Pages

Sunday, 17 May 2015

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் - How Tamil Language spread worldwide?


தமிழைக் காக்கத் தகுந்த வழிகள்
How Tamil Language spread worldwide? 
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்

ஆதியில் பிறந்த தமிழ் மொழிக்கு
ஆபத்து வந்ததே இந்த நாளில்

பாதியில் முளைத்த மொழிகளுக்கு
வீதிகளில் தேரோட்ட ஊர்வலமா?

வேள்வித் தீயாய் விளங்கிய தமிழை
கேள்வி கேட்க நாதியில்லையா?

மாற்றான் தோட்டத்து மல்லிகையும்
மாறாது மணம் வீசத் தான்செய்யும்

கொஞ்ச நேரம் சூட்டி மகிழலாம்
வஞ்சக வலையில் சிக்கலாமா?

செம்மொழி தமிழுக்கு வந்ததே சேதாரம் 
'சிம்' மொழியாய் சுருங்கிவிட்டதே காதோரம் 

எதையும் பொசுக்கும் அக்னி குஞ்சு
வதைபடும் காட்சி கண்டு சகிக்கலாமா?

கள்ளிப் பாலை தமிழ்பாலில் கலக்கலாமா?
கள்ளம் கபடமில்லாத் தமிழை நஞ்சாக்கலாமா?

ஆரம்பப் பள்ளி முதல் இறுதிப் பள்ளி வரை
உயிர் மூச்சாய் தமிழ் காக்கபட வேண்டும்

தமிழுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வேண்டும்
தமிழ் படைப்பு போட்டிகள் நடத்திட வேண்டும்

புதிய படைப்போடு தமிழ் நின்று விடாது
பட்டித்தொட்டிகளில் ஒலிக்க வேண்டும்

தனித்தமிழ் தரும் ஊடகங்களை போற்றிட வேண்டும்
கனிவான கலைச்சொற்கள் அகராதி தந்திட வேண்டும்

எளிய தமிழ் கணினி விசைப்பலகை வேண்டும்
எல்லோரும் தமிழை எளிதாய் கற்க வேண்டும்

கணினியில் தனித் தமிழை வளர்க்க வேண்டும்
வலைதளத்தில் தமிழ் விரிந்து பரவ வேண்டும்

நடமாடும் ஊர்திகளில் தமிழ் பதிக்க வேண்டும்
நம் தாய் மொழி தமிழென  உணரவேண்டும்

செம்மொழி தமிழ் மாநாடு நடத்திட வேண்டும்
எம் மொழி தமிழென்று முழங்கிட வேண்டும்

முகாரி ராகம் பாடும் தமிழ் மொழிக்கு
பூபாள ராகம் பாடச் செய்திட வேண்டும்

படைப்போம் தமிழில்

பரப்புவோம் தமிழை...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



கவிபாரதி பூ. வைத்தியலிங்கம் அவர்களின் பாராட்டு விழா



கவிபாரதி பூ. வைத்தியலிங்கம் அவர்களின் பாராட்டு விழா
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்

உருவத்தை மீறிய உயர்ந்த கற்பனைகள்
கல்வித் தகுதியை மீறிய கவிதை படைப்புகள்
வயதிற்கும் மீறிய இளமைத் துடிப்புகள்
செயலுக்கும் மீறிய பொது நலப்பணிகள்

இவரின் 'சின்ன சின்ன பூக்கள்' கவிதைகள் தமிழில்
அன்று பெரிய பெரிய சாதனைகள் செய்தது
இன்றோ 'சிரிக்கின்ற பூக்கள்' ஆங்கிலத்தில்
தமிழ் மொழியையும் தாண்டித் தந்த அற்புதம்

சாதரணமாய் வாழ்வது தான் வாழ்கையா?
வாழ்ந்ததற்கு அடையாளம் இருக்க வேண்டாமா?
சாதாரணமாய் அன்று இருந்தவர்
கவிதைகளால் இன்று உதாரணமாய் வாழ்பவர்.

தங்கள் பெருமை புகழைப் பறைசாற்ற
தலைவர்களுக்கு சிலை வைக்கிறார்கள்
இவரோ கவிதை நூல்களை வெளியிட்டு
நம்மை சிலையாக்கி விட்டாரே!

அகவை எழுபதிற்கு ஒருவிழா!
'சின்ன சின்ன பூக்கள்' கவிதை நூலுக்கு ஒருவிழா!
'சிரிக்கின்ற பூக்கள்' கவிதை நூலுக்கு ஒருவிழா!
முப்பெரும் விழாவிற்கு உரியவர் இந்த நாயகர்

ஐயா கவிபாரதி பூ. வைத்திய லிங்கம் அவர்கள்
இன்று போல் எந்நாளும் இனிதாய் வாழ்ந்து
மேலும் மேலும் புதிய நூல்களை வெளியிட வேண்டும்
அவரது முயற்சிகள் வாழ்க வாழ்கவே!

வெல்க அவரது சேவை!
ஓங்குக அவரது கவிதைப் பணி!

நன்றி, வணக்கம்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%








WHY KAMBAN TRANSLATE RAMAYANA IN TAMIL?



                                              WHY KAMBAN TRANSLATE RAMAYANA IN TAMIL?
       கவிதை மாமன்னன் கம்பன் தமிழாக்கம் செய்தது ஏன்?
(வடமொழி இராமாயணத்தை கம்பன் தமிழாக்கம் செய்தது ஏன்?)
                                          புதுக்கவிதை
                                    மதுரை கங்காதரன்

ஆதியில் ஆதி மனிதனாய் மாறியது குரங்கிலிருந்து!
அடுத்தமனிதனாக மாறியது ஆறாம் அறிவிலிருந்து!
மனிதன் தெய்வமாய் மாறுவது நல்லாட்சி செய்வதிலிருந்து
தெய்வமும் நாயகனாய் மாறியது கம்பன் காவியத்திலிருந்து!

உலகைக் காக்கும் பரம்பொருள்
மனிதபூமியில் இராமனாக அவதரித்து
அறநெறி வாழ்விற்கு முன்மாதிரியாக திகழ்ந்து
எதிரிகளை அழித்து மக்களை இரட்சிக்கச் செய்ததே!

ஏற்றம் இறக்கங்களே வாழ்க்கையின் காட்சி
கம்பனின் இராமனின் காவியமே அதற்குச் சாட்சி
காவியப் பெருமை காலம் காலமாய் தொடர்வது
இயல்பாய் மக்களின் உணர்வோடு கலந்துவிடுவதே!

கம்பனின் வடமொழி இராமாயணத் தமிழாக்கம்
வால்மிகியையும் மறக்கச் செய்த உன்னதப் படைப்பு
வடக்குத் தெற்கு இடையில் அமைந்திட்ட உறவுப் பாலம்
இமயம் குமரியை இணைந்திட்ட பக்திப் பாலம்

வடமொழி காவியத்தை தமிழ்மொழிக்கு மாற்ற
ஆசையும ஞானமும் மட்டும் போதுமா?
தமிழுக்கு காவியத்தை ஏற்க தகுதியும் தரமும் உள்ளதே!
கம்பனின் படைப்பு தனித்தமிழாய் இருப்பதே சிறப்பு.

கம்பன் படைத்திட்ட இராம காதை வெறும் காவியமல்ல
நாட்டில் சமூகம் கலாச்சாரமும் மேம்பட
மனிதனிடையே பண்பும் ஆன்மீகமும் செழித்திட
உறவுகளில் அன்புக்கும் பாசத்திற்கும் உதாரணமாய் விளங்கிட

கடமையில் அறத்தையும் துறவறத்தையும் சமமாய் மதித்திட
நேர்மையில் நட்புக்கும் எதிரிக்கும் இலக்கணமாய் இருந்திட
பிரிதலில் காதலுக்கும் கற்பிற்கும் பாடம் புகட்டிட
போரில் வீரத்தையும் மன்னிக்கும் குணமும் காட்ட

மொழியையும் தாண்டி ஒற்றுமையை வளர்திடவே
கம்பனின் காவியம் காலத்தை வென்று நிற்கின்றதுவே!
இராமனால் இராமயணத்திற்குப் பெருமை
கம்பனின் தமிழாக்கத்தால் தமிழ் மொழிக்குப் பெருமை.
******************************************************************************************