Pages

Showing posts with label கைத்தடி - புதுக்கவிதை. Show all posts
Showing posts with label கைத்தடி - புதுக்கவிதை. Show all posts

Wednesday, 7 August 2019

கைத்தடி - புதுக்கவிதை


                         கைத்தடி 
         புதுக்கவிதை 
      மதுரை கங்காதரன் 
முதுமைக்கு நட்பாகும் கைத்தடி
மனிதர்களாய் நடமாடும் கைத்தடி
பல்லுருவில் உதவிடும் கைத்தடி 
பலப்பலன்கள் தந்திடும் கைத்தடி  (1)

உதவிடும் பண்புக்குக் கைத்தடி  
ஊருக்கு வழிகாட்டும் கைத்தடி
ஊன்றுகோலாய் உதவிடும் கைத்தடி
உறுதிக்கு வித்தாகும் கைத்தடி  (2)
                                                                                                
நிம்மதிக்கு உறைவிடமாய் கைத்தடி 
நிழலாய்த் தொடந்திடும் கைத்தடி 
அன்புள்ளமாய் இருந்திடும் கைத்தடி
பிரதிபலனை எதிர்பாராத கைத்தடி (3) 

எழுத்துக்கு மொழியே கைத்தடி 
மொழிக்கு இனமே கைத்தடி 
இனத்திற்கு நாடே கைத்தடி 
நாட்டிற்கு உலகே கைத்தடி (4)

மரத்திற்கு வேர்  கைத்தடி 
வேருக்கு மண் கைத்தடி
மண்ணுக்கு மழையே கைத்தடி 
மழைக்கு வானமே கைத்தடி (5)

மனிதனுக்கு இயற்கையே கைத்தடி
இயற்கைக்கு இறைவனே கைத்தடி 
ஆணுக்குப் பெண்ணே கைத்தடி 
பெண்ணிற்கு குடும்பமே கைத்தடி (6)  

அன்புக்கு காதலே கைத்தடி 
காதலுக்கு கல்யாணமே கைத்தடி 
கல்யாணத்திற்கு குழந்தைகளே கைத்தடி
குழந்தைகளுக்குப் பரம்பரையே கைத்தடி (7) 

குடும்பத்திற்கு உறவே கைத்தடி
உறவுகளுக்கு நட்பே கைத்தடி
உணவுக்கு உடலே கைத்தடி
உடலுக்கு உயிரே கைத்தடி (8)

வாழ்க்கைக்குக் கல்வியே கைத்தடி 
கல்விக்குச் சிந்தையே கைத்தடி 
சிந்தைக்குச் செயலே கைத்தடி 
செயலுக்கு நன்மையே கைத்தடி (9) 
***************