Pages

Wednesday, 5 June 2019

உள்விதி மனிதன் பாகம் : 45 இறைவன் - அசலும் நகலும்! GOD - REAL AND FAKE!



உள்விதி மனிதன்
சமமனிதக் கொள்கை 
பாகம் : 45 இறைவன் - அசலும் நகலும்! 
GOD - REAL AND FAKE!

Image result for GOD - REAL AND FAKE!

மேன்மை கொண்ட மனிதா! ஆன்மிகம் புனிதமானது. மனிதகுலத்திற்கு மிகவும் அவசியமானது. ஒருவகையில் மகிழ்ச்சி வாழ்க்கை வாழ்வதற்கு உதவி செய்வது. தன்னை உணர்வது, எப்படி ஒரு முறையான நல்ல வாழ்க்கை வாழ்வது? போன்ற பல சிறப்பு அம்சங்கள் ஆன்மீகத்தில் இருக்கின்றன. ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஆன்மீகவாதிகள் சிலர் இவ்வாறு போதிக்கிறார்கள். அதாவது ஆன்மீகப் பற்று உள்ளவர்களின் கடமைகளை மறக்கச் செய்வதே, அல்லது அரிய மனித வாழ்க்கையை வாழத்தவிர்ப்பதே, தனக்குச் சொல்லாத, சம்பந்தம் இல்லாதாக்  கடமையைச் செய்வதே தான் ஆன்மீகம் என்று தவறான வழியில் போதிப்பவர்களாகத் தெரிகிறது. அரசாங்கச் சட்டத்தில் எந்த ஒரு பிரிவிலும் கடவுள் பிரார்த்தனை, கோவிலுக்குச் செல்லுதல், பஜனை செய்தல் போன்றவை சொல்லப் பட்டிருக்கின்றதா? அவையெல்லாம் விளையாட்டு, பொழுதுபோக்குப் பிரிவு போல ஆன்மீகமும் சேர்ந்துவிட்டதா? என்கிற சந்தேகம் எழுகிறது. 

அன்பு மனிதனே! உனக்குப் பல கடமைகள் வாழ்க்கையில் இருக்கின்றது. அதை முதலில் தவறாது செய்துவிட்டாலே பாதி ஆன்மிகம் உங்களுக்கு கிடைத்துவிட்டது என்று அர்த்தம். மீதி பாதிஉனக்குப் போகப்போக தெரிந்துவிடும். அதை விட்டுவிட்டு குடும்பத்தை மறந்து, குடும்பத்தைத் துறந்து, பலரைப் புண்படுத்தி உன்னை நீயே பலவகையில் கஷ்டப்படுத்திக் கொள்வது தான் உண்மை ஆன்மிகம் என்பது உண்மைக்குப் புறம்பானது ஒன்று என்றே தோன்றுகின்றது.


Related image

பெருமை மிக்க மனிதா! உன்னுள் இருக்கும் இந்த ஜீவ ஓட்டமாய் உண்மையாய் இருக்கும் உள்விதி மனிதனை மறந்து வெளியில் இருக்கும் பொய்யான தோற்றத்தில் நீ தினமும் ஆடி, பாடி, நடித்துக் கொண்டு இன்னும் எத்தனை காலம் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்வாய்? அதோடு நீ, என்னையுமல்லாவா ஏமாற்றுகிறாய்? 

ஒருவர் கோவிலில் இருக்கும் இறைவனை எந்நாளும் பஜனை, ஆராதனை செய்து வந்தார். அவரைப் பார்த்தவுடன் அவரிடத்தில் ஏதோ ஒன்று எனக்கு கேட்கத் தோன்றியது.

"சுவாமி! நீங்கள் தினமும் இறைவனை வழிபாடு செய்கின்றீர்களே! ஆராதனை செய்கிறீர்களே ! அது எதற்காக?" என்று கேட்டேன்.

அவரோ "இறைவனைக் காண்பதற்காக!" என்று பதிலளித்தார்.

"ஆனால் நான் இறைவனை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கின்றேனே, நீங்கள் பார்க்கவில்லையா?" என்றேன்.

"அப்படியா?" என்று ஆச்சரியப்பட்டு 'எங்கே? எங்கே?" என்று ஆர்வமாய்க் கேட்டார்.

நான், எதிரில் இருக்கும் இறைவனைக் காட்டி இது தான் தெய்வம். எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் இறைவனைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்" என்று பதிலளித்தேன்.

அதற்கு அவரோ "இதுவா தெய்வம்? அவர் உருவமற்றவர். அவரை உணர்வின் வடிவமாக உள்ளவர். அவரின் செயல் மூலம் தான் உணர முடியும்" என்றார்.


Related image

"இறைவன் இங்கு சிலையாகக் காட்சி தருகிறார். இந்தச் சிலைக்கு செயல் இல்லை. ஆனால் நாம் எப்போதும் நினைத்துக்கொள்ள, மறந்துவிடாமல் இருக்க மறந்துவிடாமல் இருக்க, ஒரு  அடையாளத்திற்காகத் தான் இந்தச் சிலை. பிறகு அசலுக்கும் நகலுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?" என்று கேட்டேன்.

அவருக்கு பதில் தெரியாமல் முழித்தார்.

"நகல் சிலை. அசல் செயல். நீ நகல். உன் செயல் அசல். நீ நகலாய் இருப்பதால் இருக்கிறாய். ஆனால் உன் செயல் அசலாய் இருப்பதால் அழியாமல் இருக்கிறது" என்று விளக்கிச் சொன்னவுடன் 'புரிந்துவிட்டது' என்று தலையாட்டினார்.

செம்மை மனிதா! இந்த சிலை நகல் என்றால் உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனைத் தாங்கியவன் தான் அசல். யார் செயலைச் செய்து, கடமையை கண்ணும் கருத்துமாய் தன் வாழ்க்கைக் கடமையினைச் செய்வதோடு மனிதர்களுக்கும் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்பவர்கள் தான் அசல் மனித தெய்வங்கள். அதை விட்டுவிட்டு செயலைச் செய்யாமல் சிலைக்கு முன் நின்று பாட்டு பாடி, பஜனை செய்வதால் உன் கடமைகளை மறந்து நகலாக மாறிவிடுகின்றாய்.

அதாவது ஒருவனை தனது அன்றாட வாழ்வாதாரத்திற்குத் தேவையான வேலைகளைச் (கடமைகளை) செய்யுமாறுக் கட்டளையிட வேண்டும். அப்போது தான் அவனுக்கு வருமானம் கிடைக்கும். அவன் வாழ்கையும் குடும்பமும் செழிக்கும். அதை விட்டுவிட்டு அவனை நீ உனது வாழ்க்கைக் கடமையிலிருந்து வெளியில் வா! அந்த கடமையைச் செய்யாதே. இதோ என் கடமையைச் செய். இப்படி அவனுடைய கடமையை மறக்கச் செய்துவிடுகின்றது இன்றைய ஆன்மிகம்.

Image result for GOD - REAL AND FAKE!

இது எப்படி இருக்கிறதென்றால் "நீ சினிமாவுக்குப் போ" என்றால் அந்த கடமை செய்வதற்கு அவனுடைய பணமல்லாவா செலவாகும். பிறகு அவனது கடமைக்குப் பணம்? மீண்டும் உழை! நீ தான் உழைக்க வேண்டும். நீ கேளிக்கைக்காக, விளையாட்டுக்காக செலவழித்த பணம் உனக்கு திரும்ப கிடைக்குமா? கிடைக்கவே கிடைக்காது. அது மட்டும் நினைவில் வைத்துக் கொள்.

நம்பிக்கை மனிதா! நீ உழைத்தால் தான் உனக்கு நிம்மதி வந்து சேரும். அல்லது நீ உழைத்த பணத்தில் உன் கடமைக்கு உதவாத காரியத்தில் உன் சுயநல இன்பத்திற்காகச் செலவழித்தால் முடிவில் நீ பிச்சைக்காரனாக அலைய வேண்டும். அது தேவையா?
Related image

ஆகையால் மேன்மை மனிதா! நீ உழைத்த காசு உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனைச் சேர்ந்தது. அது எவ்வகையில் செலவழித்தால் அசலான ஆன்மீகத்தை அனுபவிப்பாய்' என்று நான் சொல்கிறேன். அந்த செலவின் மூலம் பலரை வாழ வைப்பாய்!
@@@@@@@@@@@ 

உள்விதி மனிதன் பாகம் : 44 எது உண்மையான ஆன்மிகம்? WHICH IS THE REAL SPIRITUAL?



உள்விதி மனிதன் 
சமமனிதக் கொள்கை 
பாகம் : 44 எது உண்மையான ஆன்மிகம்?
WHICH IS THE REAL SPIRITUAL?

Image result for WHICH IS THE REAL SPIRITUAL?

பெருமைமிக்க மனிதா! உனக்குத் தெரியாத, புரியாத, அறியாத, விளங்காத இடங்களில் எல்லாம் 'தேவ ரகசியம்' என்கிறார்களே? அப்படியானால் நீ அன்றாடம் சாப்பிடுவதற்கு உதவிடும் மரம், செடி, கொடி தரும் காய்கனிகள், விலங்கினங்கள், பறவைகள், கடல் உயிரினங்கள் எல்லாவற்றையும் உன் கண்களுக்குத் தெரியாதவாறு பூமியில் புதைத்து ரகசியமாக வைத்திருக்களாமல்லவா? அப்படியிருப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நான் இவ்வுலகம் படைத்ததற்கு மகிமை இல்லாமல் போயிருக்கும். உனக்கு எல்லாம் உபயோகப்பட வேண்டுமென்பதற்காக உனக்குள் இருக்கும் என் ஜீவ ஓட்டத்திற்காக மட்டுமே! ஆகையால் உனக்குப் பயன்படுவது எல்லாமே உன் கண்ணில்படுமாறு படைத்திருக்கிறேன். காடுகளில், மலைகளில் ஏன் நீ செல்லாத, காணாத பல இடங்களில் உன் உதவியில்லாமல் தானே பல வகை மரம், செடி, கொடி, புல், பூண்டுகள், கடலினங்கள் வளர்கின்றது, அதற்கு நீ என்ன உதவி செய்தாய்? ஆகையால் பூமியில் உனக்கு வேண்டியது எதுவும் ரகசியமானதாக இல்லை. அப்படி இருந்தால் கட்டாயம் அது அறியாமை, விழிப்புணர்வு என்கிற முடிவுக்குத் தான் வர வேண்டும். அல்லது அவைகள் உனது ஜீவ ஓட்டத்திற்குப்  பயன்படா!

தன்னலமற்ற மனிதா! இந்த உலகில் ஆன்மீக விசயங்கள் பரிமாறிக்கொள்வதுக்கென்றே ஒரு தனிக் கூட்டம் இருக்கின்றது. அதில் உண்மையில் ஆன்மீகவாதிகள் சிலர் இருக்கின்றார்கள். ஆனால் பெரும்பாலும் அவர்கள் வயது முதிந்தவர்களாகவே அந்த காலத்தில் இருந்தார்கள். அதில் நல்லவர்களும் தீயவர்களும் உண்டு. போலி சாமியார்களின் வேலை என்ன? பலர் முன்னிலையில் நல்ல ஆன்மீகவாதிகளைப் போல் நடிப்பது! அவர்கள் சதா ஒரு நாமத்தை ஜெபிப்பது! பூஜிப்பது? அதன் பெருமைகளை சொல்லிக்கொண்டு இருப்பது? வருகின்றவர்களுக்கு அருள்வாக்கு கூறுவது, தன்னை பின்பற்றுபவர்களுக்கு 'உபதேசம்' தருவது, பூஜை பிரசாதம் அளிப்பது, தன்னை வணங்குவதற்காக பணத்தை வசூல் செய்வது! என்று ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு பணவசூல் வேட்டை நடத்துவது!
Related image

நல்லெண்ண மனிதா! நீ இருக்கும் வரை இறைவனான இந்த உள்விதி  மனிதனைப் பற்றிய செய்திகளைப் பற்றி யாரேனும் கூறினாலும், பழங்காலத்தில் நடந்த நிகழ்சிகளைப் பற்றிக் கூறினாலும் எல்லாம் உண்மை என்பதாகவே கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். ஏனெனில் அவற்றை நிரூபிக்க முடியாது. பார்த்தவர்களும் இல்லை. சாட்சியும் இல்லை. ஏதாவது அழுத்திக் கேட்டால் அவைகள் உணர்ந்து அனுபவிக்க முடியுமே தவிர கண்ணால் காண முடியாது! என்று ஒருவரியில் பதில் சொல்லித் தப்பித்துக் கொள்வார்.அதில்லாமல் பல ஏமாற்று வித்தைக் காட்டி பலரை ஏமாற்றவும் செய்வார்கள்.

இனிய மனிதா! இக்கால ஆன்மிகம் உன் வாழ்க்கைக்கு மேன்மைபடுத்த உதவுகிறதா? சில வகையில் உதவுகிறது. பல வகைகளில் உன்னை ஏமாற்றுகிறது என்று சொல்லத் தோன்றுகின்றது. தொண்டுள்ளம் கொண்ட மனிதா! பெரிய பெரிய கோடீஸ்வரர்கள், முதலாளிகள், மனிதர்கள் எல்லாரையும் உட்கார வைத்து படத்திற்கு, சிலைகளுக்கு பூஜை செய்து புகழ்ந்து பாடி பேசினால் யாருக்கு என்ன பயன்? அவர்கள் உனக்கு ஏதாவது தரப் போகிறார்களா? அல்லது இரக்க குணம் கொண்டு உன்னைக் காத்து விடுவாரா? இன்றோ சில ஆன்மீகவாதிகள் இளைஞர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி ஆன்மீக ஞானம் வரும்?


Image result for WHICH IS THE REAL SPIRITUAL?

இளமையில் ஆன்மிகத்தால் உனது வாழ்க்கை நேரம் வீணாகிறது. குடும்ப உறவுகளைத் துறந்து உன்னைப் பற்றிய எண்ணங்களை நினைக்கச் செய்கிறது. போலியாக ஒரு மனிதனைக் காட்டச் செய்கிறது. இளமைக்குண்டான கடமையை மறக்கச் செய்கிறது. புதிதாக சிந்தனைகளைச் செய்யவிடாமல் செய்கிறது. ஒரு நாள் அதையே வேண்டாம் என்கிற அளவிற்கு வெறுப்பை ஏற்படுத்தச் செய்கிறது. இப்படியெல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. இனி மேலும் நடக்கும்!


Image result for WHICH IS THE REAL SPIRITUAL?

நன்மை தரும் மனிதா! நான் உனக்குள் உள்விதி மனிதனாக இருக்கும் வரை உனக்கு நீயே சரியாக இருப்பதற்கும், சரியாக நடக்கும் மனிதனுக்கும் ஆன்மிகம் வேண்டியதில்லை. உன் செய்கையினால் மற்றவர்கள் யாரும் கவலையில்லாமல், எப்போதும் மகிழ்ச்சியாய் அல்லது பிரச்சனையில்லாமல், தொல்லையில்லாமல், கஷ்டப்படாமல் இருப்பதுவே உண்மை ஆன்மிகம். அதுவே சத்தியம். அதுவே தெய்வீகம். அதுவே உனது வாழ்க்கை உயர்வதற்கான வழி ! பிற உயிர்களைத் தீய சக்தியாக்கி அதனை அழிக்க பயன்படுத்துவதெல்லாம் ஆன்மிகம் இல்லை. இதை முதலில் புரிந்துகொள். உனக்கு எல்லா விசயங்களும் தெரிய வரும்.
###################

Monday, 3 June 2019

உள்விதி மனிதன் பாகம்: 43 போலி ஆசாமிகளிடத்தில் ஏமாறாதே! - BEWARE OF FALSE PEOPLE!



உள்விதி மனிதன்
சமமனிதக் கொள்கை 
மதுரை கங்காதரன் 
பாகம்:43 போலி ஆசாமிகளிடத்தில் ஏமாறாதே!
BEWARE OF FALSE PEOPLE
Image result for BEWARE OF FALSE PEOPLE

மனிதா! இப்போது புரிகின்றதா? சொர்க்கம், நரகம் உலகில் வாழ நீ செய்யும் செயலில் மட்டுமே பேசும். அதை நீ உன் வாழ்க்கையிலே அனுபவிக்கலாம். பெருமை மனிதா! முன் ஜென்மம் செய்த பாவ புண்ணியம் ஏற்ப உனது இந்த பிறவி அமைகிறது என்று எடுத்துக்கொண்டால் பச்சிளம் குழந்தைகள் ஏன் இறக்க வேண்டும்? வாழ்வைத் தொடங்குமுன் வாழ்வின் அர்த்தத்தைக் காணும் முன் அவர்கள் வாழ்க்கை முடிவுற யார் காரணம்? திடீரென்று வெள்ளம், எரிமலை, வறட்சி, சூறாவளியால் கூண்டோடு அடித்து பலரின் ஜீவ ஓட்டத்தை நிறுத்தப்படுகின்றதே அதற்கு காரணம் என்ன?

Image result for BEWARE OF FALSE PEOPLE

நன்மை தரும் மனிதா! ஒரு தலைவனின் தவறான எண்ணங்களினாலும் அதன் செயல்களினாலும் எத்தனைத் தலைகள் உருண்டிருக்கின்றன? என்பதை நீ சரித்திரத்தில் படித்திருப்பாய். அதாவது ஒருவனின் திமிர், அதிகார வர்க்கம், ஆணவம், தலைக்கணம், பேராசை போன்ற காரணத்தினால் பலரை துன்புறுத்தும் செயல் செய்கின்றபோது அதை யாராலும் தடுக்க முடியாது. அதன் பலனை அனுபவித்தே ஆகவேண்டும். ஏனெனில் அப்படிப்பட்டப் பாம்பை உன்னைப் போன்றோர்கள் தான் பாலூட்டி வளர்க்கிறார்கள்! இன்று நீ அனுபவிக்கிறாய். நீயே ஒரு பாம்பை, சிங்கத்தை, புலியை, கரடியை நரியை தேர்ந்தெடுத்து அதைக் கூட்டத்தோடு வளர்க்க துணைபோனதுமில்லாமல் அவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளையும் செய்து கொடுத்து அதன் பலனாக நான் உனக்குக் கொடுத்த அனைத்து செல்வத்தையும், வளத்தையும் அவர்களிடத்தில் இழந்து இப்போது அவர்களுக்கு அடிமையாக அல்லவா இருக்கிறாய்? அதன் பலன் இப்போது நீ இருக்கும் நிலைமை!

சிறப்புமிக்க மனிதா! உனது வலிமை உனக்குச் சோதிப்பதற்கு பல சந்தர்ப்பங்கள் கொடுத்தும் உன் அறிவிலி தன்மையால் உன் வாழ்வை நீயே நாசமாக்கிக் கொண்டு வருகிறாய். அதோடு உன்னுடன் ஒட்டியிருக்கும் என்னைக் கூட மதியாமல் பல சந்தர்ப்பங்களில் பலருக்குத் தீய செயல்கள் செய்தோ அல்லது தீய செயல்களைச் செய்யத் தூண்டவோ செய்யும்போது நான் இனி அதைப் பார்த்து சும்மா இருக்க மாட்டேன். உனக்குள் ஆன்ம ஓட்டமாய் இருக்கும் நான் பெரும் புரட்சி செய்துவிடுவேன். இனி போகப்போக என் ஆற்றலைப் பாரும்! நீ ஒரு பாம்பை வளர்த்தாயானால் அதேபோல் மற்றொரு பாம்பை உருவாக்கி அவர்கள் இருவரையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறேன். இறுதியில் இரண்டுமே சாகப்போகும் காட்சியை நீ பார்க்கத் தான் போகிறாய்? அதில் நல்ல செயல் புரியும் நல்லவர்களே தப்பிப்பார் ! இது உறுதி.   

Image result for BEWARE OF FALSE PEOPLE

தன்னம்பிக்கை மனிதா! இந்த உலகில் கோடிக்கணக்கான ஜீவராசிகள் பல ரூபத்தில் பலவித இடங்களில் பரந்து விரிந்து இருக்கின்றன. ஆனால் அனைத்து ஜீவராசிகளில், இந்த பிரபஞ்சத்தில் வாழும் மனிதன் மட்டும் தான் அவன் தன் குணம், எண்ணம், சிந்தனை, செயல்களை எளிதாக சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் சட்டென்று மாற்றிக்கொள்ளும் வரம் பெற்றிருப்பவன். மற்ற அனைத்து ஜீவராசிகள் அனைத்தும் அன்று முதல் இன்று வரையும், இனிமேலும் ஒரே மாதிரி செயல்களையும், குணங்களையும் கொண்டதாக இருக்கின்றது / இருக்கும்.

நல்லெண்ணம் கொண்ட மனிதா! மாமரத்தை ஒரு போதும் கொய்யா மரமாக மாற்ற முடியாது. அதன் வித்து முதல் முடிவு வரை அவற்றின் பலனாக மாமரம் ஒருபோதும் மாம்பழத்தைத் தவிர வேறொன்றும் தரும் குணம் அதற்கில்லை.

அதேபோல் மானின் குணம் ஒரு போதும் புலியின் குணமாய் மாறும் வாய்ப்பு கொஞ்சம் கூட இல்லை. மானின் குணம் கடைசி வரைக்கும் சாந்தமாய், புலி போன்ற பிராணிகளுக்கு பயப்படுமாயும் வளர்ந்து வீழ்கிறது.

நல் சிந்தனை மனிதா! பறவைகள் ஒருபோதும் மீன்களாக மாறாது. மீன்கள் ஒருபோதும் பறவைகளாக மாறது. ஆனால் தன்னம்பிக்கை மனிதா! இந்த ஜட, ஜந்து பிரபஞ்சங்களில் எல்லாம் இறைவனாக இந்த உள்விதி மனிதன் இருக்கின்றான். என் எண்ணப்படியே எல்லாம் நடக்கிறது என்று நினைக்கலாம். ஆனால் சிறப்பு மனிதா! இந்த அனைத்து ஜடம் மற்றும் ஜீவராசிகள் எப்போதும் இந்த உலகம் பிறந்தது முதல் இன்று வரையில் அதன் குணம்  மாறாமல் இருக்கின்ற காரணத்தினால் உனக்குத் தீங்கு ஏற்படாதவாறு உன்னைக் காத்து வருகிறேன்.

ஆனால் என் இனிய மனிதா! இறைவனான இந்த உள்விதி மனிதனுக்கு மிகப்பெரிய வேலை மனித உருவத்தில் வந்துள்ளது! என்றால் அதில் ஆச்சரியப்படுவதில் ஏதுமில்லை. ஏனென்றால் மனிதனின் எண்ணம், செயல்கள் எப்போதும் மாறக்கூடியவையாய் இருக்கின்றது.

இன்னும் பலவித வேளைகளில் செயல்களில், இயக்கங்களில், கட்சிகளில், ஆன்மீகத்தில், சாதி சமயங்களில் ஏன்? ஆதிவாசிகளில் கூட அவர்களுக்கென்று ஒரு கூட்டம் இருக்கின்றது. மனிதர்களுடைய எண்ணங்கள் செயல்பாடுகள் மேலும் பல மாற்றங்கள் நாம் பார்க்கலாம். ஏன் அவைகள் அழியும் வரைப் பார்க்கலாம்.

Image result for BEWARE OF FALSE PEOPLE

அதனால் பெருமை கொண்ட மனிதனே! உன்னை ஆட்டிப் படைப்பதற்காகத்தான் மனித உடலில் மட்டும் விஷேசமாக நான் உனக்குள் உள்விதி மனிதனாக ஆன்மீக இயக்கமாய், ஜீவ இயக்கமாய் இருக்கிறேன். இதுவரை நான் உன்னை என்னவோ என்று நினைத்தேன். ஆனால் எப்போது உன் எண்ணமும் செயலும் என்னோடு ஒத்துபோகாமல் இருக்க ஆரம்பித்ததோ, அதேபோல் உன்னை சூழ்நிலைக்குத் தகுந்தவாறு எப்போது உன்னை மாற்றிக் கொண்டாயோ அப்போது முதல் நான் உன்னிலும் மேலான ஆதிக்கம் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

மேன்மை மனிதா ! போலியாக, நடிக்கும் பெரிய பெரிய தலைவர்கள், ஆன்மீகவாதிகள் போன்றோர்கள் எல்லாம் உனக்கெதிரே நடந்து கொள்வதை 'சரி' என்று எண்ணிவிடாதே. அவர்கள் உன் எண்ணத்திற்குத் தகுந்தவாறு உன்னைக் கவர அவர்கள் போடும் வேஷம் தான்.

Image result for BEWARE OF FALSE PEOPLE

ஆனால் நீ சென்ற பிறகு அவர்கள் போட்ட வேஷத்தைக் கலைத்துவிடுவார். பாவம்! அது உண்மையென நம்பி அதற்காக நீ ஏமாந்து அவர்களுக்கு அடிமையாயிருப்பாய். அதாவது போலியானத்  தலைவர்கள், ஆன்மீகவாதிகள் போன்றவர்கள் எப்போதும் மாறி மாறி பேசிக்கொண்டேயும், தாங்கள் பரம யோக்கியர்கள் போலவும் காட்டிக் கொள்வார்கள். ஆனால் மறைவில் அவர்களின் லீலை உனக்குத் தெரியாமல் பலவித தீயச் செயல்களில் ஈடுபடுவார்கள் ஜாக்கிரதை!
&&&&&&&&&&&&&&&&

உள்விதி மனிதன் பாகம் : 42. சொர்க்கம் அடையும் வழி A WAY TO REACH HEAVEN



உள்விதி மனிதன் 
சமமனிதக் கொள்கை 
மதுரை கங்காதரன் 
பாகம் : 42. சொர்க்கம் அடையும் வழி 
A WAY TO REACH HEAVEN
Related image

மேன்மையான மனிதா! உன் ஜீவா ஓட்டம் நின்ற பிறகு உன்னைத்  தொட்டுக்கொண்டிருந்த அந்த ஜீவா ஆன்மா உன்னைப் பிரிந்து சென்ற பிறகு அது உன் செயலைப் பொருத்துத் தான் சொர்க்கமோ அல்லது நரகத்தைத் தொடும் என்கிற ஐதீகம் இருக்கின்றது. நன்றாக கவனிக்க வேண்டும். அதாவது நீங்கள் செய்யும் நல்ல செயல் பொருத்தே தவிர நல்ல எண்ணங்களைப் பொருத்தோ, நல்ல நினைப்பு பொருத்தோ அல்ல. இதில் 'செயல்' என்பதை எதற்காக அழுத்தத்துடன் சொல்லப்படுகிறதென்றால், ஒருவனின் செயல் தான் அவனை நல்லவன், கெட்டவன் என்று பிரித்துக் காட்டும். பலர் வெளியில் ஆயிரம் முறை 'நல்லதை செய்' என்றும், நல்ல எண்ணம், சிந்தனை கொள்ளவேண்டும் என்றும் பேசியும் முழங்கவும் செய்வார். ஆனால் திரை மறைவில் உள்ளே செய்கின்ற செயலிலோ  ஊழல், லஞ்சம் அல்லது பணத்திற்காகப் பேராசைப்பட்டு பல தீய செயலில் மறைமுகமாக அல்லது பிறரை மறைமுகமாகத்  துன்புறுத்தும் செயலில் ஈடுபடுவர். அவனுக்குத் தனியாக நரகம் என்று மேலோகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மனிதன் உனக்கு வேண்டுமானால் பகட்டாக, அந்தஸ்து மிகுந்தவனாக, பணக்காரனாகத்  தோன்றலாம். ஆனால் அவன் நிச்சயம் மரண அவஸ்தை தான் பட்டுக்கொண்டிருக்கிறான் என்று உங்களில் பலருக்குத் தெரியாது, அதாவது அவன் தனது சுயநலமிக்கச் சுகத்திற்காக அவனது தலைமுறையே காணாமல் போகும் அளவுக்குக் கஷ்டப்படுவான்.

Image result for A WAY TO REACH HEAVEN

ஏனெனில் அவனையும் அவனுக்குள் இருக்கும் உள்விதி மனிதன் நானல்லவா ஆட்டிப்படைக்கிறேன். அன்பு மனிதா! நான் நீதி தவறாத நீதிபதிஉனக்கு நீதி நல்ல வழியில் தேடித் தரவேண்டும். நிரந்தரமாக உன் மகிழ்ச்சி காத்திட வேண்டும். உன் பரம்பரைக்கும் நிம்மதி தரவேண்டும் என்கிற ஆசை எனக்கு உள்ளதால், நீ தவறு செய்யும்போதெல்லாம் உனக்கு யாராவது தீர்ப்பு வழங்கித் தண்டனை கொடுக்கிறார்களா? இல்லையே. குறுக்கு வழிகளில் முறைகேடாகச்  சொத்து சேர்த்தவன் எவ்வளவு தான் தன் பெயரில் தன்  குடும்ப, உறவின் பெயரில் சேர்ப்பான். ஐந்து தலைமுறை? பத்து தலைமுறை?அவைகளெல்லாம் நீ எவ்வளவு காலம் மறைமுகமாக பலரது வயிறெரிச்சல், சாபம் மற்றும் அசிங்கமானப் பேச்சுக்கு ஆளாகி அவமானப்பட்டு கஷ்டத்துடன் சேர்த்திருப்பாய்! இனிய மனிதா உன்னை நினைத்தால் பாவமாக இருக்கின்றது. நீ பட்ட அந்தக் கஷ்டம் அவர்களுக்குத் தெரியாது. நீ சேர்த்து வைத்த அந்த செல்வத்தை நீ யாருக்குத் தானமாகக் கொடுத்தாலும் அதை அவர்களால் மகிழ்ச்சியாக அனுபவிக்க இயலாமல், கூடிய விரைவிலே அவர்களிடத்தில் இருந்த கொஞ்சநஞ்சம் பணமும், செல்வமும் அதோடு இழந்து விரைவிலே அவர்கள் ஓட்டாண்டிகளாகிவிடுவார்கள்.

பேராசை கொண்ட பிரபலத் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், ஆன்மீகவாதிகள் இன்னும் பலர் இறக்கும்போது, தான் சேர்த்து வைத்த சொத்துடன் இறந்தார்களா?  சில நேரத்தில் அவர்கள் தற்கொலையும் செய்யுமளவிற்கு சென்றுவிடுகிறார்களே ஏன்? மனஅழுத்தம், மனஉளைச்சல், அவர்கள் தேடிய வினை, அவர்களை விட்டு அகலாமல் நான் அணைபோட்டுத் தடுத்து தண்டித்தது. அது மற்றவர்களுக்குத் தெரியாது!

Image result for A WAY TO REACH HEAVEN

வெற்றி மனிதா! நீ தேடிய மறைமுகத் தீய எண்ணத்துடன் வந்த செல்வங்கள் வேண்டுமானால் மற்றவர்களுக்கு கொடுக்கலாம். அத்துடன் இருமடங்கு பாவத்தையும் அவர்களுக்குக் கொடுக்கிறாய் என்று மறந்துவிடாதே! அந்த பாவம் உன்னை அழிப்பதோடு அவர்களையும் அழிக்கும் கருவியை கொடுக்கிறாய் என்று மறந்துவிடாதே!

ஒருசமயம் நீ கொடுத்த செல்வமே உனக்கு எமனாக வந்து உன்னையே உலை வைத்துவிடும். அது பாம்புக்கு பாலூட்டினால் அது உன்னையும் விடாது, சென்ற இடத்திலுள்ளவர்களையும் விடாது என்ற கதையாகிவிடும். 
********************

Monday, 27 May 2019

26.5.19 தமிழகமே தமிழ் மறந்தால் - கவியரங்கம் - மாமதுரைக் கவிஞர் பேரவை



26.5.19 தமிழகமே தமிழ் மறந்தால் - கவியரங்கம் -
 மாமதுரைக் கவிஞர் பேரவை  

அன்று நான் வாசித்தக் கவிதை 
தமிழகமே தமிழ்மறந்தால்
தமிழ்மொழியை யார்படிப்பார்?
          புதுக்கவிதை
 கு.கி.கங்காதரன்  மதுரை  9865642333

மழையை வானம் மறந்தால்
மண்ணின் வளம் என்னாவது?
கதிரவன் ஒளிவீச மறந்தால்
கண்ணான வாழ்வு என்னாவது? 

எழுத்துகளை மொழி மறந்தால்
இயற்றிய நூல்கள் என்னாவது?
தமிழ்பேசத் தமிழன் மறந்தால்
தமிழகப் பெருமை என்னாவது? 

பசி மயக்கம் தணியலாம்
பண மயக்கம் தணியுமா?
தமிழ் மயக்கம் தணியலாம்
ஆங்கில மயக்கம் தணியுமா?

எறும்பு ஊரஊரக் கல்லும் தேயுமாம்
ஆங்கிலம் பேசப்பேச தமிழும் தேயுமே
அகவை ஏறஏற உயிருடம்பு மாயும்
அந்நியச்சொல் சேரசேர தமிழும் மாயும்.

புதைந்து போனத் தனித்தமிழுக்குப்
புத்துயிர் ஊட்ட தமிழகம் தயங்குது
தமிழன் மூளையில் பதிந்த ஆங்கிலத்தைத்
துடைத்திடத் தமிழன் மனம் மறுக்குது.   

******************
விழா - மின்படத் தொகுப்பு 









மேலும் மின்படங்களுக்கு -- கீழுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்