Pages

Monday, 2 July 2018

தமிழ்மண் கண்ட (மறந்த) விளையாட்டுகள் - புதுக்கவிதை



தமிழ்மண் கண்ட (மறந்த) விளையாட்டுகள்
                 புதுக்கவிதை 
              மதுரை கங்காதரன் 
                        
உடலில் உறுதி அளித்தது கயிறு குதிக்கும் விளையாட்டு
ஒற்றுமை உவகை வளர்த்தது  கல்லா மண்ணா விளையாட்டு
காலுக்கு வலிமை தந்தது நொண்டிப் பாண்டி விளையாட்டு
கணிதம் அறிவு ஊட்டியது பல்லாங் குழி விளையாட்டு
கணினி வரவு அழித்ததே கூடி ஆடும் விளையாட்டு!

துணிவு முயற்சி தாவுவது பச்சை குதிரை விளையாட்டு
தைரியம் நம்பிக்கை விரிந்தது ஓடி ஒளியும் விளையாட்டு
கைகள் கவனம் கூட்டியது தட்டும் கல் விளையாட்டு
கள்ளர்கள் கவ்விப் பிடித்தது கள்ளன் போலிசு விளையாட்டு
கைப்பேசி கவர்ச்சி கரைத்ததே உடல் பேணும் விளையாட்டு!

குறிப்பார்த்து அடிக்கச் செய்தது கோலி குண்டு விளையாட்டு
கிரிக்கெட் ஆட்டம் மாற்றியது கிட்டிப் புல்லு விளையாட்டு
சுறுசுறுப்பு உச்சிக்கு ஏற்றியது தாயக் கட்டை விளையாட்டு
சுற்றிலும் சுலழ வைப்பது  சிலம்பு சுற்றும் விளையாட்டு
சுருங்கிய உறவில் புதைந்ததே நலம் காக்கும் விளையாட்டு!

கண்கட்டி வித்தை காட்டுவது உறி அடிக்கும் விளையாட்டு
காலும் கையும் தொடுவது சடுகுடு பாடும் விளையாட்டு
ஆற்றல் வீரம் வலுப்பது ஏறு தழுவும் விளையாட்டு
அறிவு பொறுமை கொடுத்தது ஆடு புலி விளையாட்டு
இளமைக் காலம் மறந்ததே ஆடி பாடும் விளையாட்டு!

சாட்டைக் சுற்றி ஆடுவது பம்பரம் விடும் விளையாட்டு
சறுக்கி விழுந்து ஏறுவது வழுக்கும் மரம் விளையாட்டு
ஓங்கி தட்டி ஓட்டுவது வண்டிப் பந்தய விளையாட்டு
ஓடித் துரத்தி பிடிப்பது தொட்டுப் பிடிச்சு விளையாட்டு 

அந்நிய மோகம் துரத்தியதே தமிழ் மண் விளையாட்டு!

                *******************

No comments:

Post a Comment