Pages

Friday, 7 September 2012

கவிதைகளின் அருமை தெரியுமா? - புதுக்கவிதை - TASTE OF POEM (A MODERN POEM) BY MADURAI GANGADHARAN

கவிதைகளின் அருமை தெரியுமா?
               புதுக்கவிதை 
          மதுரை கங்காதரன் 

         TASTE OF POEM
       (A MODERN POEM)
BY MADURAI GANGADHARAN

அழகான கவிதை ஓன்று 
முத்தான எழுத்தில் வரைந்தேன்.
அதை 
ஒருவனிடத்தில் காட்டினேன்.
'எதோ கிறுக்கல் ' என்றான்.

வேறோருவரிடத்தில் கொடுத்தேன் 

அவற்றை படிப்பதற்கு பதிலாக 
தொட்டுப் பார்த்தான்.
மென்மையாய் உள்ளது' என்றான்.

மற்றொருவனிடத்தில் தந்தேன் 

முகர்த்து பார்த்துவிட்டு 
'வாசனையில்லை' என்று விமர்சித்தான்.

பிரிதொருவனிடத்தில் பகிர்ந்தேன் 

'சுவையில்லை' என்றான்.

கவிதைக்கு 

உயிரில்லாமல் இருக்கலாம்.
அதில் பவனி வரும் வரிகள் 
உணர்வுகளை பிரதிபலிக்கும் 
கண்ணாடிகளே!

மனிதனின் சரித்திரத்தில் 

நீங்காத இடம் பெரும் 
உன்னத காவியம்.

கவிதைகள் பல 

வீரததை உணர்த்தியிருக்கின்றன 
சுதந்திரத்தை கொடுத்திருக்கின்றன 
காதல் காவியமாக இருந்திருக்கின்றன 
வாழ்க்கைக்கு புத்துயிர் தருகின்றன 
காதிற்கு இன்ப தேனாய் பாய்கின்றன 

கவிதைகளை கடக்காதவனின் வாழ்க்கை 

கானல் நீராய் இருந்திடுமே!
கவிதைகளை ருசித்தவனின் 
வாழ்க்கை முழுவதும் 
கனிரசமாய் இனித்திடுமே!

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com     

பிறந்தநாள் தூது - புதுக்கவிதை - BIRTH DAY LETTER - A MODERN POEM - BY MADURAI GANGADHARAN

பிறந்தநாள் தூது 
  புதுக்கவிதை 
மதுரை கங்காதரன் 

BIRTH DAY LETTER - 
A MODERN POEM -
BY MADURAI GANGADHARAN

பிறந்த நாள் வாழ்த்து 
வரைந்துவிட்டேன் கண்ணாடியில்!

யாரிடம் கொடுப்பது ?
நியாயமான கேள்வி!

காற்றை அழைத்தேன் 
'ஆடி முடிந்துவிட்டது 
ஓடி களைத்துவிட்டேன் 
அத்தோடு என் வேலை முடிந்தது' என்றது.

ஓடும் ஆற்றைக் கூப்பிட்டேன் 
'பூமியில் ஈரமில்லை 
நான் எடுத்துச் சென்றால் 
பாதியில் நின்று விடுவேன்' என்றது. 

மேகத்திற்கு மோகம் இருக்குமா?
அதனிடம் சேதி சொன்னேன் 
'தூது சென்று சென்று 
அலுத்துவிட்டது ' என்றது.

புறா வருமா? முயற்சி செய்தேன் 
'மதுரைக்கா ? ஒரு நாள் ஆகுமே!
அதுவரை என்னவளை பிரிய 
தெம்பில்லை' என ஒதுங்கியது.

நிலவைப் பார்த்தேன் 
மெல்ல சிரித்தது, பக்கம் சென்றேன் 
வேலையைச் சொன்னேன் 
'சரி ' என்றது.
எனக்கு சந்தோசம் பிறந்தது 
கூடவே நிபந்தனை விதித்தது 

'அடுத்த பௌர்ணமி அன்று கொடுப்பேன்' என்றது.
 காரணம் கேட்டேன் 
இடை நாட்கள் அழகு இருக்காதே' என்றது.

இது சரி வராது 
அதற்குள் பிறந்த நாள் போய்விடும் 
கால்கள் ஓய்ந்தன 
கவலைகள் பிறந்தன 
கடைசியில் தபால் பெட்டி நம்பினேன்.

அருகில் சென்றேன் 
உதவி நாடினேன் 
'செய்கிறேன் ' என்றது , கூடவே 
'சம்திங் ' கேட்டது பணமாக அல்ல 
தபால் தலைகளாக.

ஓ ! இது இருபத்தோறாம் நூற்றாண்டு 
'எல்லாவற்றிற்கும் பணம் '
பணம் கொடுத்து தபால் தலைகளை 
வாங்கி ஒட்டி 
முகவரி எழுதினேன்  
கூடவே 
குறிப்பு எழுதினேன் 
'கண்ணாடியில் பிறந்த நாள் வாழ்த்து 
மென்மையாக சேர்க்கவும்'
வந்து சேர்ந்ததா?

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com     

அப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் - புதுக்கவிதை - NEW TYPE BIRTHDAY GREETINGS A MODERN POEM -

அப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
புதுக்கவிதை 
மதுரை கங்காதரன் 

NEW TYPE BIRTHDAY GREETINGS
A MODERN POEM -
BY MADURAI GANGADHARAN

மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைத்து 
  அன்பு நெஞ்சகளுக்கும் எனது இனிய 
       பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 

புதுமை செய்ய ஆசை 
எதில் வாழ்த்துக்களை எழுதுவது?

இன்பமாய் இட்லியில் எழுதியிருந்தால் 
இன்புற்று மகிழ்ந்திருப்பாய்.

ஆசையாய் தோசையில் எழுதியிருந்தால் 
ஓசையில்லாமல் ஏற்றியிப்பாய்.

பூரிப்புடன் பூரியில் எழுதியிருந்தால் 
புன்னகையுடன் வாங்கியிருப்பாய்.

ஜில்லென்று ஜிலேபியில் எழுதியிருந்தால் 
சிரிப்புடன் பெற்றியிருப்பாய்.

களிப்புடன் கம்பளத்தில் எழுதியிருந்தால் 
புத்துணர்ச்சி கொண்டிருப்பாய் 

ஆர்வத்துடன் அப்பளத்தில் எழுதுகிறேன் 
அன்புடன் ஏற்றுக்கொள்வாயா?  

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com     

கறையான நக ( ர ) ங்கள் - புதுக்கவிதை - BLACK MARK IN OUR NAIL -A MODERN POEM MADURAI GANGADHARAN

கறையான நக ( ர ) ங்கள் 
          புதுக்கவிதை 
 மதுரை கங்காதரன் 

BLACK MARK IN OUR NAIL
        A MODERN POEM
MADURAI GANGADHARAN

வெள்ளையாய் இருந்த 
நக ( ர ) ங்கள் 
ஓட்டுகள் போட்டதினால் 
கருப்பாக 
கறைபடிந்தது.

அதிலும் போட்டி தான்!
உன் கை விரல் நகத்தில் 
மட்டும் கறை.
அரசியல்வாதி சிரிக்கின்றான்.

என்னைப் பார் !
என் இரு கை முழுவதும் 
கறை.
யாருக்கும் தெரியாத 
கறை .

லஞ்சம் வாங்கிய கறை 
ஊழல் செய்த கறை 
மக்களை ஏமாற்றிய கறை 
ஏழைகளை வயிற்றில் அடித்த கறை.

சேர்த்த செல்வத்திலும் கறை 
ஆட்சி செய்ததிலும் கறை 
சட்டத்தை மீறிய்திலும் கறை 
நீதியை பின்பற்றுவதிலும் கறை 

அவர்களின் கைகளில் 
கறைகள் படிவத்தில் அக்கறை.
கரையுள்ள வேஷ்டி 
கட்டுவதில் அக்கறை.

கறை துடைக்க 
அக்கறை காட்டுவார் யாரோ?
அக்கரையில் சேர்த்த 
கறைபட்ட செல்வங்களை 
இக்கரை நாட்டிற்கு கொண்டு வந்தால் 
எல்லாவித கறையும் அழியும்.

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com     

இன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம் - புதுக்கவிதை - GOOD AND BAD A MODERN POEM BY MADURAI GANGADHARAN

இன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம் 
                                      புதுக்கவிதை 
                              மதுரை கங்காதரன் 

                                   GOOD AND BAD
                                 A MODERN POEM 
                     BY MADURAI GANGADHARAN

நீ துன்பமடையும் நேரம் 
நீ முன்னாள் செய்த தவறு (பாவம்)

இன்பமடையும் நேரம் 
நீ முன்னாள் செய்த நல்ல காரியம் (புண்ணியம்)

பாவம் 
பிறர்க்கு கஷ்டத்தைக் கொடுப்பது.

புண்ணியம் 
பிறர்க்கு நன்மை செய்வது.

பாவக்களையை  அழித்து
புண்ணிய விதையை விதை.

துன்பக்களையை ஒழித்து 
இன்ப விதையை விதை.

பாவ பாலைவனத்தை 
புண்ணியச் சோலைவனமாய் மாற்று. 

எங்கும் புண்ணிய மரம் 
என்றும் இன்பமயம். 

வளர்ந்து செழிக்கட்டும் 
உன் வாழ்வில்.

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    

கலிகாலம் - புதுக்கவிதை -LAST WORLD - A MODERN POEM BY MADURAI GANGADHARAN

         கலிகாலம்  
      புதுக்கவிதை -
        மதுரை கங்காதரன்  

               LAST WORLD -  
          A MODERN POEM 
BY MADURAI GANGADHARAN 

இது கலிகாலம் !

மரங்களெல்லாம் விதைகளை 
தேடி அலையும் கூத்து.

தாய்களெல்லாம் குழந்தைகளை 
தேடி அலையும் கொடுமை.

மணமான்வர்களெல்லாம் காதலிகளைத் 
தேடியலையும் நிலை.

கண்ணைள்ளவர்களெல்லாம் வெளிச்சத்தை 
தேடியலையும் புதுமை.

பணமுள்ளவர்களெல்லாம் மகிழ்ச்சியை 
தேடியலையும் காலம்.

கோவிலுக்குள் நுழைந்தவர்களெல்லாம் கடவுளைத் 
தேடும் கூட்டம்.

உனக்குள்ளே இருப்பதை வெளியே 
தேடித் தேடியலைகிறாய் !

கிடைக்கும் வரை தேடு.
கிடைக்கும் என்று நம்பு.

 இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

Thursday, 6 September 2012

புது முயற்சியும் வெற்றியும் - புதுக்கவிதை - SUCCESS - TRY IN A NEW WAY

புது முயற்சியும் வெற்றியும்  
                புதுக்கவிதை -   
        மதுரை கங்காதரன் 

SUCCESS - TRY IN A NEW WAY          
          A MODERN POEM  
BY MADURAI GANGADHARAN

'முயற்சித் திருவினையாக்கும் '
இதை 
முன்னூறு முறை 
வாசித்தேன்.

முயற்சி செய்தேன் 
வெற்றி பெற்றேன் 
கவிதையில் மட்டுமல்ல
வாழ்க்கையிலும்.

முயற்சி 
வெற்றியின்  'டானிக் '
முயற்சி 
வெற்றியின் பலம்.