நாள் 25.6.2023. மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில் "மாமதுரை போற்றுவோம் "என்ற தலைப்பில் மதுரை வடக்கு மாசி வீதி, மணியம்மை பள்ளியில் கவியரங்கம்.நடந்தது .செயலர் கவிஞர் இரா.இரவி அனைவரையும் வரவேற்றார் . பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவிஞர்கள் இரா .இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம் ,கு .கி .கங்காதரன் ,கி .கோ.குறளடியான், புலவர் .முருகுபாரதி,மா .வீரபாகு,அஞ்சூரியா க .செயராமன் ,,மு .இதயத்துல்லா ,கவிதாயினிகள் ச .லிங்கம்மாள் ,,அனுராதா சாந்தி நாள் 25.6.2023. மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில் "மாமதுரை போற்றுவோம்" என்ற தலைப்பில் மதுரை வடக்கு மாசி வீதி, மணியம்மை பள்ளியில் கவியரங்கம்.நடந்தது.
செயலர் கவிஞர் இரா.இரவி அனைவரையும் வரவேற்றார். பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவிஞர்கள் இரா .இரவி, முனைவர் இரா.வரதராசன், இரா.கல்யாணசுந்தரம், கு.கி. கங்காதரன், கி.கோ.குறளடியான், புலவர் முருகுபாரதி, மா. வீரபாகு, அஞ்சூரியா க.செயராமன், மு.இதயத்துல்லா, கவிதாயினிகள் ச.லிங்கம்மாள், அனுராதா, சாந்தி திருநாவுக்கரசு, ஆகியோர் கவிதை படித்தனர் . .
படங்கள் நன்றி புகைப்படக் கலைஞர்கள் மோகன்,ரெ.கார்த்திகேயன்
மாமதுரை போற்றுவோம் !
கவிஞர் இரா .இரவி
கோயில்நகரம் என்ற பெயர் பெற்ற மதுரை !
குணம் மிக்க நல்லவர்கள் வாழும் மதுரை !
சதுரம் சதுரமாக வடிவமைக்கப் பட்ட மதுரை !
சந்தோசம் வழங்கிடும் சீர் மிகு மதுரை !
உலகின் முதல் ஊர் கடம்பவன மதுரை !
உலகின் முதல் மனிதன் வாழ்ந்த மதுரை !
தமிழ்மாதப் பெயர் வீதிகள் கொண்ட மதுரை !
தமிழ் வளர்க்க சங்கம் அமைத்த மதுரை !
வானுயர்ந்த கோபுரங்கள் வரவேற்கும் மதுரை !
வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் மதுரை !
திருக்குறள் அரங்கேற்றம் நடந்திட்ட மதுரை !
திருவள்ளுவருக்கு வான்புகழ் தந்திட்ட மதுரை !
திருமலை நாயக்கர் மகால் உள்ள மதுரை !
திரும்பிய இடமெல்லாம் கலை நயம் மிக்க மதுரை !
மங்கம்மா ராணியின் அரண்மனை உள்ள மதுரை !
மகாத்மாகாந்தியின் அருங்காட்சியகம் உள்ள மதுரை !
பிரமாண்ட வண்டியூர் தெப்பம் உள்ள மதுரை !
பிரமிக்க வைக்கும் திருவிழாக்கள் நடக்கும் மதுரை !
கலைகளின் தாயகமாக விளங்கிடும் மதுரை !
காளைகளின் சல்லிக்கட்டு நடக்கும் மதுரை !
சமணர்களின் சிற்பங்கள் உள்ள மதுரை !
சைவர்களின் மடங்கள் உள்ள மதுரை !
சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் மதுரை !
சுந்தரம் மிக்க இயற்கைகள் நிறைந்த மதுரை !
மல்லிகையை ஏற்றுமதி செய்திடும் மதுரை !
மனங்களைக் கொள்ளைக் கொள்ளும் மதுரை !
அன்றும் இன்றும் என்றும் தூங்காத மதுரை !
அன்பைப் பொழிவதில் நிகரற்ற மதுரை !
புகழ் மிக்க பள்ளிவாசல்கள் உள்ள மதுரை !
புகழ் மிக்க தேவாலயங்கள் உள்ள மதுரை !
மதுரத்தமிழ் பேசும் மாசற்ற மக்களின் மதுரை !
மங்காத புகழ் பரப்பும் மாண்புமிக்க மதுரை !
வீரத்தின் விளைநிலமாகத் திகழும் மதுரை !
விவேகத்தின் முத்திரைப் பதிக்கும் மதுரை !
கடலைச் சேராத வைகை ஆறு ஓடும் மதுரை !
கட்டிடக் கலையை பறை சாற்றிடும் மதுரை !
கரகம் காவடி கூத்துக் கட்டும் மதுரை !
சிகரம் வைதாற்ப் போல சிறப்புப் பெற்ற மதுரை !
சில் சில் செகர்தண்டா கிடைத்திடும் மதுரை !
சல் சல் நாட்டிய ஒலி ஒலிக்கும் மதுரை !
பல்லாயிரம் வயதாகியும் இளமையான மதுரை !
பாண்டியர்கள் வரலாறு இயம்பும் மதுரை !
ஈடு இணையற்ற புகழ் மிக்க மதுரை !
இனியவர்கள் என்றும் விரும்பிடும் மதுரை !
மாமதுரை போற்றுவோம்
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
பழமையின் பெருமை மாமதுரைக்கு உண்டு
மேற்கத்திய நாட்டோர் வியந்து நோக்குவார்
மதுரையில் பிறக்கவில்லையே என்று ஏங்குவார்
முத்தமிழ் வடிவமாய் உருவெடுத்தது இந்த மதுரையில்
முச்சங்கமத்தில் தொடக்கமாய் தோன்றியது இந்த மதுரையில்
சிலம்பின் காவியம் நடந்ததும் இந்த மதுரையில்
சிவனின் திருவிளையாடல் அரங்கேறியதும் இந்த மதுரையில்
தூங்கா நகரமென்னும் பேருள்ளது இந்த மதுரைக்கு
நான்மாடக் கூடலென்று கூறுவதுண்டு இந்த மதுரைக்கு
கடம்பவனம் என்றச் சிறப்பும்முண்டு இந்த மதுரைக்கு
கோவில்நகரமென்னும் பெருமையுள்ளது இந்த மதுரைக்கு
மல்லிகையின் வாசத்தை மதுரையெங்கும் முகரலாம்
மனம் கமழும் உணவுகளை மதுரையெங்கும் ருசிக்கலாம்
இனிமையான தமிழினை மதுரையெங்கும் கேட்கலாம்
அன்பான உள்ளங்களை மதுரையெங்கும் காணலாம்
அறுபடையில் ஒன்றானப் பழமுதிர்ச்சோலை மதுரையில்
சித்திரையில் பிரமாண்டமானத் தேரோட்டமும் மதுரையில்
உலகப்புகழ் வீரக்காளையர்களின் சல்லிக்கட்டும் மதுரையில்
பழம்பெருமைக்குச் சான்றுள்ள கீழடியும் மதுரையில்
வரலாற்றில் வலம் வரும் மதுரையைப் போற்றுவோம்
இலக்கியங்களில் இடம் பெறும் மதுரையைப் போற்றுவோம்
கலைகளை வளர்த்து வரும் மதுரையைப் போற்றுவோம்
பண்பாடு காக்கும் தமிழ்மண் மதுரையைப் போற்றுவோம்
***************
*******
No comments:
Post a Comment