Pages

Showing posts with label புதிய தேசிய கீதம் - புதுக்கவிதை. Show all posts
Showing posts with label புதிய தேசிய கீதம் - புதுக்கவிதை. Show all posts

Friday, 6 January 2017

புதிய தேசிய கீதம் - புதுக்கவிதை


     புதிய தேசிய கீதம்
        புதுக்கவிதை
     மதுரை கங்காதரன்

மக்கள் நலம் காக்க வேண்டும்
சாதி மதம் மதிக்க வேண்டும்
லஞ்சம் ஊழல் ஒழிய வேண்டும்
விலைவாசியை குறைக்க வேண்டும்.

தொழில் சேவை பெருக்க வேண்டும்
வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும்
ஏழைகள் உலகம் சிறக்க வேண்டும்
எளிய மக்கள் பலம் பெற வேண்டும்

நாட்டு நதிகள் இணைக்க வேண்டும்
விவசாய நிலம் செழிக்க வேண்டும்
உணவு உற்பத்தி அதிகரிக்க வேண்டும்
பசி பஞ்சம் நீக்கிட வேண்டும்

வரி ஏய்ப்பைத் தடுத்திட வேண்டும்
கறுப்புப் பணத்தை பிடித்திட வேண்டும்
தீவிரவாதம் அகற்றிட வேண்டும்
தேச ஒற்றுமையை வளர்த்திட வேண்டும்  

நேர்மை நெஞ்சில் நின்றிட வேண்டும்
பெண்விளக்கினை ஏற்றிட வேண்டும்
உண்மையை சப்தமாய் உரைத்திட வேண்டும்
உலக உயிர்களை மகிழ்வித்திட வேண்டும்.

வாழ்க வாழ்க இந்திய மக்கள்
பல்லாண்டுப் பல்லாண்டு.
*****************************************