Pages

Wednesday, 16 August 2017

15.8.17 - பாரதி தமிழ் இலக்கியப் பேரவை நிகழ்ச்சித் தொகுப்பு - கம்பம்


பாரதி தமிழ் இலக்கியப் பேரவை - கம்பம்
அமைப்பு நடத்திய நிகழ்வுகள் எல்லோரையும் பிரமிக்க வைத்தது.
அந்த நிகழ்ச்சியின் சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு 

எல்லாவிதமான  சிறந்த எழுத்தாளர்களுக்குப் பரிசும், சான்றிதழும், பொற்கிழியும், பதக்கப் பரிசும் வழங்கினார்கள். 

எழுத்தாளர்களுக்கு சிறந்த உணவும்,  இருக்க யூனிவெர்சல் லாட்ஜும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

15.8.17 அன்று சுமார் மாலை 4.45 அளவில் எல்லா எழுத்தாளர்களையும் டிராக்டர் இல் ஊர்வலமாக அழைத்துச் சென்று கம்பம் மக்களை அறிமுகம் செய்தவிதம் அருமை.

பள்ளி மாணவ மாணவிகள் பேண்டு வாசித்த படியும், சிலர் ஸ்கேட்டிங் சறுக்கிய படியும் ஊர்வலம் சென்றோம்.

கல்யாண மஹாலை அடைந்தவுடன் அனைவருக்கும் சிறப்பு இருக்கையில் உட்கார வைத்தார்கள்.

குழந்தைகள், மாணவ மாணவிகளின் சுதந்திர பாட்டுடன் நடன நிகழ்ச்சி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.

பிறகு திரு பாஸ்கரன் ஐ.பி.எஸ் அவர்கள்
திரு பாரதன் அவர்கள்
திரு லேனா தமிழ் வாணன் அவர்கள்
திரு கவிஞர் நந்தலாலா அவர்களின் சிறப்புரைகள் அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

பரிசு பெற்ற எழுத்தாளர்களை (ஆண் & பெண்) பரிசளிக்க முதலில் மேடைக்கு அழைத்தனர்.
பிறகு பொன்னாடையும், சான்றிதழ் , பொற்கிழி அல்லது பதக்கம் கொடுத்தார்கள்.
பிறகு எழுத்தாளரை நாற்காலியில் உட்கார வைத்து பாரதியார் 'முண்டாசு' சூட்டி நன்றியும் வாழ்த்துக்களும் சொல்வார்.

சுதந்திரத் தியாகிகள் உருவப் படங்கள் திறந்து வைக்கப்பட்டது. அது மிகவும் வரவேற்கத் தக்கதாக இருந்தது. 

விழா நிகழ்வுகள் அனைவரையும் கவனித்த விதம் அனைவரையும் சிலிர்க்க வைத்தது.

சில வீடியோ காட்சிகள் : இந்த லிங்க் கிளிக் செய்யுங்கள் 
https://www.youtube.com/watch?v=RANuxPvez_U

நான் எழுதிய நூலாகிய 'UMASKஐப் பற்றி அறிந்து கொள்ளுங்கள் (உலகத் தாழ்மொழிகளைக் காக்கவல்ல அமைப்பு)' சிறந்த நூலாக தேந்தெடுக்கப்பட்டு சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது.  











சில மின் படங்கள் - உங்களுக்காக 
































































No comments:

Post a Comment