Pages

Showing posts with label மகளிர் தின சிறப்பு புதுக்கவிதை WOMEN' DAY SPECIAL 8TH MARCH. Show all posts
Showing posts with label மகளிர் தின சிறப்பு புதுக்கவிதை WOMEN' DAY SPECIAL 8TH MARCH. Show all posts

Saturday, 8 March 2014

மகளிர் தின சிறப்பு புதுக்கவிதை - WOMEN S DAY SPECIAL 8TH MARCH

மகளிர் தின சிறப்பு புதுக்கவிதை WOMEN' DAY SPECIAL  


அனைவருக்கு மங்கையர் தின வாழ்த்துக்கள் 
WISH YOU A HAPPY WOMEN'S DAY  
8 ம் நாள் மார்ச் மாதம் - 8TH MARCH  


மதுரை கங்காதரன் 

                     

இறைவன் இந்த சொர்க்க பூமியைப் படைத்திருப்பது விந்தை 
அதில் பெண்ணை சொர்கமாக படைத்திருப்பது அற்புதம் 

ஆண்களுக்கு ஜோடியாய் படைக்கப் பெற்றவள் 
உறவுக்குப் பாலமாய் அமைக்கப் பெற்றவள் 

மனிதகுலத்தில் மங்கையர்கள் மதிப்பில்லா பொக்கிஷங்கள்  
ஆனந்தங்களை மறைத்து வைத்திருக்கும் புதையல்கள் 

                         

அள்ள அள்ள குறையாமல் மகிழ்ச்சி தரும் அமுத சுரபிகள் 
என்றும் வற்றாத அமுது கொடுக்கும் காமதேனு பசுக்கள் 

கரையாத செல்வங்களைத் தரும் அட்சய பாத்திரங்கள் 
மனிதர்களுக்கு ஆருயிர் தரும் பூலோக பிரம்மாக்கள்  

இனிமையாய் பேசுகின்ற அழகு பதுமைகள் 
அன்பைக் கொடுக்கும் நடமாடும் தெய்வங்கள் 

தன் முகவரி மறைத்து செங்குருதி சிந்தி உலகுக்கு   
பலரின் முகவரி தந்த தியாக ஜீவன்கள் 

                            

பல மாமேதைகள் சக்ரவர்த்திகள் ஆன்மீக குருக்கள் 
அறிஞர்கள் கலைஞர்கள் கவிஞர்கள் மக்கள் சேவர்கள் 

தனது பத்து மாத கருப்பையில் பொத்தி வளர்த்தவள் 
மனிதர்கள் மகிழ தன் வாழ்வினை தாயாக அர்ப்பணித்தவள்   

தான் பெற்ற பேறுகளை உறவுகளுக்கு அள்ளித் தருபவள் 
பத்து மாதம் குழந்தையை சுமக்கும் மனித சுமை தாங்கிகள்  

அன்று மென்மை என்பதால் அடிமையாக்கியவர்கள்        
இன்று  ஆட்சி அதிகாரம் பல கொடுத்திருக்கிறார்கள்  

பெண்ணாய்  பிறப்பது பெருமை என்று பறை சாற்றுகின்றாள் 
வாழ்க்கை வானத்தில் சிறகை விரித்து சுதந்திரமாய் பறக்கின்றாள் 

                                  

பாரதி 'புதுமைப் பெண்'ணாய் படைத்து அழகு பார்த்தார்  
உலகோ இன்று 'மங்கையர் தின'மென்று  கொண்டாடுகிறது 

முட்களையும் பேசும் படி செய்கிறது வண்ண ரோஜாக்கள்   
நார்களையும் பேசும் படி செய்கிறது அழகு பூக்கள்

பாலைவனத்தையும் பேசும்படி செய்கிறது அங்குள்ள சோலைகள் 
மனிதர்களையும் சிறப்பாக பேசும்படி செய்வர்கள் மங்கையர்கள்   

பெற்ற மக்களை மகராசியாய் காப்பவள் மங்கையைகள் 
வாழுகின்ற வாழ்க்கைக்கு அர்த்தமுள்ளதாய் மாற்றுபவர்கள்  

                                           

கவிஞர்களுக்கு காதல் கற்பனைகளை கடனாய் கொடுப்பவர்கள்  
வெற்றித் திலகமிட்டு வாழ்க்கைப் போருக்கு அனுப்புகிறவர்கள்  

அவைகளைப் பார்க்கும் விழிகள் மோட்சம் அடைகின்றது 
பேசும் மொழிகளைக் கேட்கும் செவிகள் இன்பம் பெறுகின்றது 

சூடிய பூக்களை முகரும்போது மூக்கும் புத்துணர்ச்சி பெறுகின்றது 
வாய் உதட்டில் உதிர்ந்த முத்தங்கள் சிலிர்ப்பை தருகின்றது 

கைகளை இணைக்கும் போது ஆனந்தத்தை தருகின்றது  
அன்ன நடைகள் நடக்கும் கால்கள் மேன்மை அடைகின்றது
                                
மின்னல் இடை தொடும் கைகள் மென்மை பெறுகின்றது 
மங்கை அவள் கனவில் வரும்போது சொர்க்கமாய் இருக்கின்றது 

உறவை கலந்து விடும் போது உள்ளங்கள் உறுதி பெறுகின்றது 
மங்கை அவள் அருகே இருக்கும்போது இருளும் இனிக்கின்றது 

இதயங்களைத் திருடும் வித்தை அவளிடமுண்டு 
இன்பங்களைத் தரும் வழிகள் அவளிடம் பல உண்டு 

மங்கையின் பெருமைகளை சரித்திரம் சொல்லும் 
அவளின் சாதனைகளை புதிய சரித்திரமாய் இனி எழுதும் 

மங்கையர்களை உள்ளத்தால் வணங்குவோம் 
மங்கையர்களைக் கண்டால் மரியாதை செய்வோம் 

'மங்கையர் தினம்' நன்கு கொண்டாட வாழ்த்துக்கள் 
இன்றைய தினம் போல் எந்நாளும் இருக்க வாழ்த்துக்கள் 



வாழ்க மங்கையர்கள் !


ஓங்குக மங்கையர்களின் வாழ்வு !!


நனவாகும் மங்கையர்களின் கனவுகள் !!! 

))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((