Pages

Tuesday, 13 October 2026

** 27.9.26 Kaviyarangam 50 - Maamadhurai Kavingyar Peravai- Yeda Thamizha - Unakku Innum Urakkamo? பா .பழனி எழுதிய " உறவுகள் பலவிதம் " நூல் வெளியீடு

  27.9.26 மாமதுரைக்  கவிஞர்  பேரவை சிந்தனைக்  கவியரங்கம்  .50.

"ஏடா தமிழா -உனக்கு இன்னும் உறக்கமோ ?

ஐம்பெரும் விழா


மாமதுரைக்  கவிஞர்  பேரவையின்  நிறுவனர்  கவிமாமணி  சி  .வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு ,பேரவையும் ,புரட்சிப் பாவலர் மன்றமும் இணைந்து மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் &தொடக்கப்பள்ளியில் ஐம்பெரும் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது .பேரவையின் தலைமைப் பொறுப்பாளர் ஆதிசிவத் தென்னவன்  அனைவரையும் வரவேற்றார் .செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .,புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பெரியார் நெறியாளர் பி .வரதராசன் அவர்கள் , சமூகசேவகர்கள் தியாகதீபம் பேரவை அ.பாலு , குடந்தை ரகுநாதன் ,சுற்றுச்ச்சுழல் பாதுகாவலர் மீ .இராமசுப்ரமணியன் ,நல்லாசிரியர் சு .நாகவள்ளி,துப்பாக்கி சுடுவதில் மாநிலஅளவில் வென்ற ச .பிரதீசு ராகவ் ஆகியோருக்கு பொன்னாடைப் போர்த்தப்பட்டு  விருதுகள் வழங்கப்பட்டது.

கவிஞர் பா .பழனி எழுதிய " உறவுகள் பலவிதம் " கட்டுரை நூலை திருமதி வீர .செந்தாமரை சியாமளாதேவி வெளியிட பி .வரதராசன் பெற்றுக் கொண்டார். கவிவித்தகர்  பொற்கைப் பாண்டியன் முன்னிலை உரையாற்றினார் ,நிலா இலக்கிய மன்றம்  கவிக்குயில் இரா .கணேசன் ,மதுரை இலக்கிய பேரவையின் தலைவர் சண்முக திருக்குமரன் வாழ்த்துரை வழங்கினார்கள் .

சிந்தனைக்  கவியரங்கம்  .50.

பேரவையின் தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில்
 " ஏடா தமிழா -உனக்கு இன்னும் உறக்கமோ ? என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது .கவிஞர்கள் இரா .இரவி ,கு .கி .கங்காதரன் ,கி. கோ .குறளடியான் ,பொன்பாண்டி ,வீரபாகு ,அரங்ககிரிதரன் ,ரெஜினாபானு ,அ.முரளிதரன் ,கண்ணன் ,சோ .தமிழன்பன் ,கு  பால் பேரின்பநாதன் ,ந .சுந்தரம் பாண்டி ,அ.அழகையா,சங்கரநாராயணன் ,ஜோ .மகாலட்சுமி மித்ரா  ,பா .பழனி ,ச .லிங்கம்மாள் ,பா .ஜெயசீலன் ,அஞ்சூர்யா ஜெயராமன்,முகமது இப்ராஹிம் ,இந்திரா காந்தி ,நா .குருசாமி ,ச .ராஜஸ்ரீ ,சே .நிறைமதி ,பா .பிரசன்னா,முத்துராஜா ,இளையான்குடி இதயத்துல்லா ,முனியாண்டி ,கி .காயத்ரி ,முனைவர் ஸ்ரீவித்யா பாரதி ,கமலா சந்திரசேகர் மதுரை மைந்தன்,வேல் பாண்டியன் ஆகியோர் கவிதை பாடினார்கள்  சிறப்பாக கவிதை வாசித்த கவிதாயினி காயத்ரி அவர்களுக்கு கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் விருது  வழங்கினார்கள்.

"தமிழ் எங்கள் உயிருக்கு மேல் " என்ற தலைப்பில் நடந்த கவிதை போட்டிக்கு நூறு கவிதைகள் வந்தன .ஐவருக்கு பரிசும், பத்துப் பேருக்கு ஊக்கப்பரிசும்,பத்துப் பேருக்கு ஆறுதல் பரிசும் ,எழுபத்திஐந்து பேருக்கு பதக்கமும் அனைவருக்கும்  பாராட்டு சான்றிதழ்களையும் தமிழன்னை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கருங்கல் கி .கண்ணன் அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார் .துணைச் செயலர் கு .கி ..கங்காதரன் நன்றி கூறினார் .மதுரை உலா ரெ.கார்த்திகேயன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.மாதாமாதம் கவியரங்கம் நடத்திட மணியம்மை பள்ளியைத் தந்து உதவும் பி.வரதராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள்.

படங்கள் புகைப்படக் கலைஞர்கள் இரமேஷ், ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.
.


                                       


நன்றி தினமலர் 27.9.2026



















ஏடா தமிழா! உனக்கு இன்னும் உறக்கமோ?
- கவிஞர் இரா. இரவி
*****
அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி
அடுக்குமோ இது தமிழுக்குத் துரோகமே!
ஆங்கிலவழிக் கல்வியில் படித்தே
ஐயோ பட்டம் வரை படித்துச் செல்கின்றனர்!

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி தமிழே
தமிழ்நாட்டில் சட்டம் இயற்றிட வேண்டும்!
நீதிமன்றம் தீர்ப்பு தந்தபோதும் குடமுழுக்கு
நம் தமிழில் நடைபெறாதது வேதனையே!

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில்
சங்கத்தமிழ் ஒலிக்க வேண்டும் நீதிமன்றத்தில்!
கடவுளின் கருவறையில் சமஸ்கிருதம் எதற்கு
கடவுளுக்கு சங்கத்தமிழ் நன்றாகவே புரியும்

தேவாரம் திருவாசகம் திருப்பாவை திருவெம்பாவை
தித்திக்கும் தமிழில் கருவறையில் ஒலிக்கட்டும்!
தமிழ்நாட்டில் தமிழுக்கு தடைவிதிக்க யார் நீ!
தமிழனின் கோயிலில் தமிழே முழங்க வேண்டும்!

தமிங்கில உரைக்கு முடிவு கட்டுவோம்
தனித்தமிழில் உரையாற்றிட முடிவு எடுப்போம்!
அங்காடி பெயர்ப்பலகைகளில் அழகுத்தமிழ்
இடம்பெற வேண்டும்! நடைமுறைப்படுத்துவோம்

தமிழ்மொழிக்கு அதிக நிதிஒதுக்கீடு வேண்டும்!
தமிழ்மொழியே உலகின் முதல்மொழி அறிந்திடுக
ஏடா தமிழா உனக்கு இன்னும் உறக்கமோ
எழுந்திரு தமிழா உறங்கியது போதுமடா!
••••••.......

*ஏடா தமிழா! உனக்கு இன்னும் உறக்கமா?*


* ஏடா தமிழா! இன்னும் உறக்கமா?

* எரியும் மொழித்துயர் உனக்குத் தெரியுமா?

* இளைஞனே! எழுவாய்! இனமொழி காப்பாய்!

* இழந்த உரிமை மீட்டிடு இன்றே!

* தமிழனே தமிழனுடன் தமிழிலே பேசு!

* தாய்மொழிப் பேச்சில் தன்மானம் காட்டு!

* பிறமொழி ஆதிக்கம் பொசுங்கட்டும் இன்றே!

* பிறமொழி மோகத்தைப் புறந்தள்ளு தமிழா!

* கலைச்சொல் அனைத்தும் தமிழிலே வேண்டும்!

* அறிவியல் தமிழில் ஆழமாய் வளரட்டும்!

* தொழில்நுட்பச் சொற்கள் தமிழிலே மலரட்டும்!

* தமிழ்ச்சொல் படைக்கத் தயங்காதே இளைஞா!

* தமிழ்வழிக் கல்வி எங்கும் வேண்டும்!

* நீதிமன்றம் தமிழில் இயங்க வேண்டும்!

* அரசுப்பணியில் தமிழர்க்கு முன்னுரிமை வேண்டும்!

* தமிழில் பயின்றோர் உரிமை பெறட்டும்!

* பெயர்ப்பலகை அனைத்தும் தமிழிலே மிளிரட்டும்!

* குழந்தைப் பெயர்கள் தமிழிலேயே அமையட்டும்!

* ஒன்றியத்தின் மொழித்திணிப்பு ஒழிய வேண்டும்!

* ஒருமொழி ஆதிக்கம் ஓய்ந்திட வேண்டும்!

* இளைஞர் படையே! எழுச்சி கொண்டெழு!

* தமிழைக் காக்கத் துணிந்து முழங்கு!

* உறங்கும் தமிழர் உணர்வைத் தூண்டுவோம்!

* தமிழ் வாழ்க! தன்மானம் வெல்க!
*
ந சுந்தரம் பாண்டி மதுரை

************

*தமிழ் எங்கள் உயிருக்கு மேல்*

 தமிழெங்கள் உயிர்காக்கும் தெய்வம் என்போம்

அமிழ்தென்றும் அகிலத்திலே அனைத்திற்கும் மேலே

 தமிழ்தாங்கும் நல்லுலகில் தமிழே உணர்வே

 தமிழர்தொழும் தனித்தெய்வம் தமிழே தானே

தானாகப் பிறந்தமொழி தமிழ்தான் புவியிலே

 வானாளும் புகழொன்றி வளர்ந்த தமிழே

 தமைமறந்தே தமிழ்காக்க தாமாய் வந்தே

 இமைகாக்கும கண்களென்றே  இன்தமிழ் காத்தே

 தலைமுறைகள் தாண்டியின்றும் தழைப்பது தமிழே

 வலைப்பின்னல் மொழிகளிலும் வாழும் தமிழே

 தொல்காப்பியம் தோன்றிட்ட தொட்டில் மொழியே

 தொல்லிலக்கு தெரியாத தொகுப்பு சங்கமே

 திருக்குறள் தந்திட்ட  தேனமுது  மொழியே

 திருவாசகத் தெள்ளமுதம் தெளிந்திட்ட சிறப்பே

தமிழுக்கே ஐந்நிலம் தரணியில் வாழ்முறை 

 தமிழ்ச்சுவையே தனிச்சுவை தன்னிக ரில்லாத் தமிழன்

 தமிழன்றி உயிர்க்குமேல் 
 தமிழனுக் கேது

 தமிழேதான் தாய்ப்பாலாம் தளிர்த்திடும் உயிரே 

 வானியலும் அறிவியலும் வாழ்வியல் ஞானம்

 மானிடரின் உளவியலும் மண்வளக் கலையும்
 
 நிலமாளும் அரசியலும் நேயமும் மனிதமும்

 உலகிற்கே கற்பித்த உன்னதம் தமிழே 

 தமிழ்தாழ்ந்தால் தமிழினமே தாழ்ந்திடும் உணர்வீர் 

 தமிழ்தழைக்க உயிர்கூடத் தருவோம் நாமே!
********************
ந.சுந்தரம் பாண்டி
மதுரை

**********

















































ஏடா தமிழா -உனக்கு 
இன்னும் உறக்கமோ?
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன் 

தமிழா! இதுவரையில் சாதித்தது போதுமா?
தமிழின் வளர்ச்சிக்கு உழைத்ததின் களைப்பா?
மூன்று தமிழ்ச் சங்கங்களை  நினைத்துப் பார் 
நான்காம் தமிழ்ச் சங்கத்தை திரும்பிப் பார்!

தமிழ்ச் சங்கங்களின் முகவரியை மறந்தாயா?
தமிழன்னை தாலாட்டில் உறங்கி விட்டாயா?
காலத்தின் வேகத்தை கணிக்கத் தவறாதே?
காவலனாய்  தமிழை காக்கத் தவறாதே! 

கொத்தாக மொழிகள் அழிவது அறிவாயா?
கணினி கடலில் தமிழ்மொழியை தள்ளிவிடாதே!
கைப்பேசியில் தமிழை அழித்திடத் துணியாதே!
செயற்கை நுண்ணறிவில் தமிழை இழந்துவிடாதே!

ஐந்தாம் தமிழ்ச் சங்கத்தை உடனே தொடங்கு!
ஆறாம் தமிழ்ச் சங்கத்திற்கும் திட்டமிடு !
உறக்கத்திற்கு விடை கொடுத்துவிடு தமிழா!
உடைமைத் தமிழை  விட்டுவிடாதே தமிழா!

எனது கவிதைக்கு AI Review 

கங்காதரன் அவர்களே, இந்த மாற்றியமைக்கப்பட்ட வடிவம் முந்தைய வடிவத்தைவிட கருத்திலும் ஓட்டத்திலும் வலிமையாகியுள்ளது. குறிப்பாக, நீங்கள் “தமிழ் அழிகிறதா?” என்ற அச்சத்திலிருந்து “தமிழைக் காக்க நாம் என்ன செய்ய வேண்டும்?” என்ற செயல் அழைப்புக்கு கவிதையை நகர்த்தியிருக்கிறீர்கள்.

சிறப்பாக அமைந்துள்ள மாற்றங்கள்

1. தலைப்பு

“ஏடா தமிழா – உனக்கு
இன்னும் உறக்கமோ?”

மிகவும் நேரடியான, உரையாடல் தன்மை கொண்ட தொடக்கம். வாசகரிடம் ஒரு அதிர்ச்சிக் கேள்வியை எழுப்புகிறது. “உனக்கு இன்னும் உறக்கமோ?” என்பது முன்பிருந்த “உறக்கமா?” என்பதைக் காட்டிலும் கவிதைத் தன்மை அதிகம் கொண்டுள்ளது.

2. “களைப்பா?” என்ற மாற்றம் பொருத்தமானது

“தமிழின் வளர்ச்சிக்கு உழைத்ததின் களைப்பா?”

இது “நீ ஏன் அமைதியாக இருக்கிறாய்?” என்ற கேள்விக்கு ஒரு மனிதநேயமான காரணத்தையும் தருகிறது. அதன்பின் வரும் வரிகள் விழிப்புணர்வை நோக்கிச் செல்கின்றன.

3. “காவலனாய் தமிழை காக்கத் தவறாதே!” — மிக நல்ல மாற்றம்

முந்தைய வடிவத்திலிருந்த “காலனாய்...” என்ற எதிர்மறை உருவகத்திற்குப் பதிலாக:

“காவலனாய் தமிழை காக்கத் தவறாதே!”

என்பது நேரடியாக பொறுப்பை தமிழரிடம் ஒப்படைக்கிறது. இது கவிதையின் நோக்கத்துக்கு மிகவும் பொருத்தமானது.

4. கணினி → கைப்பேசி → AI

இந்த வரிசை மிகவும் சிறப்பாக உள்ளது:

கணினி கடலில் தமிழ்மொழியை தள்ளிவிடாதே!
கைப்பேசியில் தமிழை அழித்திடத் துணியாதே!
செயற்கை நுண்ணறிவில் தமிழை இழந்துவிடாதே!

இது ஒரு வகையில் கடந்த தொழில்நுட்பம் → இன்றைய தொழில்நுட்பம் → எதிர்கால தொழில்நுட்பம் என்ற முன்னேற்றத்தையும் காட்டுகிறது.

எனக்கு மிகவும் பிடித்த பகுதி

ஐந்தாம் தமிழ்ச் சங்கத்தை உடனே தொடங்கு!
ஆறாம் தமிழ்ச் சங்கத்திற்கும் திட்டமிடு!

இங்கே உங்கள் கவிதை வெறும் புலம்பலாக இல்லாமல் எதிர்காலத்திற்கான செயல்திட்ட அழைப்பாக மாறுகிறது.

மேலும் “ஐந்தாம்” மட்டும் அல்ல, “ஆறாம் தமிழ்ச் சங்கத்திற்கும் திட்டமிடு” என்று சொல்வது முக்கியமானது. அதாவது ஒரு தலைமுறைக்கான தீர்வு அல்ல; தொடர்ந்து தமிழை வளர்க்கும் தலைமுறைத் திட்டம் வேண்டும் என்பதே உங்கள் கருத்தாக வெளிப்படுகிறது.

ஒரு சிறிய மொழிச் செம்மைப்படுத்தல் மட்டும்

கடைசி வரி:

“உடைமைத் தமிழை விட்டுவிடாதே தமிழா!”

கருத்து புரிகிறது. ஆனால் “உடைமைத் தமிழ்” என்பது சில வாசகர்களுக்கு இயல்பாகத் தோன்றாமல் இருக்கலாம்.

நீங்கள் சொல்ல விரும்புவது “தமிழ் நமது சொத்து/உரிமை/உடைமை; அதை விட்டுவிடாதே” என்ற கருத்தாக இருந்தால், அதற்கேற்ப இறுதி வரியைத் தேர்ந்தெடுக்கலாம்.

உதாரணமாக:

“உடைமைத் தமிழை என்றும் விட்டுவிடாதே தமிழா!”

என்று வைத்தால், உங்கள் சொந்தச் சொல்லாட்சியும் பாதுகாக்கப்படும்; முடிவும் இன்னும் வலுவாக இருக்கும்.

மொத்தப் பார்வை

இந்தக் கவிதையின் உள்ளார்ந்த செய்தியை நான் இப்படிப் பார்க்கிறேன்:

தமிழின் கடந்த காலத்தை நினைவு கொள் → நிகழ்கால ஆபத்தை உணர் → கணினி, கைப்பேசி, AI உலகில் தமிழை நிலைநிறுத்து → ஐந்தாம் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கு → ஆறாம் தமிழ்ச் சங்கத்திற்கும் இப்போதே திட்டமிடு.

அதனால் இது வெறும் தமிழ்ப்பற்றுக் கவிதை அல்ல; “எதிர்காலத் தமிழுக்கான விழிப்புணர்வுக் கவிதை” என்ற தனித்தன்மையைப் பெற்றிருக்கிறது.

என் கருத்தில், நீங்கள் இப்போது செய்த மாற்றங்களுக்குப் பிறகு கவிதையின் அடிப்படை அமைப்பை மேலும் அதிகமாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. சிறிய சொல் செம்மைப்படுத்தலுடன் இது உங்கள் வலைப்பதிவு, தமிழ் இதழ் அல்லது ஆசிரியருக்கு அனுப்ப ஏற்ற வடிவமாக உள்ளது.


*********




































































































































































































































































































































































*****************************************************

No comments:

Post a Comment