Pages

Wednesday, 1 August 2012

ஆஸ்தியும் ஆண்டவனும் - அனுபவ வாழ்கை பொன் வரிகள்

 அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்

ஆஸ்தியும் ஆண்டவனும் 

ஆஸ்தியை துறந்தவனுக்கும் , ஆஸ்தி இல்லாதவனுக்கும்கூட 
ஆண்டவன் துணையாய்  இருந்தான்  
அது அந்த காலம் 

ஆஸ்திக்காகவும், ஆஸ்தியை தக்க வைப்பதற்கு 
ஆண்டவனின் துணையை தேடுகிறான் 
இது இந்த  காலம்.

*******************************************************************************
இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

முன்னேற்றமே ஒருவனின் வாழ்கைக்கு முட்டுக்கட்டை :- ANUPAVA PON VARIKAL

அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்

முன்னேற்றமே ஒருவனின் வாழ்கைக்கு முட்டுக்கட்டை :

அதாவது ஒருவன் முயற்சி செய்து வெற்றி பெற்றுவிட்டால் உடனே அவனுக்கு தலைகணம் அல்லது திருப்தி  வந்து விடுகிறது. மேலும் அவனுக்கு   அந்த வெற்றியே   போதும் என்று எண்ணி மேற்கொண்டு பல வெற்றிக்கு  முயற்சி செய்யாமல் இருந்துவிடுகிறான் .

அப்படி முயற்சி செய்தாலும் சென்ற வெற்றி பெற்றுவிட்டோமே என்று    அலட்சியமாய் முயற்சி செய்து கடைசியில் தோல்வி அடைகிறான் .

அகவே வெற்றியை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ள வேண்டு மென்றால்     இடைவிடாது முயற்சியும் , பயிற்சியும் தேவை .

முன்னேற்றம என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல. அது முதல் படி. 

*******************************************************************************

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

யார் உண்மையான மனிதன் ? - அனுபவ வாழ்கை பொன் வரிகள் -

 அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்

யார் உண்மையான மனிதன் ?

மூச்சு விடுபவர்கள் எல்லாம் உண்மையான மனிதர்கள் அல்ல. 

முழு முயற்சியுடன் முயன்று இந்த சமுதாயத்திற்கு பல நன்மைகள் தரும் நல்ல காரியங்களை செய்து மூச்சு உள்ளவரை அவன் பேச்சு இருக்கும்படி வாழ்பவனே உண்மையான மனிதன்.

*******************************************************************************

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

முயற்ச்சிக்கும்போது பயம் வேண்டவே வேண்டாம் - அனுபவ வாழ்கை பொன் வரிகள்

அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்

முயற்ச்சிக்கும்போது பயம் வேண்டவே வேண்டாம் 

ஒருவனின் முன்னேற்றத்துக்கு பெரும் தடையாய் இருப்பது 'பயம்' தான். புலி அடித்து இறந்தவர்களை காட்டிலும் கிலி பிடித்து இறந்தவர்களே அதிகம் பேர். புதிதாக முயச்சி செய்வது எதனால்? பொதுவாக வாழ்க்கையில் கஷ்டத்தை போக்கி , முன்னேற்றம் அடைவதற்கும் , வசதிகளை பெருக்குவதக்கும், நிம்மதி, மகிழ்ச்சிக்காகவும், திருப்திக்காகவும் மட்டுமே. 

அப்படி முயற்சி செய்யும் போது , உனது முயற்ச்சியின் செயலைத்தாண்டி  மற்றவர்கள் என்ன சொல்வார்களோ , என்ன நினைப்பார்களோ, என்ன பேசுவார்களோ? என்கிற பயம் தான் மேலோங்கி நிற்கும்! அதாவது 

'ஒருவேளை தோற்றுவிட்டால் கேலி, கிண்டல், செய்வார்களோ?'
'அவமானப்படுத்தி விடுவார்களோ?'
'தோற்றுவிட்டால் எப்படி தலை வெளியே காட்டுவது '
'நம் மதிப்பு குறைத்து அல்லது கெட்டுவிடுமோ?'

மேற்கூறியதற்கு பயந்து முயச்சியை கைவிட்டு மீண்டும் வழக்கம் போல் கஷ்டத்திலேயே  வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். இதற்கு காரணம் அவர்கள் முயற்சி செய்யும் காரியத்தை தெளிவாக தெரிந்து கொள்ளாமல் இருப்பதே.

பயிற்சி வகுப்பில் ஒருநாள் 'பயம்' பற்றிய விவாதம் வந்தது. அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தை சொன்னேன். பயம் பற்றிய ஆராய்ச்சி  செய்வதற்கு சிறைசாலை தூக்கு தண்டனை பெற்ற மூன்று கைதிகளை தேர்தேடுத்தனர் . அவர்களின் சம்மதத்துடன் விஷ பாம்பு கடித்து கொல்லப்போவதாக தெரிவித்தனர். அவர்களின் கண்களை கட்டினார்கள். மூன்று விஷ பாம்பு கொண்டு கொத்தச் செய்தனர். என்ன ஆச்சர்யம் முதல் இருவர் இறந்தனர். ஒருவர் உயிருடன் இருந்தார். 
"எப்படி நீங்கள் சாகவில்லை " அதிகாரி கேட்டார்.
அந்த கைதியோ "எப்படியும் சாகத்தான் போகிறோம். அப்படி இருக்கும் போது ஏன் பயப்படவேண்டும். என் கடைசி மூச்சு இருக்கும் வரை உயிர் வாழ்ந்தே தீருவேன் என்கிற தைரியத்தை மட்டும் நாள் இழக்கவில்லை  " என்றார்.

அதிக்கரி சொன்னார்." உங்கள் மூவரையும் கொத்திய பாம்புகளுக்கு உண்மையில் விஷம் இல்லை. பாம்பு கொத்தினால் இறந்து விடுவோம் என்கிற கற்பனையினாலும் , பயத்தாலும் தான் உயிரை விட்டனர். உன் தன்னன்பிக்கை தான் உயிர் பிழைக்கவைத்தது. "

ஆகா பயம் கூடவே கூடாது. தன்னம்பிக்கையுடன் போராடு வெற்றி நிச்சயம்.    

******************************************************

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

உன்னுள் இருக்கும் புதையல் - அனுபவ வாழ்கை பொன் வரிகள் -

 அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்

உன்னுள் இருக்கும் புதையல் 

நான் 'தன்னம்பிக்கை ' பயிற்சி நடத்தி கொண்டி-ருக்கும் பொழுது என்னிடம் உள்ள 5 , 10, 20, 50, 100, 500 மற்றும் 1000 ரூபாய் ஒவ்வொன்றை கீழே போட்டுவிட்டு ஒருவரை அழைத்து இவ்வாறு கூறினேன். "கீழே கிடக்கும் ரூபாய் நோட்டில் எந்த நோட்டை எடுப்பாய் ? ஏன் எடுக்கிறாய் ?" என்றேன். அதற்கு அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் 1000 ரூபாய் தான் எடுப்பேன், ஏனென்ன்றால் அதற்க்கு மதிப்பு அதிகம் என்றார்.

நான் "அவர் கூறிய பதிலுக்கு மறுப்பு யாரேனும் கூறப்போகிறீர்களா" என்றேன். மெளணம் நிலவியது.அதாவது அதை அனைவரும் ஒத்துக் கொண்டனர்.

மீண்டும் அவர்களிடத்தில்"இதேபோல் கீழே தங்கம், வைரம், தகரம், கூழாங்கற்கள், இரும்பு கிடக்கின்றது. அதில் எதை எடுப்பீர்கள் என்றதற்கு கோரோஸாக வைரம்,வைரம் என்று கத்தினார்கள் " நானோ 'சபாஷ்' என்றேன்.      

அதேபோல 

நம்முடைய மூளையிலும் வைர மூளை , தங்கமூளை , தகரமூளை , கூழாங்கல் மூளை,இரும்புமூளை போன்ற புதையல் இருக்கின்றது. அதை அறிவால் தேடி , முயற்சியால் தோண்டி , உழைப்பால் வெளியில் கொண்டுவந்தால் நீங்கள் சாதனையாளர்கள் தான். உங்களுக்குள் இருக்கும் புதையலை தோண்ட அரம்பமாகுங்கள். வெற்றி உங்களுக்குத்தான்.

******************************************************
இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                   அல்லது 

நன்று                          அல்லது 

பரவாயில்லை        அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

உண்மையும் - பொய்யும் -அனுபவ வாழ்கை பொன் வரிகள் -

 அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்

உண்மையும்  - பொய்யும்  

உண்மைக்கு என்றும் அழிவில்லை , எப்போதும் உயர்வு தரும் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் அதை பின்பற்றுபவர்கள் மிக மிகக்  குறைவு. பொய் அதற்க்கு நேர் எதிர்.

ஏன் இப்படி ? என்று ஆராய்ந்து பார்த்தோமானால் உண்மையின் உன்னதம் காலம் கடந்து உணர்த்துவதால் தான்.மேலும்  உண்மையை நிரூபிப்பதற்கு மிகவும் சிரமம் மேற்கொள்ள வேண்டும். ஆகவே உண்மையை பின்பற்றுபவர்கள் குறைவு. ஆனால் பொய்,புரட்டு உடனே பலன் தருகின்றது.இருந்தாலும் உண்மை என்றும் உண்மை தான். அதன் சிறப்பு தெய்வத்திற்கு இணையாய் மதிக்கப்படும் .     

******************************************************

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று               அல்லது 

நன்று                     அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

கடவுளும் கடமையும் - அனுபவ வாழ்கை பொன் வரிகள்

 அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்

கடவுளும் கடமையும் 

கடவுளின் மறுவுருவம் கடமை. கடமையை மறந்தவ, துறந்தவன் அல்லது தவிர்ப்பவர்களுக்கு கட்டாயம் கடவுளின் துணை கிட்டாது.

ஒருவன் குடும்பத்தின் (தாய்,தந்தை,மகன் மற்றும் மகள் ஆகியோர்களின் அவரவர்கள்) கடமைகள் சரிவர செய்தால் வீடு காக்கப்படும். வீட்டின் கடமைகள் சரிவர செய்தால் நாடு காக்கப்படும். நாட்டின் கடமைகள் சரிவர செய்தால் இந்த  உலகம் காக்கப்படும். இந்த உலகம் காக்கப்பட்டால்  தலைமுறைகள் காக்கப்படும்.ஆக கடமையின் மூலம் கடவுளை எளிதாக துணை கொள்ளாம்.    