Pages

Tuesday, 8 November 2022

30.10.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் 4 - தலைப்பு : கற்பனையும் கவிதையும்


30.10.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் 4 - கற்பனையும் கவிதையும் 



மதுரை, மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 அளவில்  நடந்த கவியரங்கம். 

பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலர் கவிஞர் இரா.இரவி முன்னிலை வகித்தார்.

கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசு அவர்களின் "பார்வைத் தீண்டல்கள்"நூல் வெளியிடப்பபட்டது.

புரட்சிக்கவிஞர் அறத்தின் தலைவர் பி .வரதராசன் வாழ்த்துரை வழங்கினார். கற்பனையும் கவிதையும் என்ற தலைப்பில் கவிஞர்கள் இரா இரவி, முனைவர் இரா.வரதராசன்கு.கி.கங்காதரன்கல்யாண சுந்தரம், சங்கர நாராயணன்அஞ்சூரியா க.செயராமன்மா.வீரபாகுபொன் பாண்டிஇராம.பாண்டியன், ச.லிங்கம்ம்மாள்சாந்தி திருநாவுக்கரசுகுறளடியான்புலவர் முருகுபாரதிபால கிருட்டிணன்சசி முத்துஅனுராதா, பால் பேரின்பநாதன்  ஆகியோர் கவிதை வாசித்தனர். 

படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் சம்பத் கை வண்ணம்.ஏற்பாடு இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன். 30.10.2022

















       கற்பனையும் கவிதையும்
                 புதுக்கவிதை
             கு.கி.கங்காதரன்

நிகழ்வுகள் நினைவுகளாகத் தங்கும்
நினைவுகள் எண்ணங்களாக மாற்றும்
எண்ணங்கள் கற்பனைகளாக மலரும்
கற்பனைகள் கவிதைகளாகப் பிறக்கும்

கற்பனைகள் செய்திடாத மனிதன்
கானங்கள் கேட்டிடாதச் செவிகள்
சிலைகள் வடித்திடாதப் பாறைகள்
மாலைகள் தொடுத்திடாதப் பூக்கள்

எளிமையாய் எடுத்துரைப்பது கவிதை
ஏக்கங்களைத் தீர்ப்பது கவிதை
காதல்நோய்கு மருந்தாவது கவிதை
கேட்போரை வீரமூட்டுவது கவிதை

அரசனை ஆண்டியாக்கும் கற்பனை
ஆண்டியை அரசனாக்கும் கற்பனை
நிலவினைக் கரங்களில் காட்டும் 
உலகினைப் பையில் போட்டிடும்

இருப்பதை இல்லாமல் செய்யும்
இல்லாததை இருப்பதாகச் சொல்லும்
உண்மையை பொய்யென உரைக்கும்
பொய்யை உண்மையென சாதிக்கும்

கற்பனை... கவிஞர்களை உருவாக்கும் 
கற்பனை... விஞ்ஞானிகளைக் கொடுக்கும்
கற்பனை... புதுமைகளுக்கு வித்திடும்
கற்பனை... படைப்பாளர்களைத் தந்திடும்

*******************************************

*******************

Sunday, 30 October 2022

30.10.2022 - மாமதுரைக் கவியரங்கம் 4 - கற்பனையும் கவிதையும்

 மாமதுரைக் கவியரங்கம் 4 - 30.10.2022   

      கற்பனையும் கவிதையும்

                  புதுக்கவிதை
              கு.கி.கங்காதரன்

நிகழ்வுகள் நினைவுகளாகத் தங்கும்
நினைவுகள் எண்ணங்களாக மாற்றும்
எண்ணங்கள் கற்பனைகளாக மலரும்
கற்பனைகள் கவிதைகளாகப் பிறக்கும்

கற்பனைகள் செய்திடாத மனிதன்
கானங்கள் கேட்டிடாதச் செவிகள்
சிலைகள் வடித்திடாதப் பாறைகள்
மாலைகள் தொடுத்திடாதப் பூக்கள்

எளிமையாய் எடுத்துரைப்பது கவிதை
ஏக்கங்களைத் தீர்ப்பது கவிதை
காதல்நோய்கு மருந்தாவது கவிதை
கேட்போரை வீரமூட்டுவது கவிதை

அரசனை ஆண்டியாக்கும் கற்பனை
ஆண்டியை அரசனாக்கும் கற்பனை
நிலவினைக் கரங்களில் காட்டும் 
உலகினைப் பையில் போட்டிடும்

இருப்பதை இல்லாமல் செய்யும்
இல்லாததை இருப்பதாகச் சொல்லும்
உண்மையை பொய்யென உரைக்கும்
பொய்யை உண்மையென சாதிக்கும்

கற்பனை... கவிஞர்களை உருவாக்கும் 
கற்பனை... விஞ்ஞானிகளைக் கொடுக்கும்
கற்பனை... புதுமைகளுக்கு வித்திடும்
கற்பனை... படைப்பாளர்களைத் தந்திடும்

*******************************************

Wednesday, 28 September 2022

25.9.2022 வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு - மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் - 3 மதுரை

 

மதுரை வடக்குமாசி வீதி, மணியம்மை பள்ளி உள் அரங்கில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கம்




             

25.9.2022 மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளி, உள் அரங்கில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கில் செயலர் கவிஞர் இரா.இரவி தலைமை வகித்தார். முனைவர் வரதராசன், கவிஞர்கள் இரா.கல்யாண சுந்தரம், கு.கி.கங்காதரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர்கள் புலவர் மகா. முருகபாரதி, குறளடியான், பால் பேரின்பநாதன், அஞ்சூர்யா க.செயராமன், லிங்கம்மாள், முனைவர் வரதராசன், இரா.கல்யாண சுந்தரம், மா.வீரபாகு, சங்கர நாராயணன், மு.இராமபாண்டியன், சே.அனுராதா, நா.குருசாமி, பொன்பாண்டி, கு.கி.கங்காதரன், எ.அலகையா, சாந்தி திருநாவுக்கரசு, உள்ளிட்டோர் வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு என்ற தலைப்பில் கவிதை பாடினார்கள். கவிதாயினி செ.அனுராதா எழுதிய மதுரை மாநகர் சிறப்பு கண்ணோட்டம் நூலும், கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசு எழுதிய யாப்பியக்கதிர்கள் ஹைக்கூ (கவிஞர் இரா .இரவி அணிந்துரை நல்கிய நூல்) நூலும் வெளியிடப்பட்டன. நூல் ஆசிரியர்கள் வருகை தந்த அனைவருக்கும் நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்கள். படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் சம்பத் கை வண்ணம். புகைப்பபடக் கலைஞர் ஏற்பாடு மதுரைஉலா ரெ.கார்த்தி கேயன். அரங்கம் தந்து உதவியவர் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன்.அவர்கள்... 

        வள்ளுவத்தின்  தமிழ்ப்பண்பு

             புதுக்கவிதை 

           கு.கி.கங்காதரன் 

 

அணுவுக்குள் அளவற்ற ஆற்றலே அதிசயம் 

பூவுக்குள் தேனை வைத்ததே இரகசியம்

விதைக்குள் மரத்தை அடக்கியதே மகிமை

குறளுக்குள் தமிழ்ப்பண்பு தாங்கியதே பெருமை

 

மலரைக் கசிக்கினால் மணத்தை நுகரலாம் 

முக்கனிச் சாற்றால் இனிமை சுவைக்கலாம்

தங்கத்தை உரசினால் தரத்தைக் காணலாம்

திருக்குறளை அலசினால் தமிழ்ப்பண்பு அறியலாம்

 

வந்தாரை 'வா'வென்று வரவேற்கும் 'விருந்தோம்பல்'

வறியவருக்குத் 'தா'வென்று உணர்த்தும் 'ஈகை'

உயிர்களை அரவனைக்கச் சொல்லும் 'அன்புடைமை'

இறைவனை அடைய வழிகாட்டும் 'மெய்யுணர்தல்'

 

கற்றபடி கடைபிடிக்கச் சொல்லும் 'கல்வி'

அறநெறியால் இன்பத்தைக் காட்டும் 'வெஃகாமை'

உண்மைக்கு உறுதுணையாய் நிற்கும் 'வாய்மை'

சொல்லின் திறத்தை வழங்கும் 'சொல்வன்மை'

 

மனித வாழ்வின் தரமுயர்த்தும் அறத்துப்பால் 

பொறுப்புகளை எடுத்துக் காட்டும் பொருட்பால்

உயிர்களின் படைப்பினை விளக்கும் இன்பத்துப்பால்

முப்பாலில் தமிழ்ப்பண்பு மிகுந்துள்ளதே உண்மை.

                   ********