Pages

Wednesday 31 January 2024

28.1.2024 மாமதுரைக் கவிஞர் பேரவை- கவியரங்கம் 19 தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள்-விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி

  


28.1.2024 மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் - "தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் ", என்ற தலைப்பில் நடந்தது  மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. 

தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார் ,செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன், துணைச் செயலர் கு .கி .கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில்,"தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் " என்ற தலைப்பில், கவியரங்கம்.நடந்தது கவிஞர்கள் இரா. இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், மா .வீரபாகு ,கி. கோ.குறளடியான், ச .லிங்கம்மாள், மு .இதயத்துல்லா ( இளையாங்குடி ) , அ.அழகையா, அஞ்சூரியா க .செயராமன் , தென்காசி ம .ஆறுமுகம் ,புலவர் மகா .முருகபாரதி ,செ..அனுராதா , சு முனைவர் .நாகவள்ளி , சோ. வனசா ஆகியோர் கவிதை பாடினார்கள் . 

கி. கோ.குறளடியான் அவர்களின் 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொன்னாடைப் போர்த்தி" தமிழரின் தொன்மை "நூல் வழங்கி வாழ்த்தினார்கள் .

கவிஞர்கள் பாடிய கவிதைகளில் சிறந்த மூன்று கவிதை வாசித்த கவிஞர்கள் விருது பெற்றனர் முனைவர் வரதராசன் அவர்களின் நூல் பரிசாக வழங்கப்பட்டன .. . மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர் ,மறைந்தும் மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில் அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் விருதுகள் வழங்கி நன்றி கூறினார்.

முன்னாள மாமன்ற உறுப்பினர் விசய  ராசன் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .














தரணி போற்றும் பொன்னாள்

கவிஞர் இரா. இரவி

***

அறுவடைத் திருநாளைக் கொண்டாடும் தமிழினம்

அகிலம் போற்றும் அற்புத நாள் பொங்கல் !

பழையன கழிதல் புதியன புகுதல் என்று

புதுப்பித்துக் கொள்ளும் நாளே போகிப் பொங்கல் !


புத்தாடை அணிந்து புத்தரிசிப் பொங்கலிட்டு

புத்தாண்டை தைத்திருநாளை தொடங்கும் பொங்கல் !

கதிரவனை இயற்கையை வணங்கிடும் நன்னாள்

கட்டி வெல்லம் நெய்இட்டு படைத்திடும் பொங்கல் !


விளைந்த கரும்பையும் வைத்து வணங்கும் நாள்

வீணான மூடநம்பிக்கைகள் இல்லாத திருநாள் !

மாட்டுக்கு விழா எடுக்கும் ஒரே இனம் தமிழினம்

மாட்டுப்பொங்கல் வைத்து மாட்டை வணங்கும் பொங்கல் !


கடற்கரைகளில் சந்தித்து மகிழும் காணும் பொங்கல்

காணமுடியாது கொண்டாடாத தமிழர்களை உலகில் !

வீரம்மிக்க ஜல்லிக்கட்டு நடத்தி மகிழும் நாட்கள்

வியந்து பார்க்கும் வீரத்தை உலகம் யாவும் !


உலகில் தோன்றிய முதலினமான தமிழினம் இன்று

உலகம் முழுவதும் பரந்து வாழ்வது உண்மை !

உலகின் முதல்மொழியான தமிழ்மொழியோ இன்று

ஒலிக்காத நாடு இவ்வுலகில் இல்லை உண்மை !


பண்பாடு பறைசாற்றும் பாரம்பரிய திருவிழா பொங்கல்

பண்டைத்தமிழர் காலம் தொட்டு நடந்துவரும் பொங்கல் !

கலைநிகழ்ச்சிகள் நடத்தி மகிழும் பொங்கல்

காணக் கண்கோடி வேண்டும் காண்போருக்கு. !

*************






















தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள்

புதுக்கவிதை 
கு.கி.கங்காதரன் 

வரிசைகட்டி வரும் விழாக்கள் 
வசந்தமாய் மாற்றும் தைமாதம் 
தைப்பொங்கலே அதன் விடிவெள்ளி
தமிழர்கள் மகிழ்ச்சியின் எதிரொளி 

வீரத்திற்குச் சவால் விடும் விழா
வேடிக்கை விளையாட்டுக்கான விழா
உழவுக்கு நன்றி சொல்லும் விழா
ஊரெங்கும் உற்சாகம் தரும் விழா

வர்ணங்கள் தீட்டிய புதுப்பானை நடுவிலே
வளையலாய்க் கொத்து மஞ்சள் கழுத்தினிலே
செங்கரும்பு நிமிர்ந்து நிற்கும் இருபறத்திலே 
சத்தமாக ஒலிக்கும் பொங்கலோ பொங்கலே 

 மகுடமாய் அமையும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி 
முரட்டுக் காளைகள் துல்லிடும்  எழுச்சி 
திமிலைப் பிடித்துத் தாவிடும் கிளர்ச்சி 
தெருவெங்கும் மக்கள் முகத்தில்   மகிழ்ச்சி 

பழைமைக்கு விடை கொடுக்கும் தினம் 
புதுமைகளை புன்னகையுடன் வரவேற்கும் தினம் 
வழிவழியாய் வந்திடும் பொங்கல் திருநாள் 
வந்தாரை வாழவைக்கும் தமிழனின் பொன்னாள் 

*******************

No comments:

Post a Comment