எதனால் எது முழுமை? (அதிதி விழாவிற்காக)
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
உணவால் உடல் முழுமை
உடலால் உயிர் முழுமை
உணர்வால் மனம் முழுமை
உறவால் குடும்பம் முழுமை
மனிதன் முழுமைக்கு முயற்சிக்கிறான்
முடிவில் முடியாமல் தவிக்கிறான்
முழுமையைத் தேடி ஓடுகிறான்
மனிதன் எட்டாமல் வாடுகிறான்
அறத்தால் வாழ்வு முழுமை
ஆன்மீகத்தால் உலகு முழுமை
உறக்கத்தால் அமைதி முழுமை
இரவு பகலால் நாள் முழுமை
முன்னகர்வுக்கு முழுமை முக்கியம்
முயற்சித்தால் அதுவும் சாத்தியம்
முழுமையே வாழ்வின் இலக்கு
முடித்துக் காட்டுவதே பழகு.
பணத்தால் வசதி முழுமை
பாசத்தால் உறவு முழுமை
கல்யாணத்தால் காதல் முழுமை
கனிகளால் மரம் முழுமை
செயலால் எண்ணம் முழுமை
செந்தமிழால் இலக்கியம் முழுமை
ருசியால் நாக்கு முழுமை
பசியால் வயிறு முழுமை
வள்ளுவரால் திருக்குறள் முழுமை
கம்பரால் இராமாயணம் முழுமை
இளங்கோவால் சிலப்பதிகாரம் முழுமை
கீதையால் பாரதம் முழுமை.
படைத்தவனே தன் படைப்பில் முழுமையெனில்
படைப்பு எதுவும் தன்னில் முழுமை அல்ல.
குறைவாயிருப்பதே முழுமை எனில்
நிறைவு நோக்கிய நகர்வு முடியுமா?
%%%%%%%%%%%%%%%%%%%%%%
No comments:
Post a Comment