Pages

Showing posts with label திருச்சி. Show all posts
Showing posts with label திருச்சி. Show all posts

Monday, 18 December 2017

17.12.17 மழை அழகு, கவியரங்கம், தூய வளனார் கல்லூரி, திருச்சி



அனைத்துக் கவிஞர்கள் படைத்த கவிதைகள் அடங்கிய புத்தக வெளியீடு 
இடம் : கவியரங்கம், தூய வளனார் கல்லூரி,  திருச்சி  





எனது கவிதை இதோ ....

      தமிழ்த்தாய் வாழ்த்து

நற்றமிழில் நயமாய் உரைக்க
நன்றியை கவியால் போற்ற
சிரம் தாழ்த்தித் தமிழ்த்தாயை
கரம் கூப்பி வணங்குகிறேன்.

          மழை அழகு
தமிழும் மழையும் வளமை
தவழும் அழகும் இளமை
மொழியும் பொழிவும் இனிமை
மணமும் குணமும் புதுமை.

மழைத்துளிக்கு வேலி இல்லை
மழைச்சாரலுக்கு இன்பமே எல்லை
தமிழ்மொழிக்கு அழிவே இல்லை 
தமிழ்புகழுக்கு வானமே எல்லை.

மழை மேகம் வானுக்கு அழகு
மண் வாசம் மழைக்கு அழகு
தமிழ் மொழி மொழிகளுள் அழகு
தமிழ் சுவை கவிகளுக்கு அழகு.

மிதமான மழை மனதிற்கு அழகு
இதமானத் தமிழ் கேட்பதற்கு அழகு
எழுவர்ண வானவில் விண்ணுக்கு அழகு
ஏழுலகுக்கும் முத்தமிழ் அழகு

மழை பொழிந்தால் வேர் நனையும்
வேர் நனைந்தால் பயிர் செழிக்கும்
பயிர் செழித்தால் ஊர் வாழும்
ஊர் வாழ்ந்தால் உலகம் உயரும்.

         நன்றி, வணக்கம்.

இந்த நிகழ்ச்சியின்போது எடுத்த மின்படங்கள் இதோ..


























































































வணக்கம்...