Pages

Friday, 9 December 2022

27.11.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் - 5 தலைப்பு - உலகின் முதன்மொழி தமிழே

 

27.11.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்

தலைப்பு  - உலகின் முதன்மொழி தமிழே!

27.11.2022 மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கம். படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் கவிஞர் இரா .இரவி வரவேற்றார். தலைவர் பேராசிரியர் சக்திவேல் கவியரங்கிற்கு தலைமை வகித்தார். புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன் சிறப்புரையாற்றினார். "உலகின் முதல் மொழி தமிழே!" தலைப்பில் கவிஞர்கள் முருகுபாரதி, குறளடியான், இதயத்துல்லா, அஞ்சூரியா க.செயராமன், ஜெய் சங்கர், முனைவர் இரா.வரதராசன், சங்கர நாராயணன், ச.லிங்கம்மாள், கு.ப.நாகராசன், பொன்பாண்டி, இராம பாண்டியன், அ.அழகையா, கு.கி.கங்காதரன், மா.வீரபாகு, இரா.கல்யாணசுந்தரம், சாந்தி திருநாவுக்கரசு, இரா.இரவி ஆகியோர் கவிதை படித்தனர். சாந்தி திருநாவுக்கரசு அவர்களின் புதிய நூல் வெளியிடப்பட்டது. வருகை தந்த அனைவருக்கும் நன்கொடையாக   நூலை வழங்கினார் நூல் ஆசிரியர்.





















                  உலகின் முதன்மொழி தமிழே!
                                புதுக்கவிதை 
                             கு.கி.கங்காதரன் 

மொழிக்கு வேண்டியது ஒலி  
ஒலியை மாற்றுவது எழுத்து 
எழுத்துகளின் பெருமை எளிமை
எளிமைக்கு ஐயமின்றி தமிழே..

பறவைகள் எழுப்புகின்ற ஒலிகள் 
விலங்குகள் கத்துகின்ற ஒலிகள் 
உணர்வுகளில் உருவாகும் ஒலிகள் 
அனைத்தும் சொற்களானது தமிழில்.

இயற்கையின் ஒலிகளுள்ள மொழி 
இயல்பாய் ஒலிக்கும் இன்மொழி 
வளமான சொற்களுள்ள செம்மொழி 
பன்மொழிகளுக்கு  வள்ளலான தமிழ்

தமிழ் மொழி தோன்றியது எப்போது?
தொன்மையென தொல்லியல் சொல்கிறது
தோண்டத் தோண்ட வயது நீளுகிறது
தக்கவிடை காட்டாமல் விளையாடுது 

முத்தமிழ் காலத்தைக் கணக்கிட்டாலும்
இயலிசை நாடகத்தை ஆராய்ந்தாலும்
இலக்கண இலக்கியங்களைப் படித்தாலும்
மொழிகளில் முதன்மையானது தமிழே..

********************************************

--

No comments:

Post a Comment