Pages
- Home
- * வெற்றி தரும் வழிகள் (101)
- * உள்விதி மனிதன் (49)
- * எனது புதுக்கவிதைகள் (293)
- * புதிய விளையாட்டுகள் (9)
- * சிரிப்பு மாத்திரைகள் (10)
- * விளையாட்டு புதிர்கள் (4)
- * ISO 9001-உயர்வுக்கு வழி (12)
- * லாபம் தரும் தொழில்கள்(5)
- * தன்னம்பிக்கை இரகசியங்கள் (87)
- *மனம், யோகா, தியானம், ஆன்மீகம், WHO AM I? ANSWER (7)
- * நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)
- *குறு, சிறுகதைகள் (49)
- * நாட்டு நடப்புகள் (171)
- * விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)
- * இது நம்ம டி.வி சானல் (8)
- * வெற்றிப் படிகள் (89)
- வாழ்க்கைக்கான கதைகள் (1)
- * தொழில் நிர்வாக வழிகாட்டி (14)
- * UMASK - FOR EASY TYPING (13)
- * மிதுனமதி (குறுநாவல்)
- * WORLD LANGUAGES PROTECTOR- UMASK (4)
- BLOG CREATION (வலைப்பூ)?
- * MY IDEAS & INNOVATIONS (31)
- பருத்தியில் புரட்சி (4) (குறுநாவல்)
- From 24.1.26 BRM by ADITI Group - Revolution in the unconscious (உள்மனப் புரட்சி) by J. Krishnamurti- A compilation (upto 41 Pages -28.3.26)
Friday, 27 October 2023
15.10.23 அதிதி டிரஸ்ட் , மதுரை.. 15ம் ஆண்டு விழா மற்றும் அன்று கொடுத்த உதவிகள் நன்கொடையாளர்கள் - மின்படங்கள்
Thursday, 12 October 2023
12.10.2023 எனது புரிதலில் ‘வார்த்தைகளும் உண்மைத்தன்மையும்’ (என்னுடைய கருத்து) கு.கி.கங்காதரன்
எனது புரிதலில் ‘வார்த்தைகளும் உண்மைத்தன்மையும்’
(என்னுடைய கருத்து)
கு.கி.கங்காதரன்
ஒருவரிடத்தில் நாம், நமக்குத் தெரிந்த 'மாற்றம் ஒன்றே மாறாதது' மற்றும் ‘பழையன தேய்தலும் புதியன உருவாதலும்' என்றால் என்ன? என்று கேட்போமானால்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்வார்கள். அதில் எது 'சரி' ? என்று ஆராய ஆரம்பித்தால், முடிவு எட்டுவது மிகக் கடினம். எளிமையாகச் சொல்வதென்றால், ‘தண்ணீர்’ எந்த வடிவத்தில் இருக்கின்றது? என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சொல்வார்கள். ஏனென்றால், அவரவர்களிடத்தில் இருக்கும் பாத்திரத்தின் வடிவினைப் பொறுத்து பதில் கூறுவார். அவரவர் கூறும் விளக்கங்கள் 'உண்மையே' என்று அந்தந்த குழுவினர் கூறுவார்கள். உண்மை என்றும் சாதிப்பார்கள். ஏன்? சண்டையும் போடுவார்கள். ஆனால், எல்லோரும் சொல்வது உண்மை. அந்த உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும். என்னுடைய புரிதலில் ‘வார்த்தைகளும் உண்மைத்தன்மையும்’ என்பது பற்றி சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
உண்மையை மக்களுக்கு உணர்த்துவதற்காக,
இரு கண்களின் எது நல்லது?
தாய் தந்தையரில் யார் சிறந்தவர்கள் என்று ஒரு பட்டிமன்றம்
வைத்தால் எல்லா நடுவர்களும் ஒரே
பிரம்மம், கடவுள், அன்பு, அறம், கருணை, பக்தி, மோட்சம், ஞானம், சொர்க்கம், மரணமில்லாப் பெருவாழ்வு, சத்தியம், தர்மம், ஆகியவற்றுக்கு ஒவ்வொரு விளக்கங்களைக் கொடுத்தாலும் அவைகள் எல்லாம் ஒன்றுதான் என்று எப்போது யார் அறிகிறாரோ அப்போது தான் அவர் பூரணத்துவம் அல்லது உண்மையை அறிந்திருக்கிறார்! என்று நான் கருதுகிறேன். பல விளக்கங்களைக் கொடுத்தால் அறிவாளி, பல புத்தகங்களைப் படித்திருக்கிறார். என்று வைத்துக் கொள்ளலாம். ஆளால், அவர் இன்னும் உண்மையை அறியவில்லை என்று நமக்கு எப்போது தெரியவரும் என்றால் அவரது நிலைப்பாடு மாறிக்கொண்டே இருக்கும். அப்போது அறிந்து கொள்ளலாம்.
உலகில் இருக்கும் அனைத்து மக்களும் உயிர் வாழ்வதற்கு ஒவ்வொரு விதமான அதாவது அவரது உடல் ஜீரணிக்கக் கூடிய உணவினை எடுத்துக் கொள்கிறார்கள். முக்கியமாக அங்கு கிடைக்கும் உணவுகள். இது உண்மை தானே. இப்போது உங்கள் முன் கேட்கும் கேள்வி? அவைகளில் எவ்வகை உணவு நல்லது? என்று கேட்டால்.. எல்லாமே பசியை தணிக்கும் உணவு தானே! இவற்றில் யாரவது ஒருவரோ பலரோ 'இந்த உணவு தான் சிறந்தது' என்று ஒரு தீர்ப்பு சொன்னால்.. அது அறியாமை தானே! உண்மையல்ல, பொய் தானே?! அதுபோல தான் ஆன்மீக விசயத்தில் தீர்ப்பு சொல்வதும், சிறந்தது, உயர்ந்தது, தாழ்ந்தது என்று சொல்வதும் அறியாமை என்று தானே அர்த்தம். அல்லது உண்மை அறியாதவர், உணராதவர் என்று தானே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம், உன்னை குழப்புவதற்கும், தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வதற்கும், உங்கள் செல்வங்களை கைப்பற்றுவதற்கும், தாங்கள் எல்லாவித சுகங்களை எவ்வித வேலையும் செய்யாமல் அனுபவிப்பதற்காக நடக்கும் சூழ்ச்சி. ஆனால், மிக அரிதாக நல்லவர்களும், அறத்தை, தர்மத்தைக் கடைபிடிப்பவர்களும் இருக்கிறார்கள்.
கடவுளை வணங்குவது, கடவுளை
நினைப்பது, கோவிலுக்குச் செல்வது, விரதம்
இருப்பது, கடமை செய்வது, கடவுளை ஆராதனை
செய்வது, மக்களுக்குத் தொண்டு, சேவை செய்வது, கடவுளைப் பாடுவது, தான தர்மம்
செய்வது, பிறர்க்கு உதவுவது இவற்றில் எது சிறந்தது? என்று கேட்டால், ஒவ்வொரு பதில் வரும். ஆனால், எல்லாம் ஒன்று தான். எல்லாவற்றிலும் ஒரு
ஆன்மீக ஒற்றுமை நாம் அறிந்துகொள்வதே உண்மையை அறிவதற்கான சிறந்த பலன் என்றே கருதுகிறேன். தர்க்கம், விசாரணை, பட்டிமன்றம்,
என்பன எல்லாம் ‘உண்மையை
நோக்கி’ அல்லது ‘எல்லாம் ஒன்றே’ என்ற சிந்தனையை வளர்ப்பதாக இருக்க வேண்டும். எச்செயலிலும் நன்மை தருவதானால் அதுவே ‘உண்மைக்கான வழி’ என்று நாம் அறிந்துகொண்டு, அதற்கான
பலன்களை நாம் நடைமுறையில் கற்று உணர வேண்டும்.
எல்லா மனித இனமும் ஒன்று தான் என்கிற எண்ணம் நம்முள் வருமா? அச்சிந்தனை வளருமா? இந்தக் கருத்தினை தெரிந்துகொண்டாலே, எல்லாவற்றிலும் இருக்கின்ற ஆன்மீக ஒற்றுமை தெரியவரும். அதோடு, அவரவர் ஆன்மிகம், உண்மையை உணர்தல் எல்லாம் அவரவர் பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம், மற்றும் சூழ்நிலை மாற்றங்களோடு தொடர்புள்ளதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கே இறைவனைப் பற்றிய புரிதல், ஒவ்வொரு வயது காலகட்டத்தில் எவ்வாறு ‘பரிணாமம்’ பெற்று வந்திருக்கின்றது என்பதைச் சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் உண்மை தெரிய வரும். ‘கடவுள் இருக்கிறார்’ என்பதும் ‘கடவுள் இல்லை’ என்பதுவும் அதில் அடங்கும். நிறைவாக, ‘உண்மை’ என்பது ஒன்றே ஒன்று. எல்லாவற்றிலும் அந்த ஒன்றை, ஒற்றுமையை, உண்மையை அறிந்துகொள்வதே, உணர்ந்து கொள்வதே மனிதப் பிறப்புக்கான காரணமாகும்.
எந்த ஒரு நல்ல எண்ணமும் உண்மையை அறிவதற்கான அடிப்படை அறிவு. அந்த நல்ல எண்ணத்தை நடைமுறை படுத்தி அதன் பலனை அனுபவிப்பதே உண்மையை உணரும் பக்குவம். கெட்ட எண்ணங்களை அகற்ற அகற்ற உண்மை உணரும் நேரம் வரும்...
*********
Friday, 6 October 2023
1.10.2023 முப்பெரும் விழா - வளமான வாழ்க்கைக்கு வள்ளலார் : திரு கு.கி.கங்காதரன்
1.10.2023 அன்று மதுரை, பிரம்ம ஞான சபையில் முப்பெரும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மகாத்மா காந்திஜி : திரு திருமலை அவர்கள்
அன்னிபெசண்ட் : திரு பாஸ்கரன் அவர்கள்
வளமான வாழ்க்கைக்கு வள்ளலார் : திரு கு.கி.கங்காதரன் அவர்கள்
மின்படங்கள் : திரு வேலு அவர்கள்
**********









































































































































































