Pages

Showing posts with label 'மனசு' பலவிதம் - கவிதை மதுரை கங்காதரன். Show all posts
Showing posts with label 'மனசு' பலவிதம் - கவிதை மதுரை கங்காதரன். Show all posts

Monday, 16 July 2012

'மனசு' பலவிதம் - கவிதை மதுரை கங்காதரன்

'மனசு' பலவிதம் - கவிதை 
மதுரை கங்காதரன்  



பார்க்ககூடததை பார்க்க சொல்லும் 
செய்யக்கூடாததை செய்யச் சொல்லும் 
குறும்பு மனசு.

பார்க்கக் கூடாததை பார்க்காது 
செய்யக்கூடாததை செய்யாது 
முனிகளின் மனசு.

பார்த்ததை மிகை படுத்தி பார்க்கும் 
செய்ததை மிகை படுத்தி சொல்லும் 
கவிஞன் மனசு.

பார்க்கின்றதை மட்டும் பார்க்கும் 
செய்ததை மட்டும் சொல்லும் 
உண்மை மனசு.

பார்த்தவுடன் பாசப்படும் 
பலன் பார்க்காது உதவி செய்யும் 
நல்ல மனசு.

பார்த்ததை சொல்லாது 
செய்ததை மறைக்கும் 
ஏமாற்று மனசு. 

பார்த்ததில் சந்தேகப்படும் 
செய்ய வேண்டியதை தடுக்கும் 
கயவன் மனசு.


பார்த்ததில் வித்தியாசம் பார்க்காது 
செய்வதில் பிரிவு பார்க்காது 
சேவை மனசு.

பார்க்கும்போது பரிதாபப்படும் 
செய்வதில் நிம்மதி படும் 
இரக்க மனசு.



பார்க்கச் சொல்லாமல் பார்த்துக் கொள்ளும் 
சொல்லாமல் செய்யும் 
கடமை மனசு.   


பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டேயிருக்கலாம்    
செய்ய செய்ய நன்மை கிடைக்கும் 
தெய்வ மனசு.