அன்று நான் வாசித்த கவிதை....
தமிழ்த்தாய் வாழ்த்து
என்னுயிர்த் தாங்கும்
அன்னைத் தமிழே
தவம் செய்யாத்
தஞ்சமானத் தமிழே
வணக்கம்.
தமிழ்மொழியின் நிறைகாக்கும் காப்பே காப்பு
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கலை
அன்னைத் தமிழை வளர்க்கும் நிலை
இல்லாத ஊரில் அழகான சூழல்
ஆங்கிலக் கலப்பில் அழுக்கானத் தமிழ்.
உறைந்து போயின இனிய இலக்கியங்கள்
கரைந்து போகும் கனிந்த கலைகள்
மறைந்து போகும் மானமுள்ளத் தனித்தமிழ்
சிதைந்து போயின சிங்காரத் தமிழ்.
உறுப்பு இழந்தால் மாற்றுப்பு உதவும்
உயிர் இழந்தால் மாற்றுயிர் உதவுமா?
பூக்கள் உதிர்ந்தால் மீண்டும் பூக்கலாம்
பூந்தமிழ் மறைந்தால் மீண்டும் மலருமா?
தமிழர்களின் தாயான செந்தமிழை மறவோம்
தாலாட்டிச் சீராட்டும் கன்னித்தமிழை மறவோம்
உடலோடு ஒட்டிய உரிமைத்தமிழை மறவோம்.
உயிரோடு கலந்த உன்னதத்தமிழை மறவோம்.
அனையாவிளக்காய் ஒளிரும் தமிழைக் காப்போம்
அமுதமழையாய் பெய்யும் தமிழைக் காப்போம்
குறையில்லாத் திவ்வியத் தமிழைக் காப்போம்
நிறைக்காத்துச் செம்மொழித் தமிழைக் காப்போம்
அன்று எடுத்த மின்படங்கள்
######################