Pages

Monday, 27 January 2020

26.1.2020 - கவியரங்கம் - அறிவியலை கணிதத்தை அனைவ ருக்கும் - மா.க.பே

26.1.2020 அன்று மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் 
மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில்அதன் தலைவர் 
கவிமாமணி சி .வீர பாண்டியத் தென்னவன் தலைமையில் நடந்த கவியரங்கம் .முன்னிலை செயலர் கவிஞர் இரா .இரவி 
தலைப்பு: அறிவியலை கணிதத்தை அனைவ ருக்கும்
           அருந்தமிழில் ஆங்கிலத்தில் பயிற்ற வேண்டும் 


அறிவியலை கணிதத்தை அனைவ ருக்கும்
அருந்தமிழில் ஆங்கிலத்தில் பயிற்ற வேண்டும்
                   புதுக்கவிதை 
              மதுரை கங்காதரன் 

உலகம் சிறந்திட அறிவியலறிவு வேண்டும்
அறிவியலே வாழ்வினை மலர்ந்திடச் செய்யும்
கட்டமைப்பு ஓங்கிட கணிதமறிவு வேண்டும்
கணிதமே பொருளாதாரத்தை உயர்த்திடச் செய்யும்

அறிவியலும் கணிதமும் மனிதனின் இருகண்கள்
அஃதால் பெற்றிடும் அறிவோ இருமடங்குகள் 
ஆங்கிலமும் தமிழும் தமிழனின் இருவிளக்குகள்
இரண்டிலும் கற்றால் பெறுவோமே இருசெல்வங்கள்

இருகுழல் துப்பாக்கி எதிரிகளை அழிக்கும்  
இருமுனை கத்தி எத்திசையும் தாக்கும் 
இருபாட அறிவு எதையும் சாதிக்கும்
இருமொழிக் கல்வி விண்ணையும் தொடும்  

தமிழைப் படித்தால் தமிழர் மானம் நிற்கும்  
தமிழைத் தவிர்த்தால் தமிழர் அடையாளம் போகும் 
ஆங்கிலத்தைப் படித்தால் வாழ்வின் நிலை உயரும் 
ஆங்கிலத்தைத் தவிர்த்தால் தமிழனின் நிலை வீழும்.

காந்தமின் இருதுருவங்கள் இரும்பைக் கவர்ந்திடும்   
கணிதமும் அறிவியலும் காந்தமாய் மாறிடும்     
ஆங்கிலமும் தமிழும் இருதுருவமாய் விளங்கிடும்    
அனைவரையும் கவர்ந்து அகிலமே போற்றிடும் .
                                 **************************


 



 








 














******************

Wednesday, 15 January 2020

*ராஷ்ட்ரபந்து L. K. துளசிராம் - 150 வது பிறந்த நாள் (14.01.2020).


*ராஷ்ட்ரபந்து*
 *L. K. துளசிராம்* அவர்களின் 150 வது பிறந்த நாள் இன்று (14.01.2020).

பாரதியாரின் பாடல்களைத் தடையை மீறி சட்டசபையில் முழங்கியவரும்,
பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கென மதுரையில் உயர்நிலைப் பள்ளியை நிறுவி சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவரும்,
மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடியும்,
நெசவாளர்களுக்கு தெருவில் பாவு நீட்டுவதற்கு உரிமை பெற்றுத்தந்தவரும்,
சௌராஷ்ட்ர சமூகத்தின் தந்தையுமான
"' *ராஷ்ட்ரபந்து*
*L. K. துளசிராம் B.A.B.L.,* அவர்களின் *150* வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது  

நாள் : *14.01.2020*  *செவ்வாய்க்கிழமை* 
நேரம் : *காலை 08.30* *மணி* 
 *இடம்:சௌராஷ்ட்ர* *ஆண்கள் மேல்நிலைப்* *பள்ளி,* 
 *காமராஜர் சாலை,* 
 *மதுரை - 9* 
அலைகடலென திரண்டு வந்தனர் !
இவண் :
*கே தேவராஜ்,* 
நிறுவனர், *அவ்ராம் அமி* *டிரஸ்ட்.* 
செல்:9443832105



























வாட்ஸ் ஆப் செய்தி 14.1.2020 
அனைவருக்கும் வணக்கம், 


இன்று 14-01-2020 மாலை சரியாக 5.30 மணிக்கு ராஷ்டிரபந்து L.K. துளசிராம் அவர்களின் பிறந்த நாள் சேம்பர் அலுவலகத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. அனைவரும் பங்குகொள்ள வேண்டுகிறோம்.



சரியாக மாலை 6.00 மணிக்கு சௌராஷ்ட்ரா கூட்டுறவு வங்கி வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இதில் வங்கியின் தலைவர் திரு. T. S. சாரதி அவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்.



அனைவரும் தவறாது கலந்து கொள்ள விரும்புகிறோம். 



நன்றி

General Secretary
***********************


Saturday, 11 January 2020

தாய்மொழி தினவிழா அழைப்பு - மா.க.பே -கவியரங்கம் -16.2.2020

மாமதுரைக் கவிஞர் பேரவையின்  
தாய்மொழி தினவிழா அழைப்பு - 
கவியரங்கம் -16.2.2020






அனைவரும் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்துத் தருமாறு உங்களை மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பாக
 அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 
நன்றி 
*********



Monday, 30 December 2019

29.12.19 கவியரங்கம் - எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டு...மா.க.பே


மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில்
மாமதுரைக் கவிஞர் பேரவையின் 
தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவனார் தலைமையில் நடந்த கவியரங்கம் - 
எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால்...
முன்னிலை செயலர் கவிஞர் இரா.இரவி.
நாள் 29.12.2019.படங்கள் 
புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் மற்றும் கு.கி.கங்காதரன் அவர்களின் கை வண்ணம்   








அன்று நான் வாசித்தக் கவிதை 
எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால்

இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம் வேண்டும்
கு.கி.கங்காதரன்   9865642333

இருகை தட்டினால் ஓசை எழுந்துவரும்
இருமொழியில் பயிற்றுமொழி அறிவை வழங்கிவரும்
வலதுகையை தமிழாக வைத்துக்கொள்வோம்
இடதுகையை ஆங்கிலமாய் ஏற்றுக்கொள்வோம்
இரண்டும் நமதானால் இயக்கம் நமைக்காக்கும்
இல்லை என்றால் இழப்பு நமைக்கெடுக்கும்

கம்பகாதை திருக்குறளே தமிழின் கதியாகும்
கவித்தமிழை ஆங்கிலத்தை பயிற்றுமொழியாய்க்
கற்றால்தான் தமிழினத்தின் விதிமாறும்
சும்மா இருந்தால் தமிழின் சுதந்திரமே பறிபோகும்
தமிழ்மொழியைக் கற்காத கூட்டம் பெருகிவிடும்
அமிழ்தத்தின் அடையாளம் அழிந்துவிடும்.

கதிரவனுக்கு பகையாக நிலவு நின்றிடுமா?
கடலுக்குப் பகையாய்க் கரைகள் மாறிடுமா?
தங்கத்திற்குப் பகையாய்ச் செம்பு சிரித்திடுமா?
தமிழுக்குப் பகையாய் ஆங்கிலம் எழுந்திடுமா?
தமிழ்வழியில் பயிற்றுமொழிச் சட்டம் வந்தால்
தமிழ்வளர்ச்சி ஆங்கிலத்தைத் தாண்டிச் செல்லும்.

காட்சி காண இரண்டு கண்கள் தேவை
கடந்து செல்ல இரண்டு கால்கள் தேவை
கற்றுக்கொள்ள இரண்டு மொழிகள் தேவை
கம்பர் இரண்டு மொழிகள் கற்கவில்லையா?
காலத்தை வென்றிங்கே நிற்கவில்லையா?
கற்றுக்கொள் தமிழா பயிற்றுமொழியாய்த் தமிழையுமே.

மேலும் இந்நிகழ்ச்சி பற்றிய மின்படத்தொகுப்பிற்கு 
கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும் 



நன்றி 




Monday, 23 December 2019

அறியும் அறிவு வகைகள் - புதுக்கவிதை - மதுரை கங்காதரன்

அறியும் அறிவு வகைகள் 
       புதுக்கவிதை
    மதுரை கங்காதரன்

உணர்வால் அறிவர் ஞானிகள்
உயிரால் அறிவர் முனிகள்

கற்று அறிவர் அறிஞர்கள்
கேட்டு அறிவர் மேதாவிகள்

படித்து அறிவர் அறிவாளிகள்
பார்த்து அறிவர் குருமார்கள்

அறிந்தும் அறியார் பாமரர்கள்
எதையும் அறியார் மக்குகள்
          ***********