எது ஆன்மீகம்?
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
உண்டு கழிதல் இயல்பாய்
உடல் ஆரோக்கியம் மகிழ்ச்சியாய்
உயர் சிந்தனை அணியால்
உதிக்குமே ஆன்மீக மலர்ச்சி
அன்பும் அறமும் வளர்த்து
ஆசை பொறாமை அழித்து
எண்ணமும் நினைவும் துறந்து
அழியும் தேகத்தை மறந்து
இறைவனின் பாதத்தைத் தொழுதால்
ஓங்குமே ஆன்மீக முதிர்ச்சி.
**************************************
இக்கவிதையின் விளக்கம்:
உணவு உண்பதிலும், உடலில் உண்டாகும் கழிவுகளை வெளியேற்றுவதிலும் எவ்வித சிரமமும் இருக்கக் கூடாது. உடல் ஆரோக்கியம்
அனைவரிடத்தில் அன்பையும், வாழ்க்கையில் அறநெறியையும் கடைப்பிடிக்க வேண்டும். உள்ளத்தில் எழும் ஆசையையும் மற்றவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவதை அழித்துவிட்டு, உள்மனத்தின் குரலைக் கேட்கும்போது ஆன்மீக எழுச்சி உண்டாகின்றது.
இதயத்தில் எழப்போகும் எண்ணங்களையும் இதுநாள் வரை சேர்த்து வைத்திருந்த நினைவுகளையும் துறக்க வேண்டும். என்றாவது ஒருநாள் அழியப்போகும் 'நான்' என்னும் இந்த உடலை மறந்து இறைவனின் திருவடிகளில் சரணடையும் போது ஆன்மீக முதிர்ச்சி உண்டாகின்றது.
*************************************
No comments:
Post a Comment