Pages

Showing posts with label சம்பாதிக்க வழியா இல்லை உலகில் ? - MANY WAYS IS THERE TO EARN ! PUTHU KAVITHAI புதுக்கவிதை. Show all posts
Showing posts with label சம்பாதிக்க வழியா இல்லை உலகில் ? - MANY WAYS IS THERE TO EARN ! PUTHU KAVITHAI புதுக்கவிதை. Show all posts

Tuesday, 28 May 2013

சம்பாதிக்க வழியா இல்லை உலகில் ? - MANY WAYS IS THERE TO EARN ! PUTHU KAVITHAI புதுக்கவிதை

சம்பாதிக்க வழியா இல்லை உலகில் ? 
MANY WAYS IS THERE TO EARN MONEY !
PUTHU KAVITHAI
புதுக்கவிதை




மனிதனே !
ஆற்றலின் மொத்த உருவம் நீ
அனைத்து சக்தி உள்ளவன் நீ
அறிவின் பொக்கிஷம் நீ
திறமைகளின் பிறப்பிடம் நீ.



மனிதா ! நீயோ
சம்பாதிக்க வழியைத் தேடி அலைகிறாய்
சம்பாதித்ததை இழந்துவிட்டு முழிக்கிறாய்
சம்பாதிக்க கண்ணுக்குத் தெரியும் வழியில் ஓடுகிறாய்
சம்பாதித்ததை என்ன செய்வதறியாமல் திணறுகிறாய்
சம்பாதிக்க நினைக்காமல் சோம்பேறியாக இருக்கிறாய்.

நீ நினைத்தால் உன்னால்
நன்றாக கல்வி கற்றுத் தேற முடியும்.
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
அந்த கல்வியினால் நல்ல வேலையில் அமரமுடியும்
கை நிறைய சம்பாதிக்க முடியும்.

நீ நினைத்தால் உன்னால்
நன்றாக பாடல்களைப் பாட முடியும்
நீ நல்ல பாடகனாக மாற முடியும்
பணமும் புகழும் சம்பாதிக்க முடியும். 




நீ நினைத்தால் உன்னால்
பல தொழில் நுணுக்கங்களை பயில முடியும்
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
பயனுள்ள தொழில் கருவிகளைத் தர முடியும் 
பல இலட்சங்களை சம்பாதிக்க முடியும்.

நீ நினைத்தால் உன்னால்
கதை கட்டுரை கவிதைகளை படைக்க முடியும்.
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
எழுத்துலகில் முத்திரை படைக்க முடியும்
பேரும் பெருமையும் சம்பாதிக்க முடியும்.     

நீ நினைத்தால் உன்னால்
நன்றாக பேச முடியும்.   
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள இயலும்.
சிறந்த 'அரசியல் தலைவன்' பேரை சம்பாதிக்க முடியும்.



நீ நினைத்தால் உன்னால்
பல பொறியியல் நுட்பத்தைக் கற்க முடியும் 
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
பயனுள்ள தொழில் கருவிகளைத் தர முடியும்
பல கோடிகளை சம்பாதிக்க முடியும்.

நீ நினைத்தால் உன்னால்
கணினி அறிவியலில் சாதனை செய்ய முடியும் 
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
கணினி கொண்டு உலகை வலம் வர முடியும்.
லட்சம் கோடிகளை சம்பாதிக்க முடியும்.

நீ நினைத்தால் உன்னால்
64 கலைகளை கற்றுத் தேற முடியும் 
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
சின்ன பெரிய திரைகளில் கலக்க முடியும் 
பல ஆயிரம் ரசிகர்களை சம்பாதிக்க முடியும்.

நீ நினைத்தால் உன்னால்
கவி பாடல்களை கொடுக்க முடியும் 
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
காலத்தால் அழியாத பாடல்களை படைக்க முடியும் 
கை நிறைய பணம் சம்பாதிக்க முடியும்.



நீ நினைத்தால் உன்னால்
நாட்டிய இசையினை தெளிவாக பயில முடியும் 
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
மக்களை தலையாட்டி ரசிக்க வைக்க முடியும்.
'இசைத் தலைவன்' பெயரை சம்பாதிக்க முடியும். 

நீ நினைத்தால் உன்னால்
நல்ல தொண்டுகளில் ஈடுபட முடியும் 
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
நலிந்த மக்களுக்கு பல உதவிகள் செய்ய முடியும் 
'மக்கள் தொண்டன்' பெயரை சம்பாதிக்க முடியும். 

நீ நினைத்தால் உன்னால்
அறிவு வழங்கும் ஆசானாக திகழ முடியும் 
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
இளைஞர்களுக்கு ஏணியாக இருக்க முடியும் 
'நல்ல ஆசிரியர்' பெயரை சம்பாதிக்க முடியும் 

நீ நினைத்தால் உன்னால்
துன்பக்கடலில் அன்புத் தோணியாக இருக்க முடியும் 
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
துன்பப்படும் இதயங்களை கரை சேர்க்க முடியும் 
'நல்ல இதய மனிதன்' பெயரை சம்பாதிக்க முடியும்.

நீ நினைத்தால் உன்னால்
தீவிரவாதம் ஒழிக்கும் காவலனாக திகழ முடியும் 
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
எதிரிகளை ஒழிக்கும் வீரனாக விளங்க முடியும் 
'வீர மகன்' புகழை சம்பாதிக்க முடியும். 



நீ நினைத்தால் உன்னால்
நன்றாக விளையாட முடியும் 
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
விளையாட்டில் பல சாதனைகளை செய்ய முடியும் 
'சிறந்த விளையாட்டு வீரன்' சம்பாதிக்க முடியும்.

நீ நினைத்தால் உன்னால்
அரசியலில் நுழைந்துவிட முடியும் 
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க முடியும் 
'மக்கள் சேவகன்' பெயரை சம்பாதிக்க முடியும்.

நீ நினைத்தால் உன்னால்
அரசியல் தலைவனாக விளங்க முடியும் 
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
ஊழல் கருப்புப்பணம் ஒழிக்க முடியும் 
'மக்கள் தலைவன்' பெயரை சம்பாதிக்க முடியும்.

நீ நினைத்தால் உன்னால்
பல தொழில்களை கற்றுக்கொள்ள முடியும் 
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
தொழில் அதிபராக வர முடியும் 
'பணக்காரன்' பெயரை சம்பாதிக்க முடியும்.



நீ நினைத்தால் உன்னால்
நவீன விவசாயம் செய்ய முடியும் 
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
உணவுப் பஞ்சம் போக்க முடியும் 
'அமுத சுரபி' பெயரை சம்பாதிக்க முடியும். 

நீ நினைத்தால் உன்னால்
தற்கால மருத்துவம் படிக்க முடியும் 
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
மக்களுக்கு நல்ல ஆரோக்கியம் தரமுடியும் 
'மருத்துவ நிபுணர்' பெயரை சம்பாதிக்க முடியும் 



நீ நினைத்தால் உன்னால்
புதுப்புது சிந்தனைகளை சிந்திக்க முடியும் 
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
புதுமைகள் பலவற்றை புகுத்த முடியும் 
பல செல்வங்களை சம்பாதிக்க முடியும்.

மனிதா! மலை போலுள்ளது உனது ஆற்றல் 
அதை எறும்பு உருவம் கொண்டு பார்க்கிறாய் 
அதனால் உனக்கு எறும்பளவே கிடைக்கிறது 
பறவை போல மேலே பறந்து பார் 
மலையே ஒரு எறும்பாய் தெரியும்.


எதுவும் இல்லாவிட்டால் என்ன 
எல்லாமே இழந்துவிட்டாலும் என்ன 
'தற்கொலை' ஒன்றே எதற்கும் தீர்வாகாது 
தன்னம்பிக்கை ஒன்றே எதற்கும் சாதிக்க வல்லது 
தளராத முயற்சியோ உன்னை பலம் தருவது 

உன்னைச் சுற்றி எவ்வளவு எதிரிகள் இருந்தால் என்ன 
உன் கண் முன் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தால் என்ன 
நீ நினைத்தால் உன்னால்
நீ விடாப்பிடியாக முயற்சித்தால்
அனைத்தும் தூள் தூளாக்கி விட முடியும்.

அதோ உயரத்தில் இருப்பவர்கள் எல்லாம் தாண்டி வந்தவர்கள் 
ஏதாவது காயம் தெரிகின்றதா 
எப்போதாவது புலம்பியதை கேட்டதுண்டா 
'முடியாது' என்று பின் வாங்கியதுண்டா 
உன்னாலும் முடியும் 
பலவற்றை சம்பாதிக்க முடியும்.

முடியும் !

முடியும் என்பது உனது எண்ணமாக இருக்க வேண்டும்.

முடித்து காட்டுவது உனது லட்சியமாக இருக்க வேண்டும். 



நன்றி , வணக்கம்.