Pages

Tuesday, 3 September 2019

RESEARCH PAPER PRESENTATION A MODEL - ஆய்வுக்கட்டுரைக்கான வடிவமைப்பு (மாதிரி)



இது ஆய்வுக்கட்டுரைக்கான வடிவமைப்பு (மாதிரி). 
மாணவர்களுக்காக இந்த குறிப்புகள் கொடுக்கப் பட்டுள்ளது. 
இது ஒரு குறைந்தபட்ச வடிவமைப்பாகும்.

இது மாதிரி முகப்பு (முன் அட்டை)



முன் அட்டை முகப்பு பக்கதில் தலைப்பு
(16 புள்ளி அளவு)
(மேல் பகுதி)

ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பவர்கள் (14 புள்ளி அளவு)
ஆய்வாளர்கள் பெயர்(கள்),
வகுப்பு
பிரிவு
(நடுப்பகுதி)

பள்ளியின் சின்னம்
பள்ளியின் பெயர் மற்றும் முகவரி
மாதம் ஆண்டு
(கீழ் பகுதி)
(இவைகள் அனைத்தும் மையப்படுத்தி அமைத்தல் வேண்டும்)
***********************
இரண்டாம் பக்கத்தில்

ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியின் சான்றிதழ்

......... தலைப்புள்ள இந்த கட்டுரையானது , ................ வகுப்பு, ........... பள்ளியில் படிக்கும் ............., ............ என்பவர்களால் எனது வழிகாட்டியின் படி என்றும், சுயமுயற்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்று சான்றளிப்படுகிறது 

வழிகாட்டியின் கையொப்பம்
பெயர்
கல்வித்தகுதி
பணியின் பெயர்
முகவரி
இடம்:  .....................  தேதி :...................
கட்டுரையினை ஆய்வுசெய்த மதிப்பீட்டாளர்/கள்  கையொப்பம்
பெயர்,  
கல்வித்தகுதி, 
பணியின் பெயர்
************************
மூன்றாம் பக்கத்தில் 11 புள்ளி

பொருளடக்கம்
Table of contents
அத்தியாயம் எண்        தலைப்பு / உபதலைப்பு             பக்க எண்
Chapter No                         Title / Sub-title                     Page No

****************
நான்காம் பக்கம் 11 புள்ளி

படப்பட்டியல் (List of figure)
படம் எண்               தலைப்பு                       பக்க எண்
Fig.No                        Title                             Page No
************

ஐந்தாம் பக்கம்11 புள்ளி

அட்டவனைப் பட்டியல் (List of Table)
அட்டவனை எண்                தலைப்பு                பக்க எண்
Table.No                               Title                     Page No

***************
ஆறாம் பக்கம் 11 புள்ளி

வரைபடப் பட்டியல் (List of Graph)
வரைபட எண்                    தலைப்பு               பக்க எண்
Graph.No                              Title                      Page No

***************
ஏழாம் பக்கம் 11 புள்ளி

பெயரிடும் முறை (Nomenclature)

சொல் சுருக்கம்               சொல் விரிவு


********************
எட்டாம் பக்கம் 11 புள்ளி
ஆய்வாளர்/கள் தன் விவரக்குறிப்பு

**************
ஒன்பதாம் பக்கம் 
ஆய்வுச் சுருக்கம் (Abstract)  (புதிய பக்கத்தில் ஆரம்பிக்க வேண்டும்)
************************

1.0 முன்னுரை (Introduction) (மையப்படுத்தி ஆரம்பிக்க வேண்டும் - 12 புள்ளி)
    (11 புள்ளி ஆரம்பிக்க வேண்டும்)

2.0 தலைப்பு (புதிய பக்கத்தில் மையப்படுத்தி ஆரம்பிக்க வேண்டும் - 12 புள்ளி)
2.1 உபதலைப்பு (இடது ஒரத்தில் இருக்க வேண்டும் - 11 புள்ளி)
2.2 உபதலைப்பு
2.3 உபதலைப்பு ...

3.0 தலைப்பு (புதிய பக்கத்தில் மையப்படுத்தி ஆரம்பிக்க வேண்டும் - 12 புள்ளி)
3.1 உபதலைப்பு (இடது ஒரத்தில் இருக்க வேண்டும் -  11 புள்ளி)
3.2 உபதலைப்பு
3.3 உபதலைப்பு ...

4.0 தலைப்பு (புதிய பக்கத்தில் ஆரம்பிக்க வேண்டும் - 12 புள்ளி)
4.1 உபதலைப்பு (இடது ஒரத்தில் இருக்க வேண்டும் -  11 புள்ளி)
4.2 உபதலைப்பு
4.3 உபதலைப்பு ...
....
X.0 ஆய்வின் நிறைவுத் தொகுப்பு (Discussion)  (புதிய பக்கத்தில் ஆரம்பிக்க வேண்டும் - 12 புள்ளி)
(11 புள்ளி ஆரம்பிக்க வேண்டும்)
************
XX.0 முடிவுரை (Conclusion) (புதிய பக்கத்தில் ஆரம்பிக்க வேண்டும் -- 12 புள்ளி)
(11 புள்ளி ஆரம்பிக்க வேண்டும்)
**************
குறிப்புகள் (References)  (புதிய பக்கத்தில் ஆரம்பிக்க வேண்டும் - 12 புள்ளி)
(11 புள்ளி ஆரம்பிக்க வேண்டும்)

**********************
 விதிமுறைகள்:

1.கட்டுரைகள் தமிழில் பாமினி அல்லது யூனிகோடு (Unicode) எழுத்துருவில் மட்டுமே அமைந்திருத்தல் வேண்டும்.
2.   எழுத்து அளவு 11 புள்ளிகள் (11 points) இருக்க வேண்டும்
3. ஆய்வுக்கட்டுரையில் அடிக்குறிப்புகள் (Foot notes), படம் எண், பட்டியல் எண், பக்க எண், சொற்கள் சுருக்கத்தின் விரிவாக்கம் ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.
4.   4 தாளில் ஒரு பக்கத்தில் மட்டுமே தட்டச்சு செய்திடல் வேண்டும்.
5.   பத்தி (Para) ஆரம்பிக்கும்போது ஒரு இடைவெளி (one space) விட்டு ஆரம்பிக்க வேண்டும்
6.   வரிகள் இருபுறமும் சீராக  (justified) இருக்க வேண்டும்
7.   முக்கிய தலைப்புகளுக்கு (Title) முழு எண் கொடுக்க வேண்டும்
அதன் உபதலைப்புக்கு (Sub-title) முழு எண்ணுடன் புள்ளியிட்டு பிறகு .1, .2, .3 என்று வரிசையாக எண் கொடுக்க வேண்டும்
அதாவது 1.0, 1.1,1.2,1.3..... 2.0, 2.1, 2.2, 2.3....  3.0, 3.1, 3.2, 3.3...
8.   அட்டவணை, பட்டியல், படம், குறிப்பு ஆகியவையில் ஆசிரியர் பெயர், ஆய்வாளர் பெயர், தலைப்பு மற்றும் ஆண்டு இருத்தல் வேண்டும்
9.   அடிக்குறிப்பு (துணை ஆதாரம்) நூலை எழுதும்போது ஆசிரியர் பெயர் மற்றும் பதிப்பாசிரியர் பெயர், நூலின் பெயர்,பதிப்பு,வெளியான இடம், ஆண்டு, பக்க எண் ஆகியவை இருத்தல் வேண்டும்
10. பின்னிணைப்புகள் (Appendixes) சேர்க்க அனுமதி உண்டு. அந்த இணைப்பு, கட்டுரையில் எந்த பக்கத்துடன் இணைக்கப் பட்டுள்ளது என்ற விவரம் குறிப்பிட்ட வேண்டும். பின்னிணைப்பான எண் கட்டுரை பக்கஎண்களோடு தொடர்ந்து சேர்க்க வேண்டும்.   
11. அட்டவணைகளுக்கும் விளக்கப்படங்களுக்கும் (Tables and Charts) அடிக்குறிப்புகள் (Foot Notes to Tables and Figures) ஆகியவை மையப்படுத்தி அமைத்தல் வேண்டும்
12. துணை ஆதாரப் பட்டியல் (புத்தகம், பத்திரிகை, தினசரி, வலைப்பூ, வலைத்தளம் இன்ன பிற)  
13. ஆய்வுமூல உண்மைக்கூறுகள் (Research source or data)
14. ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் 1.5 புள்ளி இடைவெளி இருக்க வேண்டும்.
15. படங்கள் அரைப்பக்க அளவுக்கு மேல் இருக்கக் கூடாது
16. பதிப்புரிமை (Copyright) மற்றும் காப்புரிமை (Patent) பிரச்சனை ஏதேனும் வந்தால் அவற்றிற்கு ஆய்வாளர் மற்றும் அவரின் வழிகாட்டிகளே பொறுப்பு
17. முன்அட்டைப்பகுதி, முதற்பக்கத்தில் உள்ளதை போட்டோ பேப்பரில் அச்சிட்டும், கடைசி அட்டைப்பகுதி வெற்று போட்டோ பேப்பர் கொண்டு பைண்டிங் செய்திடல் வேண்டும். (மாதிரி படத்தின் இணைப்பைப் பார்க்கவும்)
18. கட்டுரை பிழையில்லாமலும், நீண்ட வார்த்தையாக இல்லாமல் இருத்தல் அவசியம்.
19. தவிர்க்க முடியாத தமிழ் சொற்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அடைப்பு ( ) குறிக்குள் இருக்கலாம்
20. ஆய்வுக்கட்டுரையின் மூன்று பிரதிகளை சமர்ப்பிக்க வேண்டும்
**************

ஆய்வுக்கட்டுரைக்கான வடிவமைப்பு (மாதிரி) 

·         ஆய்வுச் சுருக்கம் (Abstract) - (ஒரு பக்கம்)
*     தலைப்பில் உள்ள வார்த்தைகளின் விளக்கம், வார்த்தைகளின் நடைமுறை வரையறை (Operational definition)
·         முக்கிய வார்த்தைகளின் (Keywords) பட்டியல்
·         முன்னுரை
·         ஆய்வுக்கான நோக்கம்
·         ஆய்வினைச் செய்யத் தூண்டிய சிந்தனை
·         ஆய்வின் முக்கியத்துவம்
·         ஆய்வுக்கான விளக்கம்
*    இந்த ஆய்வில் ஆய்வாளரின் விருப்பப் பங்களிப்பு 
·         ஆராய்ச்சி முறைகள் (Methodology)
·         ஆராய்ச்சியின் சாதக பாதக வளங்கள் 
·         இதுவரை நடந்த ஆய்வுகள்
·         ஆய்வினால் சமுதாயத்திற்கு உண்டாகும் பயன்கள்
·         ஆராய்ச்சியின் விளைவுகள்
·         பரிந்துரைகள்
·         மேலும் ஆய்வு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள்
·         ஆய்வின் நிறைவு
·         முடிவுரை

******************************


No comments:

Post a Comment