Pages

Friday, 5 February 2016

5.4.2020 திருத்திய..... கடகதேசமும் மேசகிரியும் (குறுநாவல்) பாகம் :1


5.4.2020 திருத்திய கடகதேசமும் மேசகிரியும்  (குறுநாவல்) 
அல்லது
மிதுனமதி (குறுநாவல்)
பாகம்: 1
மதுரை கு.கி.கங்காதரன்



குறிப்பு: மேலே காட்டப்பட்ட படங்கள், வாசகர்கள் படிக்கும்போது 
ஞாபகம் வைத்துக்கொள்ள மட்டுமே -- நன்றி படங்களுக்காக
பாகம்: 1

வரும் சித்திரைத் திங்களுக்குள் கடகதேசம் மிகப்பெரிய ஆபத்தைச் சந்திக்க இருப்பதாக  அரண்மனை இராஜகுருவாகிய மகரகுரு கணித்ததை உள்வாங்கிக் கொண்ட   இளவரசர்  துலாவர்மர்,  அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு உடனே ஏற்பாடு செய்திருந்தார்.

ஆபத்து என்று வந்துவிட்டால் அரண்மனை அரசனாலும் சந்தியில் இருக்கும் ஆண்டியாயினும் துரிதமாய்ச்  செயல்படுவது இயல்புதானே! இவ்வேளையில் அவ்விடத்திற்கு விரைந்து வந்த சேனாதிபதி  சிம்மசேனரும் பல்கலையில் தேர்ச்சி பெற்ற இளவரசரின்  உற்ற தோழரும்  மெய்க்காப்பாளருமான  தனுசுமல்லரும் இனம் புரியாத குழப்பத்தோடு ஒருவரையொருவர் பார்த்தவாறு இருந்தனர். 

கடகதேசத்தின் அரசர் கும்பவர்மர், கடந்த சில மாதமாக நோய்வாய்ப்பட்டு இருந்ததால்  அவரது  புதல்வனாகிய துலாவர்மர், இளவரசராக முடிசூட்டப்பட்டு நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்.

இளவரசர் துலாவர்மர், இந்நிலைமை இப்படியே நீடித்தால் வீணே நேரம் விரயமாவதோடு எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாது என்பதை உணர்ந்து அமைதியைக் களைத்தார்.

"குருவே, இந்த ஆபத்திலிருந்து நம் நாட்டைக் காக்கும் நல்ல ஒரு வழியை தாங்கள் தான்  சொல்ல வேண்டும்" என்றார் இளவரசர் துலாவர்மர்.

"சொல்கிறேன்  இளவரசே! கவனமாகக் கேளுங்கள்வரும் சித்திரைத் திங்களில் பௌர்ணமி தினத்தன்று, நம் தேசத்தில் நீண்ட வருடமாகப் பூட்டியே  கிடக்கின்ற, நமது முன்னோர்கள் கட்டிய பிரசித்தி  பெற்ற  ஆதிபகவன்' கோவிலுக்குக்   கும்பாபிசேகம்  நடத்திட வேண்டும்அதுமட்டுமல்ல, அங்குள்ள பிரசித்தி பெற்ற தங்கத்தேர் நான்கு சித்திரை வீதிகளில் பவனி வரவேண்டும். அதை மக்கள் அனைவரும் கண்டுகளிக்கவும், தினமும் கோவிலில் இறைவழிபாடு நடைபெறுவதற்குச் சிறப்பான ஏற்பாடும் செய்தால் வரும் ஆபத்தைத் தடுத்திடலாம்" என்றார் மகரகுரு.

அதனைக் கேட்டவுடன் தனுசுமல்லர் "அதில்தானே பெரியச் சிக்கல் இருக்கின்றது! அப்படி ஆதிபகவன் கோவில் தங்கத்தேர் வீதிகளில் ஊர்வலமாக வரவேண்டுமென்றால் நம் கடகதேசத்து  மக்களும் நமது எதிரி நாடான மேசகிரி மக்களும் கலந்து கொள்ள வேண்டும். இது முன்னோர்களின்  கட்டளையும், ஐதீகமும் கூட. முன்பு இரு நாடுகளும் நட்புறவோடு ஒற்றுமையாய் இருந்தார்கள்அதனால் எவ்வித இடையூறு இல்லாமல் தங்கத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஆனால் இன்று..? இரு நாடுகளும் பரம எதிரிகளாக மாறிப் பகைமையை வெகுவாக வளர்த்துக் கொண்டு நிற்கின்றது. இந்தச் சூழ்நிலையில் நாம் எவ்வாறு நீங்கள் சொன்ன அந்தக் காரியத்தைச் செய்து முடிப்பதுஒருவேளை... நம் எதிரி நாடான மேசகிரி அரசர் ரிசபவேந்தர் சமாதானத்திற்குச் சம்மதம் தெரிவித்தாலும் அவரின் மதிமந்திரி விருச்சிகர்... கட்டாயம் உடன்படமாட்டார்" என்றார்.

அதனை ஆமோதிக்கும் விதமாக  ராஜகுருவான மகரகுரு "தனுசுமல்லரே, சரியாகச்   சொன்னீர்கள்!   நம்நாட்டில் எப்போது குழப்பம் எழும்? கலகம் நடக்கும்? என்று காத்திருக் கின்றார்கள். அந்தச்  சமயத்தில் படையெடுத்து இந்தக் கடகதேசத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று நமது எதிரிகளான மேசகிரி மக்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்குறிப்பாக அந்நாட்டு மதிமந்திரி விருச்சிகர்! ஆகையால் இதற்கு வேறுமாதிரி யோசிக்கவேண்டும்" என்று சிந்தனையில் ஆழ்ந்தார்.

"குருவே, இதைத் தவிர வேறுவழியே இல்லையா?" என்று ஆதங்கப்பட்டார் இளவரசர்  துலாவர்மர்.

இதற்கிடையில் சேனாதிபதி சிம்மசேனர் வெகுண்டு எழுந்து ஒருபடி மேலே போய்  "அப்படியென்றால் மேசகிரி மேல் படையெடுப்பது தவிர வேறுவழியே இல்லை!" என்று சொன்னதுதான் தாமதம்

"கூடாது,  கூடாது  சிம்மசேனரே! அப்படி மட்டும் நடந்துவிட்டால் இருபக்கமும் அதிக உயிர்ச் சேதமும் நிறையப்  பொருட்சேதமும் ஏற்படும். பிறகு நாடெங்கும் மரண ஓலம் கேட்கும்.  அது மட்டுமா?  மக்கள் பசி, பட்டினியால் வாடுவார்கள். அக்காட்சிகளையெல்லாம் காண நேர்ந்தால் எனது இருதயம் வெடித்துவிடும்" என்று உணர்ச்சியின்  எல்லைக்கே சென்றுவிட்டார் துலாவர்மர்.

"உணர்ச்சி வசப்பட வேண்டாம் இளவரசே! நம் சேனாதிபதி சிம்மசேனர்... சற்று மிகையாகவேப் பேசிவிட்டார். 

ஆனால் சேனாதிபதி சிம்மசேனரின் நெடுநாளைய ஆழ்மன ஆசையைத் தான் இந்த சமயத்தில் தன்னையறியாமல் வெளிப்படுத்தியுள்ளார் என்பது அங்குள்ளவர்கள் அறிவதற்கு நியாயமில்லை.  சிம்மசேனரின்  ஆசை என்னவெனில்  கடகதேசத்தின் மேல் மேசகிரி  படையெடுத்து, இளவரசர்  துலாவர்மரைச்  சிறைபிடித்துச் செல்ல வேண்டும். பிறகு மேசகிரியின் மேல் நட்புறவு கொண்டு, தானே இந்தக் கடகதேசத்து அரசராக முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்பதே! ஆனால் அவரின் ஆசைக் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் இளவரசர் துலாவர்மர். அந்த வேளையில் மகரகுரு மேலும் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க அனைவரும் ஆவலானார்கள்.

"கத்தியின்றி இரத்தமின்றி நிறைவேற்ற வேண்டுமானால் ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். அந்தப் பெண் நினைத்தால் இருநாட்டைக் காக்கவும் முடியும். அதேசமயத்தில் அப்பெண் நினைத்தால்  அழிக்கவும் முடியும்" என்றவுடன் தனுசுமல்லருக்கு ஆச்சரியமும் குழப்பமும் உண்டானது. 

"குருவே, அப்படியென்றால்  நாங்கள் என்ன கையாளாகாதவர்களா? எங்களால் முடியாததை எப்படி ஒரு பெண்ணால் செய்து முடிக்க முடியும்?" என்று சீறினார்.

"தனுசுமல்லரே, கோபப்படாமல் சற்று அமைதியாகச் சிந்தியுங்கள். பெண்களால் அடைந்த பல வெற்றிகள் சரித்திரம் நமக்கு எடுத்துக்  காட்டி உள்ளது. ஆகையால் பெண்ணின் சக்தியைக் குறைத்து மதிப்பிடாமல் மேற்கொண்டு நடக்க வேண்டியவற்றைத்  தாமதமின்றி  நடைபெறச் செயலில் இறங்கினால் நல்லது" என்று மகரகுரு  துரிதப்படுத்தினார்.

இளவரசரும் "ஆகட்டும் குருவே! காலம் கனியும் வரை நாம் எல்லோரும் பொறுத்துக் கொள்ள வேண்டும். சேனாதிபதி சிம்மசேனரே, தாங்கள் கோவில் கும்பாபிசேகத்திற்கான வேலையை உடனே ஆரம்பியுங்கள். என் பிரியமான  தோழர் தனுசுமல்லரே, தாங்கள் தங்கத்தேரைப் பழுதுபார்த்து எந்த ஓர் இடருமில்லாமல் பவனி வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அதிலேயே லயித்துவிடாமல் கூடவே மக்களுக்கு வைத்தியமும், காட்டு விலங்குகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றும் வீரத்தையும் தவறாமல் காட்டிடவேண்டும்" என்று அவரவர்களின் பொறுப்புகளை நயமாக எடுத்துரைத்தார்.

இளவரசரே நிறைவாக  "நாம் இப்போது பேசியதை இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் மேசகிரி அரசர் ரிசபவேந்தருக்கோ அல்லது அந்நாட்டு  மதிமந்திரி  விருச்சிகருக்கோ தெரியவேக் கூடாது" என்று அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் வைத்தார்.

அந்தக்கணம் முதல் மூவரின் மனதில் 'அந்தப் பெண் யாராக இருக்கும்?  அவளால்  எப்படி  நமக்கு  உதவ முடியும்? அப்பெண்ணை எப்படி அடையாளம் கண்டு கொள்வது?'  என்பது  போன்று மனதில் எழுந்த ஆயிரம் கேள்விகளுக்கு விடை தெரியாமல் தவித்தனர். ஆனால் சேனாதிபதி மட்டும் வேறு ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்து போனார். அதாவது இந்தச் செய்தியை தன் எதிரி நாடான மேசகிரியின் மதிமந்திரி விருச்சிகருக்குத் தெரியப்படுத்திவிட வேண்டுமென்று துடித்தார். அதற்கான ஆயத்தமுமானார்.

தொடரும் ...
   பாகம்: 2

5.2.2016 திருத்தாமல் இருந்த  
கடகதேசமும் மேசகிரியும்'  (குறுநாவல்)
மதுரை  கங்காதரன்
இக்குறுநாவலில் வரும் முக்கிய கதா பாத்திரங்கள்
 பாகம் :1
வரும் சித்திரைத் திங்களுக்குள் கடகதேசம் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்க இருப்பதாக அரண்மனை ஜோதிடர் மகரகுரு கணித்ததை  உள்வாங்கிக் கொண்ட  இளவரசர் துலாவர்மர் உடனே அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

கடகதேசத்தின் அரசர் கும்பவர்மர் கடந்த சில மாதமாக நோய்வாய்ப்பட்டு இருந்ததால் அவரது வாரிசு புதல்வனாகிய துலாவர்மர் இளவரசராக முடிசூட்டிக்கொண்டு நாட்டை ஆட்சி செய்யும்  பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவ்விடத்தில் சேனாதிபதி சிம்மசேனர் மற்றும்  பல்கலையில் வல்லவரும் மெய்காப்பாளருமான தனுசுமல்லர் ஆகியோர் இனமறியாத குழப்பத்தோடு அமைதியாக மன இறுக்கத்தோடு  சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர்.
ஆபத்து என்று வந்துவிட்டால் அரண்மனை அரசனாலும் அந்தியில் இருக்கும் ஆண்டியாயினும் கலக்கமடைவது இயல்பு தானே

நிலைமை இப்படியே நீடித்தால் வீணே நேரம் விரயமாவதோடு எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாது என்பதை உணர்ந்த இளவரசர் துலாவர்மர் அமைதியைக் களைத்தார்.
"ஜோதிடரேஇந்த ஆபத்திலிருந்து நாட்டைக் காக்கும் வழி இருந்தால் அதை சற்று விளக்கமாக எடுத்துச் சொல்லுங்கள்என்றார் இளவரசர் துலாவர்மர்.

"இருக்கின்றது இளவரசேஅது என்னவென்று எல்லோரும் கவனமாகக் கேளுங்கள். வரும் சித்திரைத்திங்கள் பௌர்ணமி தினத்தன்று நீண்ட வருடமாக  பூட்டியே  கிடக்கின்ற நமது முன்னோர்கள் கட்டிய ஆதிபகவன் கோவிலுக்கு கும்பாபிசேகம் நடத்திட வேண்டும்அதுமட்டுமல்ல,அங்குள்ள பிரசித்தி பெற்ற தங்கத்தேர் நான்கு சித்திரை வீதிகளில் பவனி வரவேண்டும். அதை மக்கள் அனைவரும் கண்டுகளிக்கவும்,கோவிலில் இறைவழிபாடு நடைபெறுவதற்கும் சிறப்பான ஏற்பாடு செய்தால் ஓரளவுக்கு ஆபத்தை தடுத்திடலாம்" என்றார் ஜோதிடர் மகரகுரு.

அதற்கு தனுசுமல்லர் "அதில் தானே மிகப் பெரிய சிக்கல் இருக்கின்றதுஅப்படி ஆதிபகவன் கோவில் தங்கத்தேர் வீதிகளில் ஊர்வலமாக வரவேண்டுமென்றால் நம் கடகதேசத்து மக்களும் நமது எதிரிநாடான மேசகிரி மக்களும் கலந்து கொள்ள வேண்டும். இது முன்னோர்களின்கட்டளையும்ஐதீகமும் கூட. முன்பு இரு நாடுகளும் நட்புறவோடு ஒற்றுமையாய் இருந்தார்கள்அதனால் எவ்வித இடையூறு இல்லாமல் தங்கத்தேரோட்டம் மகிழ்ச்சியாக நடைபெற்றதுஆனால் இன்று..? இரு நாடுகளும் எதிரிகளாக மாறி பகைமையை கட்டுக்கடங்காமல் வளர்த்துக் கொண்டு நிற்கின்றதுஇந்த சூழ்நிலையில் நாம் எவ்வாறு ஆபத்தை தடுப்பது? ஒருவேளை மேசகிரி அரசர் ரிசபவேந்தர் சமாதானத்திற்குச் சம்மதம் தெரிவித்தாலும் அவரின் மதிமந்திரி விருச்சிகர் கட்டாயம் உடன்படமாட்டார்என்றார்.

அதை ஆமோதிக்கும் விதமாக "சரியாகச்   சொன்னாய் தனுசுமல்லரே!  றாவது      கலகம் பிறந்தால் அந்த சமயத்தில் படையெடுத்து   இந்தகடகதேசத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று மேசகிரி மக்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்ஆகையால் இதற்கு வேறுமாதிரி யோசிக்கவேண்டும்என்று அமைதியாக சொன்னார் ஜோதிடர் மகர குரு.

"அப்படியென்றால் இதற்கு வேறுவழியே இல்லையா?" என்று ஆதங்கப்பட்டார் இளவரசர் துலாவர்மர்.

அதைக் கேட்ட சேனாதிபதி சிம்மசேனர் வெகுண்டு எழுந்து "அப்படியென்றால் மேசகிரி மேல் படையெடுப்பது தவிர வேறுவழியே இல்லை!என்று சொன்னது தான் தாமதம்
"கூடாதுகூடாதுஅப்படி மட்டும் நடந்துவிட்டால் இருபக்கமும் அதிகமாக உயிர்ச்சேதமும் நிறைய பொருட்சேதமும் உண்டாகும்பிறகு நாடெங்கும்மரண ஓலம் கேட்கும்அது மட்டுமாமக்கள் பசிபட்டினியால் வாடுவர்அக்காட்சிகளையெல்லாம் காண நேர்ந்தால் எனது இருதயம் வெடித்துவிடும்"  என்று உணர்வின்  எல்லைக்கே துலாவர்மர் சென்றுவிட்டார்.

"இளவரசேஉணர்ச்சி வசப்பட வேண்டாம்சிம்மசேனர் சற்று மிகையாகப் பேசிவிட்டார்ஜோதிடரிடம் வேறு வழி இருக்கின்றதாஎன்று கேட்டுவிடலாம்என்று தனுசுமல்லர் சாந்தப்படுத்தினார்.

ஆனால் சேனாதிபதி சிம்மசேனரின் நெடுநாளைய ஆழ்மன ஆசையைத் தான் இந்த சமயத்தில் தன்னையறியாமல் வெளிப்படுத்தியுள்ளார் என்பதை அங்குள்ளவர் உணரத் தவறிவிட்டனர்அவர் ஆசை என்னவெனில் கடகதேசத்தின் மேல் மேசகிரி படையெடுத்து இளவரசர் துலாவர்மரை அவர்கள் சிறைபிடிக்க வேண்டும்பிறகு மேசகிரியின் மேல் நட்புறவு கொண்டு தான் கடகதேசத்து அரசராக முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்பதே ! ஆனால்அவரின் ஆசைக் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் இளவரசர் துலாவர்மர்அந்த வேளையில் ஜோதிடர் மகரகுரு மேலும் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க அனைவரும் ஆவலானார்கள்.

"கத்தியின்றி இரத்தமின்றி நிறைவேற்ற வேண்டுமானால் ஒரு பெண்ணால் மட்டுமே முடியும்என்றவுடன் தனுசுமல்லருக்கு ஆச்சரியம் உண்டானது. "என்ன ஜோதிடரே அப்படியென்றால் நாங்கள் கையாளாகாதவர்களாஎங்களால் முடியாததை எப்படி ஒரு பெண்ணால் செய்து முடிக்க முடியும்?"

"தனுசுமல்லரே, சற்று அமைதியாக சிந்திப்பாயாக. பெண்களால் அடைந்த பல வெற்றிகள் சரித்திரம் நமக்கு சொல்கிறதுஆகையால் பெண்ணின் சக்தியை குறைத்து மதிப்பிடாமல் மேற்கொண்டு நடக்க வேண்டியவைகளை தாமதமின்றி நடைபெற செயலில் இறங்கினால் நல்லதுஎன்று ஜோதிடர் மகரகுரு  விரைவு படுத்தினார்.
இளவரசரும் அவர் பங்கிற்கு "காலம் கனியும் வரை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்சிம்மசேனரேதாங்கள் கோவில் கும்பாபிசேகத்திற்கான வேலையை உடனே ஆரம்பியுங்கள்தனுசுமல்லரே, தாங்கள் தங்கத்தேரை பழுதுபார்த்து எந்த ஒரு சேதமில்லாமல் பவனி வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்அதிலேயே லையித்துவிடாமல் கூடவே மக்களுக்கு வைத்தியமும்காட்டுவிலங்குகளிடமிருந்து காப்பாற்றும் வீரத்தையும் மறந்துவிடவேண்டாம்என்று அவரின் பொறுப்புகளை நயமாக எடுத்துரைத்தார்.

இளவரசர் துலாவர்மர் தொடர்ந்து "நாம் இப்போது பேசியதை இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டுகிறேன்எக்காரணம் கொண்டும் மேசகிரி அரசர்ரிசபவேந்தருக்கோ அல்லது அந்நாட்டு மதிமந்திரி விருச்சிகருக்கோ தெரியக்கூடாதுஎன்று அனைவரையும் எச்சரித்தார்.
அந்தக்கணம் முதல் மூவரின் மனதில் 'அந்தப் பெண் யாராக இருக்கும்அவரால் எப்படி நமக்கு உதவ முடியும்எப்படி அப்பெண்னை அடையாளம் கண்டு கொள்வது?' என்பது போன்ற ஆயிரம் கேள்விகளுக்கு விடை தெரியாமல் தவித்தனர்ஆனால் சேனாதிபதி சிம்மசேனர் மட்டும் சற்றுக் கூடுதலாகயோசித்தார்இந்த செய்தியை எதிரி நாடான மேசகிரியின் மதிமந்திரி விருச்சிகருக்குத் தெரியப்படுத்திவிட வேண்டுமென்று துடித்தார்அதற்கானஏற்பாடும் செய்தார்.

தொடரும் ... 



%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

Wednesday, 3 February 2016

அவரும் சீதகாதி தான் ! சிறுகதை - மதுரை கங்காதரன்

அவரும் சீதகாதி தான் !

சிறுகதை 

மதுரை கங்காதரன் 

"நான் அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன். நம்ம பொண்ணோட கல்யாணத்திற்காக வைச்சிருக்கிற ஒரு லட்சம் ரூபாயை உங்க நண்பருக்கு கடனா கொடுக்காதீங்கன்னு. கேட்டீங்களா? இதோ மூணு மாசத்திலே வட்டி முதலுமா திருப்பித் தந்துடுறேன்னு சொல்லி வாங்கிட்டுப் போனவரு போனவரு தான், மூணு மாசம் மேலே ஆச்சு. மனுசன் உயிரோட இருக்காரா? இல்லையான்னு? கூடத் தெரியல்லே. மனுசன் கைபேசியோட எண்ணையும் மாத்திட்டார் போலிருக்கு. அதிலேயும் தொடர்பு கொள்ள முடியல்லே. கல்யாண நாளும் நெருங்கிட்டே வருது. வேறு யார்கிட்டேயும் கேட்கமுடியாத நிலைமை. எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையிலே பணபிரச்னையோட இருக்காங்க. வீட்டுக்கு வீடு வாசல் படி என்பதை மாத்தி வீட்டுக்கு வீடு பணபிரச்னை சொல்லணும் போல தெரியுது ! இப்போ என்ன பண்ணப்போறீங்க?" என்று தன் கணவன் பரமசிவனிடம் நன்றாக சுடுகின்ற எண்ணெய் சட்டியில் மொறு மொறுவென்று அப்பளம் பொறிகின்றது போல் பொறிந்து தள்ளினாள் சிவகாமி.

"சிவகாமி , நீ அப்போ சொன்னது இப்போது தான் எனக்கு உரைக்கிறது. இராம சாமி , என்னோட உயிர் நண்பனாச்சே. அவனுக்கு ஒரு கஷ்டம்னா அது என்னோட கஷ்டம்னு நினைச்சு நாள் கிழமை பார்க்காமே எந்த பேப்பர்லேயும் கையெழுத்து வாங்காமே மூனாம் மனுசனுக்கும் தெரிந்து கொடுக்காமே உடனே அவனுக்குச் சுளையா ஒரு லட்சம் கொடுத்தேனே அது தான் நான் வாழ்க்கையிலே பண்ணிய பெரிய தப்பு" என்று நொந்து கொண்டார்.

"உங்க மேலேயும் தப்பில்லே. அவருடைய சொந்த செலவுக்காக அந்த பணம் கேட்டிருந்தா நான் உங்களை அப்போவே கொடுக்கவிடாமே செஞ்சிட்டுருப்பேன். தன்னோட மகனுக்கு வெளிநாட்டிலே நல்ல சம்பளத்திலே நல்ல வேலை கிடைச்சிருக்கு. அதுக்கு கேட்டதாலே நானும் ஒத்துகிட்டேன். சரி, பணம் வாங்கின மனுசன் சீக்கிரமா திருப்பித் தந்துடுவாருன்னு பார்த்தா இது வரைக்கும் ஒரு போனாவது பண்ணியிருப்பாரா மனுசன். நீங்க என்ன பண்ணுங்க.நேரா அவங்க வீட்டுக்கு போறீங்க. அவர்கிட்டேயிருந்து பணம் வாங்காமே இங்கே வந்துடாதீங்க. அந்த பணம் இருந்தாத் தான் நம்ம மானத்தை நாம் காப்பாத்திக்க முடியும்" என்று மனதில் கணத்தோடும், வெளியில் கோபத்தோடும் சொன்னாள்.         

"ஆனாலும் நேத்து வரை எனக்கு அவன் மேலே ரொம்ப நம்பிக்கை இருந்தது. தன் தலையை அடகு வைச்சாவது பணத்தை கொடுத்துடுவான்னு நினைச்சேன்.ம்.. இப்போ வருந்தி என்ன பிரயோசனம். சீக்கிரமா அங்கு போறேன். எப்படியும் பணத்தோடு வர்றேன். பணம் வாங்கின கையோடு அவனுக்கு ஒரு பெரிய கும்பீடு போட்டு 'இனி மேல் உன்னோட நட்பே வேணாம்பா' என்று சொல்லிட்டு வந்துடுறேன்" என்று ஒருவித வைராக்கியத்தோடு பேசினார்.

அவனுடைய மனமோ' ஏன் தான் மனுசங்க இப்படி இருக்கிறாங்களோ? அவசரம்னு பணத்தை கைமாத்தா அல்லது கடனா வாங்கிடுறாங்க. ஆனா அதை காலா காலத்திலே திருப்பித்தர ஏன் தான் மனசு வரமாட்டீங்குது? அப்போ பணம் கொடுக்குறவன் ஏமாளியா அல்லது இளிச்சவாயனா? இந்த இராம சாமி , என் பால்ய நண்பன். இப்படி என்னை எமாத்துவான்னு கொஞ்சம் கூட நினைக்கலே. அவனுக்கு திருப்பித் தரமுடியாத படி பெரிய கஷ்டத்திலே இருக்கலாம். அதுக்கு நான் தான் பலியாடா? நான் கொடுத்தது 'கல்யாணத்துக்காக வைச்சிருக்கிற பணம்னு அவனுக்கு நல்லா தெரிந்தும் இன்னமும் தராமே இருப்பது எந்த வகையிலே அவனுக்கு நியாமாப்படுதோ! இப்போ புலம்பிப் என்ன பண்றது? அடுத்து நடக்க வேண்டியதைப் பார்ப்போம்' என்று மனத்தை சமாதானம் செய்துகொண்டு புறப்பட்டார்.

அவரின் மனம் வேகத்திற்கு அவரின் வயது ஒத்துழைக்கவில்லை. சற்று மெதுவாகவே நடந்து கொஞ்சம் சிரமப்பட்டு வீட்டை அடைந்தார் பரமசிவம். அனால் இராம சாமி வீட்டில் அவர் கண்ட காட்சி அவருடைய இதயத் துடிப்பை வேகப்படுத்தியது. வீட்டிற்கு வெளியே சோகத்துடன் பலர் இருந்தனர். 'யாருக்கு? என்ன ஆச்சோ' என்று ஒருவித குழப்பத்திற்குள்ளானார். 'யாருக்கு என்ன ஆனாலும் தன் நண்பனுக்கு ஒன்றும் ஆயிருக்கக் கூடாது' என்று நப்பாசைப்பட்டார்.

இது தன் நண்பன் மேல் இருக்கும் பாசம் என்று நீங்கள் நினைத்தால் அது உங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான். இந்த நினைப்பு. முற்றிலும் அவருடைய சுயநலம் தான். ஏனென்றால் அந்த லட்சம் ரூபாய் அவனுக்குக் கொடுத்தது அவன் மனைவி , மகனுக்கு கூடத் தெரியாது. ஒருவேளை அவனுக்கு ஏதேனும் நடந்திருந்தால் அப்படி நினைக்கும்போதே அவருடைய நெஞ்சம் வெடித்தது. கண்கள் லேசாக சொருக ஆரம்பித்தன. என்ன நடந்தாலும் அதை எதிர்கொண்டு தான் தீரவேண்டும் என்று தைரியத்தை வரவழைத்துக் திடமாக உள்ளே நுழைந்தார்.

அங்கே அவர் கண்ட காட்சி தன் கற்பனைகளெல்லாமே தவிடுபொடியாக்கியது. ஏது பேசுவது என்ன செய்வது என்று சற்றுத் தடுமாறினார். பரமசிவத்தைக் கண்ட அவன் நண்பன் இராம சாமி  மனைவி வந்திருப்பது தன் கணவனின் நெருங்கிய நண்பன் என்று தெரிந்தமாத்திரத்தில் "பார்தீங்களா. உங்க நண்பரை !" என்று சவமாக கிடந்தவரை சுட்டிக்காட்டி அழுகையை அடக்கமுடியாமல் விம்மினாள் . அந்த கோலத்தைப் பார்த்தவுடன் வந்த வேலையை மறந்து தன் நண்பனின் பழைய நினைவும் தற்போதைய குடும்ப நிலையும் அவர் கண் முன் நின்றது. 

"மாமா !" என்று கத்தியவாறு ஓ ..வென்று அவரைப் பிடித்து அழுதான் தன் நண்பனின் மகன் சிதம்பரம்.

"சிதம்பரம் ! நீயே இப்படி அழுதா எப்படி? அப்புறம் உங்கம்மாவுக்கு யாரு ஆறுதல் சொல்லுவா? நான் வந்துட்டேனில்லே. எல்லாம் நான் பார்த்துக்குறேன்" என்று பொதுவாக எல்லோருக்கும் ஆறுதல் கூறினார். அந்த வார்த்தைகள் கேட்டவுடன் ஓரளவு எல்லோருக்கும் பழைய நிலைக்கு வர ஆரம்பித்தனர்.

"மாமா..ரெண்டு மாசத்துக்கு முன்னே அப்பாவுக்கு உடம்பு சௌரியமில்லாமே போனார். பிறகு திடீரென்று பேச்சு மூச்சு இல்லாமே படுத்த படுக்கையானார். நான் வெளிநாட்டிலே இருந்ததாலே உடனே புறப்பட்டு வரமுடியல்லே. நேத்து தான் 'அப்பாவோட நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சுன்னு' போன் பண்ணுனாங்க. அதனாலே உடனே புறப்பட்டு வந்துட்டேன். இன்னைக்கு காலையிலே எல்லாமே முடிஞ்சிருச்சு மாமா" என்று கதறி அழுதான்.             

தன்னோட நிலைமை தான் கந்தலாக இருக்குதுன்னு நினைச்சா இங்கே அதைவிட மோசமா இல்லே இருக்குது. இந்த நிலைமையிலே தன்னோட சோகக்கதையை யார்கிட்டே சொன்னாலும் காதில் ஏறாது என்று மனதை கல்லாக்கிக் கொண்டு முதலில் தன்னுடைய நண்பர்களுக்கு இந்த விசயத்தைத் தெரியபடுத்தினார் பரமசிவம். ஒவ்வொருவரும் வர வர இராம சாமி மனைவிக்கும் மகனுக்கும் சற்று தேற ஆரம்பித்தார்கள்.

கொஞ்ச நேரமே ஆகிருக்கும். உடனே தன் மனைவி சிவகாமியின் நினைவு வந்தது பரசிவத்திற்கு. 'தன் நண்பன் வீட்டிற்கு போனவுடன் கைபேசியில் இங்குள்ள நிலைமையை  சொல்லுகிறேன்' என்று சொல்லிய ஞாபகம் வந்தவராய் உடனே கைபேசியை எடுத்தார். இப்போது நடந்துகொண்டிருக்கும் எல்லா விசயத்தையும் ஜீரணித்தவராய் நிதானமாய் , சாதாரணமாக    

"சிவகாமி ! நான் நல்லபடியா வந்து சேர்ந்துட்டேன். ஏதோ ஒரு வேலையாய் என் நண்பன் பக்கத்து ஊருக்கு போயிருக்கானாம். இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்துடுவான்னு அவரோட மனைவி சொன்னாங்க. நான் எதுக்கு வந்திருக்கிறேன்னு அவங்ககிட்டே சொல்லலே. 'ஒரு விசயமா பக்கத்து ஊருக்கு வந்தேன். அப்படியே உங்க எல்லோரையும் பார்த்துட்டுப் போறதா சொல்லியிருக்கிறேன்'. அவங்களும் 'இங்கே இருந்து சாப்பிட்டுப் போங்கன்னு' சொன்னதினாலே 'ரொம்ப நல்லதாப்போச்சு'ன்னு இங்கேயே இருந்துட்டேன்" என்று இந்த வயசிலும் பெரிய பொய்யைச் சொன்னார்.

இந்த நிலையில் தன் மனைவிக்கு தன் நண்பன் இராம சாமி குடும்பத்தின் உண்மையான நிலைமை தெரிந்தால் அவ்வளவு தான் ! அதைக் கேட்டு , அவளுக்கு என்ன ஆகுமோ ன்னு எனக்கே தெரியாது. ஆனா அவள் கட்டாயம் 'போச்சு ! போச்சு ! என் மானம் மரியாதை போச்சு' என்று ஏதாவது மனக்கோளாறு ஏற்பட்டா அந்த நிலைமை இன்னும் மோசமாகப் போய்விடும். இந்த பணத்தை வேறு வழியில் புரட்டிவிடலாம். ஆகையால் எல்லாம் முடிந்த பிறகு நண்பர் இராம சாமியின் இறந்ததை பக்குவமா எடுத்துச் சொல்லலாம்" என்கிற அசட்டு நம்பிக்கையோடு எல்லா காரியங்களையும் குறைவில்லாமல், வெறுப்பு காட்டாமல் அக்கறையோடு செய்வதைப் பார்த்துவிட்டு வந்திருப்பவர்கள் "சும்மா சொல்லக் கூடாது. ஒரு நண்பன்னா இப்படித் தான் இருக்கணும்னு எல்லோருக்கும் காட்டிட்டுட்டீங்க. நல்லபடியா இருக்கிறப்போ ஆயிரம் நண்பர்கள் இருப்பாங்க.ஆனா இந்த நிலைமையிலே யாருப்பா உன்னைப்போல கவனிப்பா" என்று பெருமையாகப் பரமசிவனைப் பார்த்துப் பேசினார்கள்.

அன்று எல்லா வேலைகளையும் முடித்த பிறகு வெறும் கையோடு வீட்டிற்குப் புறப்பட்டுப் போனார். தன் மனைவிக்கு எப்படி சமாதானம் சொல்வது ? என்பதற்கு விடை தெரியாமல் 'எல்லாம் அவன் விட்ட வழி' என்று அமைதியாக வீட்டிற்குள் நுழைந்தார்.

தான் வெறும் கையோடு வந்ததால் வீட்டில் பெரிய ரகளையே  நடக்கும் என்பதை ஒவ்வொரு வினாடியும் எதிர் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் சிவகாமி எப்போதும் இருப்பதை விட அமைதியாக இருப்பது மேலும் மேலும் கிலியை உண்டாக்கியது. முதலில் சிவகாமி தான் மௌனத்தை கலைத்தார்.

"காரியம் எல்லாம் முடிஞ்சிருச்சா" என்று மொட்டையாக கேட்க பரமசிவம் சற்று மிரண்டுவிட்டார்.

"நீ ... நீ... என்ன சொல்றே"

"என்னாங்க ! ஏன் என்கிட்டே மறைக்கணும். உங்க நண்பர்  இறந்துட்டார்னு எனக்குத் தெரியும். என்ன தான் அவர்மேலே எனக்கு கோபம் இருந்தாலும் இந்த நிலைமையிலே யாருக்குத் தான் அனுதாபம் வராது? ரொம்ப பாவம்ங்க. நல்லவேளை எதேச்சையா நீங்க அங்கே போனது ரொம்ப நல்லதாப் போச்சு. எங்கே இந்த செய்தி எனக்குத் தெரிஞ்சா நான் துவண்டு போய்விடுவேன்னு தானே என்கிட்டே பொய் சொன்னீங்க. எனக்கு ஒண்ணு ஆனா நீங்க தாங்கமாட்டீங்கன்னு எனக்கு நல்லாவேத் தெரியும். இந்த மாதிரி நடந்தா யாரு தான் என்னாங்க செய்ய முடியும்? மேலே அவன் எப்போ கூப்பிடுறானோ அப்போ போகாமலா இருக்க முடியும்? இதுக்கு நீங்களும், நானும் விதிவிலக்கா என்ன?" என்று அவரைவிட தெளிவாகவும் இயல்பாகவும் பேசியது பரமசிவத்திற்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது.

"அப்போ, அவரு இறந்தது உனக்கு ஒண்ணும் வருத்தத்தை கொடுக்கலே. அப்படித் தானே?"

"வருத்தம் தான். அதனாலே அடுத்த வாரம் ஒரு நாள் நானும், நீங்களும் அவரோட வீட்டுக்குப் போய் கொஞ்சம் விசாரிச்சுட்டு வருவோம்" என்று மீண்டும் யதார்த்தமாய் பேசினாள்.

இப்போது தான் அந்த 'ஒரு லட்சம் பண' குண்டைத் தூக்கிப் போட்டார்.

"அதனாலே ....அதனாலே "

"என்னங்க உளர்றீங்க"

"அந்த ஒரு லட்சம் ....." என்று சொல்லி மனைவியின் முகத்தைப் பார்த்தான். அப்போதும் அவள் அமைதியாகவே இருந்தாள்.

உடனே சற்று சுதாரித்தவளாய் ஆமாங்க நீங்க வர்றதுக்கு ஒரு மணிநேரம் முன்னாடி தான் உங்களோட நம்ம தெரு முக்கு நண்பர் வந்தார். அவரு நேத்து இப்போ இறந்தாரே அந்த இராம சாமி வீட்டிற்குப் போனாராம். அப்போவே அவரோட் நிலைமை ரொம்ப மோசமா இருந்திச்சாம். அப்போ அவர்கிட்டே அவரோட மகன் ஒரு கவரைக் கொடுத்து அதை உங்களிடம் கொடுக்கச் சொன்னாராம்" என்று அவசரம் அவசரமாக உள்ளே சென்று அந்தக் கவரை எடுத்துட்டு வந்து கொடுத்தாள்.

அதைத் திறந்தவுடன் அவர் பெயரில் இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை இருந்தது. பார்த்தவுடன் கண்ணீர் அருவி போல் கொட்டியது. மேலும் அந்த கடிதத்தை படித்துவிட்டு விக்கி விக்கி அழுதார். அதைப் பார்த்த பிறகு மனது தாளாமல் அந்த கடிதத்தில் என்ன தான் எழுதியிருக்கு என்கிற ஆவலுடன் அதை வாங்கிப் படித்தாள்.

"அன்புள்ள மாமா அவர்களுக்கு,
நீங்கள் இந்த கடிதம் படிக்கும் போது எங்கள் மீது ஒருவித வெறுப்புடன் தான் இருப்பீர்கள். என்னோட வேலைக்காக நீங்கள் கல்யாணத்திற்காக சேமித்து வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை நீங்கள் உடனே தந்தாக சொன்னார் என் அப்பா. மேலும் என்னுடைய சம்பளத்தில் கூடிய விரைவில் 'இரண்டு லட்சம் ரூபாயாக' திருப்பித் தரும்படியும் கூறியிருந்தார். என் அப்பாவின் நிலைமை பார்த்தால் என்னால் நேரில் வந்து பணம் தர முடியுமா? என்று சந்தேகமாக இருந்ததால் உங்கள் நண்பரிடம் கொடுத்து அனுப்பியுள்ளேன். தாமத்திற்கு மன்னிக்கவும். இப்படிக்கு உங்கள் நண்பர் மகன் சிதம்பரம்" என்று படித்து முடிக்க அவளுடைய கண்கள் கண்ணீர் குளமாக மாறியிருந்தது.

"சீதகாதி வள்ளலை வரலாற்றில் படித்திருக்கிறேன். ஆனால் உண்மையில் உங்கள் நண்பர் இராம சாமி கலியுக சீதகாதி தான்" என்று பெருமையாகப் பேசினாள் பரமசிவம் மனைவி சிவகாமி.

********************************************************************************************