Pages

Thursday, 6 September 2012

வசூல் ராணி - புதுக்கவிதை - BEAUTY QUEEN - A MODERN POEM BY MADURAI GANGADHARAN

 வசூல் ராணி 
புதுக்கவிதை 
மதுரை கங்காதரன் 

           BEAUTY QUEEN 
         A MODERN POEM
MADURAI GANGADHARAN

உன் கை நகங்களைப் 
பார்த்தேன்.

வானத்தில்
பத்து நட்சத்திரங்கள்
குறைந்தன.

உன் கால் நகங்களைப் 
பார்த்தேன்.

மேலும் 
பத்து நட்சத்திரங்கள் 
குறைந்தன.

உன் முகத்தைப் 
பார்த்தேன் 
வானத்தில் நிலவு இல்லை.

உன் குரலைக் 
கேட்டேன்.
குயிலைக் காணவில்லை.

உன் நடனத்தைப் 
பார்த்தேன் 
மயில் ஓடிவிட்டது.

உன் புன்னகைப் 
பார்த்தேன்.
மல்லிகை பூக்கள் 
உதிர்ந்தது.

உன் இதழைப் 
பார்த்தேன்.
ரோஜாவின் இதழ்கள் 
வாடிவிட்டன.

உன் அன்பை கண்டேன் 
என் இதயம் 
காணவில்லை!

இருட்டின் வயது - புதுக்கவிதை - AGE OF THE DARK A MODERN POEM MADURAI GANGADHARAN

            இருட்டின் வயது 
                புதுக்கவிதை 
          மதுரை கங்காதரன் 

          AGE OF THE DARK
          A MODERN POEM
MADURAI GANGADHARAN

இருட்டுக்கு வயது உண்டு 

அது எப்போதும் இளமை.

இளமையே 

இருளில் தானே பிறக்கின்றது !

அதனால் 

இருட்டுக்கு வயது 

என்றும் பதினாறு!

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    

நிலவின் முகக் கண்ணாடி - புதுக்கவிதை - MOON'S MIRROR A MODERN POEM MADURAI GANGADHARAN

நிலவின் முகக் கண்ணாடி 
           புதுக்கவிதை 
    மதுரை கங்காதரன் 

         MOON'S MIRROR
         A MODERN POEM
MADURAI GANGADHARAN

பூமியில் 

மூன்றில் இரண்டு பங்கு கடல் !

இவ்வளவு பெரிது எதற்கு?

கப்பல் விடவா?

கடல் கடந்து கரை சேரவா?

உண்மை புரிந்தது இப்போது.

நிலவு பெண்ணுக்கு 

அழகு பார்க்க கண்ணாடி வேண்டுமே

தன அழகாய் பார்த்துக் கொள்ள !

பெண்களில் அவள் விதிவிலக்கல்லவே!

ஏனென்றால் அவளும் 

இந்த மானுட உலகில் தானே 

வாழ்கிறாள்!

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    

ஏழை - பணக்காரன் - புதுக் கவிதை - POOR VS RICH PEOPLE A MODERN POEM MADURAI GANGADHARAN

ஏழை - பணக்காரன் 
     புதுக் கவிதை 
மதுரை கங்காதரன் 

   POOR VS RICH PEOPLE
        A MODERN POEM
MADURAI GANGADHARAN

வெளிச்சமாய் பணக்காரர்கள் 

இருக்கும் வரையில்! 

ஏழைகள் எப்போதும் நிழலாய்த் 

தான் இருப்பார்கள்.

பணக்காரன் சொல்கிறான் 

ஏழையினிடம் 

'வெளிச்சம்' எனக்கு 

நிழல் உனக்கு !

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    

எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் - புதுக்கவிதை - HAPPY BIRTH DAY GREETINGS TO YOU A MODERN POEM MADURAI GANGADHARAN

இன்று பிறந்தநாள் காணும் அனைத்து 
         நல்ல உள்ளங்களுக்கும் 

எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
                   புதுக்கவிதை 
             மதுரை கங்காதரன் 

HAPPY BIRTH DAY GREETINGS TO YOU
                  A MODERN POEM
           MADURAI GANGADHARAN

இன்று வாழ்க்கை பயணம் 
தொடரும் புது நாள் 
ஒரு மைல் கல் கடந்த நாள்.

உன் வாழ்வில் பொன்மலர் 
மலர்ந்த நாள்.
இந்த இனிய நன்னாளில் 

உன் நிழலாய் மகிழ்ச்சி 
தொடரட்டும்.

நிறைமதி போல் சந்தோசம் 
பொங்கட்டும்.

வண்ணப் பூக்களாய் எண்ணங்கள் 
விளங்கட்டும்.

கடலலையாய் உன்னை எப்போதும் 
வாழ்த்தட்டும்.

தென்றல் உன் வாழ்க்கைப் பயணத்திற்கு 
வழிகாட்டட்டும்.

கண்ணாடி மன மழலை போல் கவலைகள் 
களையட்டும்.

குயில்கள் உன் செவியில் கானம் 
இசைக்கட்டும்.

நட்சத்திரங்கள் உன் கருங்கூந்தளுக்கு
மல்லிகை பூச்சரம் சூடட்டும்.

முத்தென வீழும் மழைத்துளிகள் உன் மென் மனதை 
நனைக்கட்டும்.

வசந்தகால மலர்கள் முகம் மலர மணம் 
வீசட்டும்.

வானவில்லின் ஏழு வண்ணங்கள் கழுத்திற்கு நகையாய் 
அணிவிக்கட்டும்.

காலை வான மேகங்கள் ஆடையாய் இருந்து 
அலங்கரிக்கட்டும் 

வானத்து தேவர்களாய் பெரியவர்கள் உன்னை 
வாழ்த்தட்டும்.

கார்த்திகை விளக்காய் இனிவரும் நாளும் 
என்றும் வாழ்க்கை பிரகாசிக்கட்டும்.

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    

     .

கனவுகள் - நிழல்கள் புது கவிதை - DREAM - SHADOW A MODERN POEM BY MADURAI GANGADHARAN

கனவுகள் - நிழல்கள் 
புது கவிதை 
மதுரை கங்காதரன் 

DREAM - SHADOW 
A MODERN POEM
BY MADURAI GANGADHARAN

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் 
ஆனால் 
நிழல் கனவில்.!

உருவம் தெரியவில்லை 
ஆனால் 
அதை உணருகிறோம் 

குரல்கள் கேட்கவில்லை  
ஆனால் 
வார்த்தைகளையும் உணருகிறோம்.

திரைகள் இல்லை 
ஆனால் 
காட்சிகள் அசைகின்றன.

கனவுகள் 
உள்மன வெளிபாடுகளா?
உண்மை வெளிபாடுகளா? 

நடக்கக் கூடாதவை நடக்கின்றன 
நடக்கப் போவதை உணர்த்துகின்றன 
நடந்தவைகளை காட்டுகின்றன.

நிழலுக்கும் உருவம் உண்டு 
அது 
வெளிச்சம் கிடைக்கும்போது மட்டும்.

கனவுக்கும் எல்லாமுண்டு 
அது 
தூக்கம் வரும்போது மட்டும்.

நிழல்கள் உன்னை 
தொடர்ந்து வரும்.

கனவுகளை தொடர்வது 
நிழலை பிடிப்பது போல.

ஓன்று மட்டும் உண்மை 
கனவுகள் 
எப்போதும் கேள்விக்குறியே ?

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    

கண்ணகி - அந்த காலம் , இந்த காலம் - புது கவிதை - KANNAKI - HISTORICAL TIME , MODERN TIME

கண்ணகி - அந்த காலம் & இந்த காலம் 
                            புது கவிதை 
                      மதுரை கங்காதரன் 

( KANNAKI - HISTORICAL TIME & MODERN TIME
                          MODERN POEM 
                  MADURAI GANGADHARAN ) 

அவள் 'கண்ணகி ' தான் 

ஆனால் 

இவனுக்கு தான் கண் 'னஹி '!

ஆயிற்றே !

அந்த கண்ணகி 

தவறு செய்த மன்னனுககாக 

கால் சிலம்பை கையிலெடுத்தாள் 

இந்த கண்ணகி 

தவறு செய்த பையனுக்காக 

கால் 'சப்பளை ' எடுத்தாள்.

அவளோ மதுரையை 

அழித்தாள் 

இவளோ அவனை 

அடித்தாள் 