உள்விதி மனிதன்
சமமனிதக் கொள்கை
பாகம் : 44 எது உண்மையான ஆன்மிகம்?
WHICH IS THE REAL SPIRITUAL?
பெருமைமிக்க மனிதா! உனக்குத்
தெரியாத, புரியாத, அறியாத, விளங்காத இடங்களில் எல்லாம் 'தேவ ரகசியம்' என்கிறார்களே? அப்படியானால் நீ அன்றாடம்
சாப்பிடுவதற்கு உதவிடும் மரம், செடி, கொடி தரும் காய்கனிகள், விலங்கினங்கள்,
பறவைகள், கடல் உயிரினங்கள் எல்லாவற்றையும் உன்
கண்களுக்குத் தெரியாதவாறு பூமியில் புதைத்து ரகசியமாக வைத்திருக்களாமல்லவா?
அப்படியிருப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நான் இவ்வுலகம் படைத்ததற்கு
மகிமை இல்லாமல் போயிருக்கும். உனக்கு எல்லாம் உபயோகப்பட வேண்டுமென்பதற்காக
உனக்குள் இருக்கும் என் ஜீவ ஓட்டத்திற்காக மட்டுமே! ஆகையால் உனக்குப் பயன்படுவது எல்லாமே உன் கண்ணில்படுமாறு படைத்திருக்கிறேன்.
காடுகளில், மலைகளில் ஏன் நீ செல்லாத, காணாத பல இடங்களில் உன் உதவியில்லாமல் தானே பல வகை மரம், செடி,
கொடி, புல், பூண்டுகள்,
கடலினங்கள் வளர்கின்றது, அதற்கு நீ என்ன உதவி செய்தாய்?
ஆகையால் பூமியில் உனக்கு வேண்டியது எதுவும் ரகசியமானதாக இல்லை.
அப்படி இருந்தால் கட்டாயம் அது அறியாமை, விழிப்புணர்வு
என்கிற முடிவுக்குத் தான் வர வேண்டும். அல்லது அவைகள் உனது ஜீவ ஓட்டத்திற்குப் பயன்படா!
தன்னலமற்ற மனிதா! இந்த உலகில்
ஆன்மீக விசயங்கள் பரிமாறிக்கொள்வதுக்கென்றே ஒரு தனிக் கூட்டம் இருக்கின்றது. அதில் உண்மையில் ஆன்மீகவாதிகள் சிலர் இருக்கின்றார்கள். ஆனால் பெரும்பாலும்
அவர்கள் வயது முதிந்தவர்களாகவே அந்த காலத்தில் இருந்தார்கள். அதில் நல்லவர்களும் தீயவர்களும் உண்டு. போலி சாமியார்களின் வேலை என்ன? பலர் முன்னிலையில் நல்ல ஆன்மீகவாதிகளைப் போல் நடிப்பது! அவர்கள் சதா ஒரு நாமத்தை ஜெபிப்பது!
பூஜிப்பது? அதன் பெருமைகளை சொல்லிக்கொண்டு இருப்பது? வருகின்றவர்களுக்கு அருள்வாக்கு கூறுவது, தன்னை
பின்பற்றுபவர்களுக்கு 'உபதேசம்' தருவது,
பூஜை பிரசாதம் அளிப்பது, தன்னை வணங்குவதற்காக
பணத்தை வசூல் செய்வது! என்று ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு பணவசூல்
வேட்டை நடத்துவது!
நல்லெண்ண மனிதா! நீ இருக்கும்
வரை இறைவனான இந்த உள்விதி மனிதனைப் பற்றிய செய்திகளைப் பற்றி
யாரேனும் கூறினாலும், பழங்காலத்தில்
நடந்த நிகழ்சிகளைப் பற்றிக் கூறினாலும் எல்லாம் உண்மை என்பதாகவே கணக்கில் எடுத்துக்
கொள்வார்கள். ஏனெனில் அவற்றை நிரூபிக்க முடியாது. பார்த்தவர்களும் இல்லை. சாட்சியும் இல்லை. ஏதாவது அழுத்திக் கேட்டால் அவைகள் உணர்ந்து அனுபவிக்க முடியுமே தவிர கண்ணால்
காண முடியாது! என்று ஒருவரியில் பதில் சொல்லித் தப்பித்துக் கொள்வார்.அதில்லாமல் பல ஏமாற்று வித்தைக் காட்டி பலரை ஏமாற்றவும் செய்வார்கள்.
இனிய மனிதா! இக்கால
ஆன்மிகம் உன் வாழ்க்கைக்கு மேன்மைபடுத்த உதவுகிறதா? சில வகையில்
உதவுகிறது. பல வகைகளில் உன்னை ஏமாற்றுகிறது என்று சொல்லத் தோன்றுகின்றது.
தொண்டுள்ளம் கொண்ட மனிதா! பெரிய பெரிய கோடீஸ்வரர்கள்,
முதலாளிகள், மனிதர்கள் எல்லாரையும் உட்கார வைத்து
படத்திற்கு, சிலைகளுக்கு பூஜை செய்து புகழ்ந்து பாடி பேசினால்
யாருக்கு என்ன பயன்? அவர்கள் உனக்கு ஏதாவது தரப் போகிறார்களா?
அல்லது இரக்க குணம் கொண்டு உன்னைக் காத்து விடுவாரா? இன்றோ சில ஆன்மீகவாதிகள் இளைஞர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி ஆன்மீக ஞானம் வரும்?
இளமையில் ஆன்மிகத்தால் உனது வாழ்க்கை நேரம் வீணாகிறது. குடும்ப உறவுகளைத் துறந்து உன்னைப் பற்றிய எண்ணங்களை நினைக்கச்
செய்கிறது. போலியாக ஒரு மனிதனைக் காட்டச் செய்கிறது. இளமைக்குண்டான கடமையை மறக்கச் செய்கிறது. புதிதாக சிந்தனைகளைச்
செய்யவிடாமல் செய்கிறது. ஒரு நாள் அதையே வேண்டாம் என்கிற அளவிற்கு
வெறுப்பை ஏற்படுத்தச் செய்கிறது. இப்படியெல்லாம் இப்போது நடந்து
கொண்டிருக்கின்றது. இனி மேலும் நடக்கும்!
நன்மை தரும் மனிதா! நான் உனக்குள்
உள்விதி மனிதனாக இருக்கும் வரை உனக்கு நீயே சரியாக இருப்பதற்கும், சரியாக
நடக்கும் மனிதனுக்கும் ஆன்மிகம் வேண்டியதில்லை. உன் செய்கையினால் மற்றவர்கள் யாரும் கவலையில்லாமல், எப்போதும் மகிழ்ச்சியாய் அல்லது பிரச்சனையில்லாமல், தொல்லையில்லாமல்,
கஷ்டப்படாமல் இருப்பதுவே உண்மை ஆன்மிகம். அதுவே
சத்தியம். அதுவே தெய்வீகம். அதுவே உனது வாழ்க்கை
உயர்வதற்கான வழி ! பிற உயிர்களைத் தீய சக்தியாக்கி அதனை அழிக்க பயன்படுத்துவதெல்லாம்
ஆன்மிகம் இல்லை. இதை முதலில் புரிந்துகொள். உனக்கு
எல்லா விசயங்களும் தெரிய வரும்.
###################
Very good.
ReplyDelete