வழக்கம்போல் நடைபெறாமல், பலவித குழப்பங்களும் சச்சரவுகளும் ஆபத்துகளும் கடந்த பிறகு தான் நடைபெறுமென்று  ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். அதைத்தானே நாம் செய்யப் போகிறோம். ஒரு முக்கியமான விசயம், வரும் அமாவாசை அன்று  இளவரசியின் வழிபாடு முடிவடைகின்றது. அதன் பிறகு இளவரசி வெளியில் வருவது மிகவும் அபூர்வமாகி விடும். ஆகையால் அந்தச்  சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் நம் ஆயுசு உள்ள வரையில் நமது இலட்சியம் நிறைவேறாது.  அதற்காகத் தான் இந்த அவசர ஏற்பாடு" என்று தனது சதித்திட்டத்தை நிறுத்தி நிதானமாக விளக்கினார் மதிமந்திரி விருச்சிகர்.

"அதாவது நமது ரூபத்தில் நம் இருநாட்டிற்கும்  ஆபத்து நெருங்கி விட்டது என்று சொல்லுங்கள்! அப்படித்தானே!"

"நன்றாகச் சொன்னாய்  சிம்மசேனா"

"மந்திரியாரே, ஒரு சந்தேகம், இளவரசியாரை நான் கடத்திய பின் யாரிடத்தில் அவரை ஒப்படைக்கப் போகிறீர்கள்?"

"உன்னிடத்தில் தான் ஒப்படைக்க இருக்கிறேன்"

"என்ன என்னிடத்திலா?

சிரமப்படாமல் எந்த ஒரு செயலும் வெற்றி பெறாது சிம்மசேனா. அதனை நன்றாக நினைவில் வைத்துக்கொள்"

"அதற்கில்லை மந்திரியாரே, எதிரி நாட்டு இளவரசியை என் கட்டுப்பாட்டில் அதுவும்  கடகதேசத்தில் மறைத்து வைத்திருந்தால் பெரியப் பிரச்சனை அல்லவா உண்டு பண்ணும் !"

"அப்படிப் பிரச்சனை வரவேண்டும் என்பதற்குத் தானே இந்த ஏற்பாடு சிம்மாசனா!"

"என்ன சொல்கிறீர்கள் மதிமந்திரியாரே, உங்கள் பேச்சு ஒருவிதமாக இருக்கின்றதே! நீங்கள் சொல்லும் காரியம் செய்வது அவ்வளவு எளிதல்ல.  உங்கள் நாட்டின் இளவரசி  மீனாம்பிகைக்கு  மிதுனமதி எவ்வாறு உயிர்த் தோழியாக இருக்கிறாளோ அது போல எங்கள் கடகதேசத்து  இளவரசருக்குத் தோழனாக , மெய்க்காப்பாளனாக, கலையிலும் அறிவிலும் பிரகாசமாக விளங்கும்  தனுசுமல்லரைப் பற்றி நினைக்கும் போது எனது நெஞ்சம் படபடவென்று அடிக்கின்றது"

"என்ன  சிம்மசேனா, தனுசுமல்லர் அவ்வளவு பராக்கிரமசாலியா?  போயும்  போயும்  ஒரு மெய்க்காப்பாளரைப் பார்த்தா  இப்படிப் பயப்படுகிறாய்"
"ஆம் மந்திரியாரே அதில் உண்மை உள்ளது! இன்றுவரை அவரைத் தாண்டி அவருக்குத் தெரியாமல் ஓர் ஈ காக்காய் கூட எமது எல்லைக்குள் நுழைந்ததில்லை. அப்படி இருக்கும்போது நான் எப்படி இளவரசியை ...?"

"இந்நேரத்திலிருந்து நீ, உன்னை ஒரு கோழையாக நினைப்பதை விட்டுவிடு. துணிவோடு இறங்கு! வெற்றி நமக்குத் தான். இளவரசியைக் கடத்திய உடன், நீ உன் மாளிகையினுள்ளே  கட்டியிருக்கும் சகலவசதியோடு இருக்கின்ற அந்தப் பாதாள அறையில் அடைத்து விடு. அடுத்த  திட்டத்தைப் பற்றி பிறகு சொல்கிறேன். நேரமாகிவிட்டது மீண்டும் நாம் வருகின்ற அமாவாசையில் சந்திப்போம் சிம்மசேனா! எதற்கும் இந்த முத்திரை மோதிரத்தை வைத்துக் கொள். தேவைப்பட்டால் இதனைப் பயன்படுத்து"

மோதிரத்தை வாங்கிக்கொண்ட சிம்மசேனர் "அப்படியே ஆகட்டும் மதிமந்திரியாரே" என்று கூற இருவரும் அவரவர் காரியத்தில் மும்முரமாக இறங்கினர்.

மனிதர்கள்  ஏதோ ஒரு காரியத்தால் அதிகப் பலனும் பதவியும் புகழும் கிடைக்குமென்று தெரிந்தால் அவர்களின் மூளை ஒளி வேகத்திலும், செயல்கள் மிகத்துரிதமாகவும் அல்லவா வேலை செய்கின்றது. அப்போது எப்பேர்ப்பட்ட எதிரிகளும்  கூட நண்பர்களாகிவிடுகின்றனர். எதையும் மறக்கும் மன்னிக்கும் தயாளகுணம் அவர்களிடம்  தற்காலிகமாக ஒட்டிக் கொள்கிறது.  அவையெல்லாம் பிறரை ஏமாற்றுவதிலும், வீழ்த்துவதிலும், சதிசெய்வதிலும் தான் மிகச் சரியாக  நடக்கின்றது என்பதைச் சரித்திரத்தைக் கரைத்துக் குடித்தவர்களுக்கு நன்றாகவேத் தெரியும்.

அமாவாசை இரவு வந்தது. மக்கள் நிம்மதியாக உறங்கும் வேளையில்...
சேனாதிபதி  சிம்மசேனர்  தனது  விசுவாசமிக்க  இருவீரர்களுடன் புதிதாகப் பூட்டிய குதிரை வண்டியில்  மேசகிரி  எல்லையினை அடைந்தவுடன், அங்குத் தங்களுக்காகவேக்  காத்திருந்த  மந்திரியாரின் ஆட்கள் இருவர், சிம்மசேனர் வந்த வண்டிக்கருகில் சென்றனர், முன்னெச்சரிக்கையாக வந்தவர்களின் பதவியையோ, பேரையோச் சொல்லி அழைத்தால் மற்றவர்களுக்குச் சந்தேகம் வந்துவிடும்  என்பதற்காகச் சேனாதிபதியையும் வீரர்களையும் பார்த்து, முன்னெச்சரிக்கையாக  மெல்லிய குரலில் "தங்களின் வருகைக்காகத் தான்  'கன்னித்தேவி'  கோவில் வாசலில்  மதிமந்திரி  காத்துக் கொண்டிருக்கின்றார்" என்று கூற குதிரைவண்டியுடன் அவர்கள் அவ்விடத்தை அடைந்தனர்.

தயாராகக் காத்திருந்த மதிமந்தரி விருச்சிகர், "சரியான சமயத்தில் வந்தாய்  சிம்மசேனா.  இன்னும் சற்று நேரத்தில் இளவரசி மீனாம்பிகை, 'கன்னித்தேவி'க்கோவிலில் பூஜையை முடித்துவிட்டு  வந்துவிடுவார். நமது நல்ல நேரம், மிதுனமதி ஏதோ ஒரு வேலையாக  வெளியில் சென்றிருக்கிறாள்.  அவள் வருவதற்குள் நம் காரியத்தை முடித்தாக வேண்டும்" என்று வேகப்படுத்தினார்.

வெளி வேலையை முடித்துவிட்டுத் திரும்பிய மிதுனமதி, வழக்கத்திற்கு மாறாகச் சிலர் கோவில் வாசலில் இருப்பதைக் கவனித்தவள், அங்குள்ளப் புதரில் மறைந்திருந்து அவர்கள்  பேசுவதைக்  கேட்டவுடன் சட்டென்று அவளது உடல் வேர்த்தது. இதயம் படபடத்தது.  ஏதோ ஓர் அசம்பாவிதம்  நடக்கப் போகிறது என்பதை ஊகித்தவளாய் மின்னல் வேகத்தில் அதை முறியடிக்கும் வழியை யோசித்தாள். அதற்குள் இளவரசி மீனாம்பிகை கோவில் வாசலின் அருகே வர,  விருச்சிகர்  அவரை  வரவேற்றார்.

இவ்வேளையில், கண் இமைக்கும் நேரத்தில் குதிரைவண்டிக்கடியில் புல்  இருக்கும்  அந்தத்  தொட்டில் போன்ற பகுதியில் யாருக்கும் தெரியாமல் விறுட்டென்று ஒளிந்து கொண்டாள்  மிதுனமதி.  ஒருவேளை இளவரசிக்கு ஆபத்து ஏற்பட்டால் தான் எப்பாடு பட்டாவது காப்பாற்றிவிட வேண்டும்   என்கிற தைரியத்தையும் நம்பிக்கையையும் வரவழைத்து இந்த  விஷப்பரிட்சையில்   இறங்கினாள். 

......   தொடரும் ...  பாகம்: 3

5.2.2016 திருத்தாமல் இருந்த
கடகதேசமும் மேசகிரியும்'  (குறுநாவல்)
மதுரை  கங்காதரன்
இக்குறுநாவலில் வரும் முக்கிய கதா பாத்திரங்கள்

சென்ற வார தொடர்ச்சி ...... 
 பாகம் :2 

கடகதேச எல்லையில் இருபுறமும் நிழல் தரும் மரங்கள் அமைந்திருந்த சாலையின் ஓரத்தில் வயோதிகர் வேடம் தரித்த மனிதநரி ஒன்று அங்கு காவல் காக்கும் வீரர்களின் கவனத்தை ஈர்க்க தட்டுத்தடுமாறி நடப்பது போல் பாசாங்கு செய்ததுஅந்த வயோதிகர் உண்மையில் கீழே விழப்போகிறாரோ என்று எண்ணி அங்கிருந்த வீரர் இருவர் அவரைத் தாங்கியவாறே, "பெரியவரேஇந்த வேகாத வெயில் வேளையில் எங்கு ஐயா செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்முடிந்தால் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்என்று அவரைப் பார்த்து பரிதாபப்பட்டுக் கேட்டார்கள்.

வீரர்களுக்கு இந்த வயோதிகர் ஒரு நச்சு கொண்ட பாம்புஅவருக்குத் தான் பாலை வார்க்கப் போகிறோம் என்பதை அறிந்திருக்க நியாயமில்லை.

"வீரர்களேநான் ஊர் ஊராகச் சுற்றும் ஒரு நாடோடிநான் இந்த தேச சேனாதிபதி சிம்மசேனரைப் பார்க்க வேண்டும்ஒருவகையில் அவர் எனக்கு தூரத்து உறவினர்என்று அவர்களை ஏமாற்றும் விதமாக தழுதழுத்த குரலில் பேசியதால் வயோதிகர் சொல்வது உண்மை என்றே நம்பினர்.

"அப்படியா பெரியவரேஅதோ ஒரு கோவில் தெரிகின்றதே, அதன் பக்கத்தில் தான் இருக்கின்றதுஎன்று அவரை வழியனுப்பி வைத்தனர்.

அவர்கள் மறையும் வரை தள்ளாடியே படி நடந்தவர் பிறகு யாரும் கவனிக்காத வண்ணம் மிடுக்கான நடையுடன் சேனாதிபதி சிம்மசேனர் மாளிகையை அடைந்தார்நீண்ட நேரம் காத்துக் கொண்டு இருப்பதன் அடையாளமாக "மதிமந்திரி விருச்சிகரே! ஏன் இவ்வளவு தாமதம்என்று செல்லமாக கடிந்து கொண்டார்.
"என்ன செய்வதுஎன் நாடு மேசகிரியும் இந்த கடகதேசமும் பரம்பரை வைரிகளாக (எதிரிகளாகஇருக்கின்றனர்ஆனால் நமக்குள் எவ்வளவு ஒற்றுமை பார்த்தாயா சிம்மசேனா!"
"அதாவது அவரவர் அரசரை அழித்து அரியனையை கைப்பற்றுவதில் தானே!" என்று நகைத்தார் விருச்சிகர்.

"விருச்சிகரேதங்களை யாரேனும் அடையாளம் கண்டு கொண்டனரா?"
"சிம்மசேனாநானும் உன்னை சந்திப்பதற்கு பல முறை பல வேடங்களில் வந்துள்ளேன்ஆனால் நீர் தான் என்னை எளிதாக அடையாளம் காண்கின்றாய். இன்று வரை மற்றவர்கள் என் வேடமும் நடிப்பும் உண்மையென நம்பிவருகின்றனர்"
"விருச்சிகரேபாம்பின் கால் பாம்பு அறியாதா என்ன? "

"சரியாகச் சொன்னாய்அது போகட்டும் சிம்மசேனா, என்னை மிக அவசரமாக சந்திக்க வேண்டுமென்று சொல்லியனுப்பியிருந்தாயேஅப்படி என்ன தலை உருளும் செய்தி?"
"ஆமாம்இன்று காலை இளவரசர் ஒரு இரகசிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்"
"இரகசிய சந்திப்பு என்றால்...அது யார் யாருடன்?"
"விருச்சிகரேயார் யார் என்றால்....  நான்இளவரசர் துலாவர்மர்அவரின் மெய்க்காப்பாளர் தனுசுமல்லர் மற்றும் அரண்மனை ஜோதிடர் மகரகுருஆகியோர்"
"சிம்மசேனாஅதற்கென்ன இப்போது?"
"என்னவாவரும் சித்திரையில் கடகதேசத்தின் அழிவையும் மேசகிரியின் வீழ்ச்சியையும் பற்றிச் சொல்லி எல்லோரையும் கதிகலங்க வைத்துவிட்டார்"
"அப்படியாஅப்படியென்ன அந்த அதிர்ச்சி தரும் செய்தி?" என்று நடந்தவற்றை ஒரே மூச்சாக சொல்லி முடித்து விருச்சிகரைப் பார்த்தார்.

நீண்ட மௌணத்திற்குப் பிறகு," சிம்மசேனாநமது திட்டத்திற்கும் அரண்மனை ஜோதிடர் சொன்னதற்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கின்றது"
"என்ன சொல்கிறீர்கள் விருச்சிகரே!" என்று தனது இருகண்களை விரித்துக் கொண்டு ஆவலாகக் கேட்டார்.
"ஆமாம்இப்போது நாம் இருவரும் நட்பாய் இருக்கிறோம்இன்னும் சில நாட்களில் நமது சதிதிட்டம் வெற்றி பெற்றால் நாம் இருவரும் அரசர்களாக அரியனையில் ஏறுவோம். பிறகு நம் இரு நாடுகளும் நட்பு நாடாகிவிடும்ஆனால் .... ஒரு பெண்ணால்... என்பது தான் சற்று யோசிக்க வேண்டும்.
கேள்விக்குறியாக இருக்கும் அந்தப் பெண்ணைப் பற்றிய சிந்தனை தான் இருவர் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது.

நீண்ட மௌணத்திற்குப் பிறகு மதிமந்திரி விருச்சிகர் சதித்திட்டம் ஒன்றைத் தீட்டி அதை சேனாதிபதி சிம்மசேனரிடம் விவரித்தார்.
அதைக் கேட்டபோது அவரின் முகம் சுருங்கியதுபயமும் கவ்விக் கொண்டதுஇரகசியமாக பேசும் குரலில் "சிம்மசேனாநாம் திட்டம் தீட்டும் போது எதிராளியின் பலமும் பலவீனமும் நன்றாகத் தெரிந்து வைத்திருத்தல் மிகவும் அவசியம்அதேசமயத்தில் எதிராளியின் பலத்தை முறியடிக்கும் தந்திரமும்எக்காரணம் கொண்டும் பின் வாங்காத மனவலிமையும் கண்டிப்பாக வேண்டும்அவைகள் எல்லாமே நம்மிடம் சற்று அதிகமாகவே இருக்கின்றதுஎன்று விருச்சிகர் தனது தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

"எல்லாம் சரிஆனால்..."
"என்ன 'ஆனால்' … சிம்மசேனா....ஒருகால் இத்திட்டம் தோல்வியில் முடிந்துவிடுமோஎன்று பயப்படுகிறீர்களா?"

"அதில்லை விருச்சிகரேஇந்த 'சிம்மன்எதற்கும் அஞ்சாத சிங்கம்இந்த   கடகதேசத்திற்கு அரசனாக நான் முடிசூட்டிக் கொண்டேத் தீரவேண்டு மென்கின்ற இலட்சிய வெறியோடும் உறுதியோடும் இருக்கிறேன்"
"பிறகு என்ன சிம்மசேனா உங்களுக்குச் சந்தேகம்?"

"அதாவது மதிமந்திரியாரேதங்கள் மேசகிரியின் அரசர் ரிசபவேந்தரின் புதல்வி இளவரசி மீனாம்பிகையின் கட்டழகு பற்றி யாவருக்கும் தெரியும்.காண்பவர்களைக் காதல் கொள்ளச் செய்யும் இளமைபரவசமூட்டும் இனிமையான பேச்சுகனிவான உபசரிப்புஇத்தகைய காரணங்களுக்குத் தான் பல அரசர்கள் இளவரசியாரை அடைவதற்கு எந்த ஒரு விஷப்பரிட்சையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்மேலும் நான் ஒரு விசயம் கேள்விபட்டேன்அதாவது தங்களின் அரசர் ரிசபவேந்தர் இளவரசி மீனாம்பிகையை வெளியில் செல்ல அவ்வளவாக அனுமதி தருவதில்லையாமே!அப்படி இருக்கும்போது  நாம் எப்படி இளவரசியைக் கடத்துவது என்பது தான் எனக்குப் புரியாத புதிராக இருக்கின்றது"

"… இது தானா உங்களது சந்தேகம்நன்றாகக் கேளுங்கள்ஒவ்வொரு அமாவாசை இரவின் போது இளவரசி மீனாம்பிகை நமது அரண்மனைக்கு பக்கத்தில் இருக்கும் சகலசக்தியை அருள்பாலிக்கும் கன்னிதேவி கோவிலுக்கு வழிபடச் செல்வது வழக்கம்அன்று தான் நமது சதி திட்டத்தை ஆரம்பிப்பதற்குச் சாதகமான சமயம்!"
"மதிமந்திரியாரேஇளவரசி மீனாம்பிகை மட்டும் தனியாக செல்லுவாளாஅல்லது கூட யார் யார் ...?"

"சிம்மசேனாஅரண்மனையின் முன்னோர்களின் வழக்கப்படி அந்த நேரத்தில் பெண்கள் மட்டுமே தனியாக வழிபடச் சென்றால் தான் 'அவர்கள் நினைத்த காரியம் கைகூடும்என்று சொல்லியதாக எனக்கு நினைவுக்கு வருகின்றது"
"இளவரசி அப்படியென்ன நினைத்திருப்பார்ஏதாவது ஊகிக்க முடிகின்றதா மதிமந்திரி விருச்சிகரே?"

"ஏன் இல்லைபருவமடைந்த பெண்கள் எதை விரும்புவார்கள்தங்களுக்கு திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என்றும் வருகின்ற கணவர் வீரம் அறிவு அழகுடன் அன்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது இயற்கை தானே!"
"அவைகள் அனைத்தும் உங்களிடத்தில் இருக்கின்றதுஆகையால் நீங்களே..." என்று இழுத்தார் சேனாதிபதி சிம்மசேனர்.

"உங்கள் எண்ணப்படியே எனக்கும் இளவரசிக்கும் திருமணம் நடந்தால் இவ்வுலகில் நான் தான் மிகவும் அதிர்ஷ்டசாலிசிம்மசேனா, இந்த நேரத்தில் இளவரசியோடு எப்போதுமே இருக்கும் அவளது உயிர் தோழி மிதுனமதியைப் பற்றிச் சொல்லியேத் தீரவேண்டும்அவளும் அழகில் ரதியை மிஞ்சியவள்காந்தக்கண்களும் தேனான மொழியும் அதோடு அறிவும் ஆற்றலும் புத்திகூர்மையும் உள்ளவள்அரண்மனைக்கு மிகவும் விசுவாசம் மிக்கவள்தன் உயிரை துச்சமாக எண்ணுபவள்எப்போதும் தோழி மிதுனமதி இளவரசியுடனே ஒட்டிக் கொண்டு இருப்பவள்அவள் கண்களில் மண்னைத் தூவி விட்டுத் தான் நம் காரியத்தை சாதிக்க வேண்டும்அது அவ்வளவு எளிமையான காரியம் இல்லையென்றாலும் எப்படியாவது செய்துமுடித்தே தீர வேண்டும்"

"விருச்சிகரேஇன்னும்  அரண்மனைப் பெரியவர்கள் இளவரசியைப் பற்றி ஏதாவது சொல்லியது தங்களுக்கு நினைவிருக்கிறதா?"

"ஆம் சிம்மசேனாஅதாவது இளவரசியின் திருமணம் சாதாரணமாக நடைபெறாமல் பலவித குழப்பங்களும் சச்சரவுகளும் ஆபத்துகளும் கடந்த பிறகு தான் நடைபெறுமென்று ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்அதோடு வரும் அமாவாசை அன்று  இளவரசியின் வழிபாடு முடிவடைகின்றதுஅதன் பிறகு இளவரசி வெளியில் வருவது மிகவும் அபூர்வமாகி விடும்ஆகையால் இந்த சந்தர்பத்தை தவறவிட்டால் என் ஆயுசுக்கும் எனது இலட்சியம் நிறைவேறாதுஅதற்காகத் தான் இந்த அவசர ஏற்பாடுஎன்று தனது சதி திட்டத்தை நிறுத்தி நிதானமாக விளக்கினார் மதிமந்திரி விருச்சிகர்.

"அதாவது நமது ரூபத்தில் அரசருக்கு ஆபத்து வந்து விட்டது என்று சொல்லுங்கள்என்ன விருச்சிகரேஅப்படித்தானே!"
"நன்றாய் சொன்னீர் சிம்மசேனா"

"விருச்சிகரேஇளவரசி மீனாம்பிகையை நீங்கள் கடத்தி யாரிடத்தில் ஒப்படைக்கப் போகிறீர்கள்?"
"யாரிடத்திலாசிம்மசேனாஉங்களிடத்தில் தான் ஒப்படைக்க இருக்கிறேன்"
"என்ன என்னிடத்திலா?
ஆமாம்சிரமப்படாமல் எந்த ஒரு செயலும் வெற்றி பெறாதுஅதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்"

"அதில்லைஎதிரி நாட்டு இளவரசியை என் கண்காணிப்பில் கடகதேசத்தில் மறைத்து வைத்தால் பெரிய பிரச்சனை அல்லவா உண்டாகும்!"
"அப்படி பிரச்சனை வரவேண்டும் என்பதற்குத் தானே இந்த ஏற்பாடு!"
"விருச்சிகரேஅதில் ஒரு சிக்கல் உள்ளதுஉங்கள் நாட்டின் இளவரசி மீனாம்பிகைக்கு மிதுனமதி எவ்வாறு உயிர்த் தோழியாக இருக்கிறாளோ அது போல எங்கள் கடகதேசத்து இளவரசருக்கு நண்பனாகமெய்க்காப்பாளனாககலையிலும் அறிவிலும் பிரகாசமாக விளங்கும் தனுசுமல்லரைப் பற்றி நினைக்கும் போது எனது நெஞ்சம் படபடவென்று அடிக்கின்றது"

"சிம்மசேனாதனுசுமல்லர் அவ்வளவு பராக்கிரமசாலியா?"
"ஆமாம் விருச்சிகரேஅவரைத் தாண்டி ஒரு ஈ காக்காய் கூட நமது எல்லைக்குள் நுழைய முடியாதுஆகையால் நான் எப்படி இளவரசியை ...?"
"இந்த நேரத்திலிருந்து நீங்கள் உங்களை கோழையாக நினைப்பதை விட்டுவிடுங்கள்துணிவோடு இறங்குவோம்வெற்றி நமக்குத் தான்முதலில் இளவரசியை நீங்கள் உங்கள் மாளிகையினுள் கட்டியிருக்கும் சகலவசதியும் இருக்கின்ற அந்த பாதாள அறையில் அடைத்து வையுங்கள்அடுத்த திட்டத்தை பிறகு சொல்கிறேன்நேரமாகிவிட்டது மீண்டும் நாம் வருகின்ற அமாவாசையில் சந்திப்போம் சிம்மசேனா!"

"அப்படியே ஆகட்டும் மதிமந்திரியாரேஎ்ன்று கூற இருவரும் அவரவர் காரியத்தில் மும்முரமாக இறங்கினர்.

மனிதர்கள் ஒரு காரியத்தால் அதிக பலனும் பதவியும் புகழும் கிடைக்குமென்று தெரிந்தால் அவர்களின் மூளை ஒளி வேகத்திலும் செயல்கள் துரிதமாகவும் அல்லவா நடக்கின்றதுஅப்போது எதிரிகள் கூட நண்பர்களாகிவிடுகின்றனர்எதையும் மறக்கும் தயாளகுணம் தற்காலிகமாக ஒட்டிக் கொள்கிறதுஅவையெல்லாம் பிறரை ஏமாற்றுவதிலும்சதிசெய்வதிலும் தான் மிகச் சரியாக நடக்கின்றது என்பதை சரித்திரத்தைக் கரைத்துக் குடித்தவர்களுக்குத் தெரியும்.
அமாவாசை இரவு வந்ததுமக்கள் நிம்மதியாக உறங்கும் வேளையில் சேனாதிபதி சிம்மசேனர் தனது விசுவாசமிக்க இருவீரர்களுடன் புதிதாக பூட்டிய குதிரை வண்டியில் மேசகிரி எல்லையினை அடைந்தவுடன் அங்கிருந்த இருவர் வண்டிக்கருகில் சென்றுமுன்னெச்சரிக்கையாக வந்தவர்களின் பதவியோ, பேரையோ சொன்னால் மற்றவர்களுக்குச் சந்தேகம் எழும் என்று சேனாதிபதியையும் வீரர்களையும் மொட்டையாக மெல்லிய குரலில்"தங்களின் வருகைக்காக தான்  கன்னிக்கோவில் வாசலில் காத்திருக்கிறார்என்று கூற குதிரைவண்டியுடன் அங்கு அடைந்தனர்.
தயாராகக் காத்திருந்த மதிமந்தரி விருச்சிகர்,"சரியான சமயத்தில் வந்தீர்கள்இன்னும் சற்று நேரத்தில் இளவரசி மீனாம்பிகை வந்துவிடுவார்மிதுனமதி வெளியில் சென்றுள்ளார். அவள் வருவதற்குள் நம் காரியத்தை முடித்தாக வேண்டும்என்று வேகப்படுத்தினார்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக சிலர் கோவில் வாசலில் இருப்பதை கவனித்த மிதுனமதி அங்குள்ள புதரில் மறைந்திருந்து அவர்கள் பேசுவதைக்கேட்கசட்டென்று அவளது உடல் வேர்த்ததுஇதயம் படபடத்ததுஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை ஊகித்தவளாய் மின்னல் வேகத்தில் அதை முறியடிக்கும் வழியை யோசித்தாள்அதற்குள் இளவரசி மீனாம்பிகை கோவில் வாசலில் வரவிருச்சிகர் அவரை வரவேற்றார்.மிதுனமதிகண் இமைக்கும் நேரத்தில் குதிரைவண்டிக்கடியில் புல் இருக்கும் அந்த தொட்டில் போன்ற பகுதியில் யாருக்கும் தெரியாமல் விறுட்டென்றுஒளிந்து கொண்டாள்ஒரு வேளை இளவரசிக்கு ஆபத்து ஏற்பட்டால் தான் எப்பாடுபட்டாவது காப்பாற்றிவிடலாம்   என்கிற தைரியமும் நம்பிக்கையுடனும்  இந்த  விஷப்பரிட்சையில்   இறங்கினாள்

......   தொடரும் ...

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

No comments:

Post a Comment