Pages

Sunday, 22 September 2019

22.9.19 கம்பர்போல் தமிழ்எழுத்தால் எழுதல் காப்பே!- மாமதுரைக் கவிஞர் பேரவை



அனைத்துத் தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம்....

நேற்று (22.09.19) மாமதுரைக் கவிஞர் பேரவை, மணியம்மை மழலையர் பள்ளி, மதுரையில் நடந்த தனித்தமிழ் எழுத்து இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு 9ஆம் திங்கட் கவியரங்கத்தில் 'கம்பர்போல் தமிழ்எழுத்தால் எழுதல் காப்பே !' என்கிற தலைப்பில் வாசித்த கவிஞர்களின் கவிதைகள் மற்றும் மின்படங்கள் (Photos) உங்களுக்காக..

கம்பர்போல் தமிழ் எழுத்தால் எழுதல் காப்பே
                                      புதுக்கவிதை 
                     மதுரை கு.கி. கங்காதரன் 

அழகு தமிழில் இராமாயணம்
அள்ளி வழங்கிய கம்பனாடர்
கவிஞர்களுக்கு இலக்கிய விருந்து
தமிழர்களுக்கு இனிய மருந்து

வடமொழித் தழுவலில் சிறந்தது 
வால்மீகியை மறந்திடச் செய்தது
வளமிக்கத் தமிழை உணர்த்தியது
வாழ்க்கையைக் கவியில் புகட்டியது.

தமிழர் கலாச்சாரம் மெருகூட்டியது
தமிழுக்கான 'கதி'யில் ஒன்றானது.
தமிழெழுத்தால் செதுக்கிய சிற்பமானது
தவத்தாலும் கிடைத்திடாத அற்புதமானது.

தமிழெழுத்தால் மட்டுமே எழுதப்பட்டதாலே
தாங்கிய கிரந்தெழுத்துகள் அறுக்கப்பட்டதாலே
மேன்மையாய் செந்தமிழில் வர்ணிக்கப்பட்டதாலே  
மொழிமாசில்லாமல் தமிழ்க்கற்பு காக்கப்பட்டதே. 

சொல்லாட்சியில் கவிச்சக்கரவர்த்தி 
சொக்கும் அழகில் கவிநுணுக்கவாதி
அசைபோடத் தூண்டும்  இலக்கியவாதி    
அருந்தமிழைத் தங்கமாக்கிய இரசவாதி

மனிதனையும் தெய்வம் ஆக்கினார் கம்பர்  
மந்திகளையும் இதயத்தில் நுழைத்தார் கம்பர் 
உவமையில் வானளவுக்கு உயர்த்தினார் கம்பர்
இலக்கியத்திற்கு அகராதியாய்ப் படைத்தார் கம்பர்..
                                  **********************
























மேலும் 

நன்றி 



No comments:

Post a Comment