Pages

Friday 12 January 2024

31.12.23 கவியரங்கம் 18 தமிழ் உயிரத் தமிழன் உயர்வான்- பாரதி பிறந்தநாள் திருக்குறள் காட்டும் ஊக்கமும் உயர்வும்- வள்ளுவன் நோக்கில் களவியல்- கவிதை நூல்- வரதராசன்

 


 









31.12.2023 மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் - "தமிழ் உயிரத் தமிழன் உயர்வான் ", என்ற தலைப்பில் நடந்தது . 31.12.2023 . மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார் ,செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன், துணைச் செயலர் கு .கி .கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில் "தமிழ் உயிரத் தமிழன் உயர்வான் "," என்ற தலைப்பில், கவியரங்கம்.நடந்தது கவிஞர்கள் இரா. இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், மா .வீரபாகு ,கி. கோ.குறளடியான், ச .லிங்கம்மாள், மு .இதயத்துல்லா,        ( இளையாங்குடி ) , பெரி . கரு .சம .சமயக்கண்ணு, அஞ்சூரியா க .செயராமன் , ம .ஆறுமுகம் ,புலவர் மகா .முருகபாரதி ,செ..அனுராதா ,சு முனைவர் .நாகவள்ளி ஆகியோர் கவிதை பாடினார்கள் . 

புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். .. கவிஞர்கள் பாடிய கவிதைகளில் சிறந்த மூன்று கவிதை வாசித்த கவிஞர்கள் வீரபாகு,மகா .முருகபாரதி,தென்காசி ஆறுமுகம் , விருது பெற்றனர் . கவிதை போட்டியில் வென்ற கவிஞர் சமயக்கண்ணு முதல் பரிசும் ,கவிதாயினி செ..அனுராதா இரண்டாம் பரிசும் ,கவிஞர் பஞ்சாபிகேசன் மூன்றாம் பரிசும் பெற்றனர் . .முனைவர் வரதராசன் எழுதிய "வள்ளுவன் நோக்கில் களவியல் " கவிதை நூல் வெளியிடப்பட்டது. மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர் ,மறைந்தும் மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில் அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் நன்றி கூறினார்.

ப டங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.





தமிழ் உயரத் தமிழன் உயர்வான்!
-    கவிஞர் இரா. இரவி

தமிழ் உயர என்ன வழி சிந்திப்போம்
தமிழை உயர்த்துவது தமிழரின் கடமையாகும்!
எதைச் செய்தாலும் தமிழில் செய்வோம்
அர்ச்சனை ஆராதனை அனைத்தும் தமிழாகட்டும்!

தமிங்கில உரையாடலுக்கு முடிவு கட்டுவோம்
தமிழைத் தமிழாகவே பேசிப் பழகுவோம்!
உயர்நீதி மன்றங்களில் தமிழில் வழக்காடுவோம்
உயர்நீதி மன்றத்தில் தமிழே ஒலிக்க வேண்டும்!

வணிக நிறுவனங்களில் தமிழ் இடம் பெறட்டும்
விளம்பரப் பலகைகளில் தமிழே முதன்மையாகட்டும்!
உலகின் முதல்மொழி நம் தமிழ் என்பதை
உலகத் தமிழர்கள் யாவரும் உணர வேண்டும்!

முதல்மொழி தமிழை உருக்குலைய விடலாமா?
முத்தமிழை வளர்ப்பது தமிழரின் கடமையன்றோ?!
தேமதுரத் தமிழோசை இல்லங்களில் ஒலிக்கட்டும்
தன்னிகரில்லா தமிழைப் போற்றி வளர்த்திடுவோம்!

தமிழோடு பிறமொழி கலப்பதை நிறுத்திடுக
தமிழை தமிழாகவே பேசிப் பழகிடுவோம்!
தமிழ்வழிக் கல்வியை நாளும் வலியுறுத்துவோம்
தாய்மொழிக் கல்வியே குழந்தையை அறிவாளியாக்கும்!

தமிழ் படித்தால் இளமை இருக்கும் முதுமை வராது
தமிழை அனைவரும் விரும்பி படிக்க வைப்போம்!
உயரத் தமிழன் உயர்வான் உணர்வாய்
தமிழை உயர்த்த அணிவகுப்போம் வருவாய்!
********






















தமிழ் உயரத் தமிழன் உயர்வான்
                   புதுக்கவிதை 
             கு.கி.கங்காதரன் 

கற்பார் இல்லையேல் மொழி அழியும் 
காப்பார் இருப்பின் மொழி வளரும்  
இருப்போர் உணர்ந்தால் தமிழ் வாழும்  
ஏற்பார் நிறைந்தால் எழுச்சி பெறும்.

கல்வெட்டில் கற்கண்டுத் தமிழை ரசிக்கலாம்  
பனையேட்டில் பாட்டுத் தமிழைப் பார்க்கலாம் 
காகிதயேட்டில் அழகுத் தமிழைச் சுவைக்கலாம் 
கணினிக்கருவியில் கன்னித் தமிழைக் கேட்கலாம்

தங்கத்தைத் தேய்க்கத் தேய்க்க  ஒளி மிகும் 
தமிழைச் சுவைக்கச் சுவைக்க இனிமை கூடும்     
வெண்பனியைப் பார்க்கப் பார்க்க இதயம் குளிரும்   
வண்டமிழைக் கேட்கக் கேட்க மெய் சிலிர்க்கும்  

நீராய் தாகத்தைத் தீர்ப்பவள் 
நிலமாய் பாரத்தைச் சுமப்பவள் 
நிலவாய்க் குளிர்ச்சியை தருபவள் 
நிலையாய் அன்பைச் சுரப்பவள் 

தமிழில் பிறமொழிகளின் கலப்பு 
தரமான செம்மொழியின் இழப்பு 
தூயதமிழுக்குக் காட்டும் சிறப்பு 
தரணியில் தமிழர்களுக்கு மதிப்பு 

வெவ்வேறு வடிவங்களில் தவழும் தமிழ் 
வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் தமிழ் 
அகில மொழிகளுக்கு அன்னையாகும் தமிழ் 
உலகத் தமிழர்களுக்கு அடையாளமாகும் தமிழ் 
**********************************



மாமதுரைக் கவிஞர் பேரவை, மதுரை  'திருக்குறள் காட்டும் ஊக்கமும் உயர்வும்'  என்ற தலைப்பில் நடத்தியக் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு தங்களது பாத்திறன் கொண்ட கவிதைகளை அனுப்பிய அனைத்துக் கவிஞர்களுக்கும் வணக்கம். இந்தக் கவிதைப் போட்டியில் மூன்று சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு  விருது பெறும் மூன்று கவிஞர்கள் பின்வருமாறு: 

1. கவிஞர் சமயக்கண்ணு - மதுரை 
2. கவிதாயினி செ. அனுராதா - மதுரை 
3. கவிஞர் பஞ்சாபிகேசன் - அரியலூர் 















********

No comments:

Post a Comment