மாமதுரைக் கவிஞர் பேரவை
விழிப்பு உணர்வு கவியரங்கம்
நாள் : 28.8.17
நேரம் : காலை 10.00 மணி
இடம் : மணியம்மை மழலையர் பள்ளி , மதுரை.
சில மின்படங்கள்
எமது கவிதை
தமிழ்வாழ்க
எனச் சொன்னால் தமிழிங்கு வளர்ந்திடுமா?
மீசையை
முறுக்கினால் வீரம் வந்துவிடுமா?
முண்டாசு
அணிந்தால் பாரதி ஆகிடலாமா?
தீ..தீ..எனக் கத்தினால் தீ அணைந்திடுமா?
தமிழ்வாழ்க
என முழங்கினால் தமிழ் வளர்ந்திடுமா?
உலகமே
தொழில்நுட்பம் பின்னே ஓடுது
அந்நிய
மொழிகள் முந்திப் போகுது
தமிழ்
மொழியோ திணறி நிற்குது
தடம்
தெரியாமல் தடுமாறித் தவிக்குது
மாற்றங்கள்
நடப்பதே என்றும் நிரந்தரம்
மாறுவது
எதுவோ அதுவே ஆதாரம்
தமிழ்
மொழிக் கல்வி கணினியில் வேண்டும்
அந்நிய
மொழி இணையாக வளர்க்க வேண்டும்
பழமை பேசியே காலம் தள்ளாமல்
பதுமை போலவே பார்த்து நிற்காமல்
புதுமை புகுத்தியே கணினி புரட்சியால்
பெருமை அளிக்குமே தமிழ் இணையம்.
தமிழ்
மணம் எங்கும் வீச
தமிழ்
மலர் வாடாமல் மலர
தமிழ்
மொழி அழியாமல் வளர
தமிழ்
இணையம் விருத்தியே வழி.
வணக்கம்.
No comments:
Post a Comment