Pages

Sunday, 21 December 2014

உனைக் காப்பது எது ? WHICH IS SAVING YOU ?

   உனைக் காப்பது எது ?
   WHICH IS SAVING YOU ? 
       
                   புதுக்கவிதை
        மதுரை கங்காதரன்

கணினி மரங்களைக் காக்கும் 
மருத்துவம் உயிர்களைக் காக்கும் 

விஞ்ஞானம் மனிதனைக் காக்கும் 
தொழில் வீட்டைக் காக்கும் 

அமைதி உறவைக் காக்கும் 
தியானம் மனதைக் காக்கும் 
        
நம்பிக்கை நட்பைக் காக்கும் 
விடாமுயற்சி இலட்சியத்தைக் காக்கும்  

அளவான உணவு உடலைக் காக்கும் 
அறிவு  வருமுன் காக்கும் 

ஆற்றல் ஆபத்திலிருந்து காக்கும் 
ஆசை அன்பைக் காக்கும் 

பூமி மக்களைக் காக்கும் 
இமைகள் கண்களைக் காக்கும்  

தேசபக்தி நாட்டைக் காக்கும் 
வளமை மகிழ்ச்சியைக் காக்கும் 

நேர்மை கௌரவத்தைக் காக்கும் 
 உயிர் பிறப்பைக் காக்கும்   
       
சேவை இரக்கத்தைக் காக்கும் 
தேவை புதுமையைக் காக்கும் 

ஆண் பெண்ணைக் காக்கும் 
பெண் ஆணைக் காக்கும்  

ஆன்மிகம் இறையினைக் காக்கும் 
திருப்தி அனைத்தையும் காக்கும்.  
       

(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

எல்லோரும் எல்லாமும் பெற... WAY FOR… ALL GET ! ALL WEALTH…

எல்லோரும் எல்லாமும் பெற...
WAY FOR… ALL GET ! ALL WEALTH…
            
                            புதுக்கவிதை
            மதுரை கங்காதரன்

 
அழகுள்ளவர்கள் எல்லோரும்
நடிகர்கள் ஆவதில்லை - அதற்கு
நடிப்பில் ஆர்வம் வேண்டும்.

நன்கு பேசுபவர்கள் எல்லோரும்
பேச்சாளராவதில்லை - அதற்கு
பேசும் பயிற்சி வேண்டும்.

ஆடத்தெரிந்தவர்கள் எல்லோரும்
நடனக் கலைஞர் ஆவதில்லை - அதற்கு
நடனத்தில் அக்கறை வேண்டும்.

இசைப்பிரியர்கள் எல்லோரும்
இசையமைப்பாளராவதில்லை - அதற்கு
இசைப்பதில் ஈடுபாடு வேண்டும்.
       
பாட்டு படிப்பவர்கள் எல்லோரும்
பாடலாசிரியராவதில்லை - அதற்கு
பாட்டெழுதும் கற்பனை வேண்டும்.

எழுதத் தெரிந்தவர்கள் எல்லோரும்
எழுத்தாளராவதில்லை - அதற்கு
எழுதும் சிந்தனை வேண்டும்.

அரசியல்வாதிகள் எல்லோரும்
ஆள முடிவதில்லை - அதற்கு
தலைமை குணம் வேண்டும்.

செதுக்கத் தெரிந்த எல்லோரும்
சிற்பிகளாவதில்லை - அதற்கு
கலைஞானம் வேண்டும்.

பாடம் படித்த எல்லோரும்
ஆசிரியர்கள் ஆவதில்லை - அதற்கு
ஈர்க்கும் திறமை வேண்டும்.

பணம் சம்பாதிக்கும் எல்லோரும்
பணக்காரனாவதில்லை - அதற்கு
அறிவும் ஆற்றலும் வேண்டும்.

லட்சியங்கள் உள்ள எல்லோரும்
லட்சியத்தை அடைவதில்லை - அதற்கு
விடாமுயற்சி வேண்டும்.
         
காதல் கொண்ட எல்லோரும்
மணவாழ்கை வாழ்வதில்லை - அதற்கு
புரிதல் விட்டுக் கொடுத்தல் வேண்டும்.

மணமாணவர்கள் எல்லோரும்
சேர்ந்து வாழ்வதில்லை - அதற்கு
உண்மை அன்பு வேண்டும்.

ஆசை கொண்ட எல்லோரும்
அதை அடைவதில்லை - அதற்கு
கடின உழைப்பு வேண்டும்.

பணம் கொண்ட எல்லோரும்
மகிழ்ச்சியாய் இருப்பதில்லை - அதற்கு
திருப்தி வேண்டும்.

விடா முயற்சியுடைய எல்லோரும்
வீழ்சியடைவதில்லை - அதற்கு
ஊக்கம் தொடர வேண்டும்.

தொணடுள்ளம் படைத்த எல்லோரும்
சேவை செய்வதில்லை - அதற்கு
தியாக சிந்தனை வேண்டும்.

வியாபாரம் செய்யும் எல்லோரும்
லாபமடைவதில்லை - அதற்கு
நுணுக்கமான அறிவு வேண்டும்.

தன்னம்பிக்கை கொண்ட எல்லோரும்
தளர்ச்சியடைவதில்லை - அதற்கு
மனவலிமை வேண்டும்.
     
துணிவு கொண்ட எல்லோரும்
துவண்டு போவதில்லை - அதற்கு
ஆக்க அறிவு வேண்டும்.

###################################################################################