Wednesday, 29 August 2012

நான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள் - NAAN - E CINEMA JOKES

    நான் - ஈ


திரைப்படம் தழுவிய சிரிப்புகள் 

"நான்-ஈ க்கு போட்டியா ஒரு பெரிய பட்ஜெட்லே ஒரு
படம் எடுக்கப்போறேன். என்ன 'டைட்டில்' வைக்கலாம் "

" 'நான்-டைநோசர்'ன்னு வச்சால் படம் பிச்சிட்டு ஓடும்! "


***********************************************************


"'CHMISTRY'  யிலே ஈ யைக்காணோம் .எங்கேடா போச்சி ?"

"டீச்சர்! நான்-ஈ பாகம் II லே நடிக்க போயிருக்கு டீச்சர் !"

***********************************************************


"டேய் ! காப்பியிலே ஈ கிடக்குடா "

"அப்போ, இதுக்கு பேரு காப்பி - ஈ ன்னு சொல்லு ! "

***********************************************************


"டைரக்டர் ஏன் மூடு அப்செட் ஆயிருக்கார் ?"

"தயாரிப்பாளர் நான்-ஈ பாகம் II லே ஈ க்கு கண்டிப்பா
டூயட் சாங் வேண்டும்னு சொல்லிட்டார்ரு ?!"

***********************************************************


"என்ன ஹோட்டல்லே இருக்கிற விலைப்பட்டியல்லே
நான்-தோசை, நான்-இட்லி, நான்-சப்பாத்தி, நான்-புரோட்டா ன்னு
எல்லாத்திலேயும் 'நான், நான் ' சேர்த்திருக்கிறார்?"

"இந்த ஹோட்டல் முதலாளி நான்-ஈ யோட பரம ரசிகயிட்டே!"

**********************************************************"உங்க மகன்கிட்டே சத்தம் போடுறதுக்கு ஏன் ரொம்ப 
பயப்படுறீங்க?"

"ஏதாவது சத்தம் போட்டா நான்-ஈ கிட்டே சொல்லிடுவேன்னு
என்னையே திரும்ப பயமுறுத்துறான் "

***********************************************************"லீவு லெட்டர் லே அப்படி என்னடா எழுதியிருந்தே? "

"'நான் ஈரோடுக்கு போறேன்னு' பொய்யா எழுதுறதுக்கு பதிலா
'நான்-ஈ பார்க்கபோறேன்னு' உண்மையே எழுதிட்டேன் !! "

************************************************************


"ஏன் டைரக்டர் கையை பிசஞ்சிட்டு இருக்கார் "

"நான்-ஈ யோட '100 வது நாள்லே கட்டாயம் ஈ யை
பேச வைக்கனும்னு அடம்பிடிக்கிறார் '"

************************************************************"ஏன் ! குழந்தைங்க வாசல்லே நிக்கிறாங்க "

"நான்-ஈ யிலே வந்த ஈ யோட ஒரு போட்டோ பிடிச்சிட்டுத்தான்
போவோம்னு அடம் பிடிக்கிறாங்க சார்!"

*************************************************************"என்ன சார்! தலையிலே இடி விழுந்தாப்பிலே
உட்கார்ந்திருக்கீங்க ?"

"நம்ம ராணுவத்திற்கும், உளவு படைகளுக்கும் 
நான்-ஈ யிலே நடிச்ச ஈ போல 10 ஈ க்களை உடனே 
அனுப்பனும்ன்னு மெயில் வந்திருக்கு !" 

*************************************************************"அந்த பொண்ணுகிட்டே போறதுக்கு நம்ம ரௌடித் 
தலைவரு ரொம்ப பயப்படுறாரே, ஏன்?"

"அதுவா, அந்த பொண்ணுகிட்டே ஒரு ஈ இருக்கிறதை 
பார்த்துட்டாரு! அதிலிருந்து தான் இந்த பயம்! "

*************************************************************


"பசங்களா ! உங்க குடும்ப உறுப்பினர்களின் பேரை சொல்லுங்க !"

"எங்கப்பா பேரு நான் - ஏ 
 எங்கம்மா பேரு நான்- பீ 
 என்கண்ண பேரு நான்-சீ 
 எங்கக்கா பேரு நான் - டி .."

"அப்போ உன் பேரு நான் -ஈ யா ??"

"??????????"

**************************************************************


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 
    

1 comment: