Pages

Tuesday, 8 January 2013

உங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள் EASIEST WAY TO COME FIRST IN YOUR LIFE

உங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள் 

  
EASIEST WAY TO COME FIRST IN YOUR LIFE
 
அனுபவப் பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

நீங்கள் எத்தனயோ மோட்டார் கார் பந்தயம், மோட்டார் பைக் பந்தயம், குதிரை பந்தயம் போன்றவரை பார்த்து ரசித்திருப்பீர்கள். அதில் முறையே கார், பைக், குதிரை முதலில் வந்தாலும் முதல் பரிசு கிடைப்பதென்னவோ அதை இயக்குபவருக்குத் தான். 

  

எல்லோரும் ஒரே மாதிரியான கார், பைக், குதிரை இருந்தாலுல் அதை இயக்குவதில் திறமை, ஆற்றல், அறிவுடன் தன்னம்பிக்கை மிகவும் அவசியமாகிறது. அதாவது இந்த பூமியில் பலர் வாழ்கிறார்கள். இருப்பினும் ஒரு சிலர் மட்டும் வாழ்கையில் முன்னேறி சரித்திரம் படைக்கின்றனர். இவர்களுக்கு மட்டும் வெற்றி கிடைப்பது எதனால் சாத்தியமாகிறது?

 

உதாரணமாக நீங்கள் ஒரு புதிய கார் வைத்திருக்கிறீர்கள். அந்த காரை ஓட்டிக்கொண்டு போகும்போது ஓரிடத்தில் வெவ்வேறுவிதமான நான்கு சாலைகள் பிரிந்து செல்வது தெரிகின்றது.  அதாவது ஒன்று 'ரப்பர் சாலை ', இரண்டாவது 'சிமெண்ட் சாலை,' மூன்றாவது 'தார் சாலை ' , நான்காவது 'செம்மண் சாலை' என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் உங்கள் பயணத்திற்கு எந்த சாலை தேர்ந்தெடுப்பீர்கள்? 

  

கிட்டத்தட்ட 95% பேர்கள் 'ரப்பர் சாலையைத்' தான் தேர்ந்தெடுப்பார்கள். என்னென்றால் அதில் பயணம் செய்தால் காற்றில் பறப்பது போல் ஒரு உணர்வு உண்டாகும். மேலும் காருக்கும் அவ்வளவாக பிரச்சனை இருக்காது என்று விளக்கம் கூறுவார்கள்.

 

ஒரு 3% பேர்கள் சிமெண்ட் சாலை என்று சொல்வார்கள். பிறகு 2% பேர்கள் தார் சாலை என்று சொல்வார்கள். ஆனால் ஒரு சதவீததிற்குக் குறைவாக புழுதி பறக்கும் செம்மண் சாலையை தேர்ந்தெடுப்பார்கள். சரி இவர்களில் யார் சொல்வது சரி? நீங்களாய் இருந்தால் எந்த பாதை தேர்ந்தெடுப்பீர்கள்?ஏன் என்று விளக்கம் தர முடியுமா?

  

இதற்கு நானே விளக்கம் சொல்கிறேன். எல்லோரும் சொல்வது தவறு! அதாவது இதில் நீங்கள் செல்லும் சாலை முக்கியமல்ல. நீங்கள் போய் சேர  நினைக்கும் இடம் எந்த சாலை (திசை) யில் இருக்கின்றதோ அந்த சாலையில் பயணம் செய்தால் தான் உங்களது (குறிக்கோள்) இடம் போய்ச் சேரமுடியும். அது செம்மண் சாலையாக இருந்தால் கட்டாயம் அதில் தான் பயணம் செய்யவேண்டும். அதாவது ஒரு குறையும் இல்லாமல் 'ஜம்' மென்று போகும் ரப்பர் சாலையில் பயணம் செய்தால் நீங்கள் நினைக்கும் குறிக்கோளை ஒருபோதும் அடைய இயலாது.

 

இன்றைக்கு இருக்கும் இளைஞர்கள் தங்களது குறிக்கோள், கல்வித் தகுதி பற்றி கருத்தில் கொள்ளாமல் சொகுசாக ஏ.சி ரூமில் இருந்துகொண்டு ஒயிட் காலர் வேலையைத் தான் விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் படித்ததோ கட்டிடத் துறை, விவசாயத் துறை, பராமரிப்புத் துறையாக இருக்கும். 

 

ஆக நீங்கள் உங்கள் வாழ்கையின் கார் முதலில் வரவேண்டுமென்றால் கஷ்டமான , கரடுமுரடான பாதையாக இருந்தாலும் உங்கள் பயணக்குறிக்கோள் அதில் சென்றால் கட்டாயம் உங்கள் கார் தான் முதலில் வரும்.

 

அதற்கு உங்களுக்குத் தேவையானவைகள்:  
 

1. காலத்திற்குத் தகுந்தாற்போல் தங்களை தகுதியை மேம்படுத்திக் கொள்ளும் திறம்.

2. 'என்னால் முடியும் ' என்கிற தன்னம்பிக்கை எப்போதும் இருக்க வேண்டும்.

3. யாதொரு இடர் வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை வளர்த்துக்கொள்ள வேண்டும். விடாமுயற்சி அவசியம் தேவை.

4. அனைவர்களிடத்தில் சுமூகமான நல்லுறவு வைத்துக்கொள்ள வேண்டும். 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

5. திறமை உள்ளவர்களுக்கு எப்போதும் மதிப்பு கொடுத்து அவர்களின் ஆலோசனைகளை தவறாமல் கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.

இன்றிலிருந்து உங்கள் 'வாழ்க்கை கார் '
உங்களின் குறிக்கோள் பாதையில் 
வலம் வரட்டும். 

  
வெற்றி உங்களுடையதே!      
  
  
   

  

Monday, 7 January 2013

கவலைகளை அழிக்கும் வழி - ஆசை நிறைவேறும் வழி - A WAY TO DESTROY WORRIES

கவலைகளை, கஷ்டத்தை, தீயவைகளை அழிக்கும் எளிய வழி மற்றும் 
உங்கள் ஆசை நிறைவேறும் வழி - 
A WAY TO DESTROY YOUR WORRIES
அனுபவப் பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 


நமக்கு உபயோகப்படாத பொருட்களை ஒருபோதும் பத்திரப்படுத்தி வைத்திருப்பதில்லை. மாறாக அதை எரித்டுவிடுகிறோம். கெட்டு போன உணவுகளை நாம் குப்பையில் சேர்த்துவிடுகிறோம். வேண்டாத உறவுகளையும், நட்பையும் நாம் அடியோடு மறந்து விடுகிறோம். 

  

அதற்குமாறாக நமக்கு நன்கு தேவைப்படும் பொருட்களை மிகவும் பத்திரமாக [பாதுகாத்து வருகிறோம். உணவு பொருட்களை கெடாமல் இருக்க அதை குளிர் சாதணப் பெட்டியில் வைக்கிறோம். அன்பான உறவுகளையும், நம்பிக்கையான நட்புகளையும் நாம் விட்டுக்கொடுக்காமல் இருந்து வருகிறோம்.

 

ஆனால் மனதில் இருக்கும் கவலைகளை, பிரச்சனைகளை எவ்வாறு நாம் தூக்கி எறிவது? அதேபோல் நன்மை தரும் நினைவுகளை, வாழ்கையை உயர்த்தும் குறிக்கோளை எவ்வாறு அடைவது என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.


அன்றாடம் சிலர் பின்பற்றும் முறைகள் :

குழப்பமான முடிவுகள்: 

 

நம்மால் கணிக்க முடியாத குழப்பமான முடிவுகளை பூவா, தலையா போட்டுப் பார்த்தும், பூ போட்டுப் பார்த்தும், ஒற்றையா? இரட்டையா ? மூலமாகவும், சின்ன விரல், பெரிய விரல் என்பதிலும், நம்பிக்கையானவர்களின் ஆலோசனைபடியும் முடிவு எடுக்கிறார்கள்.


கவலைகளை அழிக்கும் வழி :

 

இப்போது உங்களுக்கிருக்கும் கவலைகள், பிரச்சனைகள மற்றும் கஷ்டங்களை வரிசைபடுத்தி அல்லது உங்களிடம் இருக்கும் கவலைகளை ஒரு பேப்பரில் எழுதவும். அதாவது 'என்னிடம் இந்த கஷ்டத்தை அழித்துவிடுகிறேன்' என்று எழுதி அந்த பேப்பரை எரித்துவிடுங்கள். இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்தால் உங்களின் அந்த பிரச்சனை நீங்கிவிடும். பிறகு வேறொரு கஷ்டத்தை பேப்பரில் எழுதி அதை எரித்து விடுங்கள். இந்த முறையினை பின்பற்றினால் கூடிய விரைவில் உங்களிடம் இருக்கும் அனைத்து கவலைகளும் நீங்கிவிடும். இந்த முறை உங்கள மனதில் பதிந்திருக்கும் கவலைகளை எழுத்து மூலம் பேப்பரில் எழுதி உங்கள் கண் முன்னே அழியும்போது உங்கள் மனதில் உள்ள கவலையும் சேர்ந்து அழிந்துவிடுகின்றது.

குறிப்பு.  (இதற்கு மிகவும் கவனம் தேவை. வெளியில் இதை  செய்ய வேண்டும். கை, கால் உடம்பில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்)

ஆசைகளை அடையும் வழி :

 

அதேபோல் நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான கடின வேலைகளை ஒரு பேப்பரில் தினமும் ஒருமுறை எழுதுங்கள். அவ்வாறு மூன்று முறை எழுதி அதை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். கட்டாயம் உங்களது குறிக்கோள் நிறைவேறும். மனதில் உள்ள குறிக்கோளை பேப்பரில் எழுதி படித்து பார்க்கும்போது உங்களுக்கு தன்னம்பிக்கையும், அதிக ஆற்றலும் கிடைக்கின்றது. அதனால் எளிதாக உங்கள் ஆசை நிறைவேறும்.

       

 

SWOT இருந்தால் உங்களுக்கு பெரிய பதவி கிடைப்பது உறுதி - YOU CAN GET GOOD POSITION WITH 'SWOT'

SWOT (கடின உழைப்பு) இருந்தால் 
உங்களுக்கு பெரிய பதவி கிடைப்பது உறுதி 
YOU CAN GET GOOD POSITION WITH 'SWOT'
அனுபவப் பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 



இன்றைய இளைஞர்கள், மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்துவிட்டால் யார் வேண்டுமானாலும் வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள் என்று. அது அந்தக்காலம். 


இன்றைக்கு நல்ல மதிப்பெண்களோடு SWOT (கடின உழைப்பு) இருந்தால் தான் நீங்கள் நினைக்கும் வேலை கிடைக்கும். முதலில் SWOT என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளவேண்டும்.


S  -  SPEAKING       (பேச்சாற்றல்)
W - WRITING         (எழுத்தாற்றல்)
O -  OBSERVING    (உற்று நோக்குதல்)
T -  THINKING      ( சிந்தனை)


ஏன் மேற்க்கூரியவைகள் வேண்டும் என்று கேட்கிறார்கள். அவைகள் இருந்தால் தான் ஒருவரால் எந்த ஒரு வேலையையும் நன்றாக புரிந்து கொண்டு சிறப்பாக செய்ய முடியும். அதோடு நில்லாமல் அவர்கள்  புரிந்துகொண்ட தகவல்களை மற்றவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க முடியும் அல்லது பரிமாறிக்கொள்ள முடியும். இவ்வகையான திறமைகள் இல்லாது போனால் உங்களுக்கு பெரிய வேலை கிடைப்பது அரிதான காரியம் தான். 


SWOT என்பது கடின உழைப்பு என்பது பொருள். வெறும் கடின உழைப்பு மட்டும் இருந்தால் போதாது. மேற்கூறிய நான்கும் இருந்தால் உங்களுக்கு கூடுதல் மகிப்பு கிடைக்கும்.


வேலைக்கு மட்டுமில்லாமல் , சிறந்த நிர்வாகத்திற்கும், ஒரு நிறுவனத்தை சிறப்பாக நடத்த்துவதற்க்கும், பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கும்  தேவையான ஒன்று. குறிப்பாக பெரிய  பதவியில் இருப்பவைகள் மேற்கூறிய திறமைகள் இருந்தால் தான் அந்த பதவியில் தக்கவைத்துக் கொள்ளமுடியும். 


ஒரு வேளை இத்தகைய திறமைகள் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக பெரிய நிர்வாகப் பதவி கிடைத்துவிட்டால் உடனே அந்த நான்கு திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அத்தகைய திறமைகள் உள்ளவர்களை தங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.  அவர்களிடம் மூலம் இந்த திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு சிறிய வேலைக்கும் அவர்களுடைய தயவு எதிர்ப்பார்த்து நிற்க வேண்டியிருக்கும். ஒருகட்டத்தில் அவர்களே உங்களுக்கு போட்டியாக வந்து உங்களுடைய பதவியை பறித்துக்கொள்ளும் அபாயம் ஏற்படும். 


ஒரே நாளில் இந்த ஆற்றல்கள் வந்துவிடாது. சிறுக சிறுகத் தான் வரும். அதற்கு தினமும் இரண்டு அல்லது மூன்று புதிய கடிமான சொற்களை அகராதியின் மூலம் அர்த்தம் தெரிந்து கொண்டு, அதைக்கொண்டு இரண்டு அல்லது மூன்று வாக்கியங்களை அமைத்து பழக வேண்டும். தவறுகள் இருந்தாலும் பரவாயில்லை. தினமும் முயற்சி செய்து வரவேண்டும். அதேபோல் பத்திரிகை வாசிப்பு மிகவும் அவசியம். ஐந்து நிமிடங்கள் இருந்தால் போதுமானது. அவ்வாறு வாசிக்கும்போது தெரியாத சொற்களுக்கு அகராதியின் மூலம் அர்த்தம் தெரிந்து கொள்ளவேண்டும்.


முதலில் அதை பின்பற்றுவது கடினமாகவும், சோம்பேறித்தனமாகவும், இதெல்லாம் தேவையா? என்றும் தோன்றும். ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய நேரம் ஏதாவது ஒரு வகையில் உங்களுடைய வாழ்க்கைக்கு தேவையானவற்றிற்கு செலவிட்டுப் பழகிக்கொள்ளுங்கள். நீங்கள் தவறவிட்ட நேரம் திரும்ப வராது.


இவ்வாறு செய்துகொண்டு வந்தால் நீங்கள் நினைக்கும் பெரிய பதவி கிடைப்பதோடு அதில் நிலையாக நிலைத்து நிற்கவும் முடியும்.