Pages

Saturday, 1 September 2012

வீண் பயம் - விரையமாகும் வீரம் (தைரியம்) FEAR IS MAKING YOU A COWARD

அனுபவ பொன் வரிகள்

மதுரை கங்காதரன் 

வீண் பயம் ! விரையமாகும் வீரம் (தைரியம்)

FEAR IS MAKING YOU A COWARD 

சிறிய வயது குழந்தையின்  பக்கத்தில் கரப்பான் பூச்சியோ, பல்லியோ  வந்தால் அறிவு முதிர்ச்சி இல்லாமல்   இருந்தாலும்  அதைக் கண்டு பயப்படாது. தைரியமாக பயமில்லாமல் தொட ஓடும். ஏன்? பாம்பு வந்தால் கூட அதைக் கண்டு ஓடாது. கொழுந்துவிட்டு எரியும் சுடரை பிடிக்க ஆசைபடும். சில வேளைகளில் அடம்பிடிக்கும். நம்மையும் மீறி மிகச்சில வேளைகளில் தொட்டும் விடும். சூடு பட்டதும் அழும். பிறகு ஓய்ந்துவிடும்.  

ஆனால் பெரியவனாகும்போது எல்லாவற்றிக்கும் பயம். அந்த பயம் எங்கிருந்து தான் வந்தது? சிலவற்றை அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்கிறான். ஆனால் பலவற்றிக்கும் பலர் பயமுறுத்துவதன் பேரில்  காரணமில்லாமல் பயப்படுகிறனர். ஏன் தன்  நிழலைக்கண்டும் , இருட்டில் கயிற்றை பார்த்தும் பயத்தில் அலறி பித்து பிடித்தவர்கள்போல் ஆகிவிடுகின்றான் . அனுபவம் பயத்தை கொடுத்தாலும் அதை அவனுடைய அறிவைக் கொண்டு வெல்வதற்கான  துணிவை வரவிடாமல் தடுத்து விடுகின்றது. அதற்கு மூலகாரணம் மனிதருக்கு வெறும் பயம் காட்டுவது மட்டும் தான் தெரியுமே தவிர அதிலிருந்து தற்காத்துக் கொள்ள, அவற்றை எதிர் கொள்ள துணிச்சலை யாரும் கற்று கொடுப்பதில்லை. அதற்குன்டான அறிவையும் போதிப்பதில்லை. நாயைக்கண்டு பயம். கடலை கண்டு பயம். நீச்சல் குளத்தில் இறங்க பயம். இப்படி எது எடுத்தாலும் பயம் மாயம் தான்.

அதாவது பெரியவனான பிறகு அவனுக்கு அறிவு நிறைய இருந்தாலும் அந்த பயம் அவனை தைரியசாலியாகவிடாமல் வீரத்தை குழிதோண்டி புதைத்து விடுகின்றது. இருட்டை கண்டு அதிகம் பயப்படும்படியாக செய்துவிடுகின்றது. 

ஆகவே யாராவது எதையாவது சொல்லி உன்னை பயமுறுத்தினால் அதனை  கொஞ்சம் கூட மனதினில் எற்றிக்கொள்ளதே? தெளிவான சிந்தனை கொள். அறிவைக்கொண்டு துணிச்சலை வளர்க்க கற்றுக்கொள். 

இதில் என்ன விஷேசமேன்றால் ஒருவரின் பயம் மற்றவருக்கு பயமில்லை. எத்தனை பேர் பாம்பை கண்டு , நாயை கண்டு, பல்லி , கரப்பான் பூச்சியை கண்டு இன்னும் பல கண்டு பயபடாமல்  தைரியமாக இருக்கின்றனர். அவர்களுக்கு துணிச்சல் எங்கிருந்து வந்தது. அவர்கள் அறிவினால் துணிச்சலை வரவைத்து கொண்டு பயத்தை அறவே நீக்கி வீரத்தை வளர்த்துக் கொள்கின்றனர்.

பயத்தை ஒழி !

அதுதான் தைரியத்திற்கு வழி !

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

நீங்கள் ஏணியா ? அல்லது மலையா ? ARE YOU A LADDER OR A MOUNTAIN

அனுபவ பொன் வரிகள்

மதுரை கங்காதரன் 

நீங்கள் ஏணியா ? அல்லது மலையா ?

ARE YOU A LADDER OR A MOUNTAIN 

ஏணியை வேண்டியளவிற்கு உயர்த்திக் கொள்ளலாம். அதில் யார் வேண்டுமானாலும் எளிதில் ஏறி பயணம் செய்யலாம். எளிமையானதும் கூட. ஏணிகளின் படிகளே ஒரு வழிகாட்டியாக விளங்கும். அதன் அமைப்பு ஒரே சீராகவும்  முறையாகவும்  இருக்கும்.

ஆனால் உயர்ந்த மலை அப்படியில்லை. அதில் ஏறுவதற்கு சிறந்த பயிற்சி வேண்டும். கற்களும் முட்களும் இருப்பதால் ஏறுவது மிகவும் கடினம். சரியானபடி பாதை இல்லாமலும் இருக்கும். அதனால் மேற்கொண்டு வளரவும் முடியாது.

அதுபோல தன்னுடைய திறமை, அறிவு, முயற்சியினால் தன்னம்பிக்கை உடையோர்களின் தகுதியுள்ள பதவி உயர்வு ஒரு ஏணியைப் போலவாகும். அவர் அடைந்த பதவியில் வழிகாட்டுதல் இருக்கும். அவரால் பலரை ஊக்கப் படுத்தி தன நிலையினையோ அல்லது அதற்கு மேலோ எற்றிவிடமுடியும். தகுதியை வளர்த்துக் கொள்ளும் போது அவரது உயரம் ஏணி போல் உயர்த்திக் கொள்ளலாம். அவர்களின் வெற்றிபாதை சீராகவும் முறையாகவும் எளிமையாகவும் இருக்கும்.

தகுதியில்லாமல், திறமையில்லாமல் ஒருவன் உயரத்தில் இருப்பது மலையின் மேல் இருப்பதற்குச் சமம். அதனால் மற்றவர்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. பாதை சரியாக தெரியாததால் மற்றவர்களால் அவ்வளவு எளிதாக பின்பற்ற இயலாது. ஏற்கனவே தகுதி இல்லாதலால் அவர்களால் மேற்கொண்டு உயரமுடிவதில்லை.

நீங்கள் மற்றவர்களுக்கு முன்னேற உதவும் ஏணியா ?

அல்லது 

கரடு முரடான மலையா ?  

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

A SIMPLE WAY- CHANGE YOUR BIG PROBLEM TO SMALL - பெரிய பிரச்சனைகளை சிறியதாக்கும் வழி

அனுபவ பொன் வரிகள்

மதுரை கங்காதரன் 

பெரிய பிரச்சனைகளை சிறியதாக்கும் வழி -

A SIMPLE WAY- CHANGE YOUR BIG PROBLEM TO SMALL

நீங்கள் உங்கள் கையளவு உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கரையும் வரை கரையுங்கள். கரையாமல் சிறிதளவு உப்புமிருக்கும். அது பரவாயில்லை. பிறகு உங்கள் விரலால் ஒரு சொட்டு அந்த உப்புத் தண்ணீரை வாயில் வைத்துப் பாருங்கள். சுவை எப்படி இருக்கின்றது? அதிகமாகவே உப்பு கரிக்கும். இந்த நிலையில் உங்களால் அந்த டம்ளர் முழுவதுமுள்ள தண்ணீரை குடிக்க முடியுமா? முடியவே முடியாது ! அது தானே உங்கள் பதில். சரி ...

அதே அளவு உப்பை ஒரு குளத்தில் கரையுங்கள். உப்பு இருக்குமிடம் தெரியாமல் போகிறது. இப்போது குளத்தில் இருக்கும் தண்ணிரை ஒரு டம்ளருக்கு மேலும் குடிக்க உங்களால் முடியும். அதன் சுவை கூட இந்த உப்பால் மாறியிருக்காது.

அதுபோல பிரச்சனை என்பது உப்பு என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படி பிரச்சனைகளை எதிர் கொள்ளும்போது உங்களுடைய எண்ணங்களும் செயல்களும் குளம் போல விசாலமாக்கிக் கொண்டால் எவ்வளவு பெரிய  பிரச்சனைகள் கூட இருக்கிற இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். 

அதை விட்டுவிட்டு பிரச்சனை வரும்போது அதை டம்ளர் போல  குறுகிய மனப்பான்மையோடு எதிகொண்டால் மிகச் சிறிய பிரச்சினை கூட உங்களுக்கு பூதம் போல் நின்று பயமுறுத்தி கொண்டிருக்கும். அதை உங்களால் அவ்வளவு எளிதாக தீர்க்கமுடியாது.

இன்னொரு வகையில் சொல்லப் போனால் எந்த ஒரு சிறிய அல்லது பெரிய பிரச்சினை வந்தாலும் அதை உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தின் மேல் அக்கறை கொள்ளும் நபர்களிடம் குளத்து தண்ணீர் போல பகிர்துகொள்ள தவறாதீர்கள். அப்படி செய்யும் போது உங்கள் பிரச்சினை பல பகுதிகளாக பிரிக்கப்படும்போது பிரச்சினை சிறியதாகி  வெகுவிரைவில் சுலபமாக தீர்க்கப்பட்டு இருக்கின்ற இடம் தெரியாமல் போய்விடும் .

அதே பிரச்சினையை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் டம்ளர் உங்களுடனே வைத்துக்கொண்டால் அதுவே உங்களுடைய வாழ்க்கை முழுவதும் பரவி  பாரமாக மாறி உங்களது வளமையான சந்தோஷத்தையும் வாழ்கையும் பாழாக்கிவிடும்.

பிரச்சினையின் போது எண்ணங்களை விரிவுபடுத்துங்கள் !

நல்லோரிடம் பகிர்த்து கொள்ளுங்கள் !

அதுவே பிரச்சினையை தீர்க்கும் எளிய வழி  !

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

இலக்கை அடைய தேவையான வலிமைகள் - STRENGTHS NEED TO ACHIEVE YOUR GOAL

அனுபவ பொன் வரிகள்

மதுரை கங்காதரன் 

இலக்கை அடைய தேவையான வலிமைகள் -

STRENGTHS NEED TO ACHIEVE YOUR GOAL

முதலில் எந்த இலக்கை அடையவேண்டுமோ அதை பற்றிய தெளிவான அறிவை பெறவேண்டும். பிறகு இலக்கிற்கான  செயல்களின் வலிமைகள் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் எதிராளியின் வலிமைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்களிடத்தில் இருக்கும் வலிமையையும், உங்களுக்குத் துணையாக இருக்கும் வலிமைகளையும் நன்றாக ஆராய்ந்து செயல்பட்டால் உங்களது இலக்கை எளிதாக அடைத்து தொடர் வெற்றிபெறுவீர்.

இலக்கு + எதிராளி வலிமை = உங்கள் வலிமை + உங்களுக்கு உதவிடும் வலிமைகள்   

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

Friday, 31 August 2012

வெற்றிக்கான பாடம் - நீங்கள் வெற்றிக்காக விதையாக புதையத் தயாரா - A LIFE SUCCESS LESSON

அனுபவ பொன் வரிகள்

மதுரை கங்காதரன் 

நீங்கள் வெற்றிக்காக விதையாக புதையத் தயாரா? 
வெற்றிக்கான பாடம் 
A LIFE SUCCESS LESSON 

இதென்ன புது கேள்வி. இந்த கேள்வி ஒரு குரு சீடனிடத்தில் கேட்ட கேள்வி. சரியாக சொல்லப் போனால் ஒரு பயிற்சியாளர் தன்னுடைய மாணவர்களிடம் கேட்ட கேள்வி? 

"நீங்கள் மட்டும் விதையாக மாறத்  தயாராக இருந்தால் மற்றவை நான் பார்த்துக்கொள்கிறேன் " என்றார் ஒரு பயிற்சியாளர் .

"அதாவது விதையின் பாடத்தை தெரிந்து கொள்ளுங்கள். தண்ணீரில் நனைந்த விதையை மண்ணில்  புதைத்து அந்த இடத்தில் தேவையான தண்ணீர் ஊற்றவேண்டும். (மண்ணில் புதையாத விதை ஒருபோதும் அற்புதங்களை நிகழ்த்தாது. புதைத்த விதைக்கு  எங்கிருந்துதான் பலம் கிடைக்கிறதோ தெரியாது . தண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்ட விதை முளைவிட்டு தன முழு  பலத்துடன் மண்ணின் கற்களின் பலத்தையும் தாண்டி வெளியே வந்து முளைவிட்டு  காற்றையும் சூரிய சக்தியையும் தேடி எடுத்த்க்கொள்கிறது.அந்த செயல் சாதாரணமான காரியம் கிடையாது.  எல்லாச் சக்திகளும்  தனக்கு கிடைக்கும் போது பலவித அற்புதங்கள் நிகழ்கிறது. அது ஆச்சரியம் / அதிசயம் தான். அதன் பலன் அது வளர்ந்து பூக்கள் தந்து அதிலிருந்து நமக்குத்தேவையான நல்ல காய் கனிகளாக மாறும் வித்தை நிகழ்கிறது. 

இதற்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்.

நீங்கள் வாழ்கையில் முன்னேற வேண்டுமானால் முதலில் புதைபட வேண்டும். அதாவது உங்களுக்கு ஏற்பட்ட தோல்விகள், சுற்றியிலும் இருக்கும் கஷ்டங்கள், இன்னல்கள், தேடி வரும் விமர்சனங்கள் ஆகியவற்றை எதிர் கொண்டு அவற்றை புதைத்து விடவேண்டும். அதன் மூலம் தான் உங்களுக்கு அபரீதமான பலம் கிடைக்கும். அந்த பலம் தான் உங்கள் வெற்றி மரத்திற்கான முளை. தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது போல் பயிற்சியும் உழைப்போடு விட முயற்சி செய்யும் போது நம்பிக்கை (காற்று) மற்றும் தன்னம்பிக்கை (சூரிய ஒளி ) தானாகவே வந்துவிடும். பிறகென்ன? அவைகளே உங்கள் கையில் வெற்றிகனிகளாக மாற்றும் அற்புத சக்தியை தந்துவிடும்.

விதையாக புதை பட தயங்காதீர்கள் !

தோல்விகளை கண்டு துவண்டுவிடாதீர்கள் !

கடின முயற்சியோடு பயிற்சி செய்யுங்கள் !

அதுதான் உங்கள் வாழ்க்கைக்கான வெற்றிக்கனி !  

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

தொழிலும் (வியாபாரமும்) 'செஸ்' (சதுரங்கம்) விளையாட்டும் BUSINESS AND CHESS GAME

அனுபவ பொன் வரிகள்

மதுரை கங்காதரன் 

தொழிலும் (வியாபாரமும்) 'செஸ்' (சதுரங்கம்) விளையாட்டும் 
BUSINESS AND CHESS GAME

ஒரு சதுரங்க விளையாட்டு போலத் தான் தொழிலும். யார் ஒருவர் தன்னை காத்துக்கொண்டு அடுத்தடுத்து வரும் தாக்குதலை சமாளிக்கிறானோ அவனே வெற்றி பெறுவான்.ஏனென்றால் அவனுக்கு ஐந்து நகர்தலுக்குபின் விளையாட்டு எப்படி இருக்கும். பத்து நகர்த்தலுக்குப் பின் விளையாட்டு எப்படி இருக்கும் என்பதை நன்றாக கணித்து வைத்திருப்பான். மேலும் எதிராளியின் திறமையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது விளையாட்டின் திசையை எளிதாக மாற்றவும் நன்றாக தெரிந்திருக்கும். ஆகையால் அவன் எப்போதும் வெற்றி பெற்றே தீருவான்.

அதேபோல வியாபாரத்திலும் முதலில் உங்களுடைய பலத்தை அறிந்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் பலவீனத்தை பலமாக மாற்றிக்கொண்டு முதலை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் வெற்றிபெறுங்கள்.. பிறகு உங்கள் குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளுங்கள். பிறகு உங்களுடைய போட்டியாளர்களின் வலிமையையும், பலவீனத்தையும் நன்கு ஆராய்ந்து அதற்கு தகுந்தாற்போல் உங்கள் செயல்களையும், துணிவோடு எதிர்கொள்ளும் முறையினையும் மாற்றிகொண்டால் எப்போது உங்களுக்கு வெற்றி தான்.

சதுரங்கம் தெரிந்து கொள்வீர் !
வியாபாரம் துணிந்து செய்வீர் !  
வெற்றி உங்கள் கையில் !

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

Wednesday, 29 August 2012

நான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள் - NAAN - E CINEMA JOKES

    நான் - ஈ

திரைப்படம் தழுவிய சிரிப்புகள் 

"நான்-ஈ க்கு போட்டியா ஒரு பெரிய பட்ஜெட்லே ஒரு
படம் எடுக்கப்போறேன். என்ன 'டைட்டில்' வைக்கலாம் "

" 'நான்-டைநோசர்'ன்னு வச்சால் படம் பிச்சிட்டு ஓடும்! "

***********************************************************

"'CHMISTRY'  யிலே ஈ யைக்காணோம் .எங்கேடா போச்சி ?"

"டீச்சர்! நான்-ஈ பாகம் II லே நடிக்க போயிருக்கு டீச்சர் !"

***********************************************************

"டேய் ! காப்பியிலே ஈ கிடக்குடா "

"அப்போ, இதுக்கு பேரு காப்பி - ஈ ன்னு சொல்லு ! "

***********************************************************

"டைரக்டர் ஏன் மூடு அப்செட் ஆயிருக்கார் ?"

"தயாரிப்பாளர் நான்-ஈ பாகம் II லே ஈ க்கு கண்டிப்பா
டூயட் சாங் வேண்டும்னு சொல்லிட்டார்ரு ?!"

***********************************************************

"என்ன ஹோட்டல்லே இருக்கிற விலைப்பட்டியல்லே
நான்-தோசை, நான்-இட்லி, நான்-சப்பாத்தி, நான்-புரோட்டா ன்னு
எல்லாத்திலேயும் 'நான், நான் ' சேர்த்திருக்கிறார்?"

"இந்த ஹோட்டல் முதலாளி நான்-ஈ யோட பரம ரசிகயிட்டே!"

**********************************************************

"உங்க மகன்கிட்டே சத்தம் போடுறதுக்கு ஏன் ரொம்ப 
பயப்படுறீங்க?"

"ஏதாவது சத்தம் போட்டா நான்-ஈ கிட்டே சொல்லிடுவேன்னு
என்னையே திரும்ப பயமுறுத்துறான் "

***********************************************************

"லீவு லெட்டர் லே அப்படி என்னடா எழுதியிருந்தே? "

"'நான் ஈரோடுக்கு போறேன்னு' பொய்யா எழுதுறதுக்கு பதிலா
'நான்-ஈ பார்க்கபோறேன்னு' உண்மையே எழுதிட்டேன் !! "

************************************************************

"ஏன் டைரக்டர் கையை பிசஞ்சிட்டு இருக்கார் "

"நான்-ஈ யோட '100 வது நாள்லே கட்டாயம் ஈ யை
பேச வைக்கனும்னு அடம்பிடிக்கிறார் '"

************************************************************

"ஏன் ! குழந்தைங்க வாசல்லே நிக்கிறாங்க "

"நான்-ஈ யிலே வந்த ஈ யோட ஒரு போட்டோ பிடிச்சிட்டுத்தான்
போவோம்னு அடம் பிடிக்கிறாங்க சார்!"

*************************************************************

"என்ன சார்! தலையிலே இடி விழுந்தாப்பிலே
உட்கார்ந்திருக்கீங்க ?"

"நம்ம ராணுவத்திற்கும், உளவு படைகளுக்கும் 
நான்-ஈ யிலே நடிச்ச ஈ போல 10 ஈ க்களை உடனே 
அனுப்பனும்ன்னு மெயில் வந்திருக்கு !" 

*************************************************************

"அந்த பொண்ணுகிட்டே போறதுக்கு நம்ம ரௌடித் 
தலைவரு ரொம்ப பயப்படுறாரே, ஏன்?"

"அதுவா, அந்த பொண்ணுகிட்டே ஒரு ஈ இருக்கிறதை 
பார்த்துட்டாரு! அதிலிருந்து தான் இந்த பயம்! "

*************************************************************

"பசங்களா ! உங்க குடும்ப உறுப்பினர்களின் பேரை சொல்லுங்க !"

"எங்கப்பா பேரு நான் - ஏ 
 எங்கம்மா பேரு நான்- பீ 
 என்கண்ண பேரு நான்-சீ 
 எங்கக்கா பேரு நான் - டி .."

"அப்போ உன் பேரு நான் -ஈ யா ??"

"??????????"

**************************************************************