1.11.19 அன்று Dr.T.M.பள்ளியில் YOUNG DOCTORATES
தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி
நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வுகள்
* நிகழ்ச்சி 'தமிழ்த்தாய் வாழ்த்ததுடன்' தொடங்கியது.
* 'நிகழ்ச்சி நிரல்' படி விழா தொடங்கியது.
* 1.11.19.அன்று வெள்ளிக்கிழமை Dr.T.M.பள்ளியில் இளம் முனைவர் YOUNG DOCTORATES தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
* ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர் ஆகியோர் மாணவிகள் தங்களின் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பிக்க எவ்வளவு உழைத்தார்கள் என்றும் பள்ளித் தேர்வு உட்பட என்னென்னத் தடைகள் எதிர்கொண்டனர் என்றும் தங்களுடைய அனுபவங்களை எவ்விதத் தயக்கமில்லாமல் பகிர்ந்து கொண்டது அனைவரையும் நெகிழ வைத்ததோடு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
* இந்த கட்டுரைக்காக மாணவிகள் பல நூலகத்திற்குச் சென்று அங்குள்ள புத்தகங்களைப் படித்துக் குறிப்பு எடுத்தது மறக்கமுடியாத அனுபவம் என்று பகிர்ந்தனர். புத்தகம் வாசிக்கும் பழக்கம் இதனால் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றனர்.
* தாங்கள் தினமும் பார்த்துக் கொண்டிருந்த தொலைகாட்சி, சமூக வலைதங்களை இந்த ஆய்வுக் கட்டுரை எழுதுவதில் மறக்கச் செய்துவிட்டது என்று கனிவுடன் இயம்பினர்.
* மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் முழுஒத்துழைப்பும், ஊக்கமும், நம்பிக்கையும் ஊட்டினர் என்றார்கள்.
* வரும் காலத்தில் அனைவரும் 'முனைவர்' பட்டம் பெறுவதற்கு இது அடித்தளமாக கட்டாயமாக அமையும் என்பதை ஆணித்தரமாகப் பேசினார்கள்.
* மாணவிகள் தங்களுக்குள் இவ்வளவு ஆற்றலும், அறிவும், திறமையும், முனைப்பும், தன்னம்பிக்கையும் இருக்கின்றது என்பதை இந்த ஆய்வுக்கட்டுரைகள் (280) சமர்ப்பிப்பதில் தெரிய வருகின்றது என்பதை சிறப்பு விருந்தினர்கள், தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
* மாணவிகள், நாங்கள் நன்றாய்ப் படித்து பட்டம் பெற்று அரசின் உயர்பதவியைப் பெறுவோம் என்று தன்னம்பிக்கையுடன் பேசியது அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தியது.
* இந்த வெற்றி அனைவரின் கூட்டுமுயற்சியால் கிடைத்தது என்று தெரிவித்தது.
* நிறைவாக 'நாட்டுப்பண்' அனைவரும் பாடினர்.
* அனைவருக்கும் தமிழ் பாரம்பரிய இனிப்பும், தேநீரும் வழங்கப்பட்டது.
நிகழ்வின் மின்படத்தொகுப்பு இதோ ...
நன்றி, வணக்கம்.
********
வாழ்த்துக்கள்
ReplyDelete