Pages

Showing posts with label கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ்எழுத்தால். Show all posts
Showing posts with label கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ்எழுத்தால். Show all posts

Saturday, 20 February 2016

கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ்எழுத்தால்...

தலைப்பு:
கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ்எழுத்தால்
இற்றைக் கெழுத்தார் எனின்.
                  புதுக்கவிதை
              மதுரை கங்காதரன்

             தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ் மொழி மூத்த மொழியாயினும்
தமிழ் மொழி செம்மொழியாயினும்
தமிழ் மொழியை தனித்தமிழாய் பேச
தமிழ்த்தாயே துணை நிற்பாயாக !

கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ்எழுத்தால்
இற்றைக் கெழுத்தார் எனின்.

தமிழ்மண்ணில் பிறந்து வான்புகழ் எட்ட
தமிழ்மொழி தழைக்க தரணி சிறக்க
தனித்தமிழால் திருக்குறள் படைத்த
திருவள்ளுவர் பெருமையை போற்றுவோமே!

வான் மேகங்கள் மழை தராமல் இருப்பின்
மண்ணிற்கு என்ன பயன்?
தமிழ் கற்றோர் தனித்தமிழ் பேசாமல் இருப்பின்
தமிழ்மொழியால் என்ன பயன்?

மூப்பானால் மறதி வருவது இயற்கை
மூத்த தமிழை மறப்பது நியாயமா?
தமிழனே, தமிழை நீ மறந்தால்
தமிழ்மொழி அழிவது நிச்சயமே?

இக்கரைக்கு அக்கரைப் செழிப்பாய் தெரியலாம்
இக்கரை மொழிக்கு அக்கரை மொழி ஈடாகுமா?
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கலாமா?
ஏற்றமிகு செந்தமிழை சிதைக்கவிடலாமா?

சீறும் சிங்கத்தை சிறையில் அடைக்கலாமா?
சிறகு முளைத்திட்ட குயிலை கூண்டில் அடைக்கலாமா?
சீறிப்பாயும் சிறுத்தையின் கால்களை கட்டலாமா?
சீர்மிக்க செம்மொழியின் பெருமையை அழிக்கலாமா?

உணர்வுகளைக் கொட்ட தமிழ் எழுத்தில் எழுது
ஊக்கம் கிடைக்க தமிழ் மொழி பேசு
உள்ளம் நிறைவு பெற தமிழ் மொழி பரப்பு
உவகை பொங்க தமிழ் மொழி காத்திடு

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$