Pages

Monday, 21 October 2013

60. GET SUCCESS FROM GROUND, SEA OR EVEN IN SKY ! - 60. வெற்றியை நிலம்,கடல் மற்றும் ஆகாயத்திலிருந்து பெறு !


HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARAN


60. GET SUCCESS FROM 
GROUND, SEA OR EVEN IN SKY !


* Past is past. Alert now. Today is the day to start your tomorrow's success journey.

* Working groups are getting money in their hand and enjoying the life. But luck expecting groups are seeing money in the mirror and getting satisfaction.


* Constantly re-evaluate your surrounding and the method of style that you are using to reach your goal. Sometime you have learn from it and find a better way to do it the next time.


* We should defined our goal what ever the cost may be. We shall get it in the ground, we shall get it the sea even in the sky also. Any way, we shall never give up.


* Time is also a killer . If you are not handle the time properly it will eat you.  

Success life steps continues next.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 
60. வெற்றியை நிலம்,கடல் மற்றும் ஆகாயத்திலிருந்து பெறு !


* சென்ற நாட்கள் போகட்டும். இப்போது விழித்துக்கொள்! இன்றைய நாள் நாளைய 'வெற்றி அடையும் நாள்' என்று எண்ணி பயணத்தைத் தொடங்கு.

* உழைப்பாளிகள் கையில் பணத்தைப் பெற்று வாழ்கையை அனுபவிக்கிறார்கள். ஆனால் அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து நிற்பவர்களோ முகம் பார்க்கும் கண்ணாடியில் பணத்தை பார்த்து வாழ்கையில் திருப்தி அடைகிறார்கள் மேலும் பெருமூச்சு விடுகிறார்கள்.


* உங்களைச் சுற்றி நடப்பவைகளை மற்றும் உங்கள் குறிக்கோளை அடையும் முறையினையும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பரிசீலிக்க வேண்டும். தேவைபட்டால் அந்த வழியை மாற்றியோ அல்லது மேம்படுத்தவும் செய்யலாம். ஆனால் ஒவ்வொரு தடவையும் நீங்கள் அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்வதோடு அடுத்த தடவை நல்ல புதிய வழிகளை கடைபிடிக்க செய்யும்.


* எவ்வளவு மதிப்பு இருந்தாலும் பரவாயில்லை. நாம் நம்முடைய குறிக்கோளை அடைவதற்கு தக்க வழியினை உருவாக்கிக் கொள்ளவேண்டும். அது நிலத்தில் தேடினாலும் சரி ! கடலில் கிடைத்தாலும் சரி ! அல்லது ஆகாயத்தில் இருந்தாலும் சரி! ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் நாம் நமது கொள்கையிலிருந்து பின்வாங்கக் கூடாது.


* 'நேரம்' ஒரு கொலைகாரன் தான்! அதை நீ சரியாக கையாளவிட்டால் அது உன்னைக் தின்று விடும்.



வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
     

59.FOUR WORD MAGIC 'MANTRA' FOR BEST EARNING- 59. அதிகம் சம்பாதிக்க நான்கு சொல் மந்திரம் !


HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARAN


59.FOUR WORD MAGIC 'MANTRA' FOR BEST EARNING

* If you want to earn things like money , knowledge , bravery - it has required a four- term mantra which is 'still you try hard '

* Discipline is the combination of the body , mind and defined action .


* If you have a confident that ' Everything is possible ' then you will get what do you think!



* A man is treated like a god - Who is giving more than that of receiving without expect anything.


* If you get rid of a spider or you damaged it's web so many times, all the times immediately spider has started to construct a web net.  Like wise You are facing failures or problems all time you never loose your  confidence and perseverance. 

Success life steps continues next...

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

59. அதிகம் சம்பாதிக்க நான்கு சொல் மந்திரம் !



* பொருளை, பணத்தை, அறிவை, வீரத்தை சம்பாதிக்கத் தேவையான நான்கு சொல் மந்திரம் ' மேலும் கடினமாக முயற்சி செய்'


* ஒழுக்கம் எதிலிருந்து பிறக்கிறதென்றால் உடல், மனம் மற்றும் கட்டுப்பாடான செயல்.

* 'எல்லாமே சாத்தியம்' என்று நம்புகிறவன் தான் நினைத்ததை எல்லாம் அடைகிறான்.


* பெற்றுக்கொள்வதை விட அதிகமாக யார் ஒருவர் பிரதி பலன் கருதாது கொடுக்கிறார்களோ அவர்கள் இறைவனுக்கு ஒப்பானவர்கள்.

* சிலந்தி பூச்சியைத் துரத்துகின்றபோதும், வலையை களைகின்ற போதும் அது மீண்டும் மீண்டும் வலைகளைப் பின்ன அசருவதில்லை. அதுபோல நீங்கள் தோல்விகள், துன்பங்களை எதிர்கொள்ளுகிற போதெல்லாம் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியை இழந்துவிடக்கூடாது.   

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

58. WHEN WILL 'WISDOM' COME? - 58. ஞானம் எப்போது வரும் !



HAVE A NICE LIFE STEPS



MADURAI GANGADHARAN


58. WHEN WILL 'WISDOM' COME?

                                
* Innovative ideas that emerge through by viewing outside as well as from your experience. 


* The nature of fear - People, who are all feared about a man, he will also fear about many people. 


* If you want to get anything from life or human, you must give a minimum price for that.


* When you stop to think yourself , at the same time you tend to stop to afraid as well as desire also. 


* When you realize that your are mingled inside within you, means you have attained 'wisdom' .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 

58. ஞானம் எப்போது வரும் !



* வெளியில் நீ பார்க்கும் காட்சிகளின் மற்றும் கிடைக்கும் அனுபவத்தின் 
மூலம் தான் புதுமையான எண்ணங்கள் உருவாகும்.



* பயத்தின் தன்மை - யாரைக்கண்டு பலர் பயப்படுகிறார்களோ, அதே நேரத்தில் அவரும் பலரைக் கண்டு பயப்பட்டுக் கொண்டிருப்பார். 


* வாழ்க்கையிடம் அல்லது மனிதர்களிடம் நீங்கள் எதை வாங்க நினைத்தாலும் அதற்கு குறைந்தபட்ச விலையாவது கொடுத்தே தீரவேண்டும்.


* நம்மைப் பற்றி நாம் சிந்திப்பதை நிறுத்துகின்ற போது பயப்படுவதையும், ஆசைபடுவதையும் நாம் நிறுத்தி- விடுகிறோம்.  


* உங்களுக்குள் நீங்கள் அடக்கம் என்று எப்போது உணருகிறீர்களோ அப்போதே  'ஞானம்' அடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

Thursday, 10 October 2013

மகனிடம் கற்க வேண்டிய பாடம் - சிறுகதை - மதுரை கங்காதரன்

மகனிடம் கற்க வேண்டிய பாடம் 


சிறுகதை 

மதுரை கங்காதரன் 

புதிதாக வாங்கியிருக்கும் 'மொபைலை ' பத்திரமாகப் பிரித்தான் சுந்தர்.

"என்னங்க ! ஏது இந்த புது மொபைல் ! எவ்வளவு ஆச்சு' என்று சுந்தரின் மனைவி ராதிகா ஆச்சரியாமாக பார்த்தாள். 

"சும்மா பத்தாயிரம் தான்"

"என்ன பத்தாயிரமா? அப்படியென்ன இதிலே இருக்கு?"



"என்னவா! இது எல்லாமே டச் ஸ்கிரீன் தான்.இதோ, இந்த மொபைல் புத்தகத்திலே இதை எப்படி இயக்குறதுன்னு தெளிவா போட்டிருக்காங்க. நான் படிச்சு அதுபடி செஞ்சு பார்த்து உனக்குச் சொல்லித் தருகிறேன். ம்.. இதுக்கே பாதி நாள் ஆயிடும் போலயிருக்கு. முக்கியமா இதுக்குள்ளே போறதுக்கு 'பாஸ் வேர்டு' இருக்கு. அதைப் பத்தி விவரமா படிச்சு முடிச்ச பிறகு சொல்றேன்" என்றான் சுந்தர்.

"சரி சரி ..நீங்க படிங்க.. எனக்கு சமையலறையிலே வேலை இருக்கு" என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் ராதிகா.

சுமார் ஒரு மணி நேரம் ஆயிருக்கும்.


"என்னங்க , இன்னுமா படிச்சு முடியல்லே! இங்கே கொடுங்க அந்த புத்தகத்தை!" என்று கேட்டு வாங்கி ஒரு பக்கத்தைப் படித்துப் பார்த்தாள்.

"என்னங்க ஒன்னும் புரியல்லை. ம்.. நீங்க எப்போ படிச்சு முடிக்கிறது.எப்போ உபயோகிக்க போறோமோ?" என்று மீண்டும் சமையலறைக்கு ஓடினாள்.

சில நிமிடங்கள் கடந்திருக்கும். சுந்தரின் பழைய மொபைலில் ஒரு அழைப்பு மணி வந்தது.


யார் பேசுகிறார்கள் என்று பார்த்துவிட்டு " சொல்லு ராஜா ..நான் சுந்தர் பேசுறேன். அங்கே அப்பா அம்மா எல்லோரும் சௌக்கியமா? நீ இப்போ எங்கேயிருந்து பேசுறே?" என்று பேசிக்கொண்டே ராதிகாவிடம் அந்த மொபைலை கொடுத்தான். நம்ம ராஜா பேசுறான்" என்று கொடுக்க ,"யாரு நம்ம ராஜாவா" என்று சமையலை மறந்து அரை மணி நேரம் பேசிவிட்டு அவசரம் அவசரமாக சமையலை கவனிக்கும் வேலையில் அந்த மொபைலை எங்கேயோ வைத்துவிட்டாள் ராதிகா.

சுந்தர் மும்முரமாக அந்த புத்தகத்தை ஒவ்வொன்றாக படித்து அதன்படி செய்யும் வேலையில் மூழ்கியிருந்தான்.

இந்த நேரத்தில் மூன்றாவது படிக்கும் அவனது பையன் தன் அப்பாவின் கையில் புது மொபைலை பார்த்தவுடன் " டாடி. இது நீங்க வாங்கின புது மொபைலா?'


"ஆமாண்டா செல்லம். இன்னைக்குத் தான் வாங்கினேன்"

"சரி நான் ஹோம் வொர்க் முடிச்சுட்டு வந்து பார்க்கிறேன்' என்று சந்தோசமாக ரீடிங் அறைக்குள் சென்றான்.

சற்று நேரம் சென்றிருக்கும். சுந்தருக்கு திடீரென்று ஒரு யோசனை வந்தவனாக "ராது குட்டி" என்று கொஞ்சலாக அழைத்தவாறு "என்னோட பழைய மொபைல் கொஞ்சம் கொடு. முக்கியமா ஒரு கால் பண்ணனும்" என்று கேட்டபிறகு தான் ராதிகா தான் அவசரமாக எங்கோ வைத்த மொபைலைத் தேடினாள்.

"என்னங்க. இங்கே தான் வச்சேன். கொஞ்சம் தேடுங்க. இல்லாட்டி மறதியா ஹால்லே வச்சுட்டேன்னா கூட தெரியல்லே.அங்கேயும் கொஞ்சம் தேடிப்பாருங்க" என்று சொல்ல சுந்தர் பொறுமையாக தேடினான். இதிலிருந்து இந்த மாதிரி நடப்பது அவனுக்கு புதிதல்லவென்று தெரிகின்றது.

எல்லா இடத்தில் தேடியும் கிடைக்கவில்லை. பரபரப்பாக சுந்தர் ஏதோ தேடுவதைப் பார்த்துக்கொண்டிருந்த அவன் மகன் "என்னப்பா .. என்ன தேடுறீங்க?" என்று அவனும் சற்று பதற்றத்துடன் கேட்டான்.

"ஒண்ணுமில்லேடா செல்லம்.! என்னோட பழைய மொபைலை அம்மா எங்கேயோ வச்சுட்டாங்க. அதை தான் தேடுறேன்" என்றான் சுந்தர்.


" அப்பா. இதுக்குப் போய் இவ்வளவு டைம் வேஸ்ட் பண்ணுறீங்களே. உங்களோட புது மொபைலைக் கொடுங்க. இதுக்காக நேத்து நீங்க வாங்கின 'சிம்' கொடுங்க" என்று கேட்டான்.

அவன் இரண்டையும் தன் மகனிடம் கொடுத்தான். 

அந்த புது மொபைலின் கவரைக் கழட்டி , பேட்டரியை எடுத்து அதற்கு கீழே அந்த புது சிம்மை சொருகி மீண்டும் பழையபடி அனைத்தும் பொருத்தி மொபைல் திரையை இரண்டு மூன்று தடவை தேய்த்து 

"டாடி உங்க நம்பர் இது தானே என்று கண் இமைக்கும் நேரத்தில் அனைத்து எங்களையும் அழுத்தி கால் செய்தான். இந்த குட்டி பையன் செய்வதை கண் இமைக்காமல் அவர்கள் இருவரும் பார்த்துகொண்டிருந்தனர்.   


சமையலறையிலிருந்து மொபைலின் சப்தம் கேட்டது. இருவரும் அங்கு ஓடி சரியாக அந்த மொபைலை எடுத்தனர். அந்த சந்தோசத்துடன் "என் செல்லம்! எப்படி? எங்கே  இதெல்லாம் கத்துகிட்டே? யார் உனக்கு சொல்லித் தந்தா? இந்த புத்தகத்தை எப்போ படிச்சே? என்று அடுக்கு அடுக்காய் கேட்ட கேள்விக்கு ஒரே வரியில் பதிலளித்தான்.


"அப்பா..அம்மா.. என்னோட பிரன்ஸ் செய்யறதை பார்த்தேன். என்னோட கை தானாக செய்யுது" என்று விளக்கம் கூற 

"என்னங்க , இனிமே இந்த புத்தகத்தை படிச்சு டயத்தை வேஸ்ட் பண்ணாமே உங்க பையன் கிட்டே இதை பத்தி நல்ல கேட்டுத் தெரிஞ்சுக்குங்க."


"அமாம். நீ சொல்றது சரிதான்.எதையும் படிச்சுத் தெரிஞ்சுக்கிறதை  விட செய்யறதை பார்த்து தெரிஞ்சுக்கிறது ரொம்ப ஈஸியா இருக்கு. இந்த காலத்து குழந்தைங்க சும்மா சொல்லக்கூடாது கம்ப்யூட்டர் , மொபைல் ஹான்டில் பன்றதிலே நல்லாவே செய்யுறாங்க" என்று அவனை மெச்சிவிட்டு தான் படித்துக்கொண்டிருந்த மொபைல் புத்தகத்தை ஓரத்தில் வைத்துவிட்டு தன் மகனிடம் மொபைல் ஆப்பரேட் செய்யும் நுணுக்கத்தை படிக்க ஆரம்பித்தான் சுந்தர்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&  

ஏழைகளின் பலிபீடம் சட்டம் ! சிறுகதை - மதுரை கங்காதரன்

ஏழைகளின் பலிபீடம் சட்டம் !

சிறுகதை 

மதுரை கங்காதரன் 



57 A  வட்டப் பேருந்து சற்று அதிகமான பயணிகளைத் தாங்கிக் கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

பேருந்தில் ..

"எல்லோரும் டிக்கெட்களை கேட்டு வாங்கிக்குங்க. கண்டக்டர் வரலேன்னு சொல்லிடாதீங்க" என்று அத்தனை கூட்டத்திலும் தொண்டை கிழிய கத்திக் கொண்டிருந்தார். அவரே மேலும் " பஸ் ஸ்டாண்டிலே 'செக்கர்' இருப்பாரு, எல்லோரும் அவங்க அவங்க டிக்கெட்டுகளை கையில் எடுத்து வைச்சுகுங்க" என்று டிக்கெட் வாங்காமல் இருப்பவர்களை கடைசியாக மறைமுகமாக எச்சரிக்கை செய்து கொண்டிருந்தார்.


பேருந்து நிலையத்தை நோக்கி உள்ளே சென்று அதற்குரிய நடை மேடையில் ஓட்டுனர் பேருந்தை நிறுத்த, டிக்கெட் பரிசோதகர் வாசலில் நின்று "எல்லாரும் அவரவர் டிக்கெட்டுகளை காட்டுங்க"என்று ஒவ்வொருவரையாக அவரவரின் டிக்கெட்டுகளை  சரி பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பக்கதிதில் பேருந்து நடத்துனர் நின்று கொண்டிருந்தார்.


"என்ன கண்டக்டர்! எல்லோருக்கும் டிக்கெட் போட்டுட்டீங்களா? 'லாக் சீட்' காட்டுங்க" என்று மேலோட்டமாக எந்தெந்த நிறுத்தத்தில் எந்தெந்த விலையில் டிக்கெட் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்துவிட்டு "எல்லா பாசிஞ்சர்களை கீழே இறங்கியாச்சா?" ஒரு குரல் கொடுத்தார் பரிசோதகர்.

"இல்லே சார்! பாதி கூட்டம் உள்ளே இருக்கு" என்று பதிலளித்தார் கண்டக்டர்.

ஒரு பயணி டிக்கெட்டை காட்ட, அதை பார்த்த டிக்கெட் பரிசோதகரோ "இது இந்த பஸ்ஸில் கொடுத்த டிக்கெட் இல்லே. இன்னொரு டிக்கெட் இருக்கும். நல்லா பாருங்க" என்றார்.


அவரும் சட்டைப் பையை துலாவியபடி "இந்த டிக்கெட்டா ?" என்று காட்ட "ஆ.. சரி இந்த டிக்கெட் தான்" என்று அவரை அனுப்பினார்.

கடைசியாக ஐந்து மாணவர்கள் செக்கரின் முன் நின்றார்கள்.அதில் ஒருவன் தன டிக்கெட்டைத் தேடிக்கொண்டிருந்தான்.

முதலானவனிடத்தில் "எங்கேப்பா உன்னோட டிக்கெட்?"

"டிக்கெட் வாங்கலே சார்!"

"என்ன டிக்கெட் வாங்கலேயா ?"

" உங்க அப்பா பேரு என்ன?"

" டாக்டர் சீதாபதி சார். இந்த ஊரிலே பெரிய டாக்டர்!  தெப்பக்குளம் பக்கத்தில் இருக்கிறாரு"

" ஓ .. அந்த டாக்டரா! அட எங்களோட பேமிலி டாக்டர். ஏன்பா, நீ எல்லாம் வண்டியிலே வராம ஏம்பா பஸ்ஸிலே ..?"

"வண்டி ரிப்பேர் ! அதனாலே பஸ்ஸிலே வந்தேன்"

"சரி.. சரி கண்டக்டர் இவன் நம்ம பையன். விட்டிடுங்க. நீ போப்பா ! அப்பாவை ரொம்ப கேட்டதாகச் சொல்லுங்க" என்று அவரை அனுப்பி 

இரண்டாமவனிடத்தில் 

"நீ ஏன்பா டிக்கெட் எடுக்கலே? உங்கப்பா பேரு என்ன? என்ன வேலையிலே இருக்கிறாரு?"

"சார்! என்னோட அப்பா பேரு சப் -இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம். பி 2 விலே இருக்கிறார்!"

"அவரோட பையனா? இந்த மாசம் ப்ரோமோசன் வரும்னு சொன்னாரு. வந்துடிச்சா?"

" இன்னும் வரலே சார்! அதைத் தான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்" 

"சரி.. சரி நீ போகலாம். இன்னொரு தடவை இப்படி செய்யகூடாது சரியா?" என்று செல்லமாக அதட்ட அவனும் தலையாட்டிக் கொண்டே நடையைக்கட்டினான்.

மூன்றாமவனிடத்தில் .

"சார் என்னுடைய அப்பா பேரு ராஜ குரு. இரண்டாவது வார்டு கவுன்சிலர்!"

"அடடா ...உங்கப்பாவைத் தான் பார்க்கணும்ன்னு நினைச்சேன். ஒண்ணுமில்லே தம்பி! அடுத்த மாசம் வீடு கட்டணும்னு ப்ளான் வச்சிருக்கேன். அதுக்கு உங்கப்பாவோட உதவி தேவை. அப்பா கிட்டே சொல்லி வை. வீட்டிலே வந்து பார்க்கிறேன். நீங்க போகலாம் தம்பி" என்று அனுப்பிவிட 

நான்காமவனிடம்..

"சார் ! நான் தாசில்தார் சதாசிவமோட பையன் !!!"

" ரேசன் கார்டு விஷயமா பார்க்கணும்னு. சரி நீங்க கிளம்புங்க ராஜா! எதுக்கும் இன்னைக்கு சாயந்தரம் வீட்டுக்கு வர்றேன். ம் ...அடுத்து .."

ஐந்தாமவனிடம் 

"சார் ! எங்கப்பா பேரு மாடசாமிங்க. கூலி வேலை பார்கிறாருங்க."

"என்ன கூலித் தொழிலாளியா? அப்ப 'பைன் ' கட்டு."

" சார். என்னோட டிக்கெட் என்னோட பிரண்டு கிட்டே இருக்கு.அவன் தான் எனக்காக டிக்கெட்டை எடுத்தான். அவன் முன்னாடி உள்ள ஸ்டாப்பிலே இறங்கிட்டான். வேணும்னா கண்டக்டர்கிட்டே கேட்டுப் பாருங்க. கடைசியா அவனுக்குத் தான் இரண்டு டிக்கெட் போக மீதி சில்லறை கொடுத்தார்."

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்போ உன்கிட்டே டிக்கெட் இல்லாததாலே பைன் கட்டு." என்றார் கறாராக!

இதை ஆச்சரியமாக பார்த்த கண்டக்டர், " சார்! டிக்கெட் எடுக்காத அந்த நாலு பசங்களும் வசதியானவங்க. ஆனாலும் அவங்கெல்லாம் ஒன்பது ரூபா கொடுத்து டிக்கெட் எடுக்கலே. அவங்களை விட்டுட்டீங்க. ஆனா கடைசியாக வந்த பையன் ஏழை. ஆனா அவன் சொன்னது உண்மை. இவனோட பிரண்டு இவனுக்காக டிக்கெட் எடுத்துட்டான். இவனை போய் பைன் கட்டச் சொல்றீங்களே, அது நியாயமா?" அந்த ஏழை மாணவனுக்காக பரிந்து பேசினார் கண்டக்டர்.     


"என்னப்பா ! நீ புரியாத ஆளாயிருக்கிரே. அந்த நாலு பசங்களோட அப்பாக்கள் ரொம்ப பெரிய பதவியிலே இருக்காங்க. அவங்களாலே எனக்கு கட்டாயம் ஏதாவது காரியம் ஆகும் அல்லது ஆதாயம் இருக்கும்.  அதுவுமில்லாமே அவங்களை பகைச்சுட்டா என்னோட வேலைக்கு ஆபத்து வந்தாலும் வந்துவிடும். ஆனா இந்த ஏழை பையனோட அப்பா ஒரு கூலித் தொழிலாளி. அவராலே எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. மேலும் அவராலே என்னை எதுவும் பண்ண முடியாது. மேலிடத்திலே இந்த மாதிரி ஒண்ணு இரண்டு கேசுங்க பிடிச்சுக் கொடுத்தாத் தான் நான் இந்த பதவியிலே தங்க முடியும்.அதனாலே இந்த பையன் 'பைன் ' கட்டிட்டா விட்டுவிடுங்க. இல்லாட்டா போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் செல்லுங்க" என்று தன் கடமை தவறாத குணத்த்தை அந்த ஏழை பையனிடம் காட்டிச் சென்றான்.

*********************************************************************************************************************