Pages

Tuesday, 16 October 2012

உங்கள் வெற்றி , குறிக்கோளில் ஐக்கியமாவதில் - GET YOUR SUCCESS WITH FOCUS IN YOUR AIM

அனுபவ பொன்வரிகள் 

மதுரை கங்காதரன் 

உங்கள் வெற்றி , நீங்கள் குறிக்கோளில் ஐக்கியமாவதில் இருக்கின்றது -
GET YOUR SUCCESS WITH FOCUS IN YOUR AIM 


எத்தனையோ தலைவர்கள், மகான்கள், சமயத் தலைவர்கள், அறிவுச் சான்றோர்கள் போன்றவர்களின்  அழகான , பொன்னான, அருமையான பேச்சுகள் கேட்டிருப்பீர்கள் ! எவ்வளவோ புகழ்பெற்ற, தரமிக்க , அறிவைக்கொடுக்கும் புத்தகங்களை படித்திருப்பீர்கள்  ! எவ்வளவோ இனிமையான பாடல்களை கேட்டு ரசித்திருப்பீர்கள் ! எவ்வளவோ நல்ல படங்களைப் பார்த்திருப்பீர்கள் ! எத்தனையோ மனிதர்களிடம் பேசியிருக்கின்றோம் ! பழகியிருக்கின்றோம் ! எத்தனையோ வெற்றிச் சரித்திரங்களை , சாதனையாளர்களை, சிந்தனையாளர்களை, சமூக சேவகர்களை, தொண்டு உள்ளங்களை, அறிஞர்களை இந்த மனித சமுதாயம் கொடுத்திருந்தாலும் மனிதனின் முன்னேற்றம் என்பது கேள்விக் குறியாகத் தான் இருக்கின்றது. ஒரு சிலர் மட்டும் வெற்றியடைகிறார்களே அவகளுக்கு மட்டும் முன்னேற்றம் எப்படி சாத்தியமாகிறது.


எத்தனயோ பாடல்களை திரும்ப திரும்ப கேட்டிருந்தாலும் அவற்றில் எத்தனை பாடல்கள் நமக்கு முழுமையாக தெரியும். (நான்கு வரிகள் தெரிந்தாலே அதிகம் தான் என்கிறீர்களா ! ). அதேபோல் ஒரு விருப்பமுள்ள புத்தகத்தை படித்து முடித்தபிறகு அதிலிருக்கும் ஒரு நாலு வரிகளாவது நமக்கு தெரியுமா! அல்லது நினைவில் நிற்கின்றதா! இது இவ்வாறு இருக்க...


அரிச்சந்திர நாடகத்தை எத்தனையோ பேர் பார்த்திருப்பார்கள் ! ஆனால் காந்தியைப் போல் சத்தியம் தவறாமல் எத்தனைபேர் நடக்கிறார்கள்? அந்த நாடகம், காந்தியை மாற்றியது போல் ஏன் அனைவரையும் மாற்றவில்லை!

எத்தைனையோ பேர் போதி மரத்தடியில் உட்கார்ந்திருக்கின்றனர். ஆனால் புத்தரை போல ஏன் அனைவராலும் மாறமுடியவில்லை.

எத்தனையோ பேர்கள் ஏழையைக் கண்டு வருத்தப்பட்டாலும் , இரக்கப்பட்டாலும் 'அன்னை தெரசா ' போல் எத்தனைபேர் ஏழைகளுக்கு பொறுமையாக சேவை செகின்றனர்.

எத்தனை பேர்கள் தலையில் ஆப்பிள் விழுந்திருந்தாலும் எத்தனை பேர் சர் ஐசக் நியுடடனை போல் ஏன் புகழை பெறவில்லை.

எத்தனையோ  தாயார்கள் தங்கள் மகனுக்கு கல்வி கற்றுக்கொடுத்திருந்தாலும் ஏன் தாமஸ் ஆல்வா எடிசனைப் போல் அறிவியல் அறிஞராக ஆக்கமுடியவில்லை.

எத்தனயோ கிரிக்கெட் வீரர்கள் இருந்தாலும் சச்சின் டெண்டுல்கரை போல் புகழ் பெற முடியவில்லை. 

இப்படி இன்னும் அதிகமான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 


இதிலிருந்து என்ன தெரிகின்றது! உதாரணமாக ஒரு புத்தகத்தை படித்தாலோ, அல்லது படித்து மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது. அதன்படி யார் ஒருவர் தவறாது தினமும் செயல்களைச் செய்கிறார்களோ அவர்களே வெற்றிக்கு தயாராகிறவர்கள்!


அதாவது தாங்கள் தேர்ந்தெடுக்கும்  குறிக்கோள் மற்றும் கொள்கையில் ஐக்கியமாகி , அதையே சிந்தித்து , அதன் கர்மமே கண்ணாக, கடமையாகக் கொண்டு, எந்த ஒரு இடையூறு வந்தாலும் அதைத் தாண்டி, ஒவ்வொரு நொடியும் விழிப்புடன், விடாமுயற்சியுடன், கடின உழைப்போடு தங்கள் செயலிருந்து விலகாது இருந்ததால் தான் இவ்வளவு பெரிய செயலை, புகழை அடைய முடிந்தது.


குறிக்கோளில் ஐக்கியமாதல் ஆர்வம் இருந்தால் மட்டுமே முடியும். ஆர்வம் வெறியாக மாறுகின்றது. அந்த வெறி மனவலிமையும் , துணிச்சலையும் தருகின்றது. பிறகு குறிக்கோள் அடைவதற்கான  அறிவையும்,ஆற்றலையும் தேடச் சொல்கிறது . அறிவும், ஆற்றலும் கிடைக்கும்போது முயற்சியும், பயிற்சியும் கிடைக்கின்றது. பிறகு கடின உழைப்பு சேரும்போது கனவான குறிக்கோள் நிஜமாகிறது.  

ஆகவே உங்கள் குறிக்கோளுடன் ஐக்கியமாகுங்கள்!


அதுவே அடுத்தடுத்து உந்து சக்தி கொடுத்து வெற்றிக்கு வழி வகுக்கும்!  


இன்னும் வரும்...

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 


    

Monday, 15 October 2012

உள்விதி மனிதன் பாகம் : 17 விதி, மாயையை உள்விதி மனிதனால் வெல்வாயாக - BEAT YOUR FATE BY YOUR INNER MAN

உள்விதி மனிதன் 
 சம மனிதக் கொள்கை 

பாகம் : 17 விதி , மாயையை உள்விதி மனிதனால் வெல்வாயாக -
BEAT YOUR FATE BY YOUR INNER MAN

மதிப்பு மிக்க மனிதா! பரவாயில்லையே, இந்த உள்விதி மனிதனை நீயாக விரும்பி அழைக்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகின்றது. எனது வேலையை நீ எளிதாக்குகிறாய்!  சரி, எதெற்கெடுத்தாலும் மாயை, விதி என்ற இருவகைகளை பேசுவதை கேட்டிருக்கிறோம். அதாவது மகான்கள் மாயை எனவும், மனிதர்கள் விதி எனவும், நேரம், காலம் எனவும் பேசுவார்கள். அது புரிந்தோ அல்லது புரியாமலோ தலையை ஆட்டுகிறாய். அதைப்பற்றி விரிவாகவும், தெளிவாகவும் பேசுகிறேன். சற்று பொறுமையுடன் கேள்! அவைகளெல்லாம் ஒருவகையில் தீய செயல்களே. அவைகளெல்லாம் நிலைத்தன்மை அற்றவை. நொடியில் மாறுபவை. அப்படியிருக்கும் போது பரபரப்பான இன்றைய உலகில் மனிதனுடைய சிற்றறிவுக்கு ஏறுவது மிகவும் கடினம். அதற்கு நுண்ணறிவு மற்றும் பேரறிவு தேவை.  அதை வெல்வது மிகவும் சிரமம். 

பிரிய மனிதா! முதலில் விதி அல்லது மாயை இதுவென்று அறியவேண்டும். அறிந்த பின் அதன் செயலை உணரவேண்டும். உணரும்போதே அதனால் ஏற்படக்கூடிய விளைவை எண்ணிப் பார்க்கவேண்டும். அவைகள் நல்லவைகள், நாலு பேருக்கு நன்மை தரக்கூடியவையாக இருந்தால் நான் உன்னுடன் கை கோர்த்து உதவி செய்வேன். அதுவே கெட்டவைகளாக இருந்தால் அதை முளையிலேயே நசுக்கி விடுவேன். அதுவே உனக்கும் எனக்கும் நல்லது. 

மேன்மையான மனிதா! மாயை மற்றும் விதி ஆகியவை ஒருவகையில் உன்னை ஏமாற்றுபவை. உனது அறிவை திரை போட்டு மூடி கண்களை மறைக்கும் சக்தி பெற்றவை. மாயாஜால வித்தைகள் மற்றும் சித்து வேலை செய்பவை. இருப்பதை இல்லாமல் செய்யும். இல்லாததை இருப்பதாக காட்டும். நேர்மை, உண்மை, நியாயம், தர்மம் ஆகியவற்றை தெளிவாக பேசுவார்கள். உன்னை திசை திருப்புவதற்கு, உன் கண்களை மறைப்பதற்கு மாய விளையாட்டு காட்டுவார்கள். பெரும்பாலும் அவைகள் மனிதர்கள் உருவில் தான் வரும். அவர்களின் வார்த்தைகள் தேன் தடவிய சொற்களாக இருக்கும். அவர்களுடைய உபசரிப்பு யாரும் காட்டாத மிக மிக அன்பாக இருக்கும், அவர்களுடைய செயல்கள் அதிசயத்தில் ஆழ்த்தக் கூடியதாக இருக்கும். அவர்களுடைய இடம் சில சமயங்களில் பிரமாண்டமானதாக இருக்கும். அவர்கள் எதை சொன்னாலும் நம்புபடியாகச் சொல்வார்கள். ஆதாரதிற்காக பக்கத்தில் சில ஜால்ராக்களை உட்கார வைத்திருப்பார்கள். பெரிய, சிறிய தலைவர்களைத் தெரியும் என்பார்கள். கடவுள் பற்றி ஏகாந்தமாய் பேசுவார்கள். அழகாக பாடுவார்கள, பேசுவார்கள். இவற்றுக்கும் மேலாக அவரைப் பற்றிய விளம்பரங்கள் டி.வி.யில் அடிக்கடி வரும். போட்டோக்கள், வீடியோக்கள், ஒலி - ஒளி குறுந்தகடுகள், புத்தகங்கள் என்று அடுத்தடுத்து காட்டுவார்கள். உங்களுடைய எதிர்காலம் பற்றி ஆஹா...ஓஹோ... என்று பேசுவார்கள். உங்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதாக சத்தியம் செய்வார்கள், கொஞ்சி பேசவும் தயங்க மாட்டார்கள். உன்னிடத்தில் பணம் இருப்பதாக அவர்களுக்குத் தெரியவந்தால் உன்னிடம் விசுவாசகமாக நடப்பதாக காட்டிக் கொள்வார்கள். இவைகள் தான் மாயையாகவும், விதியாகவும் உன்னிடத்தில் வந்து அவர்களுக்குத் தேவையான பொருட்கள், சொத்துகள், செல்வம், பணம் உன்னிடத்திலிருந்து பேச்சிலே உன் கண்களைக் கட்டிவிட்டு உன் மூலமாகவே எடுத்து (அபகரித்து) செல்வார்கள். இதுநாள் வரை உனக்கு அவைகள் தெரியாமல் இருந்தது. இனி அவைகளை இந்த உள் மனிதன் கவனித்து கொள்வான். அதிலிருந்து தப்புவிக்க அனைத்து உபாயங்களை  உனக்கு சொல்கிறேன்.  என் பேச்சை நுண்ணிப்பாக கேள். உண்மைகள் தெரியும். பொய்யைப்  புரிந்துகொள்வாய். 


இனிமையான மனிதா! மனித ஜென்மம் புனிதமானது. அந்த புனிதத்தை காக்கவேண்டுமென்றால்  உன்னிடத்தில் மன சுத்தம், வாக்கு சுத்தம், எண்ணச் சுத்தம், செயல் சுத்தம், சரீர சுத்தம், சூழ்நிலை சுத்தம் போன்றவை இருக்கவேண்டும். அப்போது தான் உனது புனிதத் தன்மை மேன்மை பெரும். அவைகளெல்லாம்  இருக்க வேண்டுமென்றால் உனக்கு எப்போதும் பசி, பிணி அணுகக்கூடாது. நீ பிறக்கும்போதே உனக்குத் தேவையான உணவு, உடை, இடம், மகிழ்ச்சி மற்றும் நிம்மதி ஆகியவை அளித்து விட்டேன். ஆனால் அதில் சிலவற்றை மாயை என்ற தீய செயலுக்கு அடிமையாகி நான் கொடுத்ததை இழந்து, உனது அடுத்த ஜென்மத்திற்கு (மகன் அல்லது மகளுக்கு) வைக்காமல் அவர்களை துன்பக் கடலில் ஆழ்த்தி எனது வேலையை அதிகமாக்கிவிடுகின்றாய். அதை இனிமேல் நடக்காமல் இருக்கவே நான் பெரும் முயற்சி எடுக்கிறேன்.

பாசமுள்ள மனிதா! இளமையில் பசியின் கொடுமை மிகவும் அவஸ்தை தருவது. அது என்னையும் மீறி பல அழிவுச் செயல்களுக்கு தூண்டுகிறது. அதை உன் மூலம் போக்க விரும்புகிறேன். நீ பிறக்கும் போது கோபம், பொறாமை, போட்டி, தீமை தரும் எண்ணங்களுடன் பிறந்தாயா! சந்தோஷமாகத் தானே படைத்தேன். அதன் பின் எப்படி குணம் மாறியது! உனக்கு கொடுத்த மகிழ்ச்சி எங்கே போயிற்று? உனக்குள் நான் இருப்பதால், இதை மட்டும் தெரிந்து கொண்டேன். நீ நினைக்கும் மகிழ்ச்சி, அதாவது பணம் சம்பாதிப்பது, கேளிக்கைகளில் ஈடுபடுவது, சாப்பிடுவது, படம், டி . வி. பார்ப்பது, அரட்டையடிப்பது எவையெல்லாம் மகிழ்ச்சி என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறாய். இன்னும் உண்மையான மகிழ்ச்சி எப்படி பெறுவது என்பதை நான் உனக்கு கொடுப்பதற்கு தயாராக இருந்தாலும் அதை உதாசீனப் படுத்துகிறாய். மாயை உருவில் அதிர்ஷ்டம் வருகின்றது. அதைத் தேடி கோவில், குளம், அர்ச்சனை, பரிகாரம், யாகம், தானம், தர்மம் போன்றவற்றை செய்கிறாயே அதனால் நீ பலன் அடைந்தாயா? உனது எண்ணத்தை, செயலை  சுத்தமாக வைத்துக்கொண்டால் ஒழிய இவையனைத்தும் பலன் தராது. 

மதிப்புமிக்க மனிதா! தினம் அல்லது உனக்கு நேரம் கிடைக்கும்போது கோவிலுக்குச் செல்கிறாயே அது என்னைவிட புனிதமானது என்பதை மறந்துவிடாதே! கோவில்களுக்குச் செல்லுமுன் உனது எண்ணங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஞாபக படுத்தும் இடம். உனக்குள்ளே ஆற்றல், அறிவு, இந்த உள்விதி மனிதன் இருப்பதை உணர்த்தும் இடம். உனக்குள்ள கடமைகளை செய்யச் சொல்லும் ஸ்தலம். உனது கடமை என்னவெனில் வீட்டையும், நாட்டையும் இரு கண்கள் போல் காக்கவேண்டும் என்பதை நினைவூட்டும் சின்னம். ஆனால் அங்கேயே இருந்துவிடக் கூடாது. ஏனெனில் நான் கொடுத்த அறிவும், ஆற்றலும் பயன்படுத்தாமல் இருந்துவிடக்கூடாது. உனது உடல் ஒரு கோயில். அதில் நான் ஒரு தெய்வமாக ஜீவ ஓட்டமாக இருக்கிறேன் என்பதை மனதில் நன்றாக பதிந்துகொள். 

இரக்கமுள்ள மனிதா! கோவில், குளத்திற்கு பெரிய பணக்காரர்கள், அரசியல் வாதிகள், அறிஞர்கள், தலைவர்கள், மகான்கள், முனிகள் தினமும் வருகின்றனரா! எப்போதாவது தான் வருவார்கள். ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும்! உழைத்தால் தான் உணவு கிடைக்கும், பாடு பட்டால் தான் பலன் கிடைக்கும் என்று. அது உனக்கு ஏன் தெரிவதில்லை? எல்லா கடமைகளை முடித்துவிட்டு வா! உன்னை ஏற்றுக்கொள்கிறேன். கடமையை செய்யாமல் அல்லது கடமையை தவிர்ப்பவனை  நான் மன்னிக்கவே மாட்டேன்! கடமையைச் செய்தால் தான் அதற்குரிய பலனை தரமுடியும். முதலில் வீட்டில் இருக்கும் கடமையை தவறாமல் செய். தாய், தந்தையரைக் காப்பாற்று. சகோதர சகோதரிகளின் கடமைகளைச் செய். உனது குடும்பத்தை மகிழ்ச்சியோடு வைத்துக்கொள். இவையனைத்தும் முடித்தால் தான் என்னை முழுமையாக அடைய முடியும். உனது கடமையை செய்தாலே நீ பூரண முக்தி பெறுவாய். அதை விட்டுவிட்டு போலிச் சாமியார் பின் செல்வது, மந்திரம் சொல்வது, அவர் சொல்லும் பலவற்றை கடைபிடிப்பது, அவர்களிடம் செல்வத்தை இழப்பது, கடமையை விட்டு விலகுவது இவையனைத்தும் உனக்கு கெடுதலே தருமே அன்றி பலன் தராது. உனது வாழ்கையில் மகிழ்ச்சி ஏற்படாது, மற்றவர்களுக்கும்  மகிழ்ச்சி தர முடியாது. அவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும். 

பிரிய மனிதா! ஏனோ தானோவென்று, எங்கேயோ எதையோ நினைத்துக்கொண்டு கோடி முறை கடவுளை நினைப்பதைவிட மனதளவில் உண்மையாக , சத்தியமாக ஒரே ஒரு தடவை நினைத்தாலே போதும். நீ புண்ணியம் பெறுவாய். அந்த புண்ணியத்தை நான் உனக்குத் தருகிறேன். ஏற்றுக் கொள். தினமும் ஒரே சொல்லை உச்சரிப்பதால் மட்டும் எவ்வித பலன் கிடைக்காது. அது உனக்கு சொல்லும் அல்லது  உணர்த்தும் ஆரம்ப பாடம். உனது எண்ணம் ஒரு மனம் தீவிரமாக இருக்கின்றதா வென்று சோதித்துப் பார்க்கும் பாலபாடம். அதில் வெற்றி பெறும்போது புதிதாக பல கற்பதற்கு அறிவு பெறுகின்றாய். புதிது, புதிதாக கற்பதால்  மட்டுமே நீ மேன்மை பெறுவாய். கற்பதோடு நிற்காமல் அதை செயல்படுத்து. வெறும் எல்லோருக்கும் நல்லதை நினைக்கவேண்டும், நல்லதை செய்யவேண்டும், நல்லதை பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்காமல் நீ இன்று யாருக்கு என்ன நல்லது செய்துள்ளாய் என்பதை தெரிந்துகொள். இது மகான்களுக்கும், தலைவர்களுக்கும், மனிதர்களுக்கும் பொருந்தும். நீ யாருடன் நட்பு கொள்வதற்குமுன் அவன் எவ்வளவு நன்மையான செயல்கள் மக்களுக்குச் செய்திருக்கிறான் என்பதை அறிந்துகொண்டு பழகு. அதுவே உனக்கு நல்லது. இந்த உள் மனிதனுக்கும் நல்லது.


பண்புள்ள மனிதா! சிலர் பணத்தையும், செல்வத்தையும் அள்ளி அள்ளித் கோவிலுக்குத் தருகிறார்கள். அவைகளெல்லாம் நல்ல வழியில் கிடைத்தது என்று சொல்லமாட்டேன். பெரும்பாலும் அவர்கள் தங்களுடைய அந்தஸ்துக்காக, பணத்திமிறினால் என்னமோ அவர்களை நம்பித் தான் நான் இருக்கிறேன் என்கிற இறுமாப்பு. அன்பு மனிதா! அதற்கெல்லாம் நான் அவர்களுக்கு இம்மியளவு கூட பலன் தரமாட்டேன். அவர்கள் என்னை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளவில்லை. குறுக்கு வழியில் சம்பாதித்து, குறுக்கு வழியில் என்னைப் பார்பவர்களுக்கு , பணத்தைக் கொண்டு என்னை விலைக்கு வாங்க நினைப்பவர்களை நான் ஏறெடுத்துக் கூட பார்க்கமாட்டேன்.  பலர் நேர்மையாக, அன்பாக , பணிவுடன் சிறிதே செய்தாலும் அதில் தான் எனக்கு மகிழ்ச்சி அதிகம். அதில் உண்மை இருக்கின்றது. ரகசியமாக் போட்ட பணம் யாருக்குப் போய் சேருகின்றது? பாவப்பணம் அனைத்தும் பாவ மனிதருக்குத் தான் சேருகின்றது. அதன் மூலம் மக்களுக்கு நன்மை தராது. யார் ஒருவர் பணத்தை நேரடியாக அவரே தன் கைகளால் ஏழைகளுக்கு அல்லது மக்களுக்கு பகிர்ந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்கின்றனரோ அவர்களே புனிதப் பிறவிகள். அவர்களிடம் நான் விரும்பி இருப்பேன். நீயும் புனிதமாவதற்கு முயற்சி செய். அதற்கு நான் துணையாக வருகிறேன். அனைவரையும் காத்து மகிழ்ச்சியை தருவதே எனது கொள்கை. அதை உள் மனிதனாக இருந்து செய்ய இருக்கிறேன். 


உள்விதி மனிதனின் ஓட்டம் தொடரும்.   


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

மன அழுத்தத்தை தடுக்கும் எளிய வழிகள் EASY WAYS TO AVOID DEPRESSION


அனுபவ பொன் வரிகள் 


மதுரை கங்காதரன் 

மன அழுத்தத்தை  தடுக்கும்  எளிய வழிகள் 
EASY WAYS TO AVOID DEPRESSION  

மனிதனுக்கு 'மன அழுத்தம் ' என்னும் வியாதி தான் கொடிய வியாதி. அது சப்தமில்லாமல் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக உயிரை எடுக்கும். அதை மனிதனை அளிக்கும் 'எமன் ' என்று கூட சொல்லலாம். அது எதனால் வருகின்றது மற்றும் அதற்க்கான தீர்வுகளைப் பார்ப்போம். 

வரும் காரணம் : 1


மனதில் 'தாழ்வு மனப்பான்மை ' மேலோங்கி நிர்ப்பது. தான் மற்றவர்களைக் காட்டிலும் எல்லாவிதத்திலும் குறைந்தவன் அல்லது தனக்கு மதிப்பு ஏதுமில்லை என்பது போல் ஒரு உணர்வு. 

அதன் தீர்வு : 1


இப்போது இருக்கும் நிலைமையை மட்டும் வைத்து எண்ணிக்கொண்டு இருக்காதே! உனது வாழ்க்கையைவிட மோசமாக உள்ள, சாவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் கோடிகணக்கான மக்களின் வாழ்கையை ஒருமுறை பார். அவர்களே நம்பிக்கையோடு காலம் தள்ளுகின்றபோது உன்னால் வாழமுடியாதா! தாழ்வு மனப்பான்மையை உன் மனதிலிருந்து அகற்றிவிடு. உன் வாழ்கையை உயர்த்த வரும் உழைப்பு, முயற்சி என்கிற அழகிய தங்க ரதம் உன்பக்கத்தில் நிற்கிறது. உனது தாழ்வு மனப்பன்மையை தூக்கி எறிந்துவிட்டு , அந்த ரத்தத்தில் ஏறிக்கொண்டு வீறுநடை போடு. அதில் உன்னைபோன்று பாதித்தவர்களை ஏற்றிக்கொண்டு அவர்களுக்கு நல்வாழ்வு கொடு. அவர்களுக்கு புது தெம்பு கொடு. இன்றிருக்கும் நிலைமை நிரந்தரமானவை அல்ல. மாறக்கூடியவை. மன மகிழ்ச்சி கொள். அனைத்தும் சரியாகிவிடும்.


வரும் காரணம் : 2


வாழ்வில் எவ்வித பிடிப்புமில்லாமல் வீணான கற்பனைகள், எண்ணங்களை வளர்த்து கொண்டு 'தன்னம்பிக்கை 'இல்லாமல் இருப்பது.

அதன் தீர்வு : 2


அதற்கு காரணம் 'பயம் ' தான். யாரைக்கண்டும் பயப்பட தேவையில்லை! அவர்களும் உன்னைப்போன்ற மனிதர்கள். அவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் கிடையாது. அவர்களுக்கென்று தனிப்பட விதத்தில் 'பலம்' தனியாக இருப்பதில்லை. உன்னாலும் பலம் பெறமுடியும். அதற்கு 'தன்னம்பிக்கை ' கொள். உன் வாழ்வில் பிடிப்பு தானாக வரும்.    


வரும் காரணம் : 3


பிறர் சுட்டெரிக்கும் வார்த்தைகளால் பேசி அவமதிப்பது. கௌரவத்தை குலைப்பது, உண்மைக்குப் புறம்பாக பழிகளை சுமத்துவது போன்றவற்றை பெரிதாக எண்ணி மனதளவில் வருந்திக் கொண்டிருப்பது.

அதன் தீர்வு : 3


வாழ்கையில் முன்னேறும்போது 'விமர்ச்சனங்கள்' வரத் தான் செய்யும். அதைப்பற்றி அதிகம் கவலை படாமல் , உதறிதள்ளி விட்டு உன்னுடைய குறிக்கோளை நோக்கி பயணம் செய்துகொண்டிரு. அப்போது தான் அவைகள் உன் காதில்விழாது. வெற்றி உனதே!  


வரும் காரணம் : 4


தொழில்களில் அல்லது வேலையில்  முடிவு எடுக்கமுடியாமல் திணறுவது, செய்யும் காரியத்தில் முழு ஈடுபாடு செலுத்த முடியாமல் கவனக் குறைவாக செயல படுவது, மறதியின் காரணமாக பல பிரச்சனைகள் உருவாவது. 

அதன் தீர்வு : 4


முடிவு இடிப்பது, வேலையில் கவனக்குறைவு, மறதி  ஆகியவற்றிக்குக் காரணம் மனம் ஒருமுகப் படுத்தமுடியாமல் இருப்பது. அதை களைவதற்கு தியானப் பயிற்சி சிறிதளவு தினமும் மேற்க் கொள்ளுங்கள். நாளடைவில் அனைத்திலும் தேர்ச்சி பெறுவீகள். 


வரும் காரணம் : 5


சில நேரத்தில் வழக்கமாக இருக்கும் சூழ்நிலைகள் பதிலாக புதிய சூழ்நிலைக்கு மாறும் போது , அதை சமாளிக்க வழி தெரியாமல் திணறுவது, புதிய உணவு மற்றும் உறவுகளில் மாற்றங்கள், தூங்கும் நேரத்தில் பெரிய மாறுதல்களை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடுவது.  

அதன் தீர்வு : 5


எவருக்குமே சூழ்நிலைகள் மாறும்போது அனைத்துமே புதியதாயும், கூச்சமாகவும், யாரிடத்தில் என்ன கேட்பது என்று குழம்புவதும் , தான் மட்டும் தனியாக இருப்பது போன்ற பிரமையும் உண்டாகும். அந்த சமயங்களில், தான் மட்டுமே அதிகமாக கஷ்டப்படுவது போலவும் ஒரு உணர்வு உண்டாகும். ஆனால் பழகப் பழக அந்த சூழ்நிலைகள் உங்களுக்கு பிடிக்கத் துவங்கிவிடும். அதுவரை பொறுமையுடன் மாற்றத்திற்கேற்ப அனுசரித்து நடந்து கொண்டால் அந்த சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறிவிடும். ஆத்திரப்பட்டு அப்போது சட்டுபுட்டென்று முடிவு எடுத்துவிடக்கூடாது. அப்படி எடுக்கும் முடிவு சரியாக இருக்காது. பொறுமை கொள். உனக்கேற்றவாறு சூழ்நிலைகள் மாறும்.    

வரும் காரணம் : 6


வேலை, வேலை என்று ஓய்வில்லாமல் , மனதிற்கு சிறிதளவு கூட ஓய்வு கொடுக்காமல் இருப்பதும், பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் கலங்கி நிற்பது.

அதன் தீர்வு : 6


'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்பது சரிதான். ஆனால் உடலை, மனதை வருத்திக்கொண்டு உடல் ஆரோக்கியம் இழந்துவிடக்கூடாது. வேலைக்கு நேரம் ஒதுக்க வேண்டும். அதில் தவறில்லை. ஆனால் அதுவே பல புது பிரச்சனைக்கு வழிவகுக்கக் கூடாது. உடல், மனதிற்கு கட்டாயம் நிம்மதியான ஓய்வு தேவை. அது தூங்குவதால் மட்டுமே சாத்தியமாகும். அதற்காக ஒரு நாள் பிக்னிக், வெளி, உள்நாடு சுற்றுப் பயணம் மேற்கொள்வதால் மனதில் உற்சாகமும், உடலில் புத்துணர்ச்சியும் உண்டாகும். பிரச்சனையினால் ஏற்படும் கலக்கம் மறைந்து அதை எதிர்கொள்ளும் மனவலிமை கிடைக்கின்றது. 

வரும் காரணம் : 7


தோல்விகளையே நினைத்துக்கொண்டு மனச்சோர்வையும், மன உறுதியையும் இழத்தல். 

அதன் தீர்வு : 7


'தோல்வி' என்பது ஒரு பனிப்பாறை. வெப்பம் தாக்காத வரையில் அதன் உறுதி 'டைட்டானிக்' போன்ற மிகப்பெரிய கப்பலையே கவிழ்த்து விடுமளவிற்கு வல்லமை கொண்டது. ஆனால் முயற்சி மற்றும் கடின உழைப்பு என்னும் வெப்பம் அதன்மீது படும்போது , அந்த மலை போன்ற பனிப்பாறை உருகி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். ஆகையால் தோல்வி ஏற்படும் போது உழைப்பையும், முயற்சியையும் விட்டுவிடக் கூடாது.   

வரும் காரணம் : 8



அன்பு உள்ளங்களை எதிர்பாராமல் இழக்கும்போது அதனால் தற்கொலை பற்றிய எண்ணங்களை வளர்த்துக்கொள்ளும் போதும் .... 

அதன் தீர்வு : 8


எதிர்பாராமல் அன்புள்ளங்களை இழக்கும்போது மாமதில் பூகம்பங்கள், எரிமலை மற்றும் சுனாமி போன்ற ஆபத்தான உணர்வுகள் ஓங்கி வரும். உன் மனஉறுதி கொண்டு பூகம்பத்தை நிறுத்து! அன்பு , சாந்தம், இரக்க குணத்தை அதிகரித்து எரிமலையை குளிரச் செய். தன்னம்பிக்கை கொண்டு சுனாமி அலைகளை கட்டுப்படுத்து. நீ நினைப்பது இனி நடக்கும்.

வரும் காரணம் : 9


பிறர் உதவியால் எளிதாக தீர்க்கும் பிரச்சனைகளை மனதிலே அடக்கிக் கொண்டு , பிறரிடம் அந்த பிரச்சனை மற்றும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது....

அதன் தீர்வு : 9


நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் அதே பிரச்சனையை எதிர்கொண்டு சிலர் எளிதாக தீர்த்து வெற்றி கண்டிருப்பார்கள். அவர்களிடம் பிரச்னையை பகிர்ந்துகொண்டு அதன்படி நடந்தால் கை மேல் பலன் கிடைக்கும். அப்படிப்பட்ட நபர்களின் நன்பகத்தன்மையை கண்டிப்பாக உறுதி செய்துகொள்ளவேண்டும்.  

வரும் காரணம் : 10


உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் தொந்தரவினால் எப்போதும் அழுவது.  

அதன் தீர்வு : 10


தகுந்த மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையினை உடனடியாக மேற்கொண்டு அதன்படி நடப்பது. உடற்ப்பயிற்சி, தியானம், யோகா மற்றும் உங்களுக்கு பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்றவற்றில் கவனம் செலுத்தும்போது  உங்கள் உடல் மற்றும் மனம் புதிய பலம் பெரும். 

வரும் காரணம் : 11


தான் நினைத்தது நடக்காமல் இருக்கும் சமயத்தில் ஆவேசமும், எரிச்சலும் அதிகரிக்கும் போது....

அதன் தீர்வு : 11


எந்த ஒரு காரியம் நடக்கவேண்டுமென்றால் காலமும், நேரமும் கை கூடும் வரை காத்திருக்க வேண்டும். பொறுமையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் குறிக்கோளை அடைவீர்கள்.

வரும் காரணம் : 12


நேரம் காலம் தெரியாமல் செல்போன் அழைப்புகள் வருவது..

அதன் தீர்வு : 12


செல்போன் அழைப்புகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஏற்றுக்கொண்டு பதிலளியுங்கள். மற்ற நேரத்தில் 'சைலன்ட் மோட் ' இல் வைத்துக்கொள்ள முயலுங்கள். 'தலை போகும் காரியத்திற்கு ' மட்டும் மதிப்பு கொடுங்கள். நல்லதே நடக்கும் என்று எப்போதும் நம்பிக்கை கொள்ளுங்கள்.


மன அழுத்தம் என்பது மனதில் ஏற்பட்ட காயங்களை  அடிக்கடி நினைவுகளின் மூலம் வெளிக்கொண்டு வந்து, அதன் மூலம் வீணான கற்பனைகளை வளர்த்து, விபரீத எண்ணங்களை உருவாக்கி, ஆபத்தான செயலில் முடிவது.

மன அழுத்தத்தின் வேகம் அசுர வேகம். எதையும் சிந்திக்காமல் , சூழ்நிலைகளை மறக்கச் செய்து ஆபத்தான முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டது. 

பொதுவாக மன அழுத்தத்தை தடுக்க , எதையுமே திட்டமிட்டுச் செய்யுங்கள். அதனால் செயல்களை செய்வதற்கு அதிக நேரம் கிடைக்கும் . நிதானமாக , நினைத்த நேரத்தில் வெற்றிகரமாக செய்துவிடலாம்.

திட்டமிடுவோம்!


மன அழுத்தம் ஏற்படுவதை தடுப்போம் !


  

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   

Saturday, 13 October 2012

உள்விதி மனிதன் பாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் இதோ - KNOW YOUR PREVIOUS GENERATION SIN / VIRTUE


உள்விதி மனிதன் 
 சம மனிதக் கொள்கை 

பாகம் : 16  உனது பூர்வ ஜென்ம
 புண்ணியம் / பாவம் இதோ -
KNOW YOUR PREVIOUS GENERATION SIN / VIRTUE 


இனிய மனிதா! நீ இந்த உள்விதி மனிதனைப் பெருமையாக வைத்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி! பூர்வ ஜென்ம புண்ணியம் பொறுத்து தான் உன்வாழ்க்கை அமைகிறது என்றெல்லாம் மகான்கள், பெரியோர்கள், அறிஞர்கள் சொல்லக் கேள்விபட்டிருக்கிறோம். அந்த பூர்வ ஜென்ம புண்ணியம் என்றால் என்ன? என்று உன்னிடத்தில் கேட்டால் நீ முன்பு செய்த பாவபுண்ணியம் பொறுத்து தான் இந்த வாழ்க்கை கிடைத்துள்ளது என்று நீ சொல்லுவாய்! சரி தானே.

அன்பு மனிதா! அதன் விளக்கத்தைக் கேள். பூர்வஜென்ம புண்ணியம் என்பது நீ முன் ஜென்மத்தில் செய்தது கிடையாது! 'பூர்வ' என்பது 'முன்' என்பது அர்த்தம். அதாவது உனக்கு முன் இந்த உலகில் யார் இருந்தார்கள். உன்னைப் பொறுத்தவற்றில் சந்தேகம் இல்லாமல் உன் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, சகோதர சகோதரிகள், உறவினர்கள் என்று இவற்றில் ஏதாவது ஒருவரோ அல்லது பலரோ தான் இருந்திருப்பார்கள். அவர்களின் நல்ல (புண்ணிய), கெட்ட (பாவ) செயல்களைப் பொறுத்து தான் உனது வாழ்வு அமைகிறது. கோடீஸ்வரன் மகன், ஒரு கோடீஸ்வரன் தான். அது போல் ஆண்டியின் மகன் ஆண்டி தான். இதில் கோடீஸ்வரன் அல்லது ஆண்டியாவது அவரவர் வாழும் வாழ்கையை பொறுத்துத் தான். உன்னுடைய இந்த ஜென்மம் சிறப்பாக இருந்தால் தான் உனது வாரிசு ஜென்மங்கள் சிறப்பாக இருக்கும். அவர்கள் செழுமையாக இருப்பதற்காக இப்போதுள்ள உனது நிலைமையை நல்ல நிலையில் உயர்த்திக் கொள். அதை செய்யத்தான் நான் உன்னுள் இருந்து ஓடிக்கொண்டு இருக்கிறேன். அதைவிட்டுவிட்டு நீ போன ஜென்மத்தில் கர்ணன், அந்த ராஜா, இந்த ராஜா என்று யாராவது சொல்லி உன்னிடமிருந்து பணம் பறிக்க நினைத்தால் அதற்கு  ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டேன். அப்படி உனது செல்வத்தை அவர்களுக்கு கொடுத்தால் இப்போது உள்ள உனது நிலைமையும் மோசமாகிவிடும் ஜாக்கிரதை! அப்படி காது குளிர கேட்டு நீ மயங்கிவிடாமல் நான் பார்த்துக் கொள்ளவே வந்திருக்கிறேன்.

மதிப்பு மிக்க மனிதா! நான் உனக்கு ஆரம்பத்தில் கொடுத்த செல்வங்கள் உன்னிடத்தில் சேர்க்கும் வரை நான் ஓயமாட்டேன். அதற்கு உனது ஒத்துழைப்பு எனக்குத் தேவை. அதற்குத் தேவையான அறிவும், ஆற்றலும் உனக்கு நான் தருகிறேன்.  உன் அப்பா, அம்மாவின் சொத்து  அல்லது அவர்களின் வாரிசு சொத்து, அவர்களின் நல்ல பெயர்கள், அவர்கள் செய்த நல்ல காரியங்கள் அனைத்தும் உன்னை வந்து சேர்வதால் நீ புண்ணியவானாகிறாய். உனது வாழ்வும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனால் அதை நிலைக்க வேண்டுமென்றால் நீயும் அவர்களைப்போல தவறாது நல்ல விதத்தில் சொத்துக்களையும், நல்ல பெயர்களையும் சம்பாதித்து கொடுத்தால் உனது அடுத்த வாரிசுகள் (ஜென்மம்) நன்றாக இருப்பார்கள். அதேபோல் அனைவரிடத்தில் கடன் வாங்கியோ அல்லது இருந்த செல்வங்களை இழந்தோ ஒன்றுமில்லாமல் ஆண்டியாய் இருந்தால் உனது வாரிசுக்கு எந்தவிதாமான சுகம் இல்லாமல் போய்விடும். அதற்கு இப்போதிலிருந்து உனது செல்வத்தை பெருக்கிக் கொள். அதற்கு உனக்கு முழு ஆதரவு தருகிறேன். மேலும் திருடன், கொலைகாரன், அயோக்கியன், கொள்ளைக்காரன் என்று பெயரை சம்பாதித்து கொடுத்தால் உனது வாரிசுகள் அதனால் பெரும் துயரை அடைவார்கள். இருப்பினும் அவர்களுக்கு என்னுடைய அன்பும் ஆதரவும் தந்து அவர்களை நல்ல மனிதர்களாக மாற்றும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது. அதைப் பற்றி கவலை கொள்ளாதே! ஏனென்றால் என்னிடத்தில் கல்வி பொருள், சுபிட்சம் கடல் போல இருக்கின்றது.

பெருமையுள்ள மனிதா! இப்போதுள்ள உன் சொத்தோ அல்லது பூர்வீகச் சொத்தோ உனக்குள்ள வாரிசுகளுக்குக் கொடுப்பதன் மூலம் அவர்கள் இல்லாதவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதன் மூலம் நல்ல பெயர் கிடைக்கின்றது. அதைவிட்டு விட்டு பேராசை கொண்டு தீய வழியிலோ அல்லது குறுக்கு வழியிலோ செல்வங்களை சேர்க்க நினைத்தால் அது உன் வாரிசுகளுக்குப் பாவமாய் அமைந்து நிம்மதியையும், சந்தோஷத்தையும் கெடுப்பதோடு உனக்கு வாழ்க்கை முழுவதிற்கும் அவபெயரை வாங்கித்தந்து விடும். நல்ல வழியில் சென்றால் நான் உனக்குத் துணையாய் இருப்பேன். கெட்ட வழியில் சென்றால் நானே உனக்கு முதல் எதிரி. ஜாக்கிரதை!

மதிப்பு மிக்க மனிதா! எதெற்கெடுத்தாலும் மாயை, விதி என்ற இருவகைகளை பேசுவதை கேட்டிருக்கிறோம். அதாவது மகான்கள் மாயை எனவும், மனிதர்கள் விதி எனவும், நேரம், காலம் எனவும் பேசுவார்கள். அது புரிந்தோ அல்லது புரியாமலோ தலையை ஆட்டுகிறாய். அதைப்பற்றி விரிவாகவும், தெளிவாகவும் பேசுகிறேன். சற்று பொறுமையுடன் கேள்! அவைகளெல்லாம் ஒருவகையில் நல்ல தீய செயல்களே. அவைகளெல்லாம் நிலைத்தன்மை அற்றவை. நொடியில் மாறுபவை...

உள் மனிதனின் ஓட்டம் தொடரும்.   

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com