தண்ணீருக்குத் தண்ணீரே எதிரி!
WATER'S ENEMY IS WATER!
மதுரை கங்காதரன்
இந்தத் தலைப்பைப்
பார்த்தவுடன் 'அதெப்படி?'
என்று நினைக்கலாம். ஆம். இப்போது தண்ணீர் வணிகம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகின்றது. அரசும் கூட அதைச் செய்கின்றது. அந்தத் தண்ணீர்
பிளாஷ்டிக் பாக்கெட்டுகளிலும், பாட்டில்களிலும்
விற்கப்படுகின்றது. தண்ணீர் குடித்துமுடித்தவுடன் அவைகள்
பொரும்பாலும் கண்ட இடத்தில் வீசி எறியப்படுகின்றது. அவ்வாறு செய்யும்போது
தரையினை அடைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகரிகின்றது. அதனால் மழைநீர்
நிலத்தடிக்குச் செல்வதைத் தடுகின்றது. அவைகளை எரித்தாலோ
காற்றில் மாசு அதிகரிக்கின்றது. அதனால் மழை பெய்யும் அளவு
குறைகின்றது. இப்போது இந்த தலைப்பு சரியாகத் தெரிகின்றதா? ஒருவேளைத் 'தண்ணீர் கொள்கை' இதுவா?
வசதியுள்ளவர்கள் பணம்
கொடுத்து வாங்குங்கள்
வாய்ப்புள்ளவர்கள்
நிலத்தடிநீர் பயன்படுத்துங்கள்
வறுமையில் வாடுபவர்கள்
தேடி அலையுங்கள்
வழியின்றி தவிப்பவர்கள்
எந்நாளும் துன்பப்படுங்கள்?
'தண்ணீரைச்
சேமியுங்கள்' எனக் கேட்டவுடன் எல்லோருக்கும் ஒரேவிதமானத்
தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அன்றாடத் தேவையினைப் பொறுத்து வேறுபடுகின்றன.
கிராமங்களில் உள்ளவர்களுக்குப் பயிர்களைக் காக்கும் அமுதமாகவும்,
பட்டணத்தில் உள்ளவர்களுக்கு வெறும் தாகத்தைத் தனிக்கும் 'தண்ணீர்' ஆகவும் பார்க்கின்றனர். 'பணம்' கௌரவத்தைத் தருவதாகவே இருந்தாலும் 'தண்ணீரே' உயிரைக் காக்கின்றது. என்னதான் 'செல்வத்தில் சிறந்த செல்வம் தண்ணீரே!'
என்று கரடியாகக் கத்தினாலும் உயர் பதவி, உயர்நிலையில்
இருப்பவர்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஏனெனில் அவர்களுக்குத்
தண்ணீர் எளிதாகப் பலவகைகளில் கிடைத்துவிடுகின்றது. ஆனால்
விவசாயி, ஏழை எளிய மக்களுக்கு அப்படியில்லை. தினமும் தண்ணீரைத் தேடி அலைந்துதான் பெறுகின்றனர். நிலைமை
இப்படி இருக்கும்போது மழைநீரைச் சேமிப்பது எப்படி? என்றும் அதன்
தாக்கத்தை வருங்காலத்தில் நேர்மறையாக எவ்வாறு ஏற்படுத்தலாம்? என்று படித்தபோது சிரிப்புதான் வருகின்றது. ஏனெனில் இன்றைய
மனிதர்களின் மனதில் பெரும்பாலும் 'வருமுன் காப்போம்' என்று முனைப்புடன் செயலில் இறங்குவதற்குப் பதிலாக, 'வந்தபின்
துன்பப்படுவோம்' என்கிற எண்ணம்தான் மேலோங்கி இருக்கின்றது.
இதை சாதகமாகப் பயன்படுத்தி அரசியல்வாதிகளும், அரசு
அதிகாரிகளும் மழைநீரைச் சேமிப்பது பற்றிக் கவலை கொள்வதில்லை
பலருக்கு பலன்தரும் மழைநீரை
சிலரால் சேமிக்க முடியுமா? ஆதாவது அணை கட்டமுடியுமா? அணை, ஆறு, ஏரி, குளம், குட்டை ஆகியவகைகளை உருவாக்கவோ அல்லது இருப்பதைப்
பராமரிக்கவோ முடியுமா? கண்டிப்பாக முடியாது. அதிகம்
போனால் தண்ணீரைச்
சிக்கனமாகச் செலவு செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் நிலத்தடிநீர் உயர்த்துவதே மிகச்
சிறந்த வழி. அதைப்பற்றி அரசும், அரசியல்வாதிகளும் கவலைபடுவதுபோல்
தெரியவில்லை. அப்படி இருக்கும்போது பின் எவ்வாறு மழைநீர், தண்ணீர் சிக்கனம் பற்றிய சிந்தனைகளை
வளர்ப்பது என்பதை பார்ப்போம்.
இப்போது இருக்கும் நடுத்தரவயது
மற்றும் முதியோரிடத்தில் எவ்வளவு தான் மழைநீர் சேமிப்பின் அவசியத்தை எடுத்துச்
சொன்னாலும் ஒரு துளி அளவுக்குகூட பயன் தராது. ஏனெனில் அவர்கள் ஆரம்பம் முதலே அதன் தாக்கத்தை உணராததும்,
'நாம் வாழப்போவது சில காலம். அதனால் நாம் ஏன் அதைப்பற்றி
அக்கறை படவேண்டும்? மேலும் இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தானே
வரும்காலத்தில் தண்ணீர் தேவை. ஆகையால் அவர்கள் ஏதாவது ஒரு வழி
செய்துகொள்ளட்டும் ' என்கிற மெத்தனப்போக்கே அதிகம் இருக்கின்றது.
அதற்கு ஒரே வழி. கல்வி, கல்லூரி,
நிறுவனம், அரசு அலுவலகம், அரசியல் தலைவர்கள், ஆஸ்பத்திரி போன்றனவற்றில்
வேலைசெய்யும் பணியாளர்கள் கீழ்கண்ட வாசகங்கள் அடங்கிய அட்டையினை எப்பொழுதும்
மாட்டிக்கொண்டால்தான் ஓரளவு நம்நாட்டையும், வருங்கால சந்ததியினர்களைக்
காக்க முடியும்.
மேற்கூறிய வாசகங்கள் எல்லா இடத்தில் முக்கியமாக
நாடாளுமன்றம், பாராளுமன்றத்தில்
திரும்பும் திசையில் தெரியும்படி வைத்தால் வரும்கால இந்தியா வளமைமிகு இந்தியாவாக
மாறுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
***********
No comments:
Post a Comment